நீலம் புரெடெக்ஷன் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் சார்பில் இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் விக்னேஷ் சுந்தரேசன் இணைந்து தயாரித்துள்ள படம் குதிரைவால். இந்த படத்தை அறிமுக இயக்குனர்களான மனோஜ் லியோனல் ஜேஷன் மற்றும் ஷ்யாம் சுந்தர் இயக்கியுள்ளனர். G ராஜேஷ் இந்த கதையை எழுதியுள்ளார். பிரதீப் குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். M K P கிரிதரன் படத்தை தொகுத்துள்ளார்.
குதிரைவால் திரைப்படத்தில் கலையரசன் சரவணன் என்கிற ஃபிராய்டு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சேத்தன் பாபு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அஞ்சலி பட்டீல் வானவில் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதைக்கரு.:
கனவு என்பது நம் மனவோட்டத்தின் உள்ளுணர்வு அடிப்படையில் உருவாகின்றது. அதற்கென்று பல அடிப்படைகளும் இருக்கும். அதிலொன்று நம் வாழ்வில் நடந்துள்ள பல நிகழ்வுகளின் தாக்கத்திலும் இருக்கும். அந்த அடிப்படையிலான கனவுகளை மையப்படுத்தி எடுத்துள்ள படம் இது.
கதை.:
சரவணன் திருமணமாகாத ஒரு பேச்சிலர். எப்பொழுதும் குடித்துகொண்டே இருப்பவன். ஒரு வங்கியில் காசாளராக பணிபுரிபவன். ஒரு நாள் அவன் ஒரு கனவு காண்கிறான். அந்த கனவில் வாலில்லாத அழகான குதிரையை பார்க்கிறான். கனவு கலைந்து கண்விழித்து பார்க்கும் அவன் தனக்கு குதிரையின் வால்போல் ஒரு வால் முளைத்திருப்பதை அறிந்து அதிர்ந்து போகிறான். அந்த வால் அவன் கண்ணுக்கு மட்டுமே தெரிகிறது. அவன் பக்கத்து அப்பார்ட்மெண்ட்டில் வசிப்பவர் பாபு. வித்தியாசமான மனிதர்.
தன் வால் பற்றி சிந்திக்கும் சரவணன் தன் வால் தனக்கு மட்டுமே தெரிகிறது பிறருக்கு தெரியவில்லை. இது மனோவியாதியாக இருக்குமோ? மனோ தத்துவ நிபுணரை பார்க்கலாமா? என்று யோசிக்கிறான். அப்போது ஏர்வாடி மருத்துவமனையில் சங்கிலியால் கட்டிவைக்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எரிந்து இறந்ததை பார்த்து நம்மையும் அப்படி கட்டிவைத்து கொடுமைப்படுத்துவார்கள் என்று எண்ணி அந்த முயற்சியை கைவிடுகிறான். கனவுகளுக்கு பலன் சொல்பவர்களை பார்க்க இணையத்தில் தேடி ஒரு மூதாட்டியை பார்க்கிறான். நீ பார்த்த கனவை பற்றி சொல்ல சொல்கிறாள்.
வங்கியில் வேலை பார்க்கும் அவனிடம் ஒருவர் சேமிப்பு கணக்கு எண்ணை மட்டும் எழுதி பணம் டெபாசிட் செய்ய வருகிறார். பெயரை எழுத சொல்கிறார். எல்லாமே எண் மயமாக மாறிவரும் போது இது மட்டும் போதும் என்று அந்த நபர் சண்டை போடுகிறார். அந்த எண்ணை வைத்து பார்க்கும் போது தான் சரவணனுக்கு தெரிகிறது அவர் தன் கணித ஆசிரியர் என்று. தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறான் சரவணன் தான் உங்கள் மாணவன் சரவணன் என்று சொல்கிறான். ஆசிரியர் தன் முகவரியை கொடுத்து தன்னை வீட்டில் வந்து பார்க்க சொல்கிறார்.
சரவணன் வீட்டிற்கு வரும் பாலிசியில் கையெழுத்து வாங்க வரும் இன்சூரன்ஸ் ஏஜெண்ட்டிடம் தன் பெயர் ஃபிராய்டு என்று சொல்கிறான். நீங்கள் சொல்லும் சரவணன் யாரென்றே தெரியவில்லை என்று வாதிடுகிறான்.
வங்கிக்கு செல்லும் சரவணன் மனநிலை சரியில்லாததை உணர்ந்து வீட்டிற்கு செல்கிறான். மீண்டும் வங்கிக்கு வரும் அவன் அங்கே பந்தைவைத்து விளையாடிக்கொண்டிருக்கிறான். சரவணன் என்று கூப்பிடுகின்றனர் திரும்பி பார்க்க மறுக்கிறான். வங்கி ஊழியர்களிடம் பைத்தியக்காரன் போல் நடந்து கொள்கிறான். அவனை வேலையிலிருந்து நீக்குகின்றனர். வீட்டிற்கு வரும் அவன் மிகுந்த துயரத்திலிருக்கிறான். தண்ணியடிக்க பக்கத்து வீட்டிலிருக்கும் பாபுவை துணைக்கு அழைக்கிறான். தண்ணியடித்து முடித்தவுடன் பாபு தன் கையிலிருக்கும் வலம்புரி சங்கை சரவணன் காதில் வைக்கிறான். அந்த சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
இதை கேட்ட கனவுக்கு பலன் சொல்லும் கிழவி நீ நினைவை சொல்லிவிட்டாய் கனவை பற்றி சொல் என்று சொல்கிறாள். ஆனால் கனவை பற்றி தெரியவில்லையென்று சொல்கிறான். கிழவி அவனிடம் முன் ஜென்மத்தில் நீ குதிரையாக பிறந்துள்ளாய். இனி கொஞ்சம் கொஞ்சமாக குதிரையாக மாறப்போகிறாய் என்று சொல்கிறாள். நீ குதிரையாக மாறப்போகிறாய் என்று சொன்னதை கேட்டு கிழவியிடம் சண்டை போடுகிறான். போடா பைத்தியக்காரா என்று அவனை அடித்து துரத்துகிறாள்.
இதற்கு தன் கணக்கு ஆசிரியரிடம் விடை கிடைக்குமென்று அவரை தேடிச்செல்கிறான். அவரோ குதிரை என்பது காமத்தின் அடையாளம் என்று சொல்கிறார்.
குழப்பத்திலிருக்கும் அவன் கனவுக்கு பலன் சொல்லும் இன்னொருவரை பார்க்க செல்கிறான். அவரோ குதிரை என்பது காமத்தின் அடையாளம். உன் காதல் தோல்வி உனக்கு பெண் மீதான ஈர்ப்பு போன்ற விஷயங்கள் அடிப்படைத்தான் இது என்று சொல்கிறார். நான் காதலித்தது இல்லை. இதுவரை எந்த பெண்ணையும் தவறாக பார்த்ததும் இல்லை என்று சொல்கிறான். இந்த கனவின் பாதிப்பு உன் சிறு வயது காதலாக கூட இருக்கலாம் என்று சொல்கிறார். அது மட்டுமின்றி நீ பெண்ணாக மாறிக்கொண்டிருக்கிறாய் என்று சொல்கிறார். இதை கேட்டு கோபப்படும் சரவணன் அவருடன் சண்டை போடுகிறான்.
தன் சிறுவயதை பற்றி சிந்திக்கிறான் சரவணன். தன் சிறுவயது தோழி நீலி. முறை தவறி கர்பமான தன் சகோதரி மரணம் என்று பலவற்றையும் சிந்திக்கிறான். அப்போது எம் ஜி ஆர் மரணம் அந்த கிராமத்தையே பாதிக்கிறது. இறந்தவர்கள் இறக்கை முளைத்து கிணற்றிலிருந்து பறந்து செல்வார்கள் என்ற கதைகளின் அடிப்படையில் நீலியுடன் சென்று கிணற்றை பார்க்கிறான். அங்கே எம் ஜி ஆர் தொப்பியும் கண்ணாடியும் இருக்கிறது. அதை பார்க்கும் அவர்கள் எம் ஜி ஆர் இறக்கை முளைத்து பறந்து விட்டதாக நினைக்கின்றனர். நீலி மற்றும் சரவணன். அடுத்த நாள் காலை நீலி சந்தோசம் அதிகமான காரணத்தால் இறந்துவிட்டதாக சொல்கின்றனர் ஊர் மக்கள்.
சரவணன் தன் மனவோட்டத்தில் அந்த கிணற்றுக்கு அருகே போகிறான். அங்கே நீலி சரவணனுக்காக காத்திருக்கிறாள். ஆனால் வளர்ந்த சரவணனை ஏற்றுக்கொள்ளவில்லை. மீண்டும் தன் எண்ணவோட்டத்தில் சிறுவயது தோற்றத்தில் சென்று நீலியுடன் அந்த கிணற்றில் இருக்கும் தொப்பியையும் கண்ணாடியையும் எடுக்கிறான்.
பாராட்டுக்குறியது.:
கனவு என்ற ஒரு அடிப்படையை எடுத்து கதையை புணைய முனைந்திருப்பது நல்ல வித்தியாசமான முயற்சி. (அதை சரியாக எடுத்திருக்கின்றனரா என்பது வினாவிற்குறியது தான்).
கலையரசன் சரவணன் மற்றும் ஃபிராய்டு கதாப்பாத்திரத்தில் அருமையாக நடித்துள்ளார். இதுவரை பெரிய அளவிற்கு நடிப்பதற்கு வாய்ப்பில்லாத படங்களில் நடித்துள்ள இவருக்கு இந்தப்படம் ஒரு வரப்பிரசாதம்.
நெருடலானவை.:
ஒரு அழகான கதைக்கருவை எடுத்துகொண்டு அதன் அடிப்படையில் படத்தை உருவாக்காமல் ஒரு மனநோயாளியின் கதையை உருவாக்கியிருப்பது போல் உருவாக்கியுள்ளனர்.
பல இடங்களில் என்ன சொல்ல வருகின்றார்கள் என்பது புரியவேயில்லை. ஏதோ சமுதாயகருத்துக்களை அள்ளி தெளிக்க வேண்டும் என்பதற்காக கதைக்கு சம்மந்தமே இல்லாத காட்சியமைப்புகளை உள்ளே திணித்து சொதப்பி வைத்துள்ளனர்,
திரைக்கதை கந்தல் கந்தலாக தொங்குகிறது. அதை பார்க்கும் நமக்கும் நம் சட்டையையும் கிழித்துக்கொண்டு மனநோயாளியாகும் அடிப்படையில் படத்தின் ஓட்டம் இருக்கிறது.
படத்தில் எதையோ சொல்லவருகின்றார்கள் ஆனால் எதை சொல்ல வருகின்றனர் என்பதை சிந்திக்கும் போது எல்லாவற்றையும் சொல்கிறேன் என்று சொல்லி பிச்சைக்காரன் வாந்தி எடுத்ததை போல் இருக்கிறது.
இந்த கதை கனவின் அடிப்படையிலான கதை என்பது தான் வேடிக்கையாக இருக்கிறது. மொடாக்குடிகாரனுக்கு போதையின் உச்சத்தில் ஏற்படும் மூளை பிசகல் தான் கதை கரு என்றே தோன்றுகிறது.
ஒரு மனநோயாளி பற்றிய கதையை பைத்தியக்காரத்தனமாக விளக்க முயன்று படம் பார்ப்பவர்களை மனநோயாளியாக மாற்ற முயன்றுள்ளனர்.
பின்குறிப்பு.:
இந்த படத்திற்கு விமர்சனம் எழுத கால அவகாசம் எடுத்துக்கொண்டேன் காரணம் படம் பார்த்தவுடன் ஏற்பட்ட மனவோட்டம். அதிலிருந்து மீண்டு வந்து இந்த படத்தின் அடிப்படையை ரசிகர்களுக்கு சரியாக சொல்லி எச்சரிக்க வேண்டும் என்ற உள்ளுணர்வு.
தொகுப்பு.:
மொத்தத்தில் குதிரைவால் படத்திற்கு டிக்கெட் புக் செய்வதற்கு முன் மனநல மருத்துவமனையில் ஒரு படுக்கையை முன்பதிவு செய்துகொள்வது நல்லது.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.