Join/Follow with Our Social Media Links

காத்துவாக்குல ரெண்டு காதல் திரைவிமர்சனம்

காத்துவாக்குல ரெண்டு காதல் திரைவிமர்சனம்


ரௌடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கீரின் ஸ்டுடியோஸ் சார்பில் விக்னேஷ் சிவன் மற்றும் S S லலித்குமார் தயாரித்துள்ள படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.. விக்னேஷ் சிவன் எழுதி இயக்கியுள்ளார். அனிருத் ரவிசந்தர் இசையமைத்துள்ளார். S R கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். A ஸ்ரீகர் பிரசாத் படத்தை தொகுத்துள்ளார்.

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதி ரஞ்சன்குடி அன்பரசன் முருகேசன் பூபதி ஓஹோந்திரன் என்னும் ராம்போ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். நயன்தாரா கண்மணி கங்குலி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சமந்தா கதீஜா பேகம் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ரெடின் கிங்க்ஸ்லி அர்ணால்டு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ரீசந்த் முகமது மோபி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கலா மாஸ்டர் இதயகலா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

கதைக்கரு.:

இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் காதலிக்கும் ஒருவன் இரண்டில் ஒரு பெண்ணை வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுக்க முடியாமல் தவிப்பது தான் கதைக்கரு.



கதை.:

ரஞ்சன்குடியில் ஒரு குடும்பத்தில் யார பெண் கொடுத்தாலோ அல்லது பெண் எடுத்தாலோ அவர்கள் உயிருக்கு ஆபத்து என்று கருதி யாருமே பெண் கொடுக்கவோ அல்லது பெண் எடுக்கவோ வரவில்லை. அதையும் மீறி மூத்த அண்ணன் ஆங்கில ஆசிரியை ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார். அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது அந்த குழந்தையின் பெயர் ரஞ்சன்குடி அன்பரசன் முருகேசன் பூபதி ஓஹோந்திரன் என்னும் ராம்போ. சந்தோசம் நீடிப்பதற்குள் தந்தை இறக்கிறார், தாய் படுத்த படுக்கையில் இருக்கிறாள். அந்த குழந்தை தோஷம் நிறைந்த குழந்தை என்று எல்லோரும் ஒதுக்கி வைக்கின்றனர். ஒரு நாள் ராம்போ தன் தாய் அருகே செல்கிறான். தாய் அவனை தொட முயலும் போது வேண்டாம் என்று தடுக்கிறான். காரணம் அவன் தான் அதிஷ்டம் இல்லாதவன் என்று சொல்கிறான். எனக்கு எதுவுமே கிடைக்கவில்லை என்று சொல்கிறான். அவனிடம் நீ அதிஷ்டம் இல்லாதவன் அல்ல. உனக்கு ஒன்றுக்கு இரண்டு அல்ல பத்தாக கிடைக்கும் என்று சொல்கிறாள். ஆனால் மகனை தொடும்போது அவளின் உடல்நிலை மோசமாகிறது. தான் அருகில் இருப்பதால் தாய்க்கு பிரச்சனை என்று நினைக்கும் ராம்போ அவளைவிட்டு வெகுதூரம் செல்ல நினைத்து ஓடுகிறான். தாயைவிட்டு வெகுதூரம் சென்றபோது அவளின் உடல்நிலை நன்றாக இருப்பதை உணர்த்து தாயை சந்திக்கக்கூடாது என்று முடிவெடுத்து சென்னையிலிருக்கிறான்.

வளர்ந்து பெரியவனான ராம்போ காலையில் OLA கார் ஓட்டுனராகவும் இரவில் மதுபாரில் பவுன்சராகவும் வேலைபார்க்கிறான்.

அவன் காரில் தினசரி சவாரியாக வரும் பயணி கண்மணி. தன் தங்கை மற்றும் மனவளர்ச்சி குன்றிய தம்பியுடன் வசிப்பவள். தாய் தந்தையை இழந்தவள். மிகப்பெரிய வீட்டை அடமானத்தில் வைத்துவிட்டு சதாரண வீட்டில் குடியிருப்பவள். தனக்குறிய வாழ்கை துணையை தேர்ந்தெடுக்க முயல்கிறாள். கண்மணி அந்த வீட்டை கைப்பற்ற மற்றொரு நிபந்தனையையும் தந்தை உயிலில் எழுதியுள்ளார். கண்மணியும் அவள் கணவனும் கையெழுத்து போட்டால்தான் அந்த வீடு கிடைக்கும் என்று அதில் உள்ளது. தன் தம்பி தங்கையை தன்னுடனேயே வைத்துக்கொள்ள விரும்புபவள். மாப்பிள்ளை பார்க்க தினமும் ராம்போவின் காரிலேயே செல்கிறாள். ஆனால் கண்மணியின் எதிர்பார்ப்பிற்கேற்ற மாப்பிள்ளை கிடைக்கவில்லை. ராம்போ கண்மணியின் தங்கை மற்றும் தம்பியின் மீது பாசத்துடன் இருக்கிறான். கண்மணியிடம் தன்னை திருமணம் செய்துகொள்ள முடியுமா? என்று கேட்கிறான்.

பாரில் பவுன்சராக இருக்கும் ராம்போ தான் அதிஷ்டம் இல்லாதவன் எந்த பெண்ணையும் பார்க்ககூடாது என்று இருக்கும் அவன். அங்கே தன் பாய்பிரண்ட் மோபியுடன் வரும் கதீதா மீது பாசம் வருகிறது, கதீஜாவிற்கு மோபியின் மீது விருப்பமில்லை அவளுக்கும் ராம்போவின் மீது காதல் வருகிறது.

கதீஜாவிடம் ரூபாய் ஐம்பது லட்சத்தை வாங்கி கண்மணியின் வீட்டை மீட்கிறான். அதை பார்த்து கண்மணிக்கு ராம்போவின் மீது காதல் வருகிறது. கதீஜாவுடன் சாலையில் நடந்து கொண்டிருக்கும் போது கண்மணியிடமிருந்து போன் வருகிறது. தான் அவளை காதலிப்பதாக சொல்கிறாள். அதே நேரம் கதீஜாவும் ராம்போவை காதலிப்பதாக சொல்கிறாள். ஒரே நேரத்தில் இருவரும் தங்கள் காதலை சொல்கின்றனர்.

முதன்முறையாக அதிஷ்டம் ஒன்றுக்கு இரண்டாக கிடைத்ததாக உணர்கிறான் ராம்போ. ஆனால் இரண்டு காதலில் எது சிறந்தது என்று பிரிக்கமுடியாமல் இருக்கிறான். அதனால் இருவரையும் விட்டு பிரிய நினைக்கிறான் ராம்போ. அதற்காக ஒரு நாடகம் போடுகிறான். தனக்கு பகலில் நடப்பது இரவில் தெரியாது. இரவில் நடப்பது பகலில் தெரியாது என்று என்று நம்பவைக்கிறான். கண்மணியும் கதீஜாவும் இதை நம்புகின்றனர். இந்த தவறுக்கு ராம்போவின் வியாதிதான் காரணம் என்று நினைக்கின்றனர்,

இருவருமே ராம்போவை அடைய நினைக்கிறனர், யார் காதல் மிகப்பெரியது என்று ராம்போவிற்கு உணர்த்த முயல்கின்றனர், இந்த போராட்டத்தில் கதீஜா கண்மணியின் தங்கை தம்பிகளுக்கும் பிரியமானவளாகின்றாள். கண்மணியும் கதீஜா ஒன்றாகின்றனர். ஆனால் இருவரில் யார் ராம்போவை திருமணம் செய்து கொள்வது என்று குழம்புகின்றனர்.

அப்போது ராம்போ தனக்கு வியாதி இருப்பதாக ஆடிய நாடகம் தெரிய வருகிறது. இருவரும் ராம்போவை வெறுக்கின்றனர். ராம்போவின் துரதிஷ்டம் மீண்டும் தொடர்வதாக உணர்கிறான். அவன் தாயின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல் வருகிறது. அவன் தாயை காப்பாற்றவும் அதிஷ்டம் மீண்டும் கிடைப்பதாக உணர்த்த கண்மணியையும் கதீஜாவையும் ராம்போவின் நண்பன் ராம்போவுடன் ஊருக்கு அணுப்புகிறான். அவர்களை பார்த்த ராம்போவின் தாய் குணமடைகிறாள். தன் தந்தையின் உடன் பிறந்தவர்கள் திருமணத்திற்காக தன்னை கண்மணி மற்றும் கதீஜா இருவரையும் திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க வைக்கிறான் ராம்போ. ராம்போவின் திருமணத்தை விளம்பரப்படுத்தி தன் தந்தை உடன் பிறந்தவர்களுக்கு ராம்போ திருமணம் செய்து வைக்கிறான். ஆனால் ராம்போவை திருமணம் செய்யாமல் கண்மணியும் கதீஜாவும் பிரிந்து செல்கின்றனர்.

பாராட்டுகுறியவை.:

இருதார பிரச்சனைகளை வைத்து ஏராளமான திரைப்படங்கள் வந்துள்ளது. ஆனால் இரு காதலை வைத்து உருவாகியுள்ளது இந்த திரைப்படம். கருத்தின் அடிப்படை புதுமை.

விஜய் சேதுபதி ராம்போ கதாப்பாத்திரத்தில் அருமையாக இருவரிடமும் மாட்டிக்கொண்டு முழிக்கும் கதாப்பாத்திரத்தில் அருமையாக நடித்துள்ளார்.

நயன்தாரா கண்மணி கதாப்பாத்திரத்தில் தம்பி தங்கைகள் மீது பாசம் கொண்டவராகவும் காதலனை விட்டுக்கொடுக்காமல் சமந்தாவிடம் போட்டி போட்டு நடித்துள்ளார்.

சமந்தா கதீஜா பேகம் மார்டன் நாயகி கதாப்பாத்திரத்தில் காதலனை விட்டுகொடுக்காமல் நயன்தாரவிடம் போட்டி போட்டு நடித்துள்ளார்..

ரெடிங்கிங்க்ஸி அருமையாக நடித்துள்ளார்.

அனிருத் இசையில் பாடல் கேட்கும்படி உள்ளது.

நெருடலானவை.:

கதையில் செலுத்திய கவனத்தை திரைக்கதையில் செலுத்த தவறியுள்ளார் விக்னேஷ் சிவன். கதை நகராமல் ஒரே இடத்திலேயே நங்கூரம் போட்டி சுற்றிக்கொண்டே இருப்பதை போல் உள்ளது.

பாக்கியராஜ் பாணியில் பாதம் பிஸ்தா என்ற இரட்டை அர்த்த டயலாக்கை முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த காட்சி ரசிக்க வைப்பதற்கு பதில் முகம் சுழிக்கவே வைக்கிறது.

கிளைமாக்ஸ் காட்சியை எப்படி அமைப்பது என்ற குழப்பத்தில் இயக்குனர் இருந்தது தெளிவாக உணரமுடிகிறது. படம் முடிந்து விட்டதா இல்லையா என்ற தெளிவு இறுதிவரை இல்லை. எப்படி படத்தை முடிப்பது என்று இயக்குனரும் குழம்பி ரசிகர்களையும் குழப்பி சலிப்பை ஏற்படுத்தியுள்ளார்.

எக்கச்ச கதாப்பாத்திரங்கள் ஆனால் அழுத்தமில்லாத கதாப்பாத்திரங்கள்.

வசனம் வித்தியாசமாக முயற்சி செய்வதாக நினைத்து ஒரே வசனத்தை பல இடங்களில் ஒரே மாதிரி வைத்து சலிப்படைய வைத்துள்ளார்.

நகைச்சுவையை அடிப்படையாக கொண்டு படத்தை எடுத்திருந்தாலும் நகைச்சுவை காட்சிகள் ரசிக்க முடியாமல் சலிப்பை ஏற்படுத்துவதையே உணர முடிகிறது.

தொகுப்பு.:

காத்துவாக்குல ரெண்டு காதல் படம் காத்துவாக்குல கூட நகரமுடியாமல் நின்ற இடத்திலேயே நங்கூரமிட்டு காத்துவாக்குல கூட மனதை தொட மறுக்கிறது.

Movie Gallery

  • review

    Reshma Pasupuleti

  • review

    Devayani

  • review

    Sreeleela

  • review

    Reshma Pasupuleti

  • review

    Sobhita Dhulipala

  • review

    Priyanka Chopra

  • review

    Bindu Madhavi

  • review

    Riythvika

  • review

    Janani Iyer

  • review

    Nandita Swetha

  • review

    Charmy Kaur

  • review

    Anupama Parameswaran

  • review

    Preity Zinta

  • review

    Ragini Dwivedi

  • review

    Ramya Krishnan

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.