Join/Follow with Our Social Media Links

டான் தமிழ் பட திரைவிமர்சனம்

டான் தமிழ் பட திரைவிமர்சனம்


S K புரொடக்ஷன்ஸ் மற்றும் லைகா புரொடெக்ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் மற்றும் சுபாஸ்கரன் இணைந்து தயாரித்துள்ள படம் டான். அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி எழுதி இப்படத்தை இயக்கியுள்ளார். அனிருத் ரவிசந்தர் இசையமைத்துள்ளார். கே எம் பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாகூரான் ராமசந்திரன் படத்தை தொகுத்துள்ளார்.

டான் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் சக்கரவர்த்தி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். பிரியங்கா அருள் மோகன் அங்கையற்கண்ணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். S J சூர்யா பூமிநாதன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சமுத்திரகனி கணேசன் கதாப்பாத்திரத்தில் சக்கரவர்த்தியின் தந்தையாக நடித்துள்ளார். ஆதிரா பாண்டிலக்ஷ்மி சக்கரவர்த்தியின் தாயாக நடித்துள்ளார். நடிகர் சூரி பெருசு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சிவாங்கி லில்லி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஜார்ஜ் மரியான் கல்லூரி முதல்வராக நடித்துள்ளார். ராதாரவி கல்லூரி நிறுவனர் கிள்ளிவளவன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். முனிஸ்காந்த் பேராசிரியர் அழகு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். காளி வெங்கட் பேராசிரியர் அறிவு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதைக்கரு.:

தந்தையின் கண்டிப்பு பிடிக்காமல் இலக்கின்றி சுற்றித்திரியும் ஒருவன். தன் இலக்கை கண்டறிந்து அதில் முன்னேற முயலும் போது தந்தையின் கண்டிப்பின் நியாயத்துவத்தை உணர்ந்து மனம் மாறும்போது தந்தை இறந்து போகிறார். தந்தையின் லட்சியத்தையும் கனவையும் நிறைவேற்றும் மகன்.



கதை.:

கணேசன் தனக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டுமென்று நினைக்கிறார். ஆனால் அவருக்கு பிறந்தது ஆண் குழந்தை. அவன் பெயர் சக்கரவர்த்தி. தந்தை மிகுந்த கண்டிப்புடன் வளர்க்கிறார். ஒழுங்காக படிக்கவில்லை என்றால் மொட்டை அடிக்கும் கொடுமைக்கார தந்தையாக இருக்கிறார். ஆனால் சக்கரவர்த்தி தன் தந்தையை நன்றாக படிக்கும் மாணவனாக ஏமாற்றி திரிகிறான். இலட்சியம் இலக்கு என்ற எதையும் சிந்திக்காமல் ஊதாரியாக இருக்கிறான். ஒரு வழியாக பனிரெண்டாம் வகுப்பு படிப்பை முடிக்கிறான். சக்கரவர்த்திக்கு கல்லூரி படிப்பில் விருப்பமில்லை. அதுவும் பொறியியல் படிக்க துளியும் விருப்பமில்லாமல் இருக்கிறான். ஆனால் கணேசன் தனியார் பொறியியல் கல்லூரியில் வலுக்கட்டாயமாக சேர்த்து விடுகிறார்.

கல்லூரியில் ஜாலியாக இருக்க நினைக்கிறான் சக்கரவர்த்தி. கல்லூரியில் கடைசி பெஞ்ச் மாணவனாக அலப்பறை செய்கிறான். ஆனால் அங்கும் பேராசிரியர் பூமிநாதன் மாணவர்கள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டுமென்று கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கிறார். எப்படியாவது பூமிநாதன் பிடியிலிருந்து தப்பிக்க நினைத்து பூமிநாதனுக்கே தெரியாமல் ரஷ்யாவில் உள்ள கல்லூரிக்கு பகுதி நேர பேராசிரியராக விண்ணப்பிக்கிறான். பூமிநாதன் ரஷ்யாவிற்கு செல்வது கல்லூரிக்கே பெருமை என்று கல்லூரி நிறுவனர் கிள்ளிவளவன் அவரை ரஷ்யாவிற்கு அனுப்புகிறார். குளிர் ஒத்துவராத பூமிநாதன் வேறு வழியில்லாமல் அங்கே செல்கிறார். பூமிநாதனை கல்லூரியை விட்டு அனுப்பிய சக்கரவர்த்தியை கல்லூரி மாணவர்கள் டானாக கொண்டாடுகின்றனர்.

அந்த கல்லூரிக்கு வருகிறாள் அங்கையற்கண்ணி அவளின் தோழி லில்லி டானைப்பற்றி சொல்கிறாள். டானை தனக்கு முன்பே தெரியும் என்று சொல்கிறாள் அங்கையற்கண்ணி. தன் பள்ளிப்பருவத்தில் தன்னை காதலித்தவன் அவன் என்றும் ஆனால் தந்தையின் முன் தன்னை காதலித்ததை கூட சொல்லமுடியாத கோழை அவன் என்றும். சக்கரவர்த்தி தந்தை கணேசன் அது சார்பாக தன் தந்தையிடம் கொடுத்த புகார் காரணமாக என் மீது மிகுந்த பாசம் வைத்த என் தந்தை இதுவரை என்னிடம் பேசவில்லை என்று சொல்கிறாள்.

அங்கயற்கண்ணியையும் அவள் தந்தையையும் மீண்டும் பேச வைக்கிறான் சக்கரவர்த்தி. அங்கயற்கண்ணிக்கு மீண்டும் சக்கரவர்த்தி மீது காதல் வருகிறது.

அதே நேரம் ரஷ்யா சென்ற பூமிநாதன் மீண்டும் கல்லூரிக்கு திரும்புகிறார். தான் ரஷ்யா செல்ல காரணமான சக்கரவர்த்தியை தண்டிக்க நினைக்கிறார். இருவருக்கும் இடையே மோதல் உருவாகிறது.

ஒரு கட்டத்தில் சரியாக படிக்காமல் ஊர் சுற்றி திரிந்த பையனின் செயல்பாடுகளை கணேசனிடம் சொல்கிறான் பூமிநாதன். அதே நேரம் திரைப்பட இயக்குனராக வேண்டுமென்ற லட்சியம் சக்கரவர்த்தியின் எண்ணத்தில் உருவாகிறது. தந்தையிடம் தனக்கு படிப்பதில் விருப்பமில்லை படமெடுக்க போவதாக சொல்கிறான் சக்கரவர்த்தி. ஆனால் ஏராளமானோர் இயக்குனராக வேண்டுமென்ற கனவில் திரிந்து கொண்டிருப்பதாக சொல்கிறார். தந்தைக்கு தெரியாமல் கல்லூரியில் நடக்கும் சுவாரஸ்யங்களை பூமிநாதனுக்கு தெரியாமல் தன் மாமா பெருசு உதவியால் படம் பிடித்து வெளியிட முயல்கிறான்.

ஒரு கட்டத்தில் சக்கரவர்த்தி பூமிநாதனிடம் மாட்டிக்கொள்கிறான். அப்போது ஏற்படும் விபத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் பூமிநாதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறான். பூமிநாதன் நிலைக்கு காரணம் சக்கரவர்த்தி என்பதை தெரிந்த கல்லூரி நிறுவனர் சக்கவர்த்தியை கல்லூரியிலிருந்து டிஸ்மிஸ் செய்கிறார்.

இதை கேள்விப்பட்ட சக்கரவர்த்தியின் தந்தை கணேசன் சக்கரவர்த்தி எடுத்த குறும்பட லாப்டாப்பை எரிக்கிறார். இதானால் கோபமடையும் சக்கரவர்த்தி தந்தையிடம் நீ கொடுமைகார தந்தை என்று சண்டைபோட்டுவிட்டு வீட்டைவிட்டு வெளியேறுகிறான். அங்கயற்கண்ணி உதவியுடன் புதிய குறும்படத்தை இயக்க முயல்கிறான்.

சக்கரவர்த்தியை பார்க்க வரும் அவன் தாய் உன் தந்தை உன் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளார். நீ படித்து பெரிய ஆளாக வர எவ்வளவு தியாகம் செய்துள்ளார் என்று தந்தையின் பாசத்தை புரியவைக்கிறாள். குறும்படம் எடுக்க தந்தை பணம் கொடுத்ததையும் சொல்கிறாள். தந்தையின் தியாகத்தையும் பாசத்தையும் உணர்ந்த சக்கரவர்த்திக்கு தந்தையின் மீது பாசம் வருகிறது. தந்தையை பார்க்க வீட்டிற்கு செல்கிறான் சக்கரவர்த்தி அங்கே மாரடைப்பாள் தந்தை இறந்து போகிறார். சக்கரவர்த்தி உடைந்து போகிறான் கதறி அழுகிறான்.

கல்லூரிக்கு மீண்டும் பூமிநாதன் வந்துள்ளதாகவும் இப்போது அவர் பேராசிரியர் அல்ல. கல்லூரியின் முதல்வர் என்றும் சொல்கின்றனர். பூமிநாதனை சென்று பார்க்கிறான் சக்கரவர்த்தி. பூமிநாதன் அவனிடம் நீ படித்து பட்டம் வாங்க வேண்டுமென்று சொல்கிறார். அவனை கல்லூரியைவிட்டு அனுப்பவேண்டுமென்று சொன்ன அவரிடமிருந்து இதை சக்கரவர்த்தி எதிர்பார்க்கவில்லை. அப்போது பூமிநாதன் நான் கண்டிப்பாக இருப்பது மாணவர்களின் ஒழுக்கத்தை பேணிகாப்பதற்காகதான். யாரையும் தண்டிக்க அல்ல. என்னை பொருத்தவரை அனைவரும் நன்கு படிக்க வேண்டும் என்பது தான் என் எண்ணம். அதனால் நீ தேர்வில் வெற்றி பெறவேண்டுமென்று சொல்கிறார்.

திரைத்துறையில் தன் வாழ்கையையே படமாக எடுத்து வெற்றிபெறுவதுடன் மறைந்த தன் தந்தையின் ஆசையை நிறைவேற்ற பொறியியல் படிப்பையும் முடிக்கிறான்.

பாராட்டுக்குறியது.:

சிவகார்த்திகேயன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் நடிகர் அதற்கேற்ப கதாப்பாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். குறிப்பாக தந்தை இறந்தபின் அவரின் உணர்ச்சிகரமான நடிப்பு அவரின் மற்றப்படங்களைவிட அருமை.

S J சூர்யா மாநாடு படத்திற்கு பின் நடிப்பதற்கான வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி அருமையாக நடித்துள்ளார்.

சமுத்திரகனி கண்டிப்பான தந்தையாக கணேசன் கதாப்பாத்திரத்தில் அருமையாக நடித்துள்ளார்.

இசையமைப்பாளர் அனிருத் மீண்டும் மீண்டும் தன்னை நிரூபித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்திலும் அது தொடர்கிறது. பாடல் மற்றும் பின்னனி இசை அருமை.

நெருடலானவை.:

கதை என்பதற்கு சிரமப்படாமல் பல படங்களை ஒருங்கிணைத்து கதையையும் காட்சிகளையும் அமைத்துள்ளது சலிப்பை ஏற்படுத்துகிறது. பல முறை பார்த்து சலித்துப்போன கதையாக நம் மனதில் கடந்து போகிறது.

கல்லூரிக்குள் எதிரணி என்று ஒன்றை வலுக்கட்டாயமாக திணித்திருப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது. இந்த காட்சிகள் திரைக்கதையோட்டத்திற்கு சிறிதும் உதவவில்லை என்று சொல்வதைவிட படத்தின் ஓட்டத்தை கெடுக்கிறது என்றே சொல்லலாம்.

பிரியங்கா அருள் மோகன் பள்ளி மற்றும் கல்லூரி மாணவியாக நடித்திருப்பது பல படங்களை பார்த்த உணர்வே தோன்றுகிறது.

S J சூர்யாவின் கதாப்பாத்திரை பார்க்கும் போது நண்பன் படத்தில் சத்யராஜ் கதாப்பாத்திரம் போலவே உள்ளது.

ஒரு நாயகனின் கதாப்பாத்திரம் அழுத்தமாக மனதில் பதிய வலுவான எதிர்மறை கதாப்பாத்திரம் தேவை. பூமிநாதன் கதாப்பாத்திர படைப்பு வலுவாக இருந்தாலும் அவர்கள் கதாப்பாத்திரம் மொத்தமாக மொக்கை வாங்குவதை போல் உள்ளது.

நடிகர் சூரியின் கதாப்பாத்திரத்தின் பெயர் பெருசு. ஒரு முக்கியத்துவம் இல்லாத கதாப்பாத்திரத்தில் சைடு ஆர்டிஸ்ட் நடிக்க வேண்டிய சிறிய கதாப்பாத்திரம். கதாப்பாத்திரத்திற்கு பெரிசு என்று பெயர் வைத்ததற்கு பதில் சிறுசு என்று வைத்திருக்கலாம்.

நாளைய இயக்குனரில் கலந்து சினிமாவில் ஜெயிப்பது தான் லட்சியம் என்பது பெரிய தாக்கத்தை உருவாக்கவில்லை.

.

தொகுப்பு.:

மொத்தத்தில் டான் திரைப்படம் நம்மை ரசிக்கவைப்பதைவிட சிந்திக்கவைக்கிறது. ஆம் இந்த படத்தின் காட்சிகள் எங்கெங்கிருந்து எடுத்துள்ளார்கள் என்று மூளை தேடுகிறது.

Movie Gallery

  • review

    Rajisha Vijayan

  • review

    Amy Jackson

  • review

    Radhika Apte

  • review

    Nithya Menen

  • review

    Ritu Varma

  • review

    Aditi Rao Hydari

  • review

    Ammu Abhirami

  • review

    Nidhi Agarwal

  • review

    Anupama Parameswaran

  • review

    Poorna

  • review

    Adah Sharma

  • review

    Deepika Padukone

  • review

    Sujitha

  • review

    Anjali

  • review

    Varalaxmi Sarathkumar

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.