DVV எண்டர்டெயின்மெண்ட் சார்பில் DVV தனய்யா தயாரித்துள்ள படம் R R R. பிரமாண்ட இயக்குனர் S S ராஜமௌலி இயக்கியுள்ளார். K V விஜேயேந்திர பிரசாத் இந்த படத்தின் கதையை எழுதியுள்ளார். M M கீரவாணி இசையமைத்துள்ளார். K K செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். A ஸ்ரீகர் பிரசாத் படத்தை தொகுத்துள்ளார்.
R R R படத்தில் ஜூனியர் என் டி ஆர், கோமராம் பீம் என்ற பீம் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ராம்சரன், அல்லுரி சீதாராம ராஜூ என்ற ராம் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அஜய் தேவ்கான், ராமின் தந்தை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அலியா பட், ராம் காதலி சீதை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ரேயா சரண், ராமின் தாய் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சமுத்திரகனி, வெங்கடேஸ்வரலு கதாப்பாத்திரத்தில் ராம் உதவியாளராக நடித்துள்ளார். ரே ஸ்டீவென்சன் கவர்னர் ஸ்காட் பக்ஸ்டன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அலிசன் டூடி கேத்ரின் பக்ஸ்டன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஒலிவியா மோரிஸ், ஜெனிஃபர் கதாப்பாத்திரத்தில் பீம் காதலியாக நடித்துள்ளார். மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதைக்கரு.:
பிரிட்டீஸ் அடிமைத்தனத்திலிருந்து விடுதலைக்காக போராடிய இரு நண்பர்களின் கதை.
கதை.:
அடிலாபாத் காட்டுக்குள் கவர்னர் ஸ்காட்டின் மனைவிக்கு பாட்டுப்பாடி பச்சை குத்தும் பெண் மல்லியை நிரந்தரமாக தங்களை மகிழ்விக்க டில்லிக்கு வலுக்கட்டாயமாக தூக்கி செல்கிறாள். அவளை காப்பாற்ற பின் தொடர்ந்த மல்லியின் தாயை கவர்னர் ஸ்காட் கொல்கிறார்.
டில்லியில் பிரிட்டிஸ் அரசை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் நடக்கிறது. அந்த போராட்டத்தில் ஒரு கல்லால் பிரிட்டீஸ் கவர்னர் போட்டோவை உடைக்கிறான். பிரிட்டீஸ் அரசின் விசுவாசமான போலிஸ் அதிகாரி அல்லுரி சீதாராம ராஜூ எனும் ராம் தனி ஒருவராக அந்த போராட்ட களத்திற்குள் சென்று கல்லெரிந்தவனை பிடித்து கொண்டு வருகிறார். அவரின் துணிச்சலை பார்த்து அனைவரும் வாயடைத்து போகின்றனர்.
இதற்கிடையே அடிலாபாத் காட்டில் மிருகங்களை வேட்டையாடி பிடிக்கிறான் கோமராம் பீம் எனும் பீம். அவன் டில்லிக்கு வருகிறான். அங்கே அவனின் சகோதரி மல்லியை மீட்க முயல்கிறான்.
கவர்னரை கொல்லப்போவதாக தகவல் கிடைத்து அவரை கொலைகாரனிடமிருந்து காப்பாற்றும் பொறுப்பு பிரிட்டீஸ் விசுவாசியான ராமிடம் ஒப்படைக்கப்படுகிறது.
தன் தோற்றத்தை மாற்றிக்கொண்டு வெங்கடேஸ்வரலுவுடன் கொலைகாரனை தேடி போராட்டக்காரர்களின் கூட்டத்திற்கு செல்கின்றான். அங்கே பீம் நண்பன் கவர்னரை கொலை செய்ய உதவுமாறு ராமை யாரென்று தெரியாமல் கேட்கிறான். அவனுக்கு உதவுவதாக சொல்லி கூட்டி போகிறான். ஆனால் ராம் போலிஸ் அதிகாரி என்று தெரிந்து அங்கிருந்து தப்பித்து பீமிடம் சென்று தகவல் சொல்கிறான். அவனை துரத்திக்கொண்டு வந்த ராம் பீமுடன் இணைந்து ஒரு சிறுவனை ரயில் விபத்திலிருந்து போராடி காப்பாற்றுகிறான். அது முதல் ராமும் பீமும் இணைபிரியா உயிர் நண்பர்களாக இருக்கின்றனர்.
மல்லியை காப்பாற்ற பிரிட்டீஸ் கோட்டைக்குள் செல்ல நினைக்கும் பீம் பிரிட்டீஸை சேர்ந்த ஜெனிஃபர் நல்ல குணத்தால் கவரப்படுகிறான். அவள் மூலம் கோட்டைக்குள் செல்ல முடியுமென்று நம்புகிறான். ஜெனிஃபர் மீது பீமிற்கு ஈர்ப்பு இருப்பதை உணர்ந்த ராம் அவர்கள் காதலிக்க உதவுகிறான், பீமிற்கு ஆங்கிலம் தெரியாது ஆங்கிலம் தெரிந்த ராம் அவர்களுக்கிடையே பாலமாக இருக்கிறான்.
பீம் மீது கொண்ட காதலால் பீமை கோட்டைக்குள் கூட்டி செல்கிறாள் ஜெனிஃபர். அங்கே மல்லியை பார்க்கிறான். எப்படியும் உன்னை வந்து காப்பாற்றுவேன் என்று மல்லிக்கு வாக்கு கொடுக்கிறான் பீம்.
இதற்கிடையே ராம் தேடிக்கொண்டிருக்கும் பீமின் தோழனை பிடித்து யார் உன் தலைவன் என்று விசாரிக்கிறான். இதற்கிடையே பாம்பை வைத்து ராமை கடிக்க வைத்து அங்கிருந்து தப்பிக்கிறான். பாம்பு கடிப்பட்ட நண்பன் ராமை வைத்தியம் பார்த்து பீம் காப்பாற்றுகிறான். அப்போது அவன் தன் சகோதரி மல்லியை காப்பாற்ற போவதைப்பற்றி சொல்கிறான். அப்போது தான் தெரிகிறது ராம் தேடிக்கொண்டிருப்பவன் இந்த பீம்தான் என்று தெரிகிறது.
ஏற்கனவே காட்டில் வேட்டையாடி பிடித்து வைத்திருந்த மிருகங்களுடன் பிரிட்டீஸ் கோட்டைக்குள் கதைவை உடைத்து உள்ளே சென்று மிருகங்களை திறந்து விடுகிறான். கோட்டைக்குள் பீம் நுழைய முயலும் போது அங்கே ராம் காவலாளி சீருடையில் வருகிறான். ராம் பீமை கைது செய்ய முயலுகிறான், இருவரும் சண்டை போடுகின்றனர். கவர்னரை கொலை செய்ய முயன்றது நீதான் என்று ஒத்துக்கொள்ள சொல்கிறான். ஆனால் நான் கவர்னரை கொலை செய்ய வரவில்லை மல்லியை காப்பாற்றதான் வந்ததாக சொல்கிறான். ஆனால் ராம் பீமை கைது செய்கிறான். ராம் தனக்கு எதிராக இருப்பதை நினைத்து வேதனையடைகிறான் பீம்.
மக்கள் மத்தியில் அவனை கொடுமைபடுத்தி கொல்ல வேண்டுமென்று கவர்னர் சொல்கிறார். ராம் மக்கள் மத்தியில் பீமை அடித்து உதைக்கிறான். அப்போது பீம் பாடும் விடுதலை வேட்கை பாடல் மக்களை கிளர்ந்தெழ செய்கிறது. மக்கள் தடுப்புகளை மீறி பீமை நோக்கி செல்கிறனர்,
அவனை மீண்டும் சிறையிலடைக்கின்றனர். பீம்மின் பாடல் மக்களை எழுச்சிபெற செய்ததை நினைத்து பார்க்கிறான் ராம். தன் கடமையை பற்றி சிந்திக்கிறான்.
சிறுவயதில் சுதந்திர போராட்டத்தில் தன் தந்தையையும் தாயையும் இழந்த ராம் பிரிட்டீஸ் அரசிடமிருந்து ஆயுதங்களை கைப்பற்ற தன் காதலி சீதாவிடம் சொல்லிவிட்டு பிரிட்டீஸ் அரசின் நன்மதிப்பை பெற்று அவர்கள் ஆயுத கிடங்கை கண்டுபிடித்து ஆயுதங்களுடன்தான் ஊருக்கு திரும்புவேன் என்று காதலிக்கு வாக்கு கொடுத்துவிட்டு செல்கிறான். தன் லட்சியம் நிறைவேறும் வரை எந்த பந்தபாசத்திற்கும் இடமில்லை என்று ராம் சொல்கிறான். ஆனால் பீம் பாடிய பாடல் தன் லட்சியத்தைவிட உயர்ந்ததாக எண்ணுகிறான்.
கவர்னரிடம் மல்லியை பீம் கண்முன் கொன்றால் அவனை தூக்கில் போடுவதைவிட அதிக வேதனையை கொடுக்கலாமென்று சொல்லி மல்லியை பீமை தூக்கு போடும் இடத்திற்கு கூட்டி செல்ல யோசனை சொல்கிறான். தன் உதவியாளரிடம் பீம் தப்பிக்க கட்டியுள்ள கயிரை வெட்ட உதவ சொல்கிறான். அதேபோல் காவலாளிகளின் தூப்பாக்கியில் உள்ள தோட்டாவை வெடிக்காமல் இருக்க அதை கோளாறு செய்கிறான்.
பீம் மல்லியை கூட்டிக்கொண்டு தப்பிக்கிறான். அவன் தப்பிக்க உதவியது ராம் என்று தெரியாமல். அதேவேளை ராம் செய்த துரோகத்திற்காக கைது செய்கின்றனர்.
தப்பி சென்ற பீமை தேடி போலிஸ் வருகிறது, ஒரு சத்திரத்தில் தங்கியிருக்கும் பீமை சீதா காப்பாற்றுகிறாள். அப்போது சீதா ராமைப்பற்றி சொல்கிறாள். பீம் ராமைப்பற்றி உணர்ந்து சிறைக்குள் கால் எலும்புகள் உடைப்பட்ட நிலையிலிருக்கும் ராமை தன் தோளில் சுமந்து காப்பாற்றுகிறான்.
ராமிற்கு சிகிச்சை கொடுக்கிறான் பீம் அப்போது அங்கே வரும் பிரிட்டீஸ் போலிஸ் பட்டாளத்தை துவம்சம் செய்து பிரிட்டீஸ் கோட்டைக்கு சென்று அதை தகர்த்து கவர்னரை கொன்று ஆயுதங்களை கைப்பற்றுகின்றனர். இருவரும் தத்தம் வழிகளில் சுதந்திர போராட்டத்தை தொடர்கின்றனர்.
பாராட்டுக்குறியவை.:
பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி தன் பிரமாண்டத்தின் முத்திரையை படம் முழுவதும் பதித்துள்ளார்.
ராம்சரன் மற்றும் ஜூனியர் என் டி ஆர் இருவர் மட்டும் முழுப்படத்தையும் தாங்கிப்பிடித்துள்ளனர்.
பாடலில் ராம்சரன் மற்றும் ஜூனியர் என் டி ஆர் இருவரும் ஆடிய நாட்டு கூத்து பாடல் மிகவும் அருமை.
கீரவானி இசை படத்தை பிரமாண்டப்படுத்தியுள்ளது.
முப்பரிமானத்திலும் இந்த படம் வெளியாகியுள்ளது. பல பிரமாண்ட காட்சிகள் முப்பரிமானத்தில் நம்மை பிரமாண்டத்தின் உச்சத்தை உணர வைக்கிறது.
ராம்சரன், ஜூனியர் என் டி ஆர் மற்றும் ராஜமௌலி மூவரும் மிகபிரமாண்ட முத்திரையை பதித்துள்ளனர்.
நெருடலானவை.:
பிரமாண்டத்தின் உச்சம் என்ற பெயரில் மக்கள் கூட்டத்தில் உள்ளே நுழைந்து ஒருவனை இழுத்து வருவது என்பது லாஜிக்கே இல்லாத ஒன்று.
புலிமுருகன் படத்தின் காட்சியை அப்படியே காப்பியடித்தது போல் உள்ளது பீம் புலியை பிடிக்கும் காட்சி.
ராம் மற்றும் பீம் நட்புக்கு அடிப்படையிலான ரயில் விபத்து காட்சி பிரமாண்டமான ஒன்றாக இருந்தாலும் அதன் அடிப்படையில் நட்பாவது போன்ற காட்சியமைப்பு கதையுடன் ஒட்டவில்லை.
திரைக்கதைக்கு தேவையான பலகாட்சிகளுக்கு இயக்குனர் பெரிதாக மெனக்கடவில்லை. குறிப்பாக இருவருக்கும் குறைவில்லாமல் கதாப்பாத்திரத்தை கொடுக்க ஒரே காட்சியமைப்பை திரும்ப நாயகர்களை மாற்றி கொடுத்துள்ளனர். ரயில் விபத்து காட்சியில் தீயிலிருந்து ஜூனியர் என் டி ஆர் வெளிவருவார். இறுதி சண்டை காட்சியில் ராம் சரண் வெளிவருவார். பாடல் காட்சியின் நடனம் முடிந்து ராம் பீமை தூக்கி வருவார். சிறையிலிருந்து தப்பிக்கும் போது பீம் ராமை தூக்கி வருவார். ரயில் விபத்து காட்சியில் பீம் பைக்கிலும் ராம் குதிரையில் செல்லும் காட்சியமைப்பை அப்படியே இறுதி காட்சியிலும் வைத்துள்ளார்.
பீம் கதாப்பாத்திரம் மல்லியை காப்பாற்றவே செல்கிறது. ஆனால் அவரை கவர்னரை கொல்லவரும் கொலைகாரனாக ராம் நினைப்பதில் திரைக்கதை அமைப்பில் தெளிவில்லாமல் இருப்பதாக இருக்கிறது.
ராஜமௌலி படங்களில் பொதுவாக ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் ஏதாவது ஒரு அடிப்படையில் மனதில் நிற்கும். ஆனால் இந்த படத்தில் ராம்சரன் மற்றும் ஜூனியர் என் டி ஆர் கதாப்பாத்திரம் மட்டுமே நினைவில் நிற்கிறது. வேறு எந்த பாத்திரப்படைப்பும் மனதில் பதியவில்லை.
வில்லனாக சித்தரிக்கப்படும் கவர்னர் கதாப்பாத்திரம் வலுவான கதாப்பாத்திரமாக இல்லாமல் சாதாரணமாக கடந்து செல்லும் ஒன்றாக இருக்கிறது.
இரண்டு நாயகிகள் அலியா பட் மற்றும் ஒலிவியா மோரிஸ் படத்தில் இருந்தும் மனதில் பதிய ஒரு காட்சி கூட இல்லை.
பாகுபலி படத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்ட செட் எதார்த்த அடிப்படையில் இருந்தது. ஆனால் இந்த படத்தில் போடப்பட்ட செட் உண்மைத்தனத்தை உணர்த்தாமல் செயற்கை தனத்தையே உணரவைக்கிறது.
தொகுப்பு.:
R R R திரைப்படம் பிரமாண்டம் என்ற ஒற்றை அடிப்படையை தாண்டி ரசிப்பதற்கு எதுவுமில்லை. விழிகளுக்கு கொடுத்த விருந்தை நாவிற்கு கொடுக்க மறந்துள்ளனர். வயிறு நிறைந்த திருப்தியில்லை.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.