Join/Follow with Our Social Media Links

நாய் சேகர் தமிழ் பட விமர்சனம்

நாய் சேகர் தமிழ் பட விமர்சனம்


A G S எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி S அகோரம் தயாரித்துள்ள படம் நாய் சேகர். கிஷோர் ராஜ்குமார் இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார். அஜீஸ் இசையமைத்துள்ளார். பிரவீன் பாலு ஒளிப்பதிவு செய்துள்ளார். ராம் பாண்டியன் படத்தை தொகுத்துள்ளார்.

காமெடி நடிகராக வலம் வந்த சதீஸ் நாய் சேகர் படத்தின் மூலம் சேகர் கதாபாத்திரத்தின் மூலம் நாயகன் அவதாரம் எடுத்துள்ளார். அவருடன் பவித்ரா லக்ஷ்மி, பூஜா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஜார்ஜ் மரியான், விஞ்ஞானி ராஜராஜன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சங்கர் கணேஷ், வில்லன் TTS கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இளவரசு, பூஜாவின் தந்தையாக நடித்துள்ளார். ஸ்ரீமன், இன்ஸ்பெக்டர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மனோபாலா, மென்பொருள் நிறுவன டீம் லீடராக நடித்துள்ளார். மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதைக்கரு.:

ஒரு மனிதன் உடம்பில் நாயின் டிஎன்ஏவும் மற்றும் நாயின் உடம்பில் மனித டி என் ஏ வும் மாற்றம் பெற்றால் என்ன நடக்கும் என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கும் படம் நாய் சேகர்.

கதை.:

விஞ்ஞானி ராஜராஜன் விலங்குகளின் மரபணு ஆராய்ச்சியில் ஈடுபடுபவர். அவரது ஆராய்ச்சிகள் தோல்வியடைந்த காரணத்தால் அவர் ஆராய்ச்சிக்கு தடை விதிக்கின்றனர். ஆனால் யாருக்கும் தெரியாமல் ஆராய்ச்சியை தொடர்கிறார். அவர் வீட்டிற்கு அருகில் குடியிருப்பவன் சேகர்.

சேகர் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்பவன். சிறுவயதிலிருந்தே நாய் என்றால் அவனுக்கு அலர்ஜி. அவன் அலுவலகத்தில் வேலைக்கு சேருகிறாள் பூஜா. பூஜா விலங்குகள் மீது பற்று கொண்டவள். புளு கிராஸில் உறுப்பினராக இருக்கிறாள். சிலை கடத்தல் செய்யும் காமெடி வில்லன் TTS. நாயை மாடியிலிருந்து தூக்கியெறியும் காட்சியை வீடியோவாக எடுத்து அதை சமூக வலைதளத்தில் பதிந்தவன். பூஜாவின் தோழி இதற்காக வழக்கு பதிந்தார். இதை தெரிந்த TTS பூஜாவின் தோழியை கொலை செய்கிறான். தன் தோழியை காணவில்லையென் பூஜா காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறாள்.

தன் அலுவலகத்தில் வேலைக்கு சேரும் பூஜாவை சக பணியாளர்கள் அனைவரும் எப்படியாவது நட்பாக்க நினைக்கின்றனர். ஆனால் பூஜா, சேகர் நன்றாக போட்டோ எடுப்பவன் என்று தெரிந்து தன்னை விதவிதமாக் போட்டோ எடுக்க வேண்டும் என்பதற்காக சேகரிடம் நட்பு கொள்கிறாள்.

ஒரு முறை வீட்டிற்கு கறி வாங்க வெளியில் செல்லும் சேகரை விஞ்ஞானி ராஜராஜன் மரபணு ஆராய்ச்சிக்கு பயன்படுத்தும் படையப்பா என்ற பெயர் கொண்ட நாய் கடித்துவிடுகிறது. இதனால் நாயின் குணம் சேகருக்கும், மனிதனின் குணம் படையப்பாவிற்கும் உருவாகிறது. இதனால் கோபம் கொள்ளும் சேகர் ராஜராஜனிடம் சண்டை போடுகிறான். ராஜராஜனோ விரைவில் நான் இதற்கு மாற்றுமருந்து கண்டிபிடிப்பதாகவும் அதுவரை படையப்பாவிற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்கவேண்டும் என்றும் சொல்கிறான். சேகர் படையப்பாவை தன்னுடனேயே வைத்துக்கொள்வதாக சொல்கிறான்.

சேகருக்குள் நாயின் குணாதிசயமும் படையப்பாவிற்குள் மனிதன் குணாதிசயமும் வருகிறது. குடும்பத்திடம் பெரிய அளவு பாசம் காட்டாத சேகருக்கு குடும்பத்தின் மீது பாசம் வருகிறது. அதே நேரம் படையப்பாவிற்கு மனிதன் போன்று தம்மட்டிப்பது டி.வி பார்ப்பாது போன்ற குணங்களும் வருகிறது.

இந்த சூழலில் பூஜாவிற்கு பெண் பார்க்க முயல்கின்றார் அவளது தந்தை. பூஜாவிற்கு சேகரின் மீது காதல் வருகிறது. தன் தந்தையிடம் வந்து பெண் கேட்க சொல்கிறார். சேகரும் தன் நண்பனுடன் சென்று பெண் கேட்கிறான். அப்போது அவர்கள் செல்ல நாயிற்காக பிஸ்கட் போட்டுக்கொண்டிருக்கிறார் பூஜாவின் தந்தை. நாயின் குணம் கொண்ட சேகர் பிஸ்கட்டிற்கு ஆசைப்பட்டு பூஜாவின் தந்தையை கடித்துவிடுகிறான்.

அவன் காதலுக்கு அவன் குணாதிசயமே எதிரியாகின்றது. சேகரின், நாயின் குணாதிசயம் காரணமாக எல்லா இடங்களிலும் அவமானத்தை சம்பாதிக்கிறான். இதற்கு காரணமான படையப்பாவின் மீது கோபப்படுகிறான். தன்னால்தான் சேகருக்கு பிரச்சனை என்று உணர்ந்த படையப்பா வீட்டை விட்டு வெளியேறுகிறான். வீட்டை விட்டு வெளியேறும் படையப்பா நாய் கடத்தும் கும்பலிடம் மாட்டிக்கொண்டு நாய்கறி சமைக்கும் குடோனில் அடைக்கபடுகிறது.

ராஜராஜனால் மாற்று மருந்து கண்டிப்பிடிக்கப்படுகிறது. இருவருக்கும் ஒரே நேரத்தில் இந்த மருந்தை செலுத்த வேண்டுமென்று சொல்கிறான் ராஜராஜன். படையப்பாவை தேடி அலைகின்றான் சேகர்.

ராஜராஜனும், சேகரும் படையப்பாவை காணவில்லையென்று போலிஸ் நிலையத்தில் புகார் கொடுக்கின்றனர். அதை தான் தீர்த்து வைப்பதாக சொல்கிறார் காமெடி போலிஸ் இன்ஸ்பெக்டர். ஊரெங்கும் நாயின் புகைப்படத்தை போட்டு நாயை கண்டுபிடித்து கொடுப்பவருக்கு ரூபாய் 50000 பரிசு கொடுப்பதாக நோட்டீஸ் ஒட்டுகிறான்.

தன் தோழியை காணவில்லை என்று போலிஸில் புகார் கொடுத்த காரணத்தால் பீயுட்டி பார்லரில் இருந்து வரும் பூஜாவையும் பியுட்டி பார்லரில் வேலை செய்யும் பெண்ணையும் கடத்துகிறான் வில்லன் TTS. தன் மகளை சேகர்தான் கடத்தியிருப்பதாக சந்தேகிக்கிறார் பூஜாவின் தந்தை.

நாய்கடத்தும் கும்பல் நாய் தன்னிடம் இருப்பதாக சொல்லி சேகரை வரச்சொல்கின்றனர். அதே நேரம் பூஜாவை கடத்திய கும்பல் பூஜாவின் துப்பட்டாவை பார்சலில் அனுப்புகின்றனர். அதை மோப்பம் பிடித்த சேகர் பூஜாவை தேடி செல்கிறான்.

அதே நேரம் நாய்கறி குடோனிலிருந்து படையப்பா தப்பி சேகர் வீட்டிற்கு வருகிறது. போலிஸ் சேகர் வீட்டுக்கு வந்து பூஜா கடத்தல் தொடர்பாக விசாரிக்கிறது. அப்போது போலிஸ் அதிகாரிக்கு போன் வருகிறது. சேகர் பூஜாவை கடத்திய இடத்திலிருந்து லோக்கேசன் மேப்பை அனுப்புகிறான். படையப்பா(நாய்) சேகரை காப்பாற்ற போலிஸ் ஜீப்பை ஓட்டி செல்கிறது. அந்த ஜீப்பில் தூங்கிகொண்டிருந்த காண்ஸ்டபில் நாய் ஜீப்பை ஓட்டுவதைப்பார்த்து மயங்கி விழுகிறான்.

பூஜா, பியூட்டி பார்லர் பெண்ணுடன் சேகரையும் கட்டி வைக்கிறான் வில்லன். அவனிடம் பணத்தை வாங்க சேகரை பின் தொடர்ந்து வந்த நாய் கடத்தல்காரனையும் கட்டிவைக்கிறான். இவர்கள் இருப்பிடம் தெரிந்து வந்த காமெடி இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிளையும் கட்டி வைக்கின்றனர். ஒவ்வொருவராக 7 பேரும் வந்து மாட்டிக்கொள்கின்றனர். அங்கே வரும் மனித குணம் முழுமையாக கொண்ட படையப்பா சண்டைப்போட்டு அனைவரையும் அடித்து துவைக்கிறது. அங்கே வரும் போலிஸ் உயரதிகாரி அனைவரையும் கைது செய்கின்றனர். அங்கே வரும் ராஜராஜன் சேகரையும் படையப்பாவையும் தன் லேபிற்கு கூட்டி சென்று மாற்று மருந்தை கொடுக்கிறான்.

லேபைவிட்டு வெளியில் வரும் சேகரை ராஜராஜன் லேபிலிருந்து தப்பிக்கும் பூனை பின் தொடர்கிறது. அடுத்த பாகத்திற்கு அடிப்படையாக இந்த காட்சியை வைத்துள்ளனர்.

பாராட்டுக்குறியவை.:

படத்தை எங்கும் தொய்வு ஏற்படமால் திரைக்கதையை தொடக்கத்திலிருந்து இறுதிவரை நகைச்சுவையை மட்டும் பிரதானப்படுத்தி படத்தை எழுதியுள்ளார்.

நகைச்சுவை நடிகரான சதீஸ் கதாநாயகனாக நடித்திருந்தாலும் கடைசிவரை கதாநாயகன் என்ற அடையாளத்தை கொடுக்காமல் நகைச்சுவை நடிகராக படம் முழுக்க வலம்வர செய்துள்ளனர். டயலாக் டெலிவரியில் நகைச்சுவை மிளிர்கிறது.

சங்கர்-கணேஷ் இரட்டை இசையமைப்பாளர்களில் ஒருவரான கணேஷ் வித்தியாசமான வில்லனாக பாடல் பாடியே வில்லத்தனம் செய்கிறார். கதை சொல்லி வில்லத்தனம் செய்து சபாஷ் போடவைக்கிறார். அதிலும் இறுதி காட்சியில் ஒவ்வொருவராக வந்து மாட்டிக்கொள்வதும். அவர்களுக்கு சவப்பெட்டி அளவு சொல்லும் போதும் வில்லதனத்தில் சிரிக்கவைத்துள்ளார்.

நெருடலானவை.:

நகைச்சுவைக்கு அதிகம் வாய்ப்புள்ள கதையம்சத்தில் நகைச்சுவை எதிர்பார்க்கும் அளவிற்கு இல்லை.

முதல் பாதியில் திரைக்கதை சற்று தொய்வாக உள்ளது.

சதீஸ் நாய் போன்று நன்றாக நடித்திருந்தாலும் டயலாக் டெலிவரியில் இருக்கும் நகைச்சுவை பாடி லாங்க்வேஜில் இல்லாமல் வெறுமையாக இருப்பதை போன்று தோன்றுகிறது.

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற பவித்ரா லக்ஷ்மி முதன் முறையாக கதாநாயகியாக நடித்துள்ளார். கொடுத்த பாத்திரத்திரத்தில் நடித்துள்ளார் என்று சொல்வதைவிட வந்து செல்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

கூடு விட்டு கூடு பாயும் அடிப்படையில் ஏராளமான படங்கள் வந்திருக்கின்றன. அதே அடிப்படையில் மரபணு மாற்ற குணாதிசயத்தை வைத்து இந்த படத்தை இயக்குனர் உருக்கியுள்ளார். இரண்டிற்கும் வேறுபாடு இல்லை.

தொகுப்பு.:

நாய் சேகர் திரைப்படம் ஓரளவிற்கு நகைச்சுவை பிரியர்களை கவரும். நகைச்சுவை அங்கங்கே தென்பட்டாலும் பெரிய அளவு ரசிகர்களை ஈர்க்கவில்லை என்பதே நிதர்சனம்.

Movie Gallery

  • review

    Miya George

  • review

    Vani Bhojan

  • review

    Oviya Helen

  • review

    Meena

  • review

    Athmiya Rajan

  • review

    Sunaina

  • review

    Kangana Ranaut

  • review

    Priya Anand

  • review

    Sneha

  • review

    Losliya

  • review

    Kiran Rathod

  • review

    Reshma Pasupuleti

  • review

    Sakshi Agarwal

  • review

    Sherin Shringar

  • review

    Navya Nair

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.