Join/Follow with Our Social Media Links

அஜீத் படத்திலிருந்து விலக்கப்பட்ட விக்னேஷ் சிவன் LIC படம் மூலம் மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுப்பாரா?

Article by : admin on 18-12-2023

துணிவு படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜீத்குமார் நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்த படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு இப்போது விடா முயற்சி படத்தில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜீத் குமார் நடிக்கிறார்.


இதனால் மிகவும் வருத்தப்பட்ட விக்னேஷ் சிவன் மிகச்சிறந்த வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் இருக்கின்றார். லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து 7 ஸ்கீரீன் ஸ்டுடியோ சார்பில் S.லலித்குமார் மற்றும் லீனா லலித்குமார் தயாரிப்பில் LIC (Love Insurance Corporation) படத்தை இயக்குகின்றார்.



லவ் டுடே படத்தின் இமாலய வெற்றிக்கு பின் நடிகர் பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தில் நாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். உப்பன்னா தெலுங்கு படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடிகை கீர்த்தி ஷெட்டி தமிழில் இப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஏற்கனவே தமிழ் மற்றும் தெலுங்கு இருமொழி படங்களான வாரியர் மற்றும் கஸ்டடி படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவராக இருக்கிறார். இவர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக வா வாத்தியாரே தமிழ் படத்திலும், புவனேஷ் அர்ஜூனன் இயக்கத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ஜீனி தமிழ் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். இவர்களுடன் நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு மற்றும் பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு விக்னேஷ் சிவன் நண்பரும் ஆஸ்தான இசையமைப்பாளருமான அனிருத் ரவிசந்தர் இசையமைக்கிறார். பொன்னியின் செல்வன் படத்தின் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஒளிப்பதிவை மேற்கொள்கின்றார். பிரதீப் E ராகவ் படத்தை தொகுக்கிறார்.



எல்லாமே நல்லாதானே போய்கிட்டுஇருக்கு அப்படின்ற வடிவேலு வசனத்தில் முட்டுக்கட்டை வருவது போல படத் தலைப்பிற்கு ஒரு பிரச்சனை வந்துள்ளது. LIC பட தலைப்பை பயன்படுத்த இயக்குனரும் இசையமைப்பாளருமான S S குமரன் தயாரிப்பாளர் சங்கத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த தலைப்பை 2015-ல் சுமா பிக்சர்ஸ் சார்பில் பதிவு செய்துள்ளதாகவும் அந்த தலைப்பை தனக்கு தர விக்னேஷ் சிவன் தரப்பிலிருந்து தன்னை அணுகியதாகவும். என் படத்திற்கு இந்த தலைப்பு மிக முக்கியமானது என்று கூறி மறுத்துள்ளதாகவும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். மீறி பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.



இந்த பிரச்சனைகளை கலைந்து இந்த படம் நல்லமுறையில் வெளிவந்து விக்னேஷ் சிவனுக்கு வெற்றிப்படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் உள்ளது.


CINITALK குழுமத்தின் சார்பில் படக்குழுவினர் அனைவருக்கும் இந்த திரைப்படம் வெளியாகி பிரமாண்ட வெற்றியை பெற வாழ்த்துகின்றோம்.





Movie Gallery

  • Padmapriya

  • Malavika

  • Athmiya Rajan

  • Shamlee

  • Andrea Jeremiah

  • Lakshmi Gopalaswamy

  • Rakul Preet Singh

  • Dushara Vijayan

  • Vega Tamotia

  • Aditi Rao Hydari

  • Aishwarya Lekshmi

  • Mehreen Pirzada

  • Sayyeshaa

  • Nandita Swetha

  • Ineya