Join/Follow with Our Social Media Links

மன்மத லீலை திரைவிமர்சனம்

மன்மத லீலை திரைவிமர்சனம், Manmatha Leelai Movie Review


ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் T முருகானந்தம் தயாரித்துள்ள படம் மன்மத லீலை. மணிவண்ணன் பாலசுப்ரமணியம் இந்த படத்தின் கதையை எழுதியுள்ளார். வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். தமிழ் A அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். வெங்கட் ராஜென் படத்தை தொகுத்துள்ளார்.

1976 ல் பாலசந்தர் இயக்கத்தில் மன்மத லீலை படம் வெளிவந்து வெற்றிபெற்றது. இந்த படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது. அந்த படத்தின் கதையின் சிறிய அடிப்படையை கொண்டு உருவாகியுள்ளது இந்த மன்மத லீலை திரைப்படம்



மன்மத லீலை படத்தில் அசோக் செல்வன் சத்யா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சம்யுக்தா ஹெக்டே பூரணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்மிருதி வெங்கட் அணு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ரியா சுமன் லீலா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஜெயபிரகாஷ், பிரேம்ஜி அமரன், கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதைக்கரு.:

திருமணமான பெண்ணுடன் கள்ளத்தொடர்பு என்ற ஒரு அடிப்படையையும் திருமணமான ஒருவனுடன் கொண்ட கள்ளத்தொடர்பு என்ற இரட்டை அடிப்படையில் ஒரே மனிதனின் பின்னணியை கொண்டு உருவாகியுள்ளது இந்த திரைப்படம்.

கதை.:

பத்தாண்டுகளுக்கு முன் 2010 ல் பூரணியுடன் ஆன் லைன் சாட் மூலம் நட்பாகிறான் சத்யா. ஆன் லைன் மூலமே தங்கள் புகைப்படங்களை பகிர்ந்து கொள்கின்றனர். பூரணி சத்யாவிடம் தன் தந்தை இரண்டு நாள் மீட்டிங் தொடர்பாக வெளியே செல்கிறார் நாம் சந்திக்க முடியுமா? என்று கேட்கிறாள். அவள் மீது தீராத மோகம் கொண்ட சத்யா சந்திக்கலாம் என்று சொல்கிறான். தனக்கு பீர் வாங்கி வர சொல்கிறாள். அவளுடைய நண்பர்கள் பீரைப்பற்றி சொல்லியுள்ளதாக சொல்கிறாள். பூரணியின் தந்தையும் வீட்டை விட்டு வெளியேறுகிறார். சத்யா அவர் வெளியேறியது தெரிந்து பூரணியின் வீட்டிற்கு பின் காரை நிறுத்திவிட்டு பூரணி வீட்டிற்குள் செல்கிறான். இருவரும் பீர் சாப்பிட்டுக்கொண்டு இருக்கின்றனர். எப்படியாவது பூரணியை அடைந்துவிட வேண்டுமென்று நினைக்கிறான். அவன் பாத்ரூமிற்கு செல்லும் போது அதில் ஓட்கா மற்றும் காண்டம் இருப்பதை பார்த்து பூரணி கோபப்படுகிறாள். சத்யாவை வீட்டை விட்டு வெளியே துரத்துகிறாள். வெளியே மழை பெய்துகொண்டிருந்தது.

எப்படியாவது பூரணியை அடைந்துவிட வேண்டுமென்று பல பொய் பேசி நடித்து அவளை ஏமாற்றுகிறான். பின் வீட்டிற்குள் செல்கிறான். மழையில் இருவரும் நனைந்த காரணத்தால் தன் உடையை மாற்றிக்கொண்டு மிகவும் கவர்ச்சியான கோலத்தில் வருகிறாள் பூரணி. சத்யாவும் வேட்டி சட்டை மாட்டிக்கொண்டு வருகிறான். ஓட்கா குடிக்கின்றனர். இருவரும் காமத்தின் உச்சத்தில் தங்களை இழக்கின்றனர்,

விடிகின்றது எதிர்பாரதவிதமாக அவளது தந்தை வந்து காலிங் பெல்லை அடிக்கிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத பூரணி அரை நிர்வாண கோலத்தில் படுக்கையிலிருக்கும் சத்யாவை எழுப்பி விஷயத்தை சொல்கிறாள். இதை சற்றும் எதிர்பார்க்காத இருவரும் இதை எப்படி சமாளிப்பது என்று பதறுகின்றனர். வீட்டிலிருக்கும் பீர் பாட்டிலை சுத்தம் செய்துவிட்டு சத்யாவை மறைந்திருக்க சொல்கிறார். வீட்டின் கதவை திறக்கிறாள். ஏன் இவ்வளவு நேரம் கதவை திறக்க என்று கேட்க குளித்துக்கொண்டு இருந்தேன் என்று பொய் சொல்கிறாள். மீட்டிங் சீக்கிரம் முடிந்து விட்டதால் வந்து விட்டேன் என்று அவர் சொல்கிறார்.

அவரிடமிருந்து தப்பிக்க சத்யாவும் தப்பிக்க வைக்க பூரணியும் போராடுகின்றனர். அங்கே இருக்கும் ஸ்டோர் ரூமில் மறைந்து கொள்கிறான். அப்போது அங்கே தந்தை என்று சொன்னவருடன் பூரணி செய்து கொண்ட திருமண போட்டோவை பார்த்து அவர் தந்தையல்ல பூரணியின் கணவர் என்று தெரிந்து சத்யா அதிர்ச்சியாகிறான். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து துடிக்கிறான்.

நம் திருமண போட்டோ எங்கே என்று கேட்கிறான் பூரணி தந்தை என்று கூறப்பட்ட அவள் கணவன். அது ஸ்டோர் ரூமில் இருக்கிறது என்று சொல்கிறாள். சத்யா தப்பிக்க முயலும் போது பூரணியின் கணவனிடம் மாட்டிக்கொள்கிறான். பூரணியின் கணவனிடம் உங்களை அவள் தந்தை என்று சொல்லி என்னை ஏமாற்றிவிட்டாள் பூரணி. உங்கள் மனைவி என்று தெரிந்திருந்தால் வந்திருக்க மாட்டேன் என்று சத்யா சொல்கிறான். பூரணியின் கணவன், திருச்சியில் ஒருவனுடன் கள்ளத்தொடர்பு இருந்த காரணத்தால் அங்கிருந்து இங்கு வந்தோம். இங்கே வந்தும் இப்படியா என்று சண்டை போடுகிறான். இது போல் எத்தனை பேருடன் தொடர்பு வைத்துள்ளாய் என்று பூரணியிடம் சண்டை போடுகிறான். சத்யாவையும் பூரணியையும் கொலை செய்ய முயல்கிறார். ஆனால் எதிர்பாராதவிதமாக சத்யா பூரணியின் கணவனை கழுத்தை நெரித்து கொல்கிறான்.

அந்த கொலையை மறைக்க பூரணியும் சத்யாவும் முயல்கின்றனர். தன் மீது சந்தேகப்பட்டு கொடுமைபடுத்திய கணவனை விட்டு தான் வெளியேறுவதாக ஒரு லெட்டரை எழுதி பிணத்தின் கையில் வைத்து தூக்கில் தொங்கவிட்டு தடயங்களை அழிக்கின்றனர். பூரணியை வீட்டின் முன் வழியே வரச்சொல்லிவிட்டு சத்யா வீட்டின் பின் வழியே வருகிறான்.

பூரணியை காரில் அழைத்துக்கொண்டு சென்று தன் பண்ணைவீட்டில் இருக்க சொல்கிறான்.

2020 சத்யா பெண்கள் ஆடைகள் வடிவமைப்பு தொழிலில் முன்னனியில் இருக்கும் தொழிலதிபர். அவர் மனைவி அணு மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார்.

அணு தன் தந்தை வீட்டுக்கு போக சத்யாவை கூப்பிடுகிறாள். சத்யா தனக்கு வேலை இருப்பதாக சொல்லி அவளை மட்டும் செல்லுமாறு சொல்கிறான்

சத்யா வீட்டில் தனியே குடித்துக்கொண்டு வேலைபார்த்து கொண்டிருக்கிறான். வெளியில் காலிங் பெல் அடிக்க கதவை திறக்கிறான். அங்கே மழையில் நனைந்த படி ஒரு பெண் இருக்கிறாள்.

பிறந்தநாள் விழாவிற்காக வந்தவள் இடம் மாறி சத்யாவின் வீட்டிற்கு வந்ததாக சொல்கிறாள். அவளை மழையில் நனைந்த ஈரத்துடன் பார்த்தவுடன் மோகத்தீ சத்யாவை பற்றி கொள்கிறது. ஆனால் பிறந்த நாள் பக்கத்து வீட்டில் என்று சொல்லி அனுப்புகிறான். ஆனால் சிறிது தூரம் சென்றவுடன் காலில் அடிபட்டு நிற்கிறாள். காலில் அடிபட்ட அவளை வீட்டிற்குள் அழைத்து செல்கிறான். அவள் முட்டியில் அடிபட்ட காயத்திற்கு மருந்து போட்டுக்கொண்டிருக்கும் போது அவளுக்கு தெரியாமல் பார்க்கும் சத்யாவிடம் மோகத்தீ மேலும் அதிகரிக்கிறது.

அவள் தன் பெயர் லீலா என்றும் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிபவள் என்றும் அறிமுகப்படுத்திக்கொள்கிறாள். சத்யாவின் உடை வடிவமைப்பை மிகவும் நேசிப்பவள் என்றும் அவனின் ரசிகை என்றும் சொல்கிறாள். இருவரும் மது அருந்துகின்றனர். சத்யா திருமணமானவன் என்று தெரிந்து தன்னை அவனுக்கு அர்பணிக்கிறாள்.

விடிகின்றது எதிர்பாரதவிதமாக சத்யாவின் மனைவி வந்து காலிங் பெல்லை அடிக்கிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத சத்யா படுக்கையிலிருக்கும் லீலாவை எழுப்பி விஷயத்தை சொல்கிறான். இதை சற்றும் எதிர்பார்க்காத இருவரும் இதை எப்படி சமாளிப்பது என்று பதறுகின்றனர், வீட்டிலிருக்கும் பீர் பாட்டிலை சுத்தம் செய்துவிட்டு லீலாவை மறைந்திருக்க சொல்கிறார். வீட்டின் கதவை திறக்கிறான். ஏன் இவ்வளவு நேரம் கதவை திறக்க என்று கேட்க குளித்துக்கொண்டு இருந்தேன் என்று பொய் சொல்கிறாள். மகள் தான் விரும்பிய டெடி பொம்மையை மறந்து வைத்து விட்டதால் இரவும் முழுவது சரியாக தூங்காமல் அழுததால் அதை எடுக்க வந்ததாக அணு சொல்கிறாள். அது மட்டுமின்றி கணவனிடம் மிகவும் அன்பாக இருக்கிறாள். இதை உணர்ந்த சத்யா தான் எதோ தவறு செய்து விட்டதாக உணர்கிறான்.  லீலாவை அவளிடமிருந்து மறைக்க மிகவும் பாடுபடுகிறான். ஒரு வழியாக மனைவி அணுவை அனுப்பி வைத்துவிட்டு லீலாவை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறான்.

ஆனால் லீலாவும் சத்யாவும் தனியாக இருந்தை சத்யாவிற்கு தெரியாமல் படம் பிடித்தாள் லீலா. அதை சத்யாவிற்கு போட்டுக்காட்டுகிறாள். இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது பின்னால் மண்டையில் ஒருவன் பீர் பாட்டிலால் அடிக்கிறான்.

மயக்கம் தெளிந்து பார்க்கிறான். லீலா ஒருவனுடன் நின்று கொண்டிருக்கிறான். யார் அவன் என்று கேட்கிறான்.

பத்தாண்டுகளுக்கு முன் பூரணியின் கணவனை கொலை செய்துவிட்டு பூரணிக்கே தெரியாமல் திருச்சியில் அவளுடன் தொடர்பு வைத்திருந்தவனுடன் பூரணி ஓடிச்சென்றுவிட்டதாக சாட்சியங்களை மாற்றியதல் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டவன் தான் அவன். பூரணி இருக்குமிடம் அவனுக்கு மட்டும் தான் தெரியும் என்று கணித்து லீலாவை வைத்து கடத்தியதாகவும் சிறையிலிருந்த வடுவை மறைக்க வந்ததாக சொல்கிறான். பணம் பறிக்க போவதாகவும் லீலாவும் அவளுடன் வந்தவனும் சொல்கிறார்கள்.

பூரணி தன் பண்ணை வீட்டில் இருப்பதாக சொல்லி அவர்களை அங்கே கூட்டி செல்கிறான். காலிங் பெல்லை அடித்து பூரணி என்று கூப்பிடுகிறான். அவள் வரவில்லை. சத்யா பின்பக்க வழியிலிருந்து வந்து தான் கதவை திறப்பதாக சொல்கிறான். பத்தாண்டுகளுக்கு முன் பூரணியை இங்கே அழைத்து வரும் போதும் இதைத்தான் சொல்கிறான். வீட்டின் பின் புறமிருந்து கதவை திறந்தவன் துப்பாக்கியுடன் வருகிறான். பத்தாண்டுக்கு முன் பூரணி முன்னும் கதவை திறந்து துப்பாக்கியுடன் வந்தவன் பூரணியை சுட்டு கொல்கிறான். அதே போல் லீலாவை சுட்டு கொல்கிறான். லீலாவுடன் வந்தவனை துப்பாக்கி முனையில் லீலாவின் பிணத்தை புதைக்க குழி தோண்டுகிறான். அங்கே ஒரு எலும்புக்கூடு இருக்கிறது. குழி தோண்டியனிடம் இது தான் உன் கள்ளகாதலி பூரணி அவளுடனே நீயும் சேர்ந்து கொள் என்று லீலாவுடன் வந்தவனையும் சுட்டு கொல்கிறான். அந்த குழியில் லீலாவையும் அவளுடன் வந்தவனையும் போட்டு புதைக்கிறான் சத்யா.

லீலையை தொடர தன் பயனத்தை தொடங்குகிறான் சத்யா..

பாராட்டுக்குறியது.:

மிகவும் அருமையாக திரைக்கதை அமைத்து இரு வேறு காலசூழல் நிகழ்வுகளை இணைத்து அருமையாகவும் விறுவிறுப்பாகவும் கொடுத்துள்ளார் வெங்கட் பிரபு.

இறுதி காட்சியில் யாரும் எதிர்பாரத திருப்பத்தை கொடுத்துள்ளார்.

சத்யா கதாப்பாத்திரத்தில் அசோக் செல்வன் இருவேறு காலசூழல் கதாப்பாத்திரத்தில் அருமையாக நடித்துள்ளார்.

பூரணி கதாப்பாத்திரத்தில் கணவனை ஏமாற்றுபவளாக அருமையாக நடித்துள்ளார் சம்யுக்தா ஹெக்டே.

தன்னை ஏமாற்றிய மனைவியை எதிர்கொள்ளும் கதாப்பாத்திரத்தில் ஜெயபிரகாஷ் அருமையாக நடித்துள்ளார்.

நெருடலானவை.:

பத்தாண்டுகளுக்கு முன் ஓரளவு சாமனியனாக இருந்த சத்யா மிகப்பெரிய பணக்காரனாக மாற உதவியது பூரணி வீட்டிலிருந்த எடுத்த பணம் என்று காட்டியிருப்பார் இயக்குனர். ஆனால் அப்போதே அவனுக்கு பண்ணை வீடு இருந்ததை போலவும் துப்பாக்கி இருந்ததை போலவும் காட்டியிருப்பது சற்று நெருடலானவை.

பிரேம்ஜி மற்றும் கருணாகரன் கதாப்பாத்திரங்கள் திரைக்கதையோட்டத்திற்கு கொஞ்சம் கூட பொருந்ததாக வெற்று கதாப்பாத்திரங்களாகவே இருக்கிறது.

திரைக்கதையோட்டம் மாநாடு படத்தையும் மங்காத்தா படத்தின் இறுதி காட்சியையும் நினைவூட்டுகிறது.

ஆங்கிலப்படங்களுக்கு இணையான முத்த காட்சிகள். வயது முதிர்ந்தவர்களுக்கான படம் என்பதை உணர்த்துகின்றன.

தொகுப்பு.:

மன்மத லீலை திரைப்படம் வெங்கட் பிரபுவின் வித்தியாசமான திரைக்கதையில் கவரும்படி இருக்கின்றது அவரின் திரைப்பயணத்தில் இன்னுமொரு மைல் கல். மொத்தத்தில் திரைப்பட ரசிகன் என்ற அடிப்படையில் மன்மத லீலை திரைப்படம் வித்தியாசமான திரைக்கதையில் வயதுவந்தவர்கள் மட்டும் ரசிக்கும் திரைப்படமாக லீலா விநோதம் செய்துள்ளது.

Movie Gallery

  • review

    Pooja Hegde

  • review

    Amala Paul

  • review

    Mahima Nambiar

  • review

    Esther Anil

  • review

    Prayaga Martin

  • review

    Rithika Singh

  • review

    Manjima Mohan

  • review

    Tamannah

  • review

    Rashmika Mandanna

  • review

    Nidhi Agarwal

  • review

    Meera Mithun

  • review

    Ramya

  • review

    Tanya Ravichandran

  • review

    Priyamani

  • review

    Tanya Ravichandran

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.