Join/Follow with Our Social Media Links

Jurassic World Dominion-தமிழ் திரை விமர்சனம்

Jurassic World Dominion-தமிழ் திரை விமர்சனம்


ஆம்பிளின் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் பர்ஃபெக்ட் வோல்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ஜூராஸிக் வோல்ட் டோமினியன். கொலின் ட்ரெவோரோ எழுதி இயக்கியுள்ளார். மைக்கேல் கியாச்சினோ இசையமைத்துள்ளார். ஜான் ஸ்வார்ட்ஸ்மேன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மார்க் சாங்கர் படத்தை தொகுத்துள்ளார்.

ஜூராஸிக் வோல்ட் டோமினியன் படத்தில் கிரிஸ் பிராட் ஓவன் கிரேடி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். பிரைஸ் டல்லாஸ் ஹோவர்ட் கிளாரி டியர்ங்க் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சாம் நெய்ல் டாக்டர் ஆலன் கிரான்ட் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். லாரா டெர்ன் டாக்டர் எல்லீ சாட்லெர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஜெஃப் கோல்ட்ப்ளம் டாக்டர் இயான் மால்கம் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இசெபெல்லா செர்மோன் மைசி லாக்வுட் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மாமௌடோ ஆய்தி ராம்சே கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். டேவாண்டா வைஸ் கைலா வாட்ஸ் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கேம்பெல் ஸ்காட் டாக்டர் லீவிஸ் டாட்சன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். BD வாங் டாக்டர் ஹென்றி வூ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதைக்கரு.:

மரபணு மாற்றப்பட்டு விவசாயத்தை அழித்துக்கொண்டிருக்கும்  வெட்டுக்கிளிகளை அழிக்க முயலும் நிறுவனம் பயோசின். அந்த நிறுவனம் ஜூராஸிக் வோல்டில் அழிவிலிருந்து காப்பாற்றப்பட்ட டைனோசர்களையும் உயிரினங்களையும் காப்பாற்றும் நிறுவனம். அந்த நிறுவனத்தில் வெறும் பணத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டவனிடமிருந்து தன் வளப்பு மகளை காப்பாற்றுகின்றான் நாயகன். மற்றும் வெட்டுக்கிளிகளை அழிக்க போராடும் இயற்கை ஆர்வலர் அதற்கான தீர்வையும் கண்டுபிடிக்கின்றனர்.



கதை.:

அரசாங்கம் அழிந்து கொண்டிருக்கும் ஜூராஸிக் வோல்ட் மிருகங்களை பாதுக்காக்கும் பொறுப்பையும் அவைகளை ஆராயவும் பயோசின் நிறுவனத்தினத்திற்கு அனுமதி கொடுக்கிறது. அந்த நிறுவனத்தை நடத்துபவர் ஜூராஸிக் பார்க்கில் இருந்த டாக்டர் மால்கம் அவருடன் டாக்டர் லீவீஸ். இருவரும் நடத்துகின்றனர். அங்கே நடந்த ஒரு ஆய்வின் எதிர்வினையாக மரபனு மாற்றம் பெற்ற வெட்டுக்கிளிகள் உருவாகின்றது. அதை சரிசெய்ய நினைக்கின்றனர். அதற்கு டாக்டர் ஹென்றி வூ உதவியாக இருக்கின்றார்.

இயற்கை ஆர்வலராகவும் டைனோசர்களை பாதுகாப்பவரகவும் இருக்கிறார் எல்லி. வெட்டுக்கிளிகள் வேளான்நிலத்தை அழிப்பதை உணர்ந்து அங்கே சென்று பார்க்கிறாள். அங்கே இருக்கும் வெட்டுக்கிளிகள் பயோசின் நிறுவனத்திலிருந்து உருவாகியுள்ளதாக தெரிந்து கொள்கிறாள். அதை நிரூபிக்க டைனோசர் ஆராய்ச்சியாளரான டாக்டர் ஆலன் உதவியுடன் பயோசின் நிறுவனத்திற்கு செல்கின்றாள்.

முந்தைய பகுதியில் பார்த்த டாக்டர் பெஞ்சமின் பேத்தி மைசியை காப்பற்றி மகளாக வளர்க்கின்றனர் ஓவன் மற்றும் கிளாரி. ராப்டர் புளூவுடனும் தலைமறைவாக இருக்கின்றனர். மைசி ஒரு அபூர்வ பிறவி. ஆண் துணையில்லாமல் மரபணு மற்றத்துடன் அவள் பெற்றெடுத்துள்ளார். அதே போல் ராப்டர் பூளூவும் ஒரு குட்டியை பெற்றெடுக்கிறது. கடத்தல்காரர்கள் கண்ணில் இவர்கள் படுகின்றனர். கடத்தல்காரர்கள் மைசியையும் பூளுவின் குட்டியையும் கடத்துகின்றனர்.

கடத்தியவர்களை தேடி ஒவனும் கிளாரியும் செல்கின்றனர். கடத்தல் தொழிலில் இருக்கும் கைலா இவர்களுக்கு உதவுகிறாள். கடத்தல்காரர்கள் பூளுவின் குட்டியையும் மைசியையும் பயோசின் நிறுவனத்திடம் விற்று விட்டதை தெரிந்துகொள்கின்றனர். ராப்டர்களையும் குழந்தையையும் கடத்திய கடத்தல்காரகள் ராப்டர்களை ஏவி ஒவனையும் கிளாரியையும் கொல்ல முயல்கின்றனர். ராப்டர்களிடமிருந்து தப்பி பயோசின் நிறுவனத்திற்கு கைலாவின் உதவியுடன் செல்கின்றனர் ஒவனும் கிளாரியும்.

பயோசின் நிறுவனத்திடம் டாக்டர் ஹென்றி வூ மைசியிடம் லோக்கஸ்ட்களை (வெட்டுக்கிளிகளை) அழிக்க அவளை பயன்படுத்த விரும்புவதாக சொல்கிறார். ஆனால் டாக்டர் லீவிஸ் வெட்டுக்கிளிகளை அழிப்பதையும் மாற்றத்தை உருவாக்கும் மைசியின் மரபணுவையும் வியாபாரமாக்க திட்டமிடுகிறார்.

டாக்டர் மால்கமிற்கு இந்த திட்டம் தெரிந்து இந்த மோசடியை வெளிக்கொண்டுவர எல்லீ மற்றும் ஆலனிற்கு உதவுகின்றார். லோகஸ்டு அறைக்குள் சென்று ஒரு லோகஸ்டின் மரபணுவை எடுத்து வருகின்றனர். இதனிடையே அடைத்து வைக்கப்படுள்ள புளூவின் குட்டியை விடுவித்துத்துவிட்டு தானும் தப்பிக்கிறாள். அவள் எல்லி மற்றும் ஆலனை சந்திக்கிறாள். மூவரும் தப்பிக்க தீய எண்ணம் கொண்ட லீவிஸ் உதவியாளன் ராம்சே உதவுகிறார். டாக்டர் மால்கம் தான் இதற்கு காரணம் என்று தெரிந்து அவரை வெளியேற்றுகிறார் லீவிஸ்.

மைசியை தேடி வந்த ஓவன், கிளாரி மற்றும் கைலாவை உள்ளே அணுமதிக்க மறுக்கின்றனர். விமாணத்தை வானத்திலேயே பழுதாக்குகின்றனர். அவர்கள் மூவரும் டைனோசர் இருக்கும் காட்டுக்குள் விழுகின்றனர்.

ராம்சே உதவியுடன் தப்பித்த ஆலன், எல்லி மற்றும் மைசி செல்லும் மின்ரயிலை டைனோசர்கள் நிறைந்த டணலில் பாதிவழியில் நிற்க வைக்கின்றான் டாக்டர் லீவிஸ். ஆனால் டைனோசர்களிடமிருந்து தப்பிக்க டாக்டர் மால்கம் அவர்களுக்கு உதவுகிறார்.

டாக்டர் லீவிஸ் அனைத்து குறிப்புகளையும் தனது மொபைலில் காப்பி செய்கிறான். லோகஸ்ட்களை எரித்து அதன் கூண்டை திறந்துவிடுகிறான். நெருப்போடு இருக்கும் லோக்ஸ்ட்(வெட்டுக்கிளிகள்) டைனோசர் காட்டுக்குள் சென்று விழுகிறது.

ஆலன், எல்லி, ஓவன், கிளாரி, மைசி, கைலா, டாக்டர் மால்கம், டாக்டர் ராம்சே அனைவரும் டைனோடர்களிடமிருந்து ஒன்று சேர்ந்து தப்பிக்கின்றனர். டைனோசர்களை தடுத்து நிறுத்தி தப்பிக்க முயல்கின்றனர். அதற்கு மின்சாரம் தேவை என்பதால் பல இடங்களின் மின்சாரத்தை தடுத்து தங்கள் இடத்தின் மின்தேவையை அதிகரிக்க முயல்கின்றனர் மால்கம் மற்றும் ஆலன், பல இடங்களின் மின்சாரத்தை துண்டிக்க செல்கின்றனர் எல்லி மற்றும் கிளாரி, கைலா விமனத்தை எடுத்துவர செல்கிறாள் ஓவன் புளூவின் குட்டியை மீட்க செல்கிறான்.

கோப்புகளுடன் மின்ரயில் மூலம் தப்பி செல்ல முயலும் டாக்டர் லீவிஸ் மின் தடை காரணமாக செல்லமுடியாமல் டைனோசரிடம் மாட்டிக்கொண்டு இறந்து போகிறார். அங்கே தப்பி வரும் டாக்டர் ஹென்றி வூ தான் தவறானவன் அல்ல. நான் இந்த வெட்டுக்கிளியின் பாதிப்பை தடுக்க தான் நினைத்தேன் என்று சொல்கிறான்.

அனைவரும் தப்பிக்கின்றனர். பயோசின் நிறுவனத்தின் முறைகேடுகளை ஆலனும் எல்லியும் நிரூபிக்கின்றனர். ஒவன் கிளாரியும் தன் வளர்ப்பு மகள் மைசியுடன் இருப்பிடம் செல்கின்றனர். புளூவிடம் அதன் குட்டியையும் சேர்க்கின்றனர். டாக்டர் ஹென்றி வூ லோகஸ்ட்களை அழித்து விளைநிலத்தை காப்பாற்றுகின்றார்.

பாராட்டுக்குறியது.:

இரண்டு பிரச்சனைகள் அடிப்படையில் பயனிக்கும் இருவர் ஒரு இடத்தில் இணைந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பது என்பது வழக்கமான திரைப்படமாக இருந்தாலும் அதில் ஜூராஸிக் வோல்ட் அடிப்படையை இணைத்து திரைக்கதையை உருவாக்கியுள்ளனர்.

ஆக்ஷன் காட்சிகளில் ஒவன் கதாப்பாத்தில் கிரிஸ் பிராட் அருமையாக நடித்துள்ளார்.

தாய்ப்பாசத்தை மெய்பிக்கும் அடிப்படையில் கிளாரி கதாப்பாத்திரத்தில் அருமையாக நடித்துள்ளார் பிரைஸ் டல்லாஸ் ஹோவர்ட்

மைசி கதாப்பாத்திரத்தில் இசெபெல்லா செர்மோன் நன்றாக நடித்துள்ளார்.

ராப்டர்கள் நகரில் ஓவனை துரத்தும் காட்சிகள் அருமை

நெருடலானவை.:

ஜூராஸிக் வோல்ட் படங்கள் பெரும்பாலும் டைனோசர்களை அடிப்படையில் காட்சிக்கு காட்சி விறுவிறுப்பாக இருக்கும். ஒரே கோணத்தில் படங்கள் நகரும். ஆனால் இந்த படம் இரு கோணத்திலும் முந்தைய படங்களின் அடிப்படையிலிருந்து விலகி இருக்கிறது.

தமிழிலில் வெளிவந்த காப்பான் படத்தின் அடிப்படையை டைனோசர்களை பயன்படுத்தி சொல்லியிருப்பது புதுமையாக தெரியவில்லை.

வழக்கமாக இறுதிகாட்சியில் இரண்டு பெரிய டைனோசர்கள் மோதிக்கொள்ளும் அதே காட்சிகளை மீண்டும் பார்ப்பது போன்று இருக்கின்றது.

முந்தைய படங்களிலிருந்து விலகி அதை தெரியாமல் மறைக்க முந்தைய பாகங்களின் கதாப்பாத்திரத்தை பயன்படுத்திய உணர்வே தோன்றுகிறது.

கதை இரண்டு கோணத்திலிருந்து பயனிப்பதால் பெரிய அளவு விறுவிறுப்பை உணர முடியவில்லை.

பெரிய அடியாள் பக்கபலம் என்ற அடிப்படையில் காண்பித்துவிட்டு கடைசியில் நிறுவனத்தில் அனைவரும் நல்லவர்கள் அவர் ஒருவர் மட்டுமே வில்லனாக காண்பித்திருப்பது. மாப்பிள்ளை படத்தில் இறுதிகாட்சியில் வில்லன் சொல்லும் அடியாளே இல்லாமல் வில்லானாய் இருந்து பார். அப்பத்தான் வில்லனின் கஷ்டம் தெரியும் என்ற வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

தொகுப்பு.:

ஜூராஸிக் வோல்ட் டோமினியன் திரைப்படத்தை முந்தைய படங்களின் அடிப்படையில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். தமிழில் பார்த்த காப்பான் படத்தை மீண்டும் பார்ப்பது போன்ற உணர்வே தோன்றுகிறது.

Movie Gallery

  • review

    Miya George

  • review

    Aishwarya Rajesh

  • review

    Diva Dhawan

  • review

    Anjali

  • review

    Sreeleela

  • review

    Bindu Madhavi

  • review

    Lavanya Tripathi

  • review

    Nivetha Pethuraj

  • review

    Pranitha Subhash

  • review

    Shruti Haasan

  • review

    Ragini Dwivedi

  • review

    Sherin Shringar

  • review

    Amala Paul

  • review

    Vimala Raman

  • review

    Raai Laxmi

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.