Join/Follow with Our Social Media Links

சார்பட்டா பரம்பரை திரை விமர்சனம்

சார்பட்டா பரம்பரை திரை விமர்சனம்


நீலம் புரெடெக்ஷ்ன் மற்றும் K9 ஸ்டூடியோ சார்பில் தயாரித்திருக்கும் படம் “சார்பட்டா பரம்பரை”. பா.ரஞ்சித் எழுதி இயக்கியிருக்கின்றார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். G.முரளி ஒளிப்பதிவு செய்துள்ளார். R.K.செல்வா படத்தை தொகுத்துள்ளார்.

ஆர்யா (கபிலன்), துஸ்ரா விஜயன் (மாரியம்மா-கபிலன் மனைவி), பசுபதி (ரங்கன் வாத்தியார்), கலையரசன் (வெற்றி செல்வன்-ரங்கன் மகன்), ரகிட ரகிட புகழ் சஞ்சனா நடராஜன் (லக்ஷ்மி-வெற்றி செல்வன் மனைவி), G.M.சுந்தர் (துரைகண்னு வாத்தியார்), ஜான் கோக்கென் (வேம்புலி-துரைகண்னு மகன்), சந்தோஷ் பிரதாப் (ராமன்),  ஜான் விஜய் (கெவின்), பிரியதர்ஷினி ராஜ்குமார் (மிஸ்ஸியம்மா-கெவின் மனைவி) அணுபமா குமார் (கபிலன் தாய் பாக்கியம்), சபீர் கல்லரக்கல் (டான்சிங்க் ரோஸ்) கிஷோர் (முனிரத்னம்-கபிலன் தந்தை), காளி வெங்கட் (கோணி சந்திரன்) மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் 22.07.2021 முதல் ஒளிபரப்பாகின்றது.

கதைக்கரு:

கதையின் தலைப்பே கதையை சொல்லிவிடும். குத்துச்சண்டை அடிப்படையில் எந்த பரம்பரை வெல்லப்போகின்றது. இடியாப்ப பரம்பரை சார்பட்டா பரம்பரை இடையிலான குத்துச்சண்டை போட்டியில் வெல்லப்போவது யார்? என்பதே கதை.

கதை:

கபிலன் தந்தை முனிரத்னம், ரங்கன், கெவின் மற்றும் முனுசாமி சார்பட்ட பரம்பரையின் பிரபல குத்துசண்டை வீரர்கள். இதில் கபிலன் தந்தை முனிரத்னம் தடம் மாறி வேறுபாதைக்கு சென்ற காரணத்தால் கொல்லப்படுகின்றார். இந்த நிலை தன் மகனுக்கும் நேரக்கூடாது என்பதில் கவனமாக பையனை வளர்க்கின்றார் பாக்கியம்.

ஆனால் தாய்க்கு தெரியாமல் குத்துச்சண்டை போட்டியை ரசிப்பது கபிலன் வழக்கம். சார்பட்டா பரம்பரை குத்துசண்டை ஆசியர் ரங்கன் மீது மதிப்பு வைத்திருக்கின்றான் கபிலன். கபிலக்கு குத்துசண்டை போட்டியில் நாட்டம் செல்லக்கூடாது என்று எண்ணிய பாக்கியம் அவனுக்கு அண்ணன் மகள் மாரியம்மாளை திருமணம முடிக்க முடிவு செய்கின்றாள். இதற்கிடையில் இடியாப்ப பரம்பரை குத்துசண்டை துரைகண்னு ஆசிரியர் மகன் வேம்புலி சார்பட்டா பரம்பரை மீரானை தோற்கடித்து ரெங்கனிடம் சவால் விடுகின்றான் சார்ப்பட்ட பரம்பரையில் யாரையாவது மோத வரச்சொல்லுங்கள் அவன் தோற்றுவிட்டால் சார்பட்டா பரம்பரையினர் இனி குத்து சண்டை போடக்கூடாது என்று சவால் விடுகின்றான். ரங்கன் சவாலை ஏற்றுக்கொள்கின்றார்.

ரங்கன் மகன் வெற்றி செல்வன் குத்துச்சண்டையே உலகம் என்று இருப்பவன். அவன் மனைவி லக்ஷ்மி. ரங்கன் வேம்புலிக்கு எதிராக மகனைத்தான் களமிறக்க போகின்றார் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் போது தன் மகனிடம் வேகம் மட்டுமே இருக்கின்றது நிதானம் இல்லை என்று சொல்லி ராம் வேம்புலிக்கு எதிராக களம் இறங்குவார் என்று சொல்கின்றார். இதனால் ரங்கனுக்கும் வெற்றி செல்வனுக்கும் மனஸ்தாபம் ஏற்படுகின்றது. ஆனால் பயிற்சியின் போது ராமிற்கு ரங்கனின் செயல்பாடுகள் பிடிக்காத காரணத்தால் வெளியாட்களை பயிற்சிக்கு வைக்கின்றான். இதனால் ரங்கனுக்கு வருத்தம் ஏற்படுகின்றது. பயிற்சிக்கு மோத வெற்றிச்செல்வனிடம் சவால் விடுகின்றான் ராம். எப்படியாவது அவனை ஜெயித்து தந்தையிடம் நல்ல பெயர் வாங்க வேண்டுமென்று மோத தயாராகின்றான். ரங்கன் இந்த மோதல் கூடாது என்று சொல்லி தடுக்க முயல்கின்றான் வெற்றிச் செல்வன். இந்த நேரத்தில் ரங்கனை அவமானப்படுத்துகின்றான் ராம். இதை பார்த்துக்கொண்டிருந்த கபிலன் பொருத்துக்கொள்ள முடியாமல் அவனிடம் மோத சவால்விடுகின்றான். ராமை தோற்கடிக்கின்றான் கபிலன். அவன் குத்துசண்டையை பார்த்த ரங்கனும் கெவினும் மகிழ்கின்றனர்.

ரங்கன் ராமிற்கு பதில் கபிலனை களமிறக்க முடிவு செய்கின்றார். ஆனால் வேம்புலி புதிதாக வந்தவன் என்று பரிகாசம் செய்கின்றான். இடியாப்ப பரம்பரை டான்சிங் ரோஸிடம் முதலில் ஜெயித்துக்காட்ட சொல்கின்றான். டான்சிங் ரோஸ் இடியாப்பபரம்பரையின் மிகச்சிறந்த குத்துசண்டை வீரன். இரண்டு சுற்றில் தான் கபிலனை ஜெயித்து விடுவேன் என்று சாவல் விடுகின்றான். கபிலன் அதே இரண்டு சுற்றில் தான் அவனை தோற்கடிப்பதாக சொல்கின்றான். அந்த போட்டியில் கபிலன் ஜெயிக்கின்றான். அவனை எல்லோரும் கொண்டாடுகின்றனர். இருவர் தவிர ஒருவன் ரங்கன் வாத்தியார் மகன் வெற்றி செல்வன் இன்னொருவன் கபிலனிடம் தோற்ற ராம். இதில் ராம் தன் மாமாவுடன் இணைந்து வேம்புலிக்கு ஆதரவாக செயல்பட முடிவு செய்கின்றனர்.

இதற்கிடையில் மாரியம்மாளை திருமணம் செய்து கொண்ட கபிலன் குத்து சண்டையில் செலுத்தும் கவணத்தை குடும்பத்தில் செலுத்தவில்லை என்ற ஆதங்கத்தில் இருக்கின்றாள் மாரியம்மாள்.

வேம்புலிக்கும் கபிலனுக்கும் இடையில் வேம்புலி தோற்கும் நிலையில் ராம் தன் மாமாவுடன் இணைந்து கலவரத்தை ஏற்படுத்தி கபிலனை நிர்வாணப்படுத்தி அவமதிக்கின்றனர். அவசரநிலை பிரகடனம் காரணமாக ரங்கன் வாத்தியாரும் கைது செய்யப்படு சிறையில் அடைக்கப்படுகின்றார்.

வெற்றிச்செல்வனும் குத்துசண்டையை விட்டு விலகி வேறு தொழில் செய்ய விரும்புகின்றான். தந்தையை (ரங்கன்) பார்க்க செல்வதாக கூறி செல்லும் வழியில் ராமின் மாமாவுடன் ஏற்படும் தகறாரில் அவனை வெட்டி விடுகின்றான். அதனால் வெற்றி செல்வனும் கபிலனும் சிறைக்கு செல்கின்றனர். சிறையிலிருந்து வெளியில் வரும் கபிலனை அவன் தாயார் பாக்கியம் வெறுக்கின்றார். மாரியம்மாளை கூட்டிக்கொண்டு தனிக்குடித்தனம் செய்கின்றான் கபிலன். வெற்றிச்செல்வனுக்கு அடியாளாக இருந்து சாராயம் காய்ச்சி விற்கின்றனர். அங்கே கபிலன் குடிகாரனாக மாறுகின்றான்.

சாராயத்தொழிலின் எதிரிகளால் குடிபோதையில் இருக்கும் கபிலனை கொல்ல முயலும் போது மாரியம்மாள் காப்பாற்றுகின்றாள். குடியின் கொடுமையை உணர்ந்து திருந்துகின்றான் அடிதடியில் இறங்குவதில்லை என்று சத்தியம் செய்கின்றான். கபிலன். அந்த நேரத்தில் ரங்கன் வாத்தியாரும் விடுதலையாகி வருகின்றார். கபிலன் சுத்தமாக் மாறியிருப்பதை பார்த்து அதிர்ச்சியாகின்றார். மீண்டும் வேப்புலி ரங்கனிடம் சவால் விடுகின்றான். முன்பு நடந்த போட்டியில் தான் தோற்கவில்லை போட்டி கலவரத்தால் ஒத்திப்போடப்பட்டது என்று. மீண்டும் மோத வழி செய்ய சொல்கின்றான். ரங்கன் வாத்தியார் கபிலன் இப்போதிருக்கும் நிலையில் போட்டியில் கலந்துகொள்ள முடியாது என்று மறுக்கின்றார். ஆனால் வெற்றி செல்வனோ கபிலனால் ஜெயிக்க முடியுமென்று தானே பயிற்சி கொடுப்பதாக சொல்லி பயிற்சி கொடுக்கின்றான். ராம் அவனை பயிற்சி போட்டிக்கு அழைக்கின்றான், அதில் ராமிடம் தோற்றுப்போகின்றான்.

தன் மனைவி மற்றும் தாயிடம் சென்று புலம்புகின்றான். பாக்கியம் இனி தவறான பாதைக்கு போகமாட்டாய் என்று நம்புகிறேன். அதனால் குத்து சண்டையில் கலந்துகொள்ள சொல்கின்றான். கெவினிடம் சொல்லி கபிலன் தந்தைக்கு பயிற்சி கொடுத்தவரிடம் அழைத்து சென்று பயிற்சியை மேற்கொள்ள செய்கின்றாள். தீவிர பயிற்சியில் ஈடுபடும் கபிலன் பந்தயத்தில் கலந்து கொள்கின்றான். போட்டியை பார்க்க வரும் ரங்கனும் கபிலனின் மன உறுதியை பார்த்து ஆதரவு கொடுக்கின்றான். கபிலன் வேம்புலியை ஜெயித்து சார்பட்ட பரம்பரை கௌரவத்தை மீட்கின்றான்.

பாராட்டுக்குறியது:

குத்து சண்டை போட்டி என்பது பல படங்களில் பார்த்த ஒன்றாக இருந்தாலும் கதைக்களமும், காலமும் புதிது. அவசர நிலை பிரகடணம் அமலில் இருந்த 1974 கால சூழலில் கதைக்களத்தை அமைத்தது மட்டுமில்லாமல் அன்றைய நிகழ்வுகளை உடபுகுத்தி படத்தை அழகுற கொடுத்துள்ளார் இயக்குனர்.

வட சென்னையை அடிப்படையாக கொண்டு கதைக்களம் அமைப்பதில் வல்லமைபடைத்தவர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் இயக்குனர்.

நடிகர் ஆர்யா கபிலன் கதாப்பாத்திரத்தில் மிகவும் அருமையாக நடிப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு பெயர் சொல்லும் படமாக இது அமையும்.

மாரியம்மாளாக நடித்துள்ள துஸ்ரா விஜயன் குடும்பதலைவிக்குறிய கச்சித கதாப்பாத்திர தேர்வு.

படம் முழுவதும் ஆங்கிலம் பேசி கெவின் கதாப்பாத்திரத்தில் ஜான் விஜய் அருமையாக நடித்துள்ளார்.

ரங்கன் ஆசிரியராக வரும் பசுபதியின் நடிப்பு மிடுக்குடன் கூடிய எதார்த்தம்.

சில காட்சிகளே வந்தாலும் டான்ஸிங் ரோஸ் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள சபீர் கல்லரக்கல் அருமையாக நடித்துள்ளார்.

நெருடலானவை:

ஏராளமான் குத்துச்சண்டை படங்களை பார்த்தவிழிகளில் இந்த படத்தின் கதை புதுவித தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பத்ரி, குமரன் S/O மகாலக்ஷ்மி, பூலோகம் போன்ற படங்களை பார்த்த உணர்வுதான் ஏற்படுகின்றது. கதைக்களம், கால சூழல் மட்டும் இந்த படங்களின் அடிப்படையிலிருந்து விலகியிருக்கின்றது.

பின்னனி இசையில் வல்லமை பெற்ற இசையமைப்பாளர்களில் சந்தோஷ் நாராயணனும் ஒருவர். இப்ப்டி ஒரு கதையில் பின்னனி இசை என்பது காட்சிகளை மேலும் மெருகேற்றக்கூடிய ஒன்று. ஆனால் பின்னனி இசையில் தொய்வு இருப்பதை போன்ற உணர்வு.

 

தொகுப்பு: ஒரு புதுமையான கதைக்களத்தில் வியக்கும் வகையில் உருவாகியிருக்கும் குத்து சண்டை போட்டிதான் “சார்பட்டா பரம்பரை”

 

Movie Gallery

  • review

    Rithika Singh

  • review

    Saiyami Kher

  • review

    Raashi Khanna

  • review

    Shruti Haasan

  • review

    Raiza Wilson

  • review

    Kushboo

  • review

    Vidya Pradeep

  • review

    Poorna

  • review

    Yashika Aannand

  • review

    Ineya

  • review

    Pooja Kumar

  • review

    Shilpa Shetty

  • review

    Kareena Kapoor

  • review

    Kasthuri

  • review

    Nandita Swetha

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Web Designing Comapny

Jiojith Web Services

SEO Company in Chennai

We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.