Join/Follow with Our Social Media Links

யுத்த சத்தம் திரைவிமர்சனம்

யுத்த சத்தம் திரைவிமர்சனம்


Youtube Review

கள்ளல் குளோபல் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் D விஜயகுமார் தயாரித்துள்ள படம் யுத்த சத்தம். பாக்கெட் நாவல் மன்னன் ராஜேஷ் குமாரின் யுத்த சத்தம் கதையை படமாக எடுத்துள்ளனர். இதற்கு எழில் திரைக்கதையெழுதி இயக்கியுள்ளார். D இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். R B குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோபி கிருஷ்ணா படத்தை தொகுத்துள்ளார்.

யுத்த சத்தம் படத்தில் R பார்த்திபன் சப் இண்ஸ்பெக்டர் கதிர்வேலன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கவுதம் கார்த்திக் நகுலன் என்ற துப்பறிவாளன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சாய்பிரியா தேவா ராகவி கதாப்பாத்திரத்தில் நகுலனால் நேசிக்கப்படுபவளாக நடித்துள்ளார். ரோபோ சங்கர் போலிஸ் காண்ஸ்டெபிளாக நடித்துள்ளார். மனோபாலா, சாம்ஸ், மூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதைக்கரு.:

எலக்ட்ரானிக் போதை, அதாவது இசையையே போதையாக பயன்படுத்தி பெண்களை அடிமையாக்கி சீரழித்து வரும் நபர்களை கண்டுபிடித்து அழிப்பது தான் கதையின் அடிப்படை.

கதை.:

இன்ஸ்பெக்டர் கதிர்வேலன் ரவுண்ட்ஸில் இருக்கும் போது அவரை அவசரமாக ஸ்டேஷனுக்கு வரச்சொல்லி வயர்லெஸ்ஸில் தகவல் வருகிறது.  அப்போது இருசக்கர வாகனத்தில் வரும் நகுலனை தண்ணியடித்திருபதாக கருதி விசாரணை செய்து கொண்டிருக்கிறார். கதிர்வேலன் மொபைலில் சிக்னல் இல்லாத காரணத்தால் நூறு மூலம் வயர்லெஸ்ஸில் தகவல் கொடுத்ததாக சொல்கின்றனர். கதிர்வேலன் தன் மொபைலில் சிக்னல் இல்லாத காரணத்தால் நகுலனிடம் இருந்து மொபைலை பிடிங்கிக்கொண்டு அதன் வழியே ஸ்டேஷனுக்கும் தொடர்பு கொள்கிறார். அவரை விரைந்து வருமாறு சொல்கின்றனர். நகுலனிடம் மொபைலை ஸ்டேஷனில் வந்து வாங்கிக்கொள்ள சொல்கிறான் கதிர்வேலன்.

போலிஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க வந்த பெண்ணை போலிஸ் ஸ்டேஷனுக்கு வெளியே மர்ம நபர்கள் வெட்டி கொன்றுவிட்டதாக சொல்கின்றனர். அவர்களை போலிஸ் ஸ்டேஷனுக்கு உள்ளேயே பூட்டி வைத்திருந்ததாகவும் கதவை உடைத்துகொண்டு அவர்கள் வெளியே வந்ததாகவும் சொல்கின்றனர். அந்த பெண்ணை கூட்டி வந்த ஆட்டோ டிரைவரிடம் கதிர்வேலன் யார் கொன்றார்கள் என்று விசாரிக்கிறார். வந்தவர்கள் முகமூடி அணிந்திருந்ததால் அவர்கள் யார் என்று தெரியவில்லை என்று சொல்கிறான். அப்போது நகுலன் ஆட்டோ டிரைவர் பொய் சொல்கிறான் என்று சொல்கிறான். கதிர்வேலன் நகுலனை நீ யார் என்று கேட்கிறான். நகுலன், தான் ஒரு துப்பறிவாளன் என்று சொல்கிறான். அப்போது ஆட்டோ டிரைவர் விஷம் சாப்பிட்டு விடுகிறான். அவனை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

அங்கே வரும் போலிஸ் ஃபாரன்சிங்க் அதிகாரிகள் இறந்த பெண்ணின் பிணத்தை காட்டிக்கொண்டிருக்கின்றனர். அதை நகுலனும் பார்த்து அதிர்ந்து போகிறான். அவளை தன் காதலி ராகவியென்று சொல்கிறான்.

ராகவி வீட்டிற்கு விசாரணைக்கு கதிர்வேலனும் நகுலனும் பிற போலிஸூடன் செல்கின்றனர். அங்கே இருக்கும் வேலைக்காரியிடம் விசாரித்துவிட்டு சோதனை போடுகின்றனர். நகுலன் ராகவி அறையிலிருக்கும் ஒரு டைரியை எடுத்து மறைத்து வைக்கிறான். ஆனால் வீட்டு வேலைக்காரி அங்கிருந்து தப்பிக்க முயல்கிறாள். அவளை போலிஸ் கைது செய்கிறது. வேலைக்காரியாக தான் நடித்தை ஒப்புக்கொள்கிறாள். ராகவி வேலைசெய்யும் நிறுவனத்தின் போட்டி நிறுவனத்தில் தான் வேலை செய்வதாகவும் ராகவியை வேவுபார்க்க அவள் வீட்டுக்கு சென்றதாகவும் சொல்கிறாள். போட்டி நிறுவன முதலாளி ராகவியை கொலை செய்திருக்க வாய்ப்பிருப்பதாக எண்ணி அவரை விசாரிக்க செல்கிறார் கதிர்வேலன். அங்கே நகுலனும் இருப்பதை பார்க்கிறான். போன் செய்து நகுலன் எங்கே இருக்கிறான் என்று விசாரிக்கும் போது வெளியே இருப்பாதாக சொல்கிறான். அவன் பொய் சொல்வதை தெரிந்துகொண்ட கதிர்வேலனுக்கு நகுலன் மீது சந்தேகம் வருகிறது. அதே நேரம் ராகவி வீட்டில் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது நகுலன் ஒரு டைரியை எடுத்து மறைத்ததாக போலிஸ் அதிகாரி சொல்கிறார். நகுலன் மீதான சந்தேகம் வலுவாகிறது.

அந்த டைரியை பற்றி நகுலனிடம் விசாரிக்கிறான் கதிர்வேலன். அதில் இசையை போதையாக மாற்றி செயல்படுவதை பற்றிய குறிப்பு இருப்பதை நகுலன் சொல்கிறான். அதைப்பற்றி விசாரிக்க ஒரு நிபுணரிடம் கதிர்வேலனை அழைத்து செல்கிறான் நகுலன். இருவருக்கும் குளிர்பாணம் கொடுக்கிறார் அந்த நிபுணர். இசையை எப்படி போதையாக மாற்றுகிறார்கள் என்று ஒரு டெமோ காட்டுகிறார் கதிர்வேலனுக்கு. இசை போதையில் மயக்கமுறும் கதிர்வேலனை மருத்துவமனையில் சேர்க்கின்றனர். கதிர்வேலன் தான் குடித்த குளிர்பாணத்தில் தான் மயக்கமருந்தை நகுலன் கலந்து கொடுத்திருப்பதாக நினைத்து நகுலனை சந்தேகப்படுகிறான்.

நகுலனை பின் தொடர காண்ஸ்டெபிலிடம் சொல்கிறார் கதிர்வேலன். இதற்கிடையே ராகவி ஒரு பெண்ணின் சிகிச்சைக்காக பணம் கொடுக்க சொன்னதாக மருத்துவமனைக்கு ஒரு பெண் வருகிறாள். அங்கே கோமா நிலையில் ஒரு பெண் அனுமதிக்கப்பட்டிருப்பதையும் கதிர்வேலன் கண்டு பிடிக்கிறான். அப்போது தான் ராகவி உயிரோடு இருக்கும் போது மயங்கிய நிலையில் தன் தோழிகளை இந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அதில் சிலர் இறந்துவிட்டதையும் ஒரு பெண் கோமா நிலையில் இருப்பதையும் ஒரு பெண் மட்டும் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளதையும் கண்டுபிடிக்கிறான் கதிர்வேலன்.

உயிர்பிழைத்த அந்த பெண்ணை கண்டு பிடித்து விசாரிக்கிறான். அப்போது ராகவியும் அவள் தோழிகளான நாங்களும் எப்போது சந்தோசமாக இருப்பவர்கள். ஒரு பிறந்த நாள் விழா பார்ட்டிக்காக ஒரு கிளப்பிற்கு சென்றதாகவும் அங்கே இசைக்கப்பட்ட இசையில் தங்களை மறந்ததாகவும் சொல்கின்றனர்.. மீண்டும் மீண்டும் அந்த கிளப்பிற்கு சென்றோம் அந்த இசையின் மயக்கத்திற்காக அது மட்டுமின்றி அந்த போதையில் எங்கள் கற்பையும் பறிகொடுத்தோம் என்று சொல்கின்றாள்.

அந்த கிளப்பிற்கு சென்று கதிர்வேலன் பார்க்கும் போது அந்த கிளப்பை நடத்தும் வெளிநாட்டை சேர்ந்தவனை சுட்டு கொன்றதாக நகுலனை கைது செய்கின்றான் கதிர்வேலன்.

நகுலனையும் மற்றொரு கைதியையும் எண்கவுண்டரில் சுட்டுகொல்ல கதிர்வேலனும் அவனுடன் பணிபுரியும் மூன்று போலிஸ்காரர்களும் நியமிக்கப்படுகின்றனர்.

அப்போது கதிர்வேலன் ரவுடியையும் நகுலனையும் சுடுவதற்கு பதில் போலிஸ்காரர்களை சுட முயல்கிறான். கிளப் நடத்திய வெளிநாட்டுக்காரனை உடன் வந்த மூன்று போலிஸ்காரர்கள் தான் கொன்றனர் என்பதை நகுலன் பாரில் பொருத்தியிருந்த வீடியோ மூலம் கண்டுபிடித்ததாக சொல்கிறான் கதிவேலன். போலிஸ்காரர்கள் மூன்று பேரும் அந்த பாருக்கு சொந்தக்காரர்களே நாங்கள்தான் ராகவியை கொன்றதும் தாங்கள்தான் என்றும் சொல்கின்றனர். அவர்களை கதிர்வேலன் சுட்டு கொல்ல முயலும் போது துப்பாக்கியில் குண்டு இல்லாமல் இருக்கிறது. துப்பாக்கி இல்லாவிட்டாலும் கதிர்வேலனும் நகுலனும் சண்டை போட்டு மூன்று போலிஸ்காரர்களையும் கொல்கின்றனர்.

பாராட்டுக்குறியது.:

இசையை போதையாக பயன்படுத்த முடியும் என்ற புதிய அடிப்படையை கருவாக வைத்துள்ளனர்.

இமான் பின்னனி இசை சற்றே கவர்கின்றது.

இரவு நேர பின்னனியில் சென்னை நகர சாலைகளை அழகாக படம் பிடித்து கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர்.

நெருடலானவை.:

துள்ளாத மனமும் துள்ளும் படம் முதல் இயக்குனர் எழில் எடுத்த அனைத்து படங்களுக்கும் எழில் தான் கதையெழுதியுள்ளார். முதன் முறையாக ராஜேஷ் குமாரின் கதையை எடுத்து திரைக்கதை எழுதி இயக்க முயற்சித்துள்ளார். அது எழின் அடிப்படையிலும் இல்லாமல் ராஜேஷ் குமார் கதையின் அடிப்படையிலும் இல்லாமல் இருக்கின்றது.

நடிகர் பார்த்திபன் என்றால் அவருடை கவுன்ட்டர் வசனங்கள் தான் நினைவில் இருக்கும. அதற்காக படம் முழுவது கவுன்ட்டர் வசனங்களாக இருப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி நிறைய கவுன்ட்டர் வசனங்களுக்கு அவரே பீப் சவுண்ட் போடுகின்றார்.

கவுதம் கார்த்திக் படத்தில் ஒரு நாயகனாக வருகின்றார். அவருக்கான வேலை எதுவும் பெரிதாக இல்லை.

நகுலனை ராகவி காதலிக்கிறாரா?. இல்லை காதலிக்கவில்லையா?. குழப்பத்தில் விடப்பட்ட பாத்திரபடைப்பு.

கதையில் ஓட்டையா திரைக்கதையில் ஓட்டையா. ராகவியை கொலை செய்யும் கொலையாளிகள் ஆட்டோகாரனை ஏன் கொலை செய்யவில்லை? அந்த கதாப்பாத்திரத்தால் பயனே இல்லை.

கூடவே இருக்கும் போலிஸ்காரன் தன் தவறுகளை மறைக்க ஒட்டு மொத்த சாட்சியத்தையும் மாற்றுவதாக சொல்கின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை. ஆட்டோ பற்றி ஆய்வு சார்ந்த செயல்பாடுகள். இப்படி ஒட்டை மேல் ஓட்டை.

ரோபோ சங்கர் கதாப்பாத்திரத்தை பார்த்திபன் வடிவேலுவை பயன்படுத்தியது போல் பயன்படுத்த முயற்சித்து தோற்றதுடன் ரோபோ சங்கரையும் வீணடித்துள்ளனர்.

இசை போதையைத்தான் யுத்த சத்தம் என்று சொல்வார்களாம். அதனால் யுத்த சத்தம் என்ற பெயரை கேட்டு ஏமாறாதீர்கள்.

தொகுப்பு.:

யுத்த சத்தத்தில் இருப்பது பார்த்திபனின் சத்தம் மட்டுமே. மற்றபடி யுத்த சத்தம் வெத்து சத்தமாக தான் இருக்கிறது.

Movie Gallery

  • review

    Sneha

  • review

    Aparna Balamuralli

  • review

    Pooja Umashankar

  • review

    Surabhi

  • review

    Anikha

  • review

    Sunny Leone

  • review

    Sai Dhanshika

  • review

    Sheela Rajkumar

  • review

    Dimple Hayathi

  • review

    Devayani

  • review

    Aishwarya Lekshmi

  • review

    Amritha Aiyer

  • review

    Diva Dhawan

  • review

    Amritha Aiyer

  • review

    Shritha Sivadas

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.