Join/Follow with Our Social Media Links

கூகுள் குட்டப்பா திரை விமர்சனம்

கூகுள் குட்டப்பா திரை விமர்சனம்


ஆர்.கே செல்லுலாய்டு மற்றும் கல்லல் குளோபல் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் மற்றும் விஜயகுமாரன் தயாரித்துள்ள படம் கூகுள் குட்டப்பா. ஆன்ட்ராய்டு அஞ்சப்பன் வெர்சன் 5.25 என்ற மலையாளப்படத்தின் மறு உருவாக்கமாக உருவாகியுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர்கள் சபர் மற்றும் சரவணன் இயக்கியுள்ளனர். ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். அர்வி ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் ஆண்டனி படத்தை தொகுத்துள்ளார்.

கூகுள் குட்டப்பா படத்தில் கே எஸ் ரவிக்குமார் சுப்ரமணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தர்ஷன் ஆதி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். லோஸ்லியா மரியநேசன் ஆதியின் காதலியாக நடித்துள்ளார். யோகிபாபு பாபு கதப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ப்ராங்க் ராகுல் ராகுல் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். பிளாக் பாண்டி பாண்டி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் டிவி புகழ் பூவையார் யோகிபாபு மச்சான் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மனோபாலா சுப்ரமணியின் குடும்ப மருத்துவராக நடித்துள்ளார். சுரேஷ் மேனன் ரோபோ நிறுவன உரிமையாளராக நடித்துள்ளார். மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதைக்கரு.:

விஞ்ஞானத்தை வெறுக்கும் ஒரு நபர் ஒரு கட்டத்தில் விஞ்ஞான உலகத்தை மட்டுமே நேசிக்கும் மனிதனாக மாறுகிறார். அவரே அந்த விஞ்ஞான பந்தத்தில் இருந்து வெளிவர முடியாமல் தவிக்கிறார்.



கதை.:

கிராமத்தில் இயற்கையுடன் இணைந்து வாழும் சுப்ரமணி மனைவியை இழந்தவர். தன் மகன் ஆதியுடன் வசித்து வருகிறார். இயற்கையின் அடிப்படையில் வாழ நினைக்கும் அவர் தன் மகன் ஆதியை ரோபாட்டிக் இன்ஜீனியரிங் படிக்க வைக்கிறார். அவரும் டிஸ்டிங்க்ஸனில் பாஸாகிறார். தன் படிப்புக்கு ஏற்ற வேலையை செய்ய வெளிநாட்டுக்கு செல்ல விரும்புகிறார். ஆனால் சுப்ரமணி தன் மகனை வெளி நாட்டிற்கெல்லாம் செல்ல வேண்டாம் உள்ளூரிலேயே ஏதாவது வேலை பார்க்க சொல்கிறார்.

தன் தந்தை குட்டப்பனை வெறுக்கிறான் ரேஷன் கடை ராகுல். காரணம் அவன் தந்தை திருடன், அது மட்டுமின்றி அவன் தாயை கொலை செய்த கொலைகாரன். அதனால் அவன் தந்தையை பற்றியோ அல்லது அவர் பெயரையோ யாராவது சொன்னால் கொலைவெறியாகிறான் ராகுல். தன் தந்தை குட்டப்பனை கண்டுபிடித்து கொல்ல துடிக்கிறான்.

சுப்ரமணியின் உடல் நிலை சரியில்லாமல் போகிறது. நர்ஸை பணியமர்த்திவிட்டு தன் மாமா பாபுவை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு வெளிநாடு செல்கிறான் ஆதி. ஆனால் சுப்ரமணிக்கும் நர்ஸிற்கும் ஒத்துவராமல் போகிறது. மீண்டும் தனிமையில் இருக்கிறார் சுப்ரமணி.

வெளிநாட்டில் வேலைபார்க்கும் ஆதி தன்னுடன் பணிபுரியும் இலங்கை தமிழ் பெண்ணுடன் லிவிங்க் டூகெதர் முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

சுப்ரமணிக்கு மீண்டும் உடல்நிலை சரியாகாமல் போகிறது. பாபு இந்த தகவலை ஆதிக்கு சொல்கிறான். இந்தியாவிற்கு வேலையை ராஜினாமா செய்து போகலாமா என்று நினைக்கிறன். அவன் நிறுவன முதலாளி தன்னிடம் இருக்கும் ரோபாவை இந்தியாவிற்கு அனுப்பி சோதனை செய்ய.முடிவெடுக்கிறான். ஆதி ரோபோவுடன் இந்தியாவிற்கு வந்து தந்தைக்கு பணிவிடை அமர்த்துகிறான். பின் மீண்டும் வெளிநாட்டுக்கு போகிறான்.

ஆனால் தொழில்நுட்பங்களை வெறுக்கும் சுப்ரமணியால் ரோபாவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அந்த ரோபாவை ராகுலின் தந்தை குட்டப்பன் என்று தவறாக நினைத்து பேப்பர் போடும் பாண்டி ராகுலிடம் சுப்ரமணி வீட்டில் ஒளிந்திருப்பதாக சொல்கிறான். தன் தந்தையை கொலை செய்யும் வெறியுடன் சுப்ரமணி வீட்டிற்கு போகிறான். ஊர்மக்கள் அவனை பின் தொடர்கின்றனர். ஆனால் வீட்டில் இருப்பது குட்டப்பன் அல்ல ரோபோ என்று தெரிந்து மக்கள் அந்த ரோபோவிற்கு குட்டப்பன் என்று பெயர் சூட்டுகின்றனர்.

ஒரு கட்டத்தில் ரோபோவை புரிந்து கொண்டு அதன் மீது பாசம் வைக்கிறார். ரோபோவிற்கும் சுப்ரமணிக்குமான பாசப்பிணைப்பு அதிகரிக்கிறது. சுப்ரமணி ஒரு தலைகாதல் கொண்ட காதலி பவித்ரா தன் கணவனை இழந்து மகளுடன் மீண்டும் கிராமத்திற்கு வருகிறாள். ரோபோவின் உதவியுடன் முகத்தை காண்பிக்காமல் முகநூல் வழியாக தன் காதலை வெளிப்படுத்துகிறார் சுப்ரமணி. இதெல்லாம் தவறு என்று நினைக்கும் போது ரோபோ வெளிநாடுகளில் இதெல்லாம் சகஜம். அதை லிவிங் டூகெதர் என்று சொல்வார்கள் என்று சொல்லி அவர்களிடையே காதலை வளர்க்கிறது. தன் மகனைப்போல் ரோபோ குட்டப்பனை பாவிக்கிறான்.

அதே நேரம் ரோபோ குட்டப்பாவை தன் தந்தையாகவே பாவித்து அதை எப்படியாவது அழிக்க வேண்டுமென்று துடிக்கிறான் ராகுல்.

சோதனை முடிந்து மீண்டும் ரோபோவை கொண்டு வரச்சொல்கிறார் நிறுவன முதலாளி. ஆனால் தன் தந்தை அதன் மீது மிகுந்த பாசம் வைத்துள்ளதால் உடனே கொண்டு வரமுடியாது என்று சொல்கிறான் ஆதி. அதே நேரம் சோதனைக்காக பல இடங்களில் பயன்படுத்தப்பட்ட ரோபோக்கள் அதன் முதலாளிகளை கொன்ற தகவல் கிடைக்கிறது. நீ ரோபோவை திரும்ப கொண்டுவராவிட்டால் இங்கிருந்தே உன் தந்தையை கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறார். ஆனால் சுப்ரமணி தன் கை ரேகை மூலம் தன் புரோகிரமை மாற்றுகிறது. அதனால் ரோபோவை அங்கிருந்தே கட்டுப்படுத்த முடியாமல் போகிறது.

எந்த நேரமும் தன் தந்தை உயிருக்கு ரோபாவால் ஆபத்து ஏற்படும் என்று உணர்ந்து அவரை காப்பாற்ற தன் காதலியுடன் இந்தியாவிற்கு வருகிறான். தந்தையிடம் ரோபோவை பற்றி எடுத்து சொல்லி பிரிக்க முயல்கிறான். ஆனால் தந்தை உன்னை போல் ரோபோ குட்டப்பனும் எனக்கு ஒரு மகன். என்னை நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தோசமாக இருக்க வைத்தது ரோபோ குட்டப்பன் தான் அதனால் பிரிய முடியாது என்று சொல்கிறார்.

எங்கே ரோபோ குட்டப்பனிடமிருந்து தன்னை பிரித்துவிட போகிறார்களோ என்று பயந்து ரோபோ குட்டப்பனுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார் சுப்ரமணி. அவர்களை ராகுலும் பின் தொடர்ந்து எப்படியாவது குட்டப்பனை அழிக்க வேண்டு என்று செல்கிறான்.

ஒரு கட்டத்தில் ரோபோ குட்டப்பன் தான் ஒரு உணர்வு மற்றும் உயிரற்ற ஒரு இயந்திரம் என்று புரியவைக்க முயலும் போது மிகுந்த துயரமடைகிறார் சுப்ரமணி. அந்த நேரம் பார்த்து ரோபோ குட்டப்பனை தன் தந்தை குட்டப்பனாக என்னும் ராகுல் ரோபோவின் தலையை கொய்கிறான். அதை பார்த்து அலறி துடிக்கிறார் சுப்ரமனி. அங்கு வரும் ஆதி அதற்கு உயிரில்லை உணர்வில்லை என்று சொல்லி புரியவைத்து தந்தை கூட்டிப்போகிறான். ஆனால் சுப்ரமனி ரோபாவை பிரியமுடியாமல் துடிக்கிறார்.

பாராட்டுக்குறியது.:

படம் முழுக்க வியாப்பித்திருப்பது கே எஸ் ரவிக்குமாரின் சுப்ரமணி காதப்பாத்திரம் மட்டுமே. அந்த கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.

யோகிபாபு, பூவையார் கதாப்பாத்திரங்களுக்கிடையே நடக்கும் நகைச்சுவை செந்தில் கவுன்டமணி இணையின் மற்றொரு பரிணாமம் போல் உருவாகியிருந்தது. சில காட்சிகளுடன் அவைகள் சுருங்கிவிடுகிறது.

வியாதிகொண்ட குடும்ப மருத்துவராக வருகிறார் மனோபாலா. இரண்டு மூன்று காட்சியில் மட்டும் வந்தாலும் ரசிக்கவைக்கிறார்.

நெருடலானவை.:

நாயகன் நாயகியாக தர்சன் மற்றும் லோஸ்லியா நடித்துள்ளர். நடித்துள்ளார்கள் என்று சொல்வதை படத்தில் இருந்திருக்கின்றனர் என்றே சொல்லவேண்டும். நடிப்பு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அடிப்படையில் தான் அவர்கள் நடிப்பு இருக்கிறது.

பிராங்க் ராகுல் நடிப்பு ஓவர் ஆக்டிங்காக இருக்கிறது.

விஞ்ஞானத்தை வெறுக்கும் மனிதராக இருக்கும் சுப்ரமணி தன் மகனை எதற்கு ரோபாட்டிக் இண்ஜீனியரிங் படிக்க வைத்தார். படிப்பு என்பது அறிவுக்காக என்று வசனம் பேசுகிறார். விவாசயத்தில் ஈடுபாடு கொண்ட அவர் மகனை விவசாயபடிப்பை படிக்க வைத்திருக்கலாமே?.

சுப்ரமணி ஒருதலைக்காதல் என்று அடிக்கும் லூட்டி ரசிக்க வைப்பதை தாண்டி ஒரு அபத்தமான ஒன்றாகவே தெரிகிறது.

ரோபோ நிறுவன முதலாளியை ஒரு பெரிய வில்லன் போல காட்டிவிட்டு டம்மியாகவே முடித்துள்ளனர்.

கதாநாயகியை இலங்கை தமிழராக காட்டியதன் அடிப்படை என்ன.? இந்த கதைக்கு அப்படிப்பட்ட கதாப்பாத்திர அடிப்படை தேவையா.? ஒரு வேலை தமிழில் படம் எடுக்க வேண்டுமென்றால் இது போல் இலங்கை பிரச்சனை, சாதிய பிரச்சனை, மதப்பிரச்சனை, முதலாளித்துவ பிரச்சனை என்று எதையாவது திணித்தால் தான் படம் வெற்றி பெறும் என்று நினைத்து விட்டார்களா.? அப்படியே இருந்தாலும் அந்த பாத்திர படைப்பு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் ஒப்புக்கு சப்பானியாக இருந்தால் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்.

தொகுப்பு.:

கூகுள் குட்டப்பா படம் கே எஸ் ரவிக்குமார் தன் நடிப்புத்திறமையை மட்டும் காட்டவே தயாரித்துள்ளதாக தெரிகிறது. அது மட்டும் ஒரு படத்திற்கு போதுமா.? மொத்தத்தில் கூகுள் குட்டப்பா படம் பெரிதாக எதிர்பார்த்து ஒன்றுமே இல்லாத வெற்று டப்பாவாக மட்டுமே உள்ளது.

Movie Gallery

  • review

    Nikki Galrani

  • review

    Keerthi Pandian

  • review

    Anu Emmanuel

  • review

    Ramya Pandian

  • review

    Amritha Aiyer

  • review

    Ragini Dwivedi

  • review

    Losliya

  • review

    Meera Mithun

  • review

    Tamannah

  • review

    Vani Bhojan

  • review

    Gouri G Kishan

  • review

    Jyothika

  • review

    Madhuri Jain

  • review

    Catherine Tresa

  • review

    Priya Bhavani Shankar

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.