ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் கமல்ஹாசன் தயாரித்துள்ள படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார். அனிருத் ரவிசந்தர் இசையமைத்துள்ளார். கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தை தொகுத்துள்ளார்.
விக்ரம் படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கர்ணன் எனும் விக்ரம் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி சந்தனம் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். பகத் பாசில் அமர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். நரேன் இன்ஸ்பெக்டர் பிஜோய் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். காளிதாஸ் ஜெயராம் ACP பிரபஞ்சன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். செம்பன் வினோத் ஜோஸ் போலிஸ் அதிகாரி ஜோஸ் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தான பாரதி ஏஜெண்ட் உப்பிலியப்பன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இளங்கோ குமாரவேல் ஏஜெண்ட் லாரன்ஸ் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். வசந்தி ஏஜெண்ட் டினா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். காயத்திரி சங்கர் அமர் மனைவி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அருள்தாஸ் ருத்ரபிரதாப் கதாப்பாத்தில் நடித்துள்ளார். ஸ்வத்திகா கிருஷ்ணன் பிரபஞ்சன் மனைவி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். VJ மகேஸ்வரி சந்தனம் முதல் மனைவியாக நடித்துள்ளார். ஷிவானி நாராயணன் சந்தனம் இரண்டாவது மனைவியாக நடித்துள்ளார். மைனா நந்தினி சந்தனம் மூன்றாவது மனைவியாக நடித்துள்ளார். சூர்யா ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதைக்கரு.:
தன் மகனை கொன்ற போதை பொருள் கடத்தல் தொடர்புடைய நபர்களை கொல்வதுடன் போதை பொருள்களே இல்லாத சமூகத்தை உருவாக்க முயலும் ஒரு தந்தையின் செயல்பாடுகளே இப்படத்தின் கதைக்கரு.
கதை.:
முகமூடி போட்ட தீவிரவாதிகளலால் போலிஸ் அதிகாரி பிரபஞ்சன், மற்றுமொரு நபர், பிரபஞ்சன் தந்தை கர்ணன் மூன்று பேரும் கொல்லப்படுகின்றனர். இந்த கொலைகாரர்களை கண்டுபிடிக்க வெளியிலிருந்து அமர் என்ற புலணாய்வு மனிதனை பணியமர்த்துகிறார் போலிஸ் அதிகாரி ஜோஸ்.
அமர் டீம் இந்த கொலைகளை பற்றி விசாரிக்கின்றது. அதில் போதைப்பொருள் கடத்தல்காரன் சந்தனம், அரசியல்வாதி ருத்ரபிரதாப். மற்றும் இறந்த கர்ணன், ஜிம் உரிமையாளர் உப்பிலியப்பன், கர்ணன் வீட்டு வேலைக்கார் டினா மற்றும் டாக்ஸி டிரைவர் லாரண்ஸ் போன்றவர்களை விசாரிக்கின்றான். இந்த விசாரனைக்கிடையில் தன் காதலியை திருமணம் செய்துகொள்கிறான். தன் தொழிலைப்பற்றி கேட்ககூடாது என்ற நிபந்தனையுடன்.
சந்தனம் மிகப்பெரிய ரவுடி இவனுக்கு மூன்று மனைவிகள். இவன் குடும்பத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள். பகலில் டாக்டராகவும் இரவில் போதை பொருள் பகுப்பாளன் ஆராய்ச்சியாளனாகவும். ரௌடி தொழிலை அதுவும் குறிப்பாக போதைபொருள் கடத்தல் தொழிலை முதன்மையாகவும் கொண்டிருப்பவன். இன்ஸ்பெக்டர் பீஜோய் மற்றும் ACP பிரபஞ்சன் இருவரும் சேர்ந்து சந்தனத்தின் இரண்டு லட்சம் கோடி மதிப்புள்ள இரண்டு கண்டெயினர் போதைப்பொருளை கைப்பற்றி இருக்கின்றனர். சந்தனத்தின் கடத்தலுக்கு உறுதுணையாக அரசியல்வாதி ருத்ரபிரதாப் மற்றும் போலிஸ் அதிகாரி ஜோஸ் இருக்கின்றனர்.
கர்ணனை பிரபஞ்சன் தந்தையாக தத்தெடுக்கிறான். பிரபஞ்சன் மகன் மீது மிகுந்த பாசத்துடன் இருக்கிறார் கர்ணன். பிரபஞ்சன் மகனுக்கு இதய நோய் இருக்கிறது. சத்தத்தை கேட்கக்கூடாது என்று சொல்கின்றனர். கர்ணன் குடிகாரனாகவும், பெண்பித்தனாகவும் இருப்பதால் பிரபஞ்சன் மனைவிக்கு கர்ணனை பிடிக்காமல் போகிறது. அங்கே வீட்டு வேலைக்காரியாக டினா இருக்கிறாள்.
முகமூடி மனிதன் அரசியல்வாதி ருத்ரபிரதாப்பை கடத்துகிறான். முகமூடி மனிதனை பின் தொடர்கிறான் அமர். முகமூடி மனிதனிடம் நீ கோழை அதனால் தான் முகத்தை காட்ட பயப்படுகிறாய் என்று சொல்கிறான். முகமூடி தன் முகமூடியை கழற்றுகிறான். அது இறந்துவிட்டதாக கருதப்படும் பிரபஞ்சனின் தந்தை கர்ணன் என்று தெரிந்து அனைவரும் அதிர்ச்சியாகின்றனர். தன் முகமூடியை கழற்றிய கர்ணன் ருத்ரபிரதாப்பையும் கொல்கிறான்.
போலிஸ் அதிகாரி ஜோஸ் மற்றும் போலிஸ் கூட்டத்தில் தன் விசாரனையில் கண்டுபிடித்ததை சொல்கிறான் அமர். கர்ணனின் உண்மையான பெயர் விக்ரம். மிகச்சிறந்த அண்டர்கவர் ஏஜெண்ட் கமாண்டெர் அவர். 1981 ல் தோல்வியுற்ற ஒரு கமாண்டெர் ஆபரேஷன் காரணமாக அந்த ஆபரேஷனில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் கொல்ல முயல்கின்றனர். அதில் தப்பி விக்ரம் தலைமறைவு வாழ்கை வாழ்ந்து வந்ததையும் தெரிவிக்கிறான். விக்ரம் மட்டுமின்றி ஜிம் உரிமையாளர் உப்பிலியப்பன், டாக்ஸி டிரைவர் லாரன்ஸ், வேலைக்காரி டினா போன்ற சிலரும் உயிரோடு இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் தன் மகன் முதியோர் இல்லத்தில் இருக்கும் கர்ணனை தந்தெடுக்கிறார் பிரபஞ்சன் அவன் தன் தந்தை என்று தெரிந்து. இப்போதும் விக்ரம் நடத்தும் இந்த திரைமறைவு வாழ்கை மகனை கொன்றவர்களை பழிவாங்க மட்டுமின்றி போதைபொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கவும் தான் என்று சொல்கிறான். அது மட்டுமின்றி தான் சேகரித்த விக்ரமிற்கு எதிரான ஆதாரங்களை போலிஸிற்கு கொடுக்காமல் அழிக்கிறான்.
போலிஸ் அதிகாரி ஜோஸ் ஆதாரத்தை கொடுத்தால் நான் அவர்களை கைது செய்யவேன் என்று சொல்கிறார். அமர் ஜோஸிடம் விக்ரம் உன்னையும் கொல்வார். காரணம் நீயும் போதை கடத்தலுக்கு துணைபோவதால். முடிந்தால் உன்னை காப்பாற்றிக்கொள் என்று சொல்கிறான் அமர்.
போலிஸிடம் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு அமர் கிளம்புகிறான். அப்போது அவன் ஒப்படைத்த ஆயுதங்களில் பெரிய அளவு RDX வெடிமருந்துகள் விடுபட்டதை கண்டு பிடிக்கிறார்கள். அமர் அந்த வெடி மருந்தை வைத்து சந்தனத்தின் வீட்டையும் லேபையும் அழிக்கிறான். அதற்கு பழிவாங்க சந்தனம் அமர் மனைவியை கொல்கிறான். இதனால் கோபமடையும் அமர் போலிஸ் அதிகாரி ஜோஸை கொன்றுவிட்டு விக்ரமுடன் கை கோர்க்கிறான்.
சந்தனம் விக்ரமின் மருமகளையும் பேரனையும் கொல்ல முயலும்போது அங்கே வேலைக்காரியாக இருக்கும் ஏஜெண்ட் டினா மூலம் காப்பாற்றப்படுகிறார்கள். விக்ரம் பேரனை காப்பாற்றி கூட்டி போகிறார்.
விக்ரம் இருக்கும் இடத்தை தெரிந்து தன் கண்டெய்னரை மீட்கவும் விக்ரமை கொல்லவும் தன் ரவுடி படையுடன் விக்ரம் இருப்பிடம் நோக்கி போகிறான். தனி மனிதனாக ஒட்டு மொத்த ரவுடிகளையும் கொல்கிறார் விக்ரம். கடைசியில் சந்தனத்தையும் கொல்கிறார்.
ஆனால் சந்தனம் போதைப்பொருளை கடத்தி வினியோகிப்பவன். போதைபொருள் சம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தி ரோலக்ஸ். போதைப்பொருள் பிடிபடவும் சந்தனத்தின் மரணத்திற்கு காரணம் டில்லி என்பதை உணர்ந்து அவனை கொல்ல சொல்கிறான் ரோலக்ஸ். மறுபுறம் ரோலக்ஸை அழித்து போதைப்பொருள் பரவலை முற்றிலுமாக தடுக்க களமிறங்குகிறார் விக்ரம் அடுத்த பாகத்தின் மூலம்.
பாராட்டுக்குறியவை.:
லோகேஷ் கனகராஜ் தான் இயக்கிய கைதி படத்தின் தொடர்ச்சியாக இந்த படம் இருக்கும்படி உருவாக்கியிருக்கிறார்.
படத்தின் முதல்காட்சியிலிருந்து இறுதி காட்சிவரை விறுவிறுப்பு குறையாமல் திரைக்கதையமைத்து இயக்கியுள்ளார் லோகேஷ் கனக்ராஜ்.
விறுவிறுப்பிற்கேற்ப கண்களுக்கு விருந்தாக காட்சிகளை கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் கிரீஷ் கங்காதரன்.
கண்களுக்கு விருந்தாக இருந்தால் மட்டும் போதாது அதற்கேற்ப செவியையும் நிறைக்க வேண்டும். அதற்கேற்ப அனிருத் ரவிசந்தர் பின்னனி இசையை அமைத்துள்ளார்.
கமல்ஹாசன் கர்ணன் என்ற விக்ரம் கதாப்பாத்திரத்தில் மிரட்டியுள்ளார்.
கமல்ஹாசன் முதன் முறையாக கதாநாயகியே இல்லாமல் நடித்துள்ளார்.
பகத் பாசில் அமர் கதாப்பாத்திரத்தில் அருமையாக நடித்துள்ளார்.
விஜய் சேதுபதி சந்தனம் கதாப்பாத்திரத்தில் வில்லனாக மிரட்டியுள்ளார்.
சந்தான பாரதி, இளங்கோ குமரவேல், வசந்தி போன்றவர்கள் திரைக்கதையோட்டத்தை வலுப்படுத்தியுள்ளனர்.
இறுதி காடசியில் ரோலக்ஸ் கதாப்பாத்திரல் அடுத்த பாகத்திற்கு அடிப்படையாக சூர்யா வில்லன் கதாப்பாத்திரத்தில் மிரட்டியுள்ளார்.
முதன் முறையாக இந்திய திரையுலகில் கைதி மற்றும் விக்ரம் என இரண்டு திரைப்படங்களை இணைத்து விக்ரம் அடுத்த பாகத்திற்கு வித்திட்டுள்ளது கூடுதல் சிறப்பு.
நெருடலானவை.:
கர்ணன் (விக்ரம்) கதாப்பாத்தில் குடிகாரராகவும் பெண் பித்தனாக காட்டியிருப்பதன் அடிப்படை நெருடலாக இருக்கிறது.
அமர் மனைவியாக உருவாகியுள்ள கதாப்பாத்திரம் பெரிய அளவு தாக்கத்தை திரைக்கதையில் ஏற்படுத்தாமல் இருக்கிறது.
கர்ணன் (விக்ரம்) பேரன் கதாப்பாத்திரம் இதய நோயாளியாக காட்டியிருப்பது ஏன் என்று தெரியவில்லை.
சந்தனம் குடும்பத்தை மிகப்பெரிய குடும்பமாக காட்டியிருப்பது பிரமாண்டத்தை காட்டவே அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பிரபஞ்சனின் மனைவி கர்ணனை வெறுப்பது போன்று இருப்பதன் பின்னனி தெளிவுபடுத்தப்படவில்லை.
தொகுப்பு.:
மொத்தத்தில் விக்ரம் திரைப்படம் விறுவிறுப்பிற்கு பஞ்சமின்றி ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளும்.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.