Join/Follow with Our Social Media Links

வலிமை பட திரைவிமர்சனம்

வலிமை பட திரைவிமர்சனம்


பே வியூ புராஜெக்ட்ஸ் LLP சார்பில் போனி கபூர் தயாரித்துள்ள படம் வலிமை. H வினோத் படத்தை எழுதி இயக்கியுள்ளார். பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜாவும், இசையமைப்பாளர் ஜிப்ரான் பின்னனி இசையும் அமைத்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் வேல்குட்டி படத்தை தொகுத்துள்ளார். தீலிப் சுப்பராயன் சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

வலிமை படத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார், போலிஸ் A C அர்ஜூன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஹூமா குரேஷி, போலிஸ் அதிகாரி ஷோஃபியா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கார்த்திகேயா கும்மகொண்ட, நரேன் என்ற வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். குர்பானி ஜட்ஜ், நரேன் காதலி சாரா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சுமித்ரா, அர்ஜூன் தாயாக நடித்துள்ளார். ராஜ் ஐயப்பா, அர்ஜூன் தம்பி குட்டி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அச்யூத் குமார், அர்ஜூன் குடிகார அண்ணன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். துருவன், நரேன் வலது கரமாக அமித் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தினேஷ் பிரபாகர், D C P ராஜாங்கம் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். G M சுந்தர், IG அருமைநாயகம் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார், செல்வா, போலிஸ் உயர் அதிகாரியாக நடித்துள்ளார்.

கதைக்கரு.:

வாழ்கையில் விரக்தியிலிருக்கும் இளைஞர்களை மூளை சலவை செய்கிறான் வில்லன். அவர்களை பைக் ரேசர்களாக மாற்றி உயர் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கொலை, கொள்ளை மற்றும் போதை பொருள் விற்பனை செய்கிறான். அவனை கண்டுபிடித்து அழிக்கும் காவல்துறை அதிகாரியின் கதைதான் வலிமை.

கதை.:    

அர்ஜூன் மதுரையில் அஸிஸ்டென்ட் கமிஷ்னராக பணிபுரிகிறார். அவர் குடும்பத்தில் தாய், வேலையில்லாமல் இருக்கும் தம்பி குட்டி, எப்பொழுதுமே குடித்துக்கொண்டிருக்கும் அண்ணன் மற்றும் அண்ணனின் மனைவியுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றார். அர்ஜூன் குடும்பத்தில் அவரது வருமானத்தில் தான் குடும்பம் நடக்கின்றது.

பாண்டிச்சேரியிலிருந்து சென்னைக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் அதை பரிமுதல் செய்ய போதைப்பொருள் தடுப்பு அதிகாரியாக இருக்கும் ஷோபியா தலைமையில் முயற்சிக்கின்றனர். ஆனால் அந்த போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து பைக்கில் வரும் ஒரு கும்பல் அதை கடத்திக்கொண்டு செல்கிறது. அதேபோல் பைக்கில் ஒரு கும்பல் நகரத்தில் செயின் பறிப்பில் ஈடுபடுகிறது. அதே பைக்கில் செல்லும் கும்பல் பலரை கொலை செய்கிறது. தலைநகரத்தில் ஏராளமான குற்றங்கள் அதிகரிப்பதை பார்த்த போலிஸ் உயர் அதிகாரி இதை தடுக்க நல்ல அதிகாரியை நியமிக்க முடிவு செய்கின்றார். அர்ஜூனை இதை புலனாய்வு செய்து குற்றவாளிகளை கண்டு பிடித்து குற்றங்களை களைந்தெறிய பணி அமர்த்துகிறார்.

ஒரு மேன்ஷனில் ஒருவன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வருகிறது. அவன் மொபைலில் ரேஸ் பைக்கின் படம் இருக்கின்றது. பைக்கை தேடும்போது, பைக்கை இறந்தவனின் நண்பன் என்று  ஒருவன் வந்து வாங்கி சென்றதாக சொல்கிறான். பைக்கை வாங்கி சென்றவனின் புகைப்படத்தை வரைய சொல்கிறான். அதே நேரம் இறந்தவனுக்கு போதைப்பொருள் கடத்தலில் சம்மந்தம் இருப்பதாக நினைக்கிறான் அர்ஜூன். இறந்தவன் அறையில் நகையை விற்ற ரசீது இருப்பதை பார்க்கிறான். அதை வைத்து விசாரித்ததில் அது திருட்டு நகை என்று கண்டு பிடிக்கிறான்.

போதைப்பொருள், திருட்டு போன்றவைகள் இந்த கொலையில் சம்மந்தப்பட்டிருப்பதை கண்டு பிடிக்கிறான். பைக்கின் மூலம் நடந்த கொலை திருட்டு மற்றும் போதைப்பொருள் கடத்தல் சம்மந்தமாக பதியப்பட்ட வழக்குகளின் விவரத்தை ஷோபியா மூலம் சேகரிக்கிறான். பெரிய அதிர்ச்சி தகவல் கிடைக்கிறது. ஒரே நாளில் பல பகுதிகளில் பைக் மூலம் மாதத்திற்கு ஒரு முறை முதல் நாள் ஏராளமான நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த நாள் போதை பொருள் கடத்தப்பட்டு இருக்கிறது. அதற்கடுத்த நாள் கொலைகள் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த நபர்கள் ஒருவருக்குகொருவர் தொடர்பில்லாமல் இருக்கிறது. இவ்வாறாக நகரம் முழுதும் மாதமாதம் ஏராளமான வழக்குகள் பல்வேறு போலிஸ் நிலையத்தில் பதிவாகியிருப்பதை கண்டுபிடிக்கிறான் அர்ஜூன்.

பதவியேற்ற குறுகிய காலத்தில் இவ்வளவு விஷயங்களை கண்டுபிடித்த அர்ஜூனை அனைத்து வழக்குகளையும் ஒருங்கிணைத்து கண்டு பிடிக்குமாறு போலிஸ் உயர் அதிகாரி சொல்கிறார். ஷோபியாவை உதவிக்கு வைத்துக்கொள்ளுமாறு சொல்கிறார்.

சென்னையிலிருக்கும் வாடகை கொலையாளிகளின் பட்டியலை சேகரிக்கிறான். அவர்களில் மூன்று பேர் மீது மட்டும் கடந்த ஒராண்டாக எந்த வழக்கும் பதியப்படவில்லை என்று கண்டு பிடிக்கிறான். போலிஸ் அதிகாரி ஒருவர் மூலம் போலிஸில் வேலை செய்யும் பெண்னின் படத்தை கொடுத்து அவளை கொலை செய்ய வேண்டுமென்று வாடகை கொலையாளியை அணுகுகிறான். அவன் மேல் வழக்குகள் இல்லை ஆனால் கொலை செய்ய மறுக்காமல் அவன் ஒத்துக்கொள்வதை நினைத்து அதிர்ச்சியாகிறான் அர்ஜூன். அப்போது வாடகை கொலையாளி மொபைலில் போட்டோ மெசேஸ் அனுப்புகிறான். மொபைல் போனை டிராக் செய்யும் போது அது டிராக் செய்ய கடினமான ஒரு வெப் புரொவுஷர் மூலம் அனுப்பப்பட்டதை கண்டு பிடிக்கின்றனர் சைபர் கிரைம் போலிஸ். அந்த மெசேஸ் சென்ற திசையை டிராக் செய்கின்றனர். அது கடினமான டிராக் செய்யமுடியாத தொழில்  நுட்பம் மூலம் தகவல் பறிமாற்றம் நடை பெறுவதை கண்டுபிடிக்கின்றனர். அதன் மூலம் சாத்தான் உலகத்தின் தலைவன் நரேன் இருப்பிடத்தையும் கண்டு பிடிக்கின்றனர். தன்னை கண்டுபிடித்த செய்தியை அறிந்து அங்கிருந்து பைக்கில் தப்பிக்கிறான். ஆனால் அவன் சென்ற பைக்கில் ஹெல்மெட் உள்ளே தெரியும் முகத்தை கொண்டு அவன் முகத்தை வரைகின்றனர்.

நரேன் காதலி சாரா, இதுவரை நம் முகம் யாருக்கும் தெரியாமல் இருந்தது, அர்ஜூன் இப்போது கண்டு பிடித்துவிட்டான். அதனால் அனைத்தையும் விட்டுவிடலாம் என்று சொல்கிறாள். ஆனால் நரேன் பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு வரவிருக்கும் போதைப்பொருள் பல கோடி ரூபாய் மதிப்பிலானது. எப்படியும் அதை கொள்ளையடிக்க வேண்டும் என்று சொல்கிறான். அது மட்டுமின்றி அர்ஜூனுக்கே சவால் விடுகிறான். நீ போட்டோவில் அனுப்பிய பெண்ணை நான் கொல்வேன் என்று சொல்கிறான். நரேன் கவலைப்படாதே அந்த பெண்ணை நானே கூட்டி வருகிறேன் முடிந்தால் கொல் என்று சொல்கிறான். பலத்த காவலை மீறி பைக் மூலம் அவளை கொல்ல முயல்கின்றான். ஆனால் கொல்ல முடியவில்லை. அர்ஜூன் கொல்ல முயன்றவனை துரத்துகிறான். ஆனால் இடையிலேயே கொலைகாரன் வேறுஒருவனை மாற்றி அவனை துரத்த செய்துவிட்டு கொல்ல முடியாமல் தப்பித்தவளை கொலை செய்ய பின் தொடர்கிறான். ஆனால் நரேன் ஒருவனை மாற்றியது போல் அர்ஜூனும் ஒருவனை மாற்றுகிறாள். இதை எதிர்பாராத நரேனை அவனுக்கு தெரியாமல் அர்ஜூன் பின் தொடர்வது தெரிந்து தப்பிக்க முயல்கிறான். ஆனால் அர்ஜூன் அவனை பின் தொடர்ந்து கைது செய்கிறான்.

போலிஸ் துறையில் இருக்கும் கருப்பு ஆடுகளான அருமைநாயகம் மற்றும் ராஜாங்கம் அர்ஜூனின் தம்பி குட்டியை கைது செய்து அவனும் சாத்தானின் அடிமைகள் கூட்டத்தில் ஒருவன் என்று சொல்கின்றனர்.

அர்ஜூனின் தாய் தன் மகன் வழிதவறி இருந்தாலும் அவனும் என் பிள்ளைதான் அவனை எப்படியாவது காப்பாற்று என்று சொல்கிறார். நரேனையும் குட்டியையும் கோர்ட்டிற்கு அழைத்து செல்லும் வழியில் பைக்கர்கள் உதவியுடன் நரேனும் குட்டியும் தப்பிக்கின்றனர். அர்ஜூன் எவ்வளவு தடுத்தும் குட்டி அர்ஜூனை தாக்கிவிட்டு நரேனுடன் தப்பி செல்கிறான்.

சுற்றத்தினரால் வேலை வெட்டி இல்லாதவன் என்றும், அண்ணன் அர்ஜூனே உயர் பதவியிலிருந்தும் தனக்கு வேலை வாங்கி கொடுக்கவில்லை என்ற விரக்தியில் இருப்பவன் குட்டி. அவனை மூளைச்சலவை செய்து அடிமையாக்கினான் நரேன்.

தன் மகன் குட்டியை பார்க்காமல் பச்சை தண்ணீர் கூட குடிக்கமாட்டேன் என்று சொல்கிறாள் அர்ஜூனின் தாய்.

பாண்டிச்சேரியில் இருந்து கடத்தப்பட இருந்த பல கோடி மதிப்பிலான போதை பொருளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு கைப்பற்றி பாதுகாப்பாக வைக்கிறது.

மகன் குட்டியிடம் தாய் உறவு பொய்யானது. எல்லாரும் சுயநலவாதிகள் என்று சொல்கிறான். நரேன் வார்த்தையில் மயங்கிய குட்டியிடம் தாயை கடத்திவர சொல்கிறான்.

மருத்துவமனையிலிருக்கும் அர்ஜூனின் தாய், அண்ணன் மற்றும் அண்ணியை கடத்துகிறான் நரேன்.  அர்ஜூனிடம் உன் தாயையும் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டுமென்றால் போலிஸ் கஸ்டடியிலிருக்கும் போதைப்பொருளை தன்னிடம் கொண்டு வந்து கொடுக்க வேண்டுமென்று சொல்கிறான்.

போலிஸில் இருக்கும் கருப்பு ஆடுகளான அருமைநாயகத்திடமும் ராஜாங்கத்திடமும் போதைப்பொருளை கடத்த வரும் அர்ஜூனை சுட்டு கொல்லுமாறு சொல்கிறான். ஆனால் போதை பொருளை காப்பாற்றுவதாக சொல்லி அவர்களை ஏமாற்றி மாட்டிவிடுகிறான் அர்ஜூன்.

குட்டியிடம் ஒரு துப்பாக்கியை கொடுத்து பாசம் என்பது பொய் இது டம்மி துப்பாக்கி. உன் தாய் உனக்காக உயிரை கொடுப்பேன் என்று சொன்னது பொய். இந்த துப்பாக்கியால் சுடு அவள் வேண்டாம் என்று சொல்வார் என்று ஏமாற்றி உண்மை துப்பாக்கியை கொடுக்கிறான். ஆனால் அவளை சுடும் போது எதிர்பாரதவிதமாக நரேனின் காதலி சாரா சாகிறாள். நரேன் அவள் சடலத்தை கட்டிப்பிடித்து அழுக்கிறான்.

குட்டி நரேனிடம் பாசம் எல்லாம் பொய் என்றால் நீ எதற்காக இப்போது அழுகிறாய் என்று கேட்டு அவன் தன்னை மூளைசலவை செய்துள்ளான் என்பதை தெரிந்து திருந்துகிறான்.

நரேனின் இருப்பிடத்திற்கே வந்து நரேனை அடித்து கட்டி வைக்கிறான். அவன் பாணியிலேயே அவன் கம்யூட்டரை ஹேக் செய்கிறான். அவன் கட்டுப்பாடில் இருக்கும் ஒட்டு மொத்த பைக்கர்களை அங்கே வரவழைக்கிறான். நரேனை கொன்று ஒட்டு மொத்த பைக்கர்களையும் கைது செய்து அவர்கள் இயலாமையை பயன்படுத்தி மூளை சலவை செய்ததை சொல்லி திருத்தி பெற்றோருடன் அனுப்புகிறான்.

பாராட்டுகுறியவை.:

அஜீத் குமார் ஒரு பைக் ரேசர் என்பது அனைவருக்கும் தெரியும் அதையே முதன்மைப்படுத்தி ஒட்டு மொத்த படத்தையும் எடுத்துள்ளனர். அஜீத் ரசிகர்களுக்குமட்டுமல்ல அனைவரையும் சண்டை காட்சிகள் கவர்கின்றது.

படத்திற்கு தூணாக இருப்பது சண்டைக்காட்சிகள் தான். பிரமாண்ட சண்டைக்காட்சிகளே படத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளது.

சண்டைகாட்சிகள் குறிப்பாக பைக் சேசிங் காட்சிகள் ஹாலிவுட் படங்களையே மிஞ்சும் அளவிற்கு பிரமாண்டமாக கொடுத்துள்ளனர். அதை பிரமாண்டப்படுத்திய சண்டை பயிற்சி காட்சிகளை வடிவமைத்த தீலிப் சுப்பராயன் படத்தின் முதன்மை கதாநாயகன். அந்த காட்சிகளை நம் கண்களுக்கு விருந்தாக பிரமாண்டப்படுத்தி பிரமாதமாக கொடுத்திருக்கும் நீரவ் ஷா அடுத்த கதாநாயகன்.

ஒரு படத்தின் நாயகனை பிராமாண்டப்படுத்த வேண்டுமென்றால் கண்டிப்பாக ஒரு வலுவான எதிர்மறை கதாப்பாத்திரம் தேவை. அஜீத்திற்கு மாஸ் கொடுக்கக்கூடிய வலுவான வில்லன் நரேனாக கார்த்திகேயா கும்மகொண்ட தமிழில் மாஸ் கதாப்பாத்திரத்தில் அறிமுகமாகிறார்.

ஹூமா குரேஷி உடல் மொழி ஒரு ஆக்ஷன் கதாநாயகி கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளது.

காவல்துறை புலானாய்வு சேஸிங்கில் டிவிஸ்ட் என்று பல காட்சிகள் புத்திசாலித்தன அடிப்படையில் கொடுத்துள்ளார் இயக்குனர்.

காட்சிகளில் பிரமாண்டம் தமிழ் சினிமாவில் இதுவரை காணாத பவர்ஃபுல் ஆக்ஷ்ன் பேக்.

நெருடலானவை.:

ஹாலிவுட் பாணியில் படமெடுத்தால் தமிழில் ஓடுமா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் செண்டிமெண்ட் காட்சிகளை புகுத்தியுள்ளார் இயக்குனர் என்றே தோன்றுகின்றது. படத்தின் வேகத்தை இது குறைக்கிறது. பல இடங்களில் படத்தின் பிரமாண்டத்தை முழுமையாக ரசிக்க முடியாமல் படத்தின் வேகத்தை தொய்வடைய செய்கிறது.

போலிஸ் கமிஷ்னர் கதாப்பாத்திரத்தை படைத்துவிட்டு ஒரு காட்சியில் கூட போலிஸ் சீருடையில் அர்ஜூன் கதாப்பாத்திரம் வரவில்லை. ஒருவேளை அஜீத்தை ஒன்றிரண்டு காட்சியிலாவது போலிஸ் சீருடையில் வந்திருந்தால் அது இன்னனும் மாஸாக ரசிகர்களை கவர்ந்திருக்கலாம்.

அண்ணனுக்கு சரக்கு அடிக்க தம்பி அர்ஜூன் பணம் கொடுப்பது என்பது ரொம்ப ஓவர். அதே போல் அர்ஜூனிடம் அவன் தாய் உன்னை வளர்த்தது போல் தான் உன் தம்பியையும் வளர்த்தேன். அவன் மட்டும் ஏன் கெட்டுப்போனான் என்று கேட்பார். ஏன் அர்ஜூனின் குடிகார அண்ணனையும் அவர் தானே வளர்த்தார்?. அப்புறம் எப்படி அவர் குடிகாரராக மாறினார். செண்டிமெண்ட் காட்சிக்காக, அதை வலுவாக்க வேண்டுமென்பதற்காக வசனத்தை வைத்தவர் ஏன் இந்த லாஜிக்கை மறந்தார்?.

தொகுப்பு.:

தமிழில் இதுவரை இந்த அளவு பிரமாண்ட ஆக்ஷன் படம் வந்ததில்லை. ஹாலிவுட் படங்களின் சண்டைகாட்சிகளை மட்டும் பார்த்து பிரமித்த நம் கண்களுக்கு அதையும் மிஞ்சும் வகையில் நம்மாலும் கொடுக்க முடியும் என்று நிரூபித்துள்ளனர். செண்டிமென்ட் காட்சிகளை மறந்து ஆக்ஷன் காட்சிகளை பார்த்தால் அதுவே போதும் பிரமாண்டத்தை உணர்த்தும். மொத்தத்தில் வலிமை முழுமையான வலிமையான ஆக்ஷன் பேக்.

Movie Gallery

  • review

    Swasika

  • review

    Pooja Umashankar

  • review

    Priya Anand

  • review

    Mumtaj

  • review

    Saipriya Deva

  • review

    Suja Varunee

  • review

    Rakul Preet Singh

  • review

    Kiara Advani

  • review

    Reshma Pasupuleti

  • review

    Sakshi Agarwal

  • review

    Amala Paul

  • review

    Shraddha Srinath

  • review

    Kiara Advani

  • review

    Anukreethy Vas

  • review

    Aathmika

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.