Join/Follow with Our Social Media Links

சாணிக் காயிதம் திரை விமர்சனம்

சாணிக் காயிதம் திரை விமர்சனம்


ஸ்க்ரீன் சீன் சார்பில் சித்தார்த் ரவிபட்டி தயாரித்திருக்கும் படம் சாணிக் காயிதம். அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்கியுள்ளார். சாம்ஸ் C S இசையமைத்துள்ளார். யாமினி யஞ்ஞானமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். நாகூரான் ராமசந்திரன் படத்தை தொகுத்துள்ளார்.

சாணிக் காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷ் பொன்னி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் சங்கைய்யா கதாப்பாத்திரத்தில் பொன்னியின் சகோதரனாக நடித்துள்ளார். கண்ணா ரவி கீர்த்தி சுரேஷ் கணவன் மாரி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஆடுகளம் முருகதாஸ் கிரி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதைக்கரு.:

தன்னை சீரழித்து தன் கணவனையும் மகளையும் உயிரோடு தீயிட்டு கொழுத்திய கயவர்களை தன் சகோதரனுடன் சேர்ந்து பழிதீர்ப்பது தான் கதை.



கதை.:

பொன்னி போலிஸ் காண்ஸ்டெபிள், அவள் கணவன் மாரி, மற்றும் மகளுடன் பரதேச பட்டினத்தில் வசித்து வருகிறாள்.

சங்கையாவின் தந்தையின் முறையற்ற மனைவியின் மகள் தான் பொன்னி. சங்கையாவின் தாய் பொன்னியின் சிறுவயதில் பொன்னியின் தாய் மற்றும் மகளுக்கு சாபமிடுகிறாள். உன் வம்சமே இருக்காது. எரிஞ்சு சாம்பலாகுமுன்னு சாபாமிடுகிறாள். ஆனால் சங்கையாவிற்கு அவர்கள் மீது பாசம் இருக்கிறது.

பொன்னியின் கணவன் மாரி உயர் சாதியினர் அரிசி மில்லில் வேலை செய்கிறான். ஆனால் சுயமாரிதை உள்ளவன். அந்த மில்லை நடத்தி வருபவர்கள் பெருமாள், மணி, வாசு மற்றும் அன்பு.

கிரி பெருமாளின் உறவினர். பெருமாள் அவன் சொத்தை ஏமாற்றி அபகரித்தாக சொல்லி பெருமாளிடம் பகை கொள்கிறான்.

மாரியின் சுயமரியாதைக்கு பங்கம் வருகிறது. சண்டை போட்டு வேலையை இழக்கிறான்.

சங்கையாவின் தாயின் சாபத்தை மனதில் வைத்துக்கொண்டு சங்கையாவை வெறுக்கிறாள் பொன்னி. ஆனால் பொன்னியின் மகள் தனம் சங்கையாவின் மீது பாசத்தை பொழிகிறாள். தனம் தன் நண்பன் என்று கண் தெரியாத சுடலையை அறிமுகப்படுத்துகிறாள். சுடலை உயர்சாதியை சேர்ந்த பெருமாள் மகன்.

தனம் சங்கையாவிடம் பேசிக்கொண்டிருக்கிறாள். போலிஸ் காண்ஸ்டபிளான பொன்னி தனத்தை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு போகிறாள். வேலையை இழந்த மாரி குடித்துவிட்டு வீட்டில் இருக்கிறான். அவனிடம் அவர்களது ஏழ்மையை எடுத்துசொல்லி மன்னிப்பு கேட்டு வேலையில் திரும்ப சேர சொல்கிறாள்.

அடுத்த நாள் மன்னிப்பு கேட்க அரிசி மில்லிற்கு போகிறான் மாரி. அங்கே அவன் மனைவியை பற்றி அவளை வைத்து வியாபாரம் செய்து பிழைத்துக்கொள் என்று சொல்கிறான். நாங்களே அவளை பயன்படுத்துக்கொள்கிறோம் இதில் ஜாதியெல்லாம் பார்ப்பதில்லை என்று மணி சொல்கிறான். கோபமடைந்த மாரி மணியின் முகத்தில் காரி தூப்புகிறான். பெருமாள், வாசு மற்றும் அன்பு அவனை அடித்து உதைத்து அனுப்புகின்றனர். முகத்தில் எச்சில் துப்பியதை நினைத்து கோபத்தின் உச்சத்திலிருக்கும் மணி. இன்ஸ்பெக்டர் தேவா மூலம் அந்த பொன்னியை வரவழைக்க சொல்கிறான்.

சங்கையா பொன்னியின் மகள் தனத்துடன் பேசிக்கொண்டிருக்கிறான். இரவாகியும் பொன்னி வராத கராணத்தால் தனத்தை தானே வீட்டில் கொண்டு வந்து விடுவதாக சொல்லி கூட்டிக்கொண்டு போகிறான்.

இன்ஸ்பெக்டர் தேவா ஒரு இடத்திலிருக்கிறான். பொன்னி அங்கே வருகிறாள். ஒரு பஞ்சாயத்து முடித்துவிட்டு போகலாம் என்று பொன்னியிடம் சொல்கிறான் தேவா. தேவா பொன்னியை இருக்க சொல்லிவிட்டு அருகிலிருக்கும் வீட்டிற்குள் செல்கிறான். அப்போது கண் தெரியாத சுடலை தட்டு தடுமாறி வருகிறான். பொன்னி அவனை அங்கே அருகில் அமர்ந்திருக்க சொல்லிவிட்டு நான் வீட்டுக்கு போகும் போது கூட்டிப்போவதாக சொல்கிறாள்.

தேவா பொன்னியை வீட்டிற்குள் வரச்சொல்கிறான். வீட்டிற்குள் அன்பு, மணி, பெருமாள் மற்றும் வாசு அவளை அடித்து உதைத்து அனைவரும் கற்பழிக்கின்றனர். அவர்களுடன் தேவாவும் சேர்ந்து கொள்கிறான்.

சங்கையா தனத்தை வீட்டில் விடுகிறான். மாரி குடித்துவிட்டு தூங்கிக்கொண்டு இருந்தான். வீட்டைவிட்டு வெளியே வந்த சங்கையா சிகரெட் பிடித்துக்கொண்டு நிற்கிறான். அதே நேரம் அங்கே வரும் அன்பு, மணி, வாசு மற்றும் பெருமாள் நான்கு பேரும் சங்கையாவின் தலையில் கட்டையால் அடித்துவிட்டு. மாரியின் வீட்டை பூட்டி மாரி மற்றும் தனத்தை உயிரோடு வைத்து எரிக்கின்றனர். மயக்கம் தெளிந்து எழும் சங்கையாவும் ஊர்மக்களும் தீயை அனைத்து காப்பாற்ற முயற்சிக்கின்றனர். ஆனால் முழுவதுமாக எரிந்து போகிறது குடிசை.

ஏற்கனவே கற்பழிக்கப்பட்டு கணவன் மற்றும் குழந்தையை பறி கொடுத்த பொன்னிக்கு சங்கையாவின் தாய் கொடுத்த சாபம் உனக்கு வாரிசு இல்லாமல் அனைவரும் எரிந்து போவார்கள் என்று சொன்னது நினைவுக்கு வருகிறது. ஆனால் சங்கையா பொன்னியிடம் குடிசையை எரித்த நாலு பேரும் போலிஸில் சரணடைந்துவிட்டதாக சொல்கிறான்.

ராணியும் இன்ஸ்பெக்டர் தேவாவும் சேர்ந்து நான்கு பேரையும் காப்பாற்ற முயல்கின்றனர். ஆனால் குடிசையை எரித்த குற்றத்திற்காக நான்கு பேரையும் பதினைத்து நாள் காவலில் வைக்க சொல்லி நீதிபதி சொல்கிறார். நான்கு பேரும் தேவாவிடமும் ராணியிடமும் கோபப்படுகின்றனர். உங்கள் பேச்சை கேட்டு சரணடைந்தோம். எங்களால் எப்படி ஜெயிலில் இருக்க முடியும் என்று சொல்கின்றனர். ராணி கிரி வெளியிலிருக்கிறான் அவன் உங்களுக்கு அடைக்கலம் கொடுப்பான். இங்கிருந்து தப்பி செல்லுங்கள் என்று கோர்ட்டுக்கு வெளியில் ஒரு சண்டையை உருவாக்கி போலிஸ் கவனத்தை திசை திருப்பி அவர்களை தப்பிக்க வைக்கிறாள். பெருமாளுக்கும் கிரிக்கு ஏற்கனவே சொத்து தகராறு இருக்கிறது. அவன் தன்னை ஏதாவது செய்துவிடுவான் என்ற பயம் இருக்கிறது.

நால்வரும் தப்பிய விவரம் தெரிந்த பொன்னி அவர்கள் தப்பிக்க ராணியும் தேவாவும் தான் காரணம் என்று அவர்களுடன் சண்டை போடுகிறாள்.

வீட்டில் தனிமையில் அமர்ந்திருக்கும் பொன்னியிடம் சங்கையா. உனக்கு சாபம் கொடுத்துவிட்டு நாங்கள் ஒன்றும் நல்லாயில்ல. என் மகன் பசிக்கு ஒரு மாங்கய் பறித்தான் என்று அவனை திருடன் என்று அயோக்கியர்கள் கொன்றுவிட்டனர். அதை கேட்க சென்ற என்னையும் அடித்துவிட்டு என் மனைவியையும் கொன்று நான் தான் அவர்களை கொடுமைபடுத்தி கொன்றதாக பழிபோட்டனர். யாருமே எனக்கு இல்லாத காரணத்தால் தான் உன் மகள் தனத்தின் மீது பாசத்துடன் இருந்தேன். இப்போது அவளையும் கொன்றுவிட்டார்கள் என்று சொல்கிறான்.

பொன்னி சங்கையாவிடம் அவர்களை பழிவாங்க வேண்டாமா. நான் அனைவரையும் பழிவாங்க போகிறேன் என்று சொல்கிறாள். சங்கையா அவளுக்கு உதவுவதாக சொல்கிறான்.

நால்வரும் தப்பிக்க உதவிய ராணியை கட்டி வைத்து உயிர் போகாதவாறு கத்தியால் குத்துகின்றனர். நான்கு பேரும் எங்கே இருக்கின்றனர் என்று கேட்கின்றனர். மணி ஊத்துக்கோட்டை கரிகாலன் தியேட்டரிலும், வாசு செம்மஞ்சேரி கடலில் ஒரு போட்டிலும், அன்பு கடலூர் அருகே ஃபாரஸ்டிலும் இருப்பதாக சொல்கிறாள். பெருமாள் கிரிக்கு பயந்து தன் மகன் சுடலையுடன் கடலூரில் சுற்றிகொண்டிருப்பதாகவும் சொல்கிறாள். தன் கணவனும் மகளும் எப்படியெல்லாம் தீயில் கருகி இறந்தார்களோ அந்த வேதனையை இவளும் அனுபவிக்க வேண்டுமென்று ராணியை மண்ணென்னெய் ஊற்றி கொழுத்துகின்றனர் பொன்னியும் சங்கையாவும்.

கடலூர் காட்டுப்பகுதியில் போதையிலிருக்கும் அன்புவை கட்டிவைத்து அடித்து உதைத்தும், கத்தியால் குத்தியும் கொடுமைபடுத்துகின்றர். பின் அவன் ஆண் குறியில் ஆசிட்டை ஊற்றி கொடுமைபடுத்தி பொன்னியும் சங்கையாவும் கொல்கின்றனர்

கடலூரில் இருக்கும் பெருமாளை தேடி செல்கின்றனர். பெருமாள் தன் மகன் சுடலையுடன் கிரியிடமிருந்து தப்பி ஓடுகின்றான். கிரியை ஒரு புதரில் மறைந்திருக்க சொல்லி பெருமாள் கிரியிடமிருந்து தப்பி ஓடுகின்றான். ஆனால் கிரி பெருமாளிடம் உன் மகன் எங்கே என்று கேட்கிறான். அவனை லாரியில் ஏற்றி அனுப்பிவிட்டதாக சொல்கிறான். பெருமாளை கொன்று விட்டு லாரியை துரத்தி போகிறான் கிரி. அப்போது அங்கே வருகின்றனர் பொன்னியும் சங்கையாவும். பெருமாள் இறந்து கிடப்பதை பார்த்த பொன்னி இவன் என் கையால் கொடுமையாக சாகாமல் இப்படி செத்துகிடக்கிறான் என்று கோபப்படுகிறாள். அங்கே இருக்கும் சுடலையை கோபத்தில் கொல்ல முயல்கிறாள். சங்கையா தடுத்து சுடலையையும் கூட்டிக்கொண்டு பழி வாங்க செல்கின்றனர். சுடலை, இவர்கள் வேனில் செல்வதை பார்க்கும் கிரி அவர்களை பிடிக்க துரத்துகிறான். ஆனால் முடியாமல் போகிறது..

செம்மஞ்சேரியில் இருக்கும் தன் நண்பன் உதவியுடன் கடலில் இருக்கும் வாசுவை கரைக்கு கொண்டு வருகிறான். பொன்னி அவனையும் கத்தியால் குத்தி கொடுமைப்படுத்தி ஆண்குறியில் ஆசிட் ஊற்றி கொல்கிறாள்.

கடைசியாக ஊத்துக்கோட்டையில் அடியாட்கள் சகிதமாக இருக்கும் மணியை கொல்ல செல்கின்றனர். சுடலையை வேனிலிருந்து இறக்கி ஒரு இடத்தில் அமரவைக்கிறான். இதற்கிடையில் இன்ஸ்பெக்டர் தேவா மணியை சந்தித்து ராணியுடன் சேர்த்து நான்கு பேரையும் பொன்னி கொன்றுவிட்டதை சொல்கிறான். சங்கையா அடியாட்களுடன் சண்டை போட்டு வெட்டி கொல்கிறான். இந்த சூழலை பயன்படுத்தி தியேட்டருக்குள் செல்லும் பொன்னி அங்கிருக்கும் மணியை கொடுமையாக கொல்கிறாள். சங்கையாவை சுடமுயன்ற இன்ஸ்பெக்டர் தேவாவையும் சுட்டு கொல்கிறாள். அடியாட்களிடம் கத்துகுத்து வாங்கிய சங்கையாவை காப்பாற்ற வேணுக்கு கூட்டிக்கொண்டு செல்கிறாள் பொன்னி. வேணுக்குள் அமர்ந்த சங்கையா போய் சுடலையை கூட்டி வரச்சொல்கிறான். சுடலையை கூப்பிட பொன்னி செல்கிறாள். தியேட்டருக்கு வரும் கிரி அடியாட்கள் மணி அனைவரும் இறந்து கிடப்பதை பார்க்கிறான். வெளியில் வரும் அவன் வேணை பார்க்கிறான். அடியாட்களுடன் வேணை நோக்கி ஓடுகிறான். வேணில் கத்திகுத்து காயத்துடன் அமர்ந்திருக்கும் சங்கையாப்வும் கிரியும் அவன் அடியாட்களும் வேணை நெருங்கும் போது வேணில் இருக்கும் சிலிண்டரை கொழுத்தி வேணுடன் அனைவரை கொன்று தானும் இறந்து போகிறான்.

சங்கையாவின் உண்மையான பாசத்தை அப்போது தான் முழுமையாக உணர்கிறாள் பொன்னி. கதறி துடிக்கிறாள். பின் பொன்னி சுடலையை கூட்டிக்கொண்டு செல்கிறாள்.

பாரட்டுக்குறியது,:

தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷிற்கு மீண்டும் நடிப்புக்கு தீனிபோடும் பொன்னி கதாப்பாத்திரத்தில் அருமையாக நடித்துள்ளார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட இந்த கதையில் பொன்னி கதாப்பாத்திரத்திற்கு இணையாக சங்கையா கதாப்பாத்திரம் உருவாகியுள்ளது. அதில் இயக்குனர் செல்வராகவன் கச்சிதமாக பொருந்துவது மட்டுமின்றி நன்றாக நடித்துள்ளார்.

பழிவாங்கும் கதை என்றாலும் கொல்லப்பட்ட தன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மரணத்தருவாயில் பட்ட வேதனையை கொன்றவர்களும் அனுபவிக்க வேண்டுமென்ற அடிப்படையில் பழிவாங்கும் அடிப்படையை உருவாக்கியுள்ளனர்.

படத்தின் நகர்வுக்கு முக்கிய பின்புலமாக இருப்பது பின்னனி இசை சாம் C S இசை படத்தின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவுகிறது.

1989 ல் கதை நகர்வதாக காட்டி அதற்கேற்ப திரைகதை மற்றும் காட்சியமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

நெருடலானவை.:

வழக்கமாக பார்த்து சலித்துப்போன பழிவாங்கும் கதையை கையிலெடுத்த இயக்குனர் வழக்கமான மற்ற படங்களின் பானியிலான திரைக்கதையையே கொடுத்துள்ளார்.

1989 ல் கதை நகர்வதாக காட்டியுள்ள இயக்குனர் எதற்காக அந்த காலகட்டத்தை  தெரிவு செய்தார் என்பது புரியவில்லை.

படம் முழுவதும் ரத்தகளரியாகவே இருக்கிறது.

கொலைகளை வரிசையாக நடந்துகொண்டிருக்கும் போது போலிஸ் என்ன செய்து கொண்டிருக்கிறது. அது போலிஸ் பதவியில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு கொடுமை நடக்கிறது என்ற போது போலிஸ் நடவடிக்கை என்ன?.

பல பீப் வசனங்கள் படத்தில் இடம்பெறுகிறது.

சங்கையாவின் பின்னனி கதை தெளிவாக இல்லை. அவன் மனைவி மகன் மரணத்திற்கான காரணம், அதை செய்தவர்கள் யார் என்ற விளக்கம் இல்லை. காட்சியை இணைப்பதற்கும் பொன்னியுடன் அவர் சேர்வதற்கும் மட்டுமே கடந்து செல்லும் காட்சியாக அது இருக்கிறது.

படத்தின் வில்லன் கதாப்பாத்திரங்கள் மொக்கையாக அமைக்கப்பட்டுள்ளது. பெரிய அளவு எதிர்ப்பே இல்லாமல் அனைவரையும் கொலை செய்கின்றனர். கொலை நிகழ்வுகளில் பெரிய அழுத்தம் இல்லை. (கடைசி கொலையை தவிர்த்து).

தொகுப்பு.:

சாணிக் காயிதம் திரைப்படம் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் நடிப்பை தவிர ரத்தத்தால் மட்டும் நிறைந்த ஒன்றாக பெரிய அளவு பயனற்ற சாணிக் காகிதமாக இருக்கிறது.

Movie Gallery

  • review

    Anu Emmanuel

  • review

    Lakshmi Menon

  • review

    Nivetha Thomas

  • review

    Keerthy Suresh

  • review

    Anupama Parameswaran

  • review

    Pranitha Subhash

  • review

    Nivetha Thomas

  • review

    Keerthi Pandian

  • review

    Sobhita Dhulipala

  • review

    Ramya Pandian

  • review

    Shalini

  • review

    Adah Sharma

  • review

    Gouri G Kishan

  • review

    Samyuktha Menon

  • review

    Janani Iyer

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.