புஷ்பா-2: The Rule திரை விமர்சனம்
மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் யலமஞ்சிலி ரவிசங்கர் தயாரிப்பில் 2021-ல் வெளியான புஷ்பா தி ரைஸ் படத்தின் தொடர்ச்சியாக புஷ்பா-2: தி ரூல் படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தை சுகுமார் இயக்கியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் பாடல்களுக்கும் சாம் C S பின்னனி இசையும் அமைத்துள்ளார்.
இப்படத்தில் அல்லு அர்ஜூன் புஷ்பராஜ் கதாப்பத்திரத்திலும், ராஷ்மிகா மந்தனா ஸ்ரீ வள்ளி கதாப்பாத்திரத்திலும், பஹத் பாசில் பன்வார் சிங் ஷெஹாவத் கதாப்பாத்திரத்திலும், ராவ் ரமேஷ் பொம்மிரெட்டி சித்தப்ப நாயுடு கதாப்பாத்திரத்திலும், சுனில் மங்களம் சீனு கதாப்பாத்திரதிலும் ஆடுகளம் நரேன் முதல்வர் நரசிம்ம ரெட்டி கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளனர். ஜகதீஷ் பிரதீப் பண்டாரி, ஜகபதி பாபு, அனுசுய பரத்வாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதைக்கரு: ஒவ்வொரு மனிதனின் எண்ணமும் வளர்ச்சி என்பது தான். அதன் அடுத்த இலக்கு என்ன? அந்த இலக்கினை அடைய எடுக்கும் முயற்சி என்பது தான் கதையின் அடிப்படை. புஷ்பா முதல் பாகத்தில் பல தடைகளை தகர்த்தெரிந்து சிண்டிகேட் தலைவனாகிறான் புஷ்பா என்கிற புஷ்பராஜ். அதில் பல வில்லன்களை இயக்குனர் உருவாக்கி வைத்திருந்தார். மங்களம் சீனு, ஜாலி ரெட்டி, குறிப்பாக பன்வார் சிங் ஷெஹாவத். இவர்கள் கடந்து புஷ்பா என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்புடன் முதல் பாகத்தை முடித்துவைத்துள்ளனர். இதன் மூலம் புஷ்பா-2 மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தனர்.
கதை: புஷ்பா MLA பொம்மிரெட்டி சித்தப்ப நாயுடுவோடு முதலமைச்சர் நரசிம்ம ரெட்டியை சந்திக்க செல்கின்றான். புஷ்பா மனைவி ஸ்ரீ வள்ளி புஷ்பாவிடம் முதமைச்சருடன் ஒரு போட்டோ எடுத்துக்கொண்டு வரச்சொல்கிறார். ஆனால் முதலமைச்சர் ஒரு சிண்டிகேட் டானுடன் போட்டோ எடுத்து கொள்ள மறுத்து புஷ்பாவை அவமானப்படுத்துகிறார். இதனால் எப்படியும் முதலமைச்சருடன் போட்டோ எடுக்க வேண்டும் என்ற முடிவில் MLA பொம்மிரெட்டி சித்தப்ப நாயுடுவை முதலமைச்சராக்க முடிவெடுக்கிறான். அதற்காக கட்சி தலைவர் பிரதாப் ரெட்டியிடம் பேரம் பேசுகிறான். அதற்கு மிகப்பெரிய அளவு பணம் தேவைப்படுவதால் 2000 டண் செம்மரத்தை கடத்த முடிவு செய்கிறான். எதிரிகளான பன்வர் சிங் ஷெஹாவத், மங்களம் சீனுவை தாண்டி எப்படி செம்மரத்தை கடத்துகிறான்? பொம்மிரெட்டி சித்தப்ப நாயுடுவை எப்படி முதலமைச்சராக்குகிறான்? இதற்கிடையில் கட்சி தலைவர் பிரதாப் ரெட்டி புஷ்பாவிற்கு எப்படி பகைவராகிறார்? போன்றவற்றை அதிரடி சண்டை கதைகளத்துடனும் அமைத்துள்ளனர். முதல் பாகத்தில் சென்டிமென்ட் காட்சிகளை மருந்தாக பயன்படுத்திய இயக்குனர் இதில் அதையே முதன்மை படுத்தி இயக்கியுள்ளார்.
பாராட்டுக்குறியவை:
காட்சிக்கு காட்சி பிரமாண்டம் அதை விறுவிறுப்பாகவும் ரசிக்கும் படியும் இயக்குனர் கொடுத்துள்ளார்.
சண்டைக் காட்சிகளில் அதகளப்படுத்தியுள்ளனர்.
முதல் பாகத்தை போலவே இந்த பாகத்திலும் புஷ்பா கதாப்பாத்திரத்தில் அல்லு அர்ஜூன் படம் முழுவதிலும் ரசிக்கும் படி ஆக்ரமித்துள்ளார்.
ராஷ்மிகா மந்தனா ஸ்ரீ வள்ளி கதாப்பாத்திரத்தில் முதல் பாகத்தைவிட இப்படத்தில் காதல் மனைவியாகவும், புஷ்பா சோகத்திலிருக்கும் போது அவருக்கு ஆதராவாக சென்டிமென்ட் கதாப்பாத்திரத்திலும் ரசிக்கும் படி நடித்துள்ளார்.
ஒரு போட்டோவிற்காக முதலமைச்சரையே மாற்ற நினைக்கும் சிறிய அடிப்படையை மிகபிரமாண்டமாக இயக்குனர் அருமையாக கொடுத்துள்ளார்.
Feeling பாடல் ரசிகர்களை கவரும் என்பதில் சந்தேகம்மில்லை.
KICIK பாடலில் ஸ்ரீலீலா நடனமாடியுள்ளார். முதல் பாகத்தில் ஊசசொல்றியா பாடலை ஒப்பீடு செய்யும் போது சிறப்பாக இல்லாவிட்டாலும் ரசிக்கும் படி உள்ளது.
நெருடலானவை:
படத்தின் இடைவேளை வரை விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமல் கொடுத்த இயக்குனர். இடைவேளைக்கு பிறகு சென்டிமென்ட் காட்சிகளை வைத்து சற்று தொய்வை ஏற்படுத்தியதாக உணர முடிகிறது.
முதல் பாகத்தில் பன்வார் சிங் ஷெஹாவத் தான் இரண்டாம் பாகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற எதிர் பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு கதைகளத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் அவர் கதாப்பாத்திரம் பெரிய அளவு மிரட்சியை ஏற்படுத்த தவறியதாக உணர முடிகிறது.
ஜாலி ரெட்டி, மங்களம் சீனு கதாப்பாத்திரங்கள் பெரிய அளவில் இப்படத்தில் எதுவும் செய்யவில்லை.
திருவிழா காட்சியில் புடவை கட்டி புஷ்பா ஆடும் நடனம் காந்தார படத்தின் சாயல் நினைவிற்கு வந்து செல்கிறது.
ஓரு ஆ ஆக்ஷ்ன் படத்தில் பெரும்பாலும் படங்களில் இறுதி காட்சி என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் இப்படத்தில் இறுதிகாட்சி விறுப்விறுப்பை அடிப்படையாக இல்லாமல் சென்டிமென்ட் அடிப்படையாக இருக்கிறது.
தொகுப்பு: புஷ்பா 2: தி ரூல் ஆக்ஷ்ன் படமா? சென்டிமென்ட் படமா? என்ற தடுமாற்றத்தில் இருந்தாலும் படத்தின் காட்சிகள் பிரமாண்டம் அனைவரையும் ரசிக்கவைக்கின்றது.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.