Join/Follow with Our Social Media Links

O2 தமிழ்பட திரைவிமர்சனம்

O2 தமிழ்பட திரைவிமர்சனம்


ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் S R பிரகாஷ் பிரபு மற்றும் S R பிரபு தயாரித்துள்ள படம் O2. அறிமுக இயக்குனர் G S விக்ணேஷ் எழுதி இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ் A அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். செல்வா R K இப்படத்தை தொகுத்துள்ளார்.

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் O T T தளத்தில் O2 திரைப்படம் 17-06-2022 முதல் ஒளிபரப்பாகிறது.

O2 படத்தில் நயன்தாரா பார்வதி என்ற முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மாஸ்டர் ரித்விக் வீரா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சிபி புவனா சந்திரன் ரஃபீக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.  பரத் நீலகண்டன் போலிஸ் இண்ஸ்பெக்டர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஆடுகளம் முருகதாஸ் பேருந்து ஓட்டுனராக நடித்துள்ளார். R N R மனோகர் Ec M L A கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். லீனா மனோரமா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஸா ரா பார்வதி சகோதரர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் பலர் நடித்துள்ளார்.

கதைக்கரு,:

தன் மகனை காக்க போராடும் ஒரு தாயின் கதை.

கதை.:

பார்வதி தன் கணவனை இழந்து மகன் வீராவுடன் வசித்து வருகிறாள். வீராவிற்கு நுரையீரல் சார்ந்த பிரச்சனை காரணமாக செயற்கை சுவாசத்துடன் வாழ்ந்து வருகிறான். அவனது சிகிச்சைக்காக கொச்சின் செல்ல தயாராகிக்கொண்டிருக்கிறாள் பார்வதி.

குழந்தைசாமி செய்யாத தவறுக்காக 14 வருடம் சிறைதண்டனை பெற்று விடுதலையாகி கொச்சினில் இருக்கும் தன் தாயிடம் சென்று தான் நிரபராதி என்று நிரூபிக்க வேண்டுமென்று கிளம்புகிறான்.

மருத்துவ கல்லூரியில் படிக்கும் ரஃபீக் இந்து மதத்தை சேர்ந்த உயர் ஜாதிப்பெண்ணான மித்ராவை காதலிக்கிறான். அவனிடமிருந்து அவளை பிரிக்க கொச்சினுக்கு அழைத்து செல்கிறார் அவளது தந்தை. அதை தெரிந்த ரஃபீக்கும் அவர்களுக்கு தெரியாமல் அந்த பேருந்தில் ஏறுகிறான்.

ரெய்டில் பிடித்த போதைப்பொருளை கள்ள சந்தையில் விற்க பாலக்காடு செல்ல முயல்கிறார் இன்ஸ்பெக்டர்.

கொச்சின் செல்லும் பேருந்தில் பார்வதி, வீரா, குழந்தை சாமி, ரஃபீக், மித்ரா, மித்ராவின் தந்தை, Ex M L A தன் உதவியாளனுடன் கொச்சின் செல்லும் பயனிகளும் அவர்களுடன் பாலக்காடு இன்னும் பிற பகுதிகளுக்கு செல்பவர்களுடன் புறப்படுகிறது. வழியில் இண்ஸ்பெக்டர் போதைபொருள் பையுடன் பாலக்காடு செல்ல வேண்டுமென்று ஏறுகிறார்.

மழை காரணமாக வழியில் டிராபிக் ஜாம் ஏற்பட பாலக்காடு மற்றும் இன்னும் பிற பகுதிகளுக்கு செல்லும் பயனிகளை இறக்கிவிட்டு கொச்சின் செல்லும் பயனிகளை மட்டும் ஏற்றிக்கொண்டு டிரைவர் கிளீனருடன் மாற்று பாதையில் கொச்சின் நோக்கி புறப்படுகிறது.

தூங்கி கொண்டிருக்கும் இன்ஸ்பெக்டர் டிரைவருடன் தகராறு செய்கிறான். மீண்டும் வந்த வழியில் வண்டியை திருப்ப சொல்கிறான். கிளீனர் பேருந்திலிருந்து இறங்கி வண்டியை பின்னால் எடுக்க உதவ முயல்கிறான். அப்போது மலையிலிருந்து பாறை உருண்டு கிளீனர் மீது விழ அங்கேயே அவன் இறக்கிறான். மலையில் நிலச்சரிவு அதிகமாகி மண்ணுக்குள் பேருந்து புதைந்து போகிறது. அப்போது ஏற்படும் பேருந்தின் தடுமாற்றம் காரணமாக Ex MLA உதவியாளன் இறந்துபோகிறான். குழந்தைசாமி கடுமையாக பாதிக்கப்படுகிறார்.

பேருந்துக்குள் இருக்கும் ஆக்ஸிஜன் 10 மணி நேரத்திற்கு மட்டுமே தாங்கும். பையனுக்காக தான் எடுத்து வந்த மற்றொரு ஆக்ஸிஜன் சிலிண்டரை யாருக்கும் தெரியாமல் மறைக்கிறாள் அடிபட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் குழந்தைசாமியை இன்ஸ்பெக்டர் சுட்டு கொல்கிறான். .

மூன்று மணி நேரத்திற்கு பிறகு விஷயம் தெரிந்து மீட்பு பணி குழுவினர் வருகின்றனர்.

பேருந்திற்குள் ஆக்ஸிஜன் அளவு குறைந்து கொண்டே வருகிறது. இன்ஸ்பெக்டர் பார்வதி வைத்திருக்கும் சிலிண்டரை கைப்பற்றுகிறான். ஒரு கட்டத்தில் இண்ஸ்பெக்டரை அடித்து போட்டுவிட்டு தன் மகனுக்காக சிலிண்டரை கைப்பற்றுகிறாள் பார்வதி. இறந்து கொண்டிருக்கும் அனைவரும் அந்த சிலிண்டருக்காக வருகின்றனர். அனைவரையும் அடித்து போட்டுவிட்டு சிலிண்டரை காப்பாற்றுகிறாள் பார்வதி.

பல மணி போராட்டத்திற்கு பிறகு மீட்பு குழுவினர் பேருந்து புதையுண்ட இடத்தை கண்டு பிடித்து அனைவரையும் காப்பாற்றுகின்றனர்.

பாராட்டுக்குறியவை.:

ஒரு அருமையான புதிய கதைக்களத்தை அமைத்துள்ளார் இயக்குனர்.

பார்வதி கதாப்பாத்திரத்தில் நயன்தாரா தன் மகனை காப்பாற்ற போராடும் தாயாக அருமையாக நடித்துள்ளார்.

மாஸ்டர் ரித்விக் வீரா கதாப்பாத்திரத்தில் அருமையாக நடித்துள்ளார்.

பேருந்து ஓட்டுனராக ஆடுகளம் முருகதாஸ் அருமையாக நடித்துள்ளார்.

நெருடலானவை.:

அருமையான கதைக்களத்தை எடுத்துக்கொண்டு இயக்கியிருந்தாலும் மிகவும் விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்க வேண்டிய படம். ஆனால் ஏனோ விறுவிறுப்பை உணர முடியாமல் இருக்கிறது.

ஒரு வேளை இந்த விபத்து மக்களின் மத்தியில் ஏற்படுத்திய தாக்கத்தையும் வலியையும் காட்சிப்படுத்தியிருந்தால் கூட கொஞ்சம் பாதிப்பின் தாக்கத்தை உணர்ந்திருக்க முடியும்.

பேருந்திற்குள் நடைபெரும் நிகழ்வுகளில் மிகப்பெரிய அளவிலான போராட்டமே இல்லாமல் இருக்கிறது. இன்ஸ்பெக்டராக வருபவர் மட்டுமே ஏதோ கொஞ்சம் பயமுறுத்த முயன்றிருக்கிறார். அதுவும் பெரிய அளவில் எடுபடவில்லை.

இந்த நிகழ்வை செய்திகளில் காட்ட வேண்டும் என்பதற்காக ஒரு சில காட்சிகள் வைத்துள்ளனர். மிகப்பெரிய அளவு பிரமாண்டப்படுத்தப்பட வேண்டிய ஒரு செய்தியை இப்படித்தான் செய்வார்களா?.

பின்னணி இசைதான் இவ்வகையான திரைப்படத்தை பிரமாண்டப்படுத்தும். அந்த அடிப்படையில் பின்னணி இசை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாதது இப்படத்தின் மிகப்பெரிய பின்னடைவு.

மீட்பு குழுவினர் செயல்பாடுகள் ஏதோ செத்தவன் கையில் வெத்தலை பாக்கு கொடுத்தது போல் அதிலும் விறுவிறுப்பே இல்லாமல் சப்பென்று இருக்கிறது.

தொகுப்பு.:

மொத்தத்தில் O2 திரைப்படம் ரசிகர்களுக்கு ஆக்ஸிஜனாக இல்லாமல் கார்பன் டை ஆக்ஸைடாக மட்டுமே இருக்கிறது.


Movie Gallery

  • review

    Ammu Abhirami

  • review

    Aishwarya Lekshmi

  • review

    Kausalya

  • review

    Deepa Sannidhi

  • review

    Dia Mirza

  • review

    Poorna

  • review

    Mehreen Pirzada

  • review

    Sayyeshaa

  • review

    Shraddha Srinath

  • review

    Hansika Motwani

  • review

    Mahima Nambiar

  • review

    Remya Nambeesan

  • review

    Janani Iyer

  • review

    Kiran Rathod

  • review

    Regina Cassandra