செவன் ஸ்கீரீன் ஸ்டுடியோ சார்பில் S S லலித் குமார் தயாரித்துள்ள படம் மகான். இந்த படத்தை கார்த்திக் சுப்ராஜ் எழுதி இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். விவேக் ஹர்ஷன் படத்தை தொகுத்துள்ளார்.
மகான் திரைப்படம் அமேசான் ஓ டி டி தளத்தில் 10-02-2022 முதல் நேரடியாக திரையிடப்பட்டுள்ளது.
மகான் படத்தில் விக்ரம் காந்தி மகான் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். துருவ் விக்ரம் தாதாபாய் நௌரோஜி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சிம்ரன் நாச்சி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். பாபி சிம்ஹா சத்யவான் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சனத் ராக்கி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். வேட்டை முத்துக்குமார் ஞானம் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஆடுகளம் நரேன் மோகன் தாஸ் கதாப்பாத்திரத்தில் காந்தி மகான் தந்தையாக நடித்துள்ளார். மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதைக்கரு.:
கொள்கை முரண்பாட்டால் எதிரும் புதிருமாக மோதிக்கொள்ளும் தந்தை மகன் பற்றிய கதை. கொள்கை என்பதற்காக அதையே பிடித்துக்கொண்டு இருக்கக்கூடாது. அதே நேரம் கொள்கையே இல்லாமலும் வாழக்கூடாது என்ற அடிப்படையை ஒரு கேங்ஸ்டர் கதை மூலம் சொல்லியுள்ளது இந்த படம்.
கதை.:
காந்திய கொள்கையால் ஈர்க்கப்பட்டு காந்திய பரம்பரையாக தன் குடும்பத்தையே உருவாக்க நினைப்பவர் மோகன் தாஸ். தன் பையன் காந்தி மகான் பிறந்த தேதியை கூட ஆகஸ்ட் 16 க்கு பதில் ஆகஸ்ட் 15 என்று பதிவு செய்திருப்பவர். அந்த ஊரில் சூசையப்பன் கள்ளச்சாரயம் காய்ச்சுபவன். மதுவிலக்குக்கு எதிராக ஒரு புறம் மோகன் தாஸ் போராடிக்கொண்டிருக்கும் போது அவர் மகன் காந்தி மகான், சூசையப்பன் மகன் சத்தியவான், மற்றும் ஞானம் மூன்று பேரும் சிறுவயதில் சீட்டாடிக்கொண்டிருக்கின்றனர். ஞானம் காந்தி மகான் அவனது நாய் ஜோக்கரை கடத்தி வைத்துக்கொண்டு தன்னை ஜெயிக்க வைக்க சத்தியவான் கூட இருந்து தவறான கார்டை போட வைக்கிறான். இந்த விஷயம் சத்தியவானுக்கு தெரிந்து காந்தி மகான் கூட சண்டை போடுகிறான். தன் நாய்காக இதை செய்ததாக சொல்ல ஞானத்துடன் சண்டை போடுகின்றனர். அப்போது ஞானம் நாயை ஒப்படைக்கிறான். ஆனால் நாயை வைத்தே ஞானத்தை கடிக்க வைக்கிறான்.
இந்த சண்டையை பார்த்து காந்திமகான் தந்தை மோகன்தாஸ் சின்ன வயசுலேயே சீட்டாட்டமா?. அதுவும் மதுவிலக்குக்கு எதிராக போராடும் காந்தியவாத குடும்பத்தை சேர்ந்த என் மகன் சராய வியாபாரி மகனுடன் சீட்டடுவது தவறு என்று கண்டிக்கிறார். இனி நீ பெயருக்கேற்றவாறு மகானாக வாழ வேண்டுமென்று காந்தி மகானிடம் சத்தியம் வாங்குகிறார்.
காந்திய சிந்தனையில் வாழும் காந்தி மாகனின் மனைவி நாச்சி இவளும் காந்தியவாதி குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு ஒரு மகன் அவன் பெயர் தாதாபாய் நௌரோஜி எனும் தாதா. காந்திய சிந்தனையில் வாழ்ந்தாலும் அவ்வப்போது தான் அந்த சிந்தனையைவிட்டு வெளியில் வாழவேண்டுமென்றும் ஆசைப்படுகிறான் காந்தி மகான். பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றுகிறான் காந்தி மகான். அவன் மனைவி ரயில்வே துறையில் பணியாற்றுகிறார். அனைவரும் ரயில்வே குவாட்டர்ஸில் வசித்து வருகின்றனர்.
ஆகஸ்ட் 15 காந்திமகான் பிறந்த நாள் (சர்டிப்பிகேட் படி) பள்ளியில் காந்தியின் மகன் அகிம்சையை பற்றி அழகாக பேசுகின்றனர். பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு காந்தியின் மூக்கு கண்ணாடியை பரிசாக கொடுக்கிறார் அவர் மாமனார். அந்த கண்ணாடியை போட்டுக்கொண்டு கோயிலுக்கு செல்கின்றனர். சாமி கும்பிட்டுவிட்டு தனியாக அமர்ந்திருக்கிறான் காந்தி மகான். அப்போது மாணிக்கம் என்ற பிச்சைக்காரன் அவனிடம் என்ன பிறந்த நாளா? எப்படியிருந்தாலும் எல்லா நாளும் ஒன்று தானே. இப்படியே எல்லாரும் வாழ்ந்து இறந்து கொண்டுதான் இருக்கின்றனர். உலகத்தில் 95 சதவீதம் இப்படித்தான் இருக்கின்றனர். அவர்களுக்கென்று ஒரு வட்டம் போட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 5 சதவீத மக்கள் மட்டும் தான் அவர்களுக்கென்று உண்மையான சுதந்திரத்துடன் வாழ்கின்றனர் என்று சொல்கிறான். அப்போது நாச்சியும் தாதாவும் சாமி கும்பிட்டு விட்டு வருகின்றனர். மாணிக்கம் சொன்ன 5 சதவீத மக்கள் வாழ்க்கை மீது காந்தி மகானுக்கு ஆசை வருகிறது. நாச்சி நானும் குழந்தையும் நாளைக்கு திருப்பதிக்கு போகிறோம் என்று சொல்கின்றனர். மறுநாள் இருவரும் திருப்பதிக்கு செல்கின்றனர். காந்தி மகான் மட்டும் தனியாக இருக்கிறான். இன்று ஒரு நாள் மட்டும் தான் விருப்பப்பட்ட மாதிரி வாழ நினைக்கிறான்.
கதர் வேட்டி சட்டைக்கு விடுதலை கொடுத்துவிட்டு ஜீன்ஸ் பேண்ட் கலர் சட்டை போட்டுக்கொண்டு மதுக்கடை பாருக்கு செல்கிறான். நீண்ட நாட்களுக்கு பிறகு குடிப்பதால் வாந்தி எடுக்கிறான். பக்கத்து அறையில் இருந்த பாரின் உரிமையாளர் ராக்கி யார் என்ன என்று விசாரிக்கிறான். முதல் முறையாக குடிப்பதால் ஒரு கிராக்கி வாந்தி எடுப்பதாக சொல்கிறான். வெளியில் வந்து பார்க்கிறான். அப்போது காந்தி மகானிடம் தான் உங்களிடம் படித்த ராக்கி என்று சொல்கிறான். பக்கத்து டேபிளில் இருந்தவர்கள் காந்தி மகானை கலாய்த்து தகராறு செய்கின்றனர். அடியாட்களை வைத்து ராக்கி அடிக்கிறான். தகராறு வேண்டாமென்று காந்தி சொல்ல அவன் இது என் பார் என்று சொல்கிறான் ராக்கி. என்ன சார் ஏன் புதுசா குடிக்கிறீங்க என்று கேட்கிறான். இன்று என் பிறந்த நாள் நான் நினைத்தது போல் இன்று வாழ நினைக்கிறேன் என்று சொல்கிறான். நான் தங்களுக்கு உதவுவதாக சொல்கின்றான் ராக்கி. தான் சீட்டு விளையாட வேண்டுமென்று காந்தி சொல்கிறான். ராக்கி காந்தியை கூட்டிக்கொண்டு சீட்டு விளையாடும் இடத்திற்கு செல்கிறான். அங்கே ராக்கியின் தந்தை சீட்டு விளையாடிக்கொண்டிருக்கிறார். காந்தி ஆலோசனையில் ஜெயிக்கிறார். காந்தியும் ராக்கியின் தந்தையும் ஏராளமான பணத்தை சம்பாதிக்கிறார்கள். அப்போது குடிக்க காந்திக்கு சாராயம் கொடுக்கிறார் ராக்கியின் அப்பா. சாராயம் வித்தியாசமாகவும் நன்கு போதையாகவும் இருப்பதாக காந்தி சொல்கிறான். இந்த சாராயம் என் அப்பா சூசையப்பனின் இயற்கை சாராயம் என்று சொல்கிறார். ராக்கியின் தந்தை. அப்போது தான் காந்திக்கு தெரிகிறது ராக்கியின் தந்தை தன் சிறுவயது தோழன் சத்தியவான் என்று. நன்றாக குடித்துவிட்டு சத்தியவான் வீட்டில் அனைவரும் மட்டையாகின்றனர். விடிந்ததும் வீட்டு ஞாபகம் வந்து வீட்டுக்கு செல்கிறான் காந்தி அவனுடன் ராக்கியும் சத்தியவானும் வருகின்றனர். தன் கணவன் குடித்ததை தெரிந்து மதுவிலக்கை போதிக்கும் காந்தியவாதி குடித்ததை கண்டு பொருக்காத நாச்சியும் அவள் தந்தையும் சண்டை போடுகின்றனர். காந்தி குடித்ததற்கு காரணம் சத்தியவான் என்று எண்ணி அவனை காந்தியின் மாமனார் அடிக்கிறார். சத்தியவானை நாச்சியும் அடிக்க முனையும் போது காந்தி நாச்சியை அடிக்கிறான். கொள்கையை விற்ற குடிகாரனுடன் இனி வாழமுடியாது என்று வீட்டை விட்டு மட்டுமின்றி காந்தியுடன் தொடர்பில்லாத வெளி மாநிலத்திற்கு மகன் தாதாவையும் கூட்டிக்கொண்டு செல்கிறாள். காந்தியை குவாட்டர்சை காலி செய்ய சொல்கின்றனர் ரயில்வே நிர்வாகத்தினர். தனியாக இருக்கும் காந்திக்கு சத்தியவான் அடைக்கலம் கொடுக்கிறான். காந்தியும் நாச்சியையும் பையனையும் தேடி கண்டுபிடிக்க முடியாமல் போகிறது.
சத்தியவானும் காந்தியும் நெருங்கிய நண்பர்களாகின்றனர். சத்தியவான் தந்தையின் இயற்கை சாராயத்திற்கு சூரா என்று பெயர்வைத்து அவனுடைய பாரிலேயே விற்க காந்தி யோசனை சொல்கிறான். அதே போல் காந்தி சத்தியவானின் தொழிலை பெருக்க பார் ஓணர்களை இணைத்து ஒரு சிண்டிகேட் அமைக்கிறான். அதற்கு சத்தியவானை தலைவனாக சொல்கிறான். ஒரு பார் ஓணர் இவர்கள் தீர்மானத்திற்கு எதிராக பேச அவனை மாடுகள் அடைக்கும் வண்டியில் அடைத்து அனுப்புகின்றனர். அதற்கு பழி வாங்க போதையிலிருக்கும் காந்தி, சத்தியவான் மற்றும் ராக்கியை கடத்தி கொல்ல முயலும் போது சண்டை போட்டு காந்தி காப்பாற்றுகிறான். தன் மகனின் நினைப்பிலேயே இருக்கும் காந்தியிடம் ராக்கியையே உன் மகனாக நினைத்துக்கொள் என்று சொல்கிறான். சத்தியவான். காந்தியும் அவனையும் மகனாக நினைக்கிறான். ராக்கியும் காந்தி அப்பா என்று பாசத்துடன் இருக்கிறான். அப்போது அரசு மதுக்கடைகள் அனைத்தையும் அரசுடமையாக்குவதாக அறிவிப்பு வருகிறது. சூரா சாராயத்தை அனுமதி பெற்ற மதுவாக மாற்ற அரசியலில் இருக்கும் ஞானத்தை அணுகுகின்றனர். ஞானம் தங்களது சிறுவயது நண்பன் என்றும் தெரிந்து கொள்கின்றனர். அனுமதி பெற்றுக்கொடுத்தால் 25 சதவீதம் லாபத்தை கொடுப்பதாக சொல்கின்றனர். காந்தி மற்றும் சத்தியவான் உதவியால் எம் எல் ஏ மற்றும் மந்திரி பதவியும் பெறுகிறான் ஞானம்.
ஒரு கட்டத்தில் சாராயத்தில் ஊழல் என்ற புகாரை கொடுக்க முயன்ற கலெக்டரை காந்தியின் மூலம் கொன்று பலரை ஊழலில் இருந்து காப்பாற்றி அதற்கு பலனாக துணை முதலமைச்சர் பதவியை பெறுகிறான். பேராசை கொண்டு அனைத்து மதுவகைகளையும் நாமே தயாரிக்கலாம். அது போல் போலி மதுபாட்டில்களை தயாரிக்கலாம் இதனால் பெரிய லாபம் பெறலாம் என்று ஆசை வார்த்தை காட்டுகிறான். ஆனால் சத்தியவானுக்கு இதில் உடன்பாடில்லாத காரணத்தால் ஒத்துக்கொள்ள மறுக்கிறான். இதனால் கோபம் கொண்ட ஞானம் அவர்கள் மது லைசன்ஸை கேன்சல் செய்கிறான். அது பற்றி கேட்கப்போன காந்தி, சத்தியவான் மற்றும் ராக்கியை பதவி கையில் இருந்த காரணத்தால் அவமானப்படுத்துகிறான் ஞானம். ஆனால் ஞானத்திற்கு இருக்கும் மறைமுக தொடர்பால் பிறந்த மகனை வைத்து மிரட்டி மீண்டும் லைசன்சை பெறுகிறான். தங்களை அவமானப்படுத்திய ஞானத்தை அவன் அலுவலகத்திலேயே வைத்து அடித்து துவைக்கிறான் சத்தியவான். இந்த அவமானத்தால் கூனி குறுகிய ஞானம் அவர்களை பழிவாங்க துடிக்கிறான்.
காந்திய கொள்கையால் ஈர்க்கப்பட்ட காந்தியின் மகன் தாதா நாச்சியால் வளர்க்கப்படுகிறான். மது குடிப்பவர்களை கொலைக்குற்றம் செய்தவர்களாக பார்க்கும் தாதா சிறுவயதிலிருந்தே தந்தையை பற்றிய தகவலை சேகரிக்கிறான். தந்தை மிகப்பெரிய சாராய சாம்ராஜ்ஜியத்தின் மன்னராக இருப்பதை தெரிந்து கொள்கிறான். வளர்ந்து போலிஸ் அதிகாரியாகிறான். மனதிலேயே சாராய வியாபாரிகளுக்கு எதிரான வன்மத்தையும் விதைத்து விருட்சமாக்கி வைத்திருக்கிறான்.
தாதாவை போலிஸ் அதிகாரியாக அமர்த்தி மாநிலத்தில் பூரணமதுவிலக்கை அமல்படுத்த போவதாகவும் சாராய வியாபாரிகளை கொலை செய்யவும் விரும்புவதாக சொல்லி தாதாவை பணியில் அமர்த்துகிறான் ஞானம்.
கிராமத்து திருவிழாவிற்கு காந்தியும் மைக்கேலும் செல்கின்றனர். அங்கே முதன் முதலாக மைக்கேலை கொன்று தான் தான் காந்தியின் மகனென்று அறிமுகப்படுத்திக்கொள்கிறான் தாதா. அதோடு ஆண்டனி, ராக்கி மற்றும் சத்தியவானையும் கொல்லப்போவதாக சொல்கிறான்.
ஆண்டனியை என்கவுண்டரில் கொலை செய்கிறான் தாதா. அதனால் கோபமடையும் ராக்கி மைக்கேலும் ஆண்டனியும் குடும்பத்தில் ஒருவர் போல் இருந்தனர். அவர்களை கொலை செய்த போலிஸ்காரனை கண்டு பிடித்து கொள்வதாக சொல்கிறான். ஆனால் காந்தி ராக்கியை தனியாக அழைத்து அந்த போலிஸ் அதிகாரி தாதா தன் மகன் என்று சொல்கிறான். இதை கேட்ட ராக்கி காந்தி அப்பா கவலைப்பட வேண்டாம் அவன் உங்கள் மகன் என்றால் என் தம்பி, வாங்க போய் பேசலாம். எல்லாம் சரியாகி விடும் என்று சொல்லி காந்தியை கூட்டிக்கொண்டு போகிறான். ஆனால் சமாதானம் பேச வந்த ராக்கியை தாதா சுட்டுக்கொள்கிறான். மனமுடைந்து போகிறான் காந்தி. தாதாவுடன் சண்டை போட்டு அவனை கொல்ல முயலும் போது மகன் என்ற பாசம் தடுத்த காரணத்தால் அடித்துவிட்டு மட்டும் போகிறான்.
வீட்டிலிருக்கும் நாச்சியிடம் தாதாவை அழைத்துக்கொண்டு போய்விடு இல்லைனா சத்தியவான் அவனை கொன்று விடுவான் என்று சொல்கிறான். நாங்கள் யாரையும் வலுக்கட்டாயமாக குடிக்க சொல்லவில்லை. குடிக்கிற குடிகாரர்களுக்காக மதுவை விற்கிறோம். ஆனால் விடுதலை சுதந்திரம் என்று காந்தியம் பேசிக்கொண்டு என்கவுண்டரில் சுட்டுக்கொல்வது எப்படி நியாயம் என்று கேட்கிறான்.
ராக்கியின் இறுதி சடங்கிற்கு கணத்த மனதுடன் செல்கிறான் காந்தி. சத்தியவான் இந்த என்கவுண்டர் செய்தது போலிஸ் என்றாலும் அதற்கு பின்னால் இருப்பது ஞானம். கொல்லப்பட வேண்டியது ஞானம் தான் அவனை முதலில் கொல் என்று காந்தியிடம் சத்தியவான் சொல்கிறான்.
காந்தியின் பேச்சை கேட்டு துணை முதல்வரான ஞானத்தை தன் மகன் பணியிட மாற்றத்திற்காக பார்க்க செல்கிறாள் நாச்சி. இதை தெரிந்து கொண்ட காந்தி நாச்சியிடம் இப்போதே இந்த ஊரைவிட்டு செல்லுங்கள் என்று சொல்கிறான். இவனால் அடிபட்டு மருத்துவமனையில் இருக்கும் தாதாவை பார்க்க காந்தி போகிறான். ஆனால் அங்கே தாதா இல்லை. அவன் ஞானத்தை பார்க்க சென்றுள்ளதாக சொல்கின்றனர்.
தன்னை கொல்ல காந்தி வெறியோடு இருப்பதை உணர்ந்த ஞானம் காந்திக்கு போன் செய்து உன் மகனை கடத்தியிருக்கிறோம். நீ சத்தியவானை கொல்லவில்லையென்றால் உன் மகனை கொன்றுவிடுவோம் என்று மிரட்டுகிறான் ஞானம்.
சத்தியவானை சந்தித்து தாதா தன் மகன் என்றும் நடந்த அனைத்தையும் சொல்ல முடிவெடித்து சத்தியவானை சந்திக்கிறான். இதை முன்பே உணர்ந்த ஞானம் சத்தியவான் மொபைலுக்கு ராக்கி கொலையான வீடியோவை அனுப்புகிறான். தன் மகனை கொலைசெய்தது அவன் மகன் என்று மறைத்த காந்தியின் மீது கடும் கோபம் கொள்கிறான் சத்தியவான். அப்போது காந்தி ராக்கியியும் என் மகனைப்போன்றவன் தாதாவும் என் மகன் அவன் கொல்லப்படுவான் என்று எனக்கு தெரியாது என்று சொல்கிறான். என்னை வேண்டுமானால் கொன்றுவிடு ஆனால் என் மகனை விட்டுவிடு என்று கெஞ்சுகிறான் காந்தி. ஆனால் உன் மகனை எப்படியும் கொல்வேன் முதலில் உன்னை கொல்கிறேன் என்று கொல்ல முயலும் போது காந்தி சத்தியவானை கொல்கிறான்.
சத்தியவானை காரில் வைத்து ஊருக்கு ஒதுக்கு புறத்தில் எரிக்கிறான். அங்கே வருகிறான் தாதா. சத்தியவானை கொல்ல நானும் ஞானமும் சேர்ந்து நடத்திய நாடகம் தான் என்னை அவன் கடத்தியது என்று சொல்கிறான். சத்தியவானிடம் நீங்கள் உண்மையை சொல்லி மனதை மாற்றிவிடுவீர்கள் என்று தெரியும். அதனால் நான் தான் ராக்கியின் கொலை வீடியோவை சத்தியவானுக்கு அனுப்பினேன் என்று கொக்கரிக்கிறான் தாதா.
காந்தி ஆமாம் நீ வந்துட்ட உன் அம்மா எங்கே என்று கேட்கிறான். குடும்பத்தையே கடத்தியதாக தானே ஞானம் சொன்னான் என்று குண்டை போடுகிறான். ஆனால் நாச்சியை மயங்கவைத்து வீட்டில் மாணிக்கத்தின் மூலம் அடைத்து வைத்து தன் பங்கு விளையாட்டை தொடங்கினான் காந்தி. ஞானம் எதற்கு அம்மாவை கடத்த வேண்டுமென்று தாதா கேட்கிறான். என்னை கொல்ல சொன்னால் நீ கொல்ல மாட்டாய். உன் அம்மாவை பணயமாக வைத்து கொல்ல சொன்னால் கொல்வாய் அதனால் தான் உன் அம்மாவை கடத்தியதாக சொல்கிறான். உன்னை அடைத்துவைத்த குடோனில் தான் உன் அம்மாவையும் அடைத்து வைத்திருப்பான் நான் அவளை காப்பாற்றுகின்றேன் நீ ஞானத்தை பார்த்துக்கொள் என்று சொல்கிறான். அதற்கு முன் இந்த வேலைக்கு லஞ்சமாக ஒரு கோடி ஞானத்திடம் கேள் அப்போது இந்த என்கவுண்டர் பின்னனி தெரியும் என்று சொல்கிறான். ஞானத்திடம் ஒரு கோடி லஞ்சம் வாங்க செல்லும் போது ஞானம் நீ நேர்மையானவன் என்று நினைத்தேன். ஆனால் நீயும் லஞ்சம் வாங்குபவன் என்று தெரிந்தால் உண்மையை சொல்லியே இந்த என்கவுண்டரை செய்திருப்பேன் என்று மொத்த உண்மையையும் சொல்கிறான். இதற்கிடையே அம்மாவை அப்பா காப்பாற்றியிருப்பார் என்று உணர்ந்த தாதா துணை முதலமைச்சர் ஞானத்தையே கொலை செய்கிறான் தாதா.
ஏராளமான பணத்தை மது ஒழிப்பு பிரச்சாரத்துக்காக நன்கொடையாக தன் பேரிலும் சத்தியவான் பேரிலும் கொடுக்கிறான் காந்தி.
அப்போது காந்தி தாதாவிற்கு போன் செய்து இப்போது நீதி நியாயம் கொள்கை பேசிய தீவிர கொள்கைவாதியான நீ குற்றவாளி. மது வியாபாரிகளான நாங்கள் மதுவிலக்கு போராளி. வீணாக கொள்கை கொள்கை என்று வாழ்வதைவிட வாழ்கையின் போக்கிற்கு வாழவேண்டுமென்று சொல்கிறான்.
பாராட்டுகுறியது.:
கார்த்திக் சுப்ராஜ் திரைப்படம் என்றாலே கேங்ஸ்டர் படம் என்ற அடிப்படையில் இருக்கும். அதில் எப்படி வித்தியாசமான பரிணாமங்களை கொடுக்க வேண்டும் என்பதை உணர்த்து இந்த படத்தையும் வித்தியாசமான கதை மற்றும் திரைக்கதை அடிப்படையில் உருவாக்கியுள்ளார்.
விக்ரம் காந்தி கதாப்பாத்திரத்தில் கேங்ஸ்டர் தலைவனாகவும் பாசமிகுந்த தந்தையாகவும் அருமையாக நடித்துள்ளார்.
பாபி சிம்ஹா சத்தியவான் கதாப்பாத்திரத்தில் அருமையாக நடித்துள்ளார்.
காந்தி மற்றும் சத்தியவான் கதாப்பாத்திரத்திற்கிடையிலான நட்பை அழகாகவும் ஆழமாகவும் கொடுத்துள்ளனர்.
சனத் ராக்கி கதாப்பாத்திரத்தில் அருமையாக நடித்துள்ளார். அதுவும் காந்திக்காக தாதாவிடம் அவர் பேசும் காட்சிகள் அருமை.
துருவ் விக்ரம் தாதா கதாப்பாத்திரத்தில் போலிஸ் அதிகாரி வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார். இன்னும் கொஞ்சம் நடிப்பதற்கு வாய்ப்பளித்திருக்கலாம்.
சூழ்ச்சிகள் நிறைந்த வில்லன் ஞானம் கதாப்பாத்திரத்தில் வேட்டை முத்துக்குமார் கச்சிதமாக பொருந்தியுள்ளார்.
சந்தோஷ் நாராயணன் இசையும் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவும் படத்தை பிரமாண்டப்படுத்தியுள்ளது.
நெருடலானவை.:
கதாப்பாத்திரங்களின் பெயரை காந்தி, தாதா நௌரோஜி, சத்தியவான் என்று வைத்திருப்பது ஒரு வேலை மக்கள் மனதில் பதியும் என்ற காரணத்திற்காகவா?. தவறான எதிர்மறை கதாப்பாத்திரங்கலுக்கு தியாகிகளின் பெயர் வைத்தது சற்று நெருடலாக உள்ளது.
மற்ற கதாப்பாத்திரங்களை ஒப்பிடும் போது பிரமாண்டமாக வந்திருக்க வேண்டிய தாதா கதாப்பாத்திரத்தில் பெரிய அழுத்தத்தை உணர முடியவில்லை. கொஞ்சம் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம். அந்த வலுவான கதாப்பாத்திரமான இது மேலோட்டமாக இருக்கின்றது.
கொள்கை கோட்பாடுகளுக்காக உயிரையே விடும் கதாப்பாத்திரங்களை அடிப்படையாக கொண்டு ஏராளமான திரைப்படங்கள் வந்துள்ளது. அதிலிருந்து மாறுபட்டு கொள்கை கோட்பாடுகளுக்கு எதிராக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை எப்படி ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற வினா இருந்து கொண்டுதான் இருக்கிறது.
தொகுப்பு.:
பெரிய அளவில் எதிர்மறை விமர்சனங்கள் இல்லாமல் கேங்ஸ்டர் கதைகளை விரும்பும் ரசிகர்களுக்கு விருந்தாக இருகின்றது மகான் திரைப்படம்.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.