Join/Follow with Our Social Media Links

பீஸ்ட் திரைவிமர்சனம்

பீஸ்ட் திரைவிமர்சனம்


சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதிமாறன் தயாரித்துள்ள படம் பீஸ்ட். நெல்சன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். அனிருத் ரவிசந்தர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்ஸா ஒளிப்பதிவு செய்துள்ளார். R நிர்மல் படத்தை தொகுத்துள்ளார்.

பீஸ்ட் படத்தில் இளைய தளபதி விஜய், வீரராகவன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். பூஜா ஹெக்டே, ப்ரீத்தி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். செல்வராகவன், அல்டாஃப் ஹூசைன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். டாம் சாக்கோ, தீவிரவாதி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். யோகி பாபு, ஜில் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ரெடின் கிங்ஸ்லி, ஜேக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். V T V கணேஷ், டோம்னிக் இருதயராஜ் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஷாஜி சென், உள்துறை அமைச்சர் கதாப்பாத்திரதில் நடித்துள்ளார். அபர்னா தாஸ், அபர்னா கதாப்பாத்திரத்தில் உள்துறை அமைச்சர் மகள் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். லில்லிபுத், தீவிரவாதி தலைவன் உமர் பரூக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதைக்கரு.:

தீவிரவாதிகள் மக்களை கடத்திவைத்துக்கொண்டு தங்கள் தலைவனை விடுவிக்க கோரிக்கை வைக்கின்றனர். அனைவரையும் நாயகன் காப்பாற்றுகிறார்.

கதை.:

வீரராகவன் உளவுத்துறையில் பணிபுரிகிறார். ஒரு ஆபரேஷன் போது தீவிரவாதி தலைவன் உமர் ஃபரூக்கை கைது செய்கின்றார். ஆனால் உயரதிகாரிகள் செய்த தவறால் ஒரு குழந்தையின் உயிர் போகிறது. அதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகி பணியிலிருந்து விலகுகிறார்.

இந்திய அரசுக்கு, தீவிரவாதிகளால் ஷாப்பிங் மால் கைப்பற்ற பட போவதாக தகவல் வருகிறது. அதை எப்படி தடுப்பது என்று ஆலோசிக்கின்றனர். உள்துறை அமைச்சர் எப்படியாவது அடுத்த பிரதமராக வேண்டுமென்று தீவிரவாதிகளுடன் கைகோர்க்கி்றார். தீவிரவாதியிடம் அந்த ஷாப்பிங் மாலில் தன் மனைவி மற்றும் மகள் இருக்கின்றனர் அவர்களுக்கு எதுவும் நடந்துவிடக்கூடாது. இதைவைத்து அரசியல் செய்து பிரதமராக வேண்டுமென்று தீவிரவாதியிடம் தொலைபேசியில் பேசுகின்றார்.

ஒரு மனோ தத்துவ மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்கிறார் வீரராகவன். அவர் மனதை மாற்ற ஒரு நிச்சயதார்த்த விழாவிற்கு கூட்டி செல்கிறார் டாக்டர்.

அங்கே மணப்பெண்னாக இருக்கும் ப்ரீத்திக்கு நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளையை பிடிக்கவில்லை. அதனால் அங்கே வரும் வீரராகவன் நடவடிக்கையால் கவரப்பட்டு காதல் வயப்படுகிறாள். ஒரு மாதத்திற்குள் கல்யாணம் செய்து கொள்ள்வேண்டும். அதுவரை காதலிக்க வேண்டும் என்று சொல்கிறாள். அதற்கு தோதாக தான் வேலை செய்யும் டோம்னிக் இருதயராஜ் செக்யூரிட்டி ஏஜென்ஸியில் வீரராகவனுக்கு வேலை வாங்கி கொடுக்கிறாள். மொக்கையான மற்றும் வயதான ஆட்களை வேலைக்கு அமர்த்திய காரணத்தால் பிரச்சனைக்குள்ளாகும் ஏஜென்ஸி உரிமையாளார் வீரராகவனை வேலைக்கு அமர்த்துகின்றார். எல்லா காண்டிராக்ட் கையைவிட்டு போன காரணத்தால் வருத்தத்தில் இருக்கும் டோம்னிக் ஒரு மால் காண்டிராக்டையாவது தக்கவைக்க வீரராகவனையும் பீரித்தியையும் அழைத்துக்கொண்டு ஷாப்பிங் மாலுக்கு செல்கிறார்,

அங்கே பல நடவடிக்கைகள் முரண்பாடாக தெரிகிறது. தீவிரவாதிகளால் அந்த ஷாப்பிங்மால் கைப்பற்ற போவதாக தகவலை போலிஸிற்கு தெரிவிக்கிறார் வீரராகவன். ஷாப்பிங்க் மால் தீவிரவாதிகள் வசமாகின்றது.

வீரராகவன் தனி ஒரு மனிதனாக மக்களை காப்பாற்றி தீவிரவாதிகளை அழித்து அதன் தலைவனை கைது செய்கிறார். உள்துறை அமைச்சரின் முகத்திரையை கிழித்து அடையாளம் காட்டுகிறார்.

இந்திய அரசு மக்களை காப்பாற்ற விடுவித்த தீவிரவாதி தலைவனை தனி ஒரு மனிதனாக பாகிஸ்தானிற்கே சென்று கைது செய்து மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வருகிறார் வீரராகவன்.

பாராட்டுக்குறியது.:

ஹலமிதி ஹபிபொ பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றது. பாடல், இசை மற்றும் நடனம் அருமை.

விஜய் ரசிகர்களை திருப்திபடுத்த ஆக்ஷ்ன் காட்சிகள் மிகைப்படுத்தப்பட்டிருந்தாலும் ரசிகர்களை ஒரளவிற்கு கவர்கின்றது.

அல்டாஃப் ஹூசைன் கதாப்பாத்திரத்தில் முதன் முறையாக செல்வராகவன் நடித்துள்ளார். அந்த கதாப்பாத்திரம் மனதில் நிற்கின்றது.

நெருடலானவை.:

ஆதிகாலத்து அரத பழைய கதை, அதற்குறிய களம். கதைக்காக நெல்சன் சிரமப்படவில்லை. விஜயகாந்த், அர்ஜூன் படங்களை கலந்து கட்டி கொடுத்துள்ளதால் நெல்சன் மீது இருந்த எதிர்பார்ப்பு ஏமாற்றமாக மாறியுள்ளது.

நெல்சன் திரைப்படத்தை தனது பாணியில் எடுப்பதா இல்லை ரசிகர்களை திருப்திபடுத்த படத்தை கொடுப்பதா என்ற குழப்பத்தில் தானும் குழம்பி ரசிகர்களையும் குழப்புகின்றார். இந்த படம் நெல்சன் படமாகவும் இல்லாமல் விஜய் படமாகவும் இல்லாமல் மொக்கைப்படமாக மாறியுள்ளது.

தீவிரவாதிகள் கையில் துப்பாக்கி கிடைப்பதற்கு கிறிஸ்த்மஸ் மரத்திலிருந்து எடுப்பது போன்ற காட்சியை வைத்துள்ளார் நெல்சன். ஆனால் விஜய் கையில் எப்படி விதவிதமான தீவிரவாதிகள் கையிலேயே இல்லாத புதிய வகை துப்பாக்கிகள் கிடைக்கிறது. ஷாப்பிங் மாலில் துப்பாக்கி தொழிற்சாலை ஏதுவும் இருக்கிறதா? ஷாப்பிங் மாலில் பொம்மை கடைகள் இருப்பதற்கு வாய்ப்புள்ளது. அதனாலோ என்னவோ விஜய் கையில் இருக்கும் துப்பாக்கிகள் பொம்மை துப்பாக்கிகள் போலவே கண்ணுக்கு தெரிகிறது.

ஒரு கதாநாயகன் கதாப்பாத்திரம் வலுவாக இருக்க வேண்டுமென்றால் வில்லன் கதாப்பாத்திரம் வலுவாக இருக்க வேண்டும். இதில் வில்லனை பார்த்தால் கொடூரமானவனாகவும் தெரியவில்லை, காமெடியனாகவும் தெரியவில்லை. உப்புசப்பில்லாத வில்லன் கதாப்பாத்திரம்.

பத்து ஆண்டுகளுக்கு பிறகு பூஜா ஹெக்டே தமிழில் நடிக்க வந்துள்ளார். ஒரு ரீ என்டிரி கொடுக்கின்றார் என்றால் வலுவாக காலுன்ற அதற்கேற்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கவே விரும்புவார்கள். ஆனால் ஏன் இப்படியொரு வலுவற்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார் என்றே விளங்கவில்லை.

தீவிரவாதிகளால் கடத்தப்பட்டவர்கள் அனைவரையும் வரிசையாக யோகா கிளாஸ் போல் உட்கார வைத்திருக்கின்றனர். அதில் ஒருவர் முகத்தில் கூட கடத்தப்பட்டதற்கான அறிகுறிகள் எதுமே இல்லை.

இறுதி காட்சியில் பாகிஸ்தான் எல்லைக்குள் தனியாக சென்று தீவிரவாதியை கைது செய்து கொண்டு வருவது பக்கா சினிமா செயற்கைத்தனம். துளி கூட ரசிக்கும் படியாக இறுதி காட்சி இல்லை.

ஏராளமான கதாப்பாத்திரங்கள் இருந்தாலும் எந்த கதாப்பாத்திரமும் மனதில் நிற்க மறுக்கின்றது.

தொகுப்பு.:

மொத்தத்தில் பீஸ்ட் திரைப்படம் விஜய் திரைப்படங்களிலேயே Best in the Worst அடிப்படையில் இருக்கிறது.



Movie Gallery

  • review

    Rahasya Gorak

  • review

    Regina Cassandra

  • review

    Meera Mithun

  • review

    Prayaga Martin

  • review

    Madhu Shalini

  • review

    Tanya Hope

  • review

    Padmapriya

  • review

    Ramya Krishnan

  • review

    Neetu Chandra

  • review

    Catherine Tresa

  • review

    Anupama Parameswaran

  • review

    Esther Anil

  • review

    Remya Nambeesan

  • review

    Amala Paul

  • review

    Meera Jasmine

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.