Join/Follow with Our Social Media Links

நெஞ்சுக்கு நீதி திரைவிமர்சனம்

நெஞ்சுக்கு நீதி திரைவிமர்சனம்


பே வியூ புராஜெக்ட்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் ரோமியோ பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் நெஞ்சுக்கு நீதி. Article 15 ஹிந்தி படத்தின் மறு உருவாக்கமாக உருவாகியுள்ள இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். தீபு நினன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபன் படத்தை தொகுத்துள்ளார்.

நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் விஜயராகவன் IPS கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தான்யா ரவிச்சந்திரன் அதிதீ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஆரி குமரன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஷிவானி ராமகிருஷ்ணன் குறிஞ்சி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சுரேஷ் சக்கரவர்த்தி சர்கிள் இன்ஸ்பெக்டர் சுந்தரம் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். யாமினி சந்தர் டாக்டர் அனிதா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இளவரசு சப் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மயில்சாமி காண்ஸ்டெபிள் வில்லாளன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ராட்சஷன் சரவணன் காண்ஸ்டெபிள் நடராஜ் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ரமேஷ் திலக் வெங்கட் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஷாயாஜி ஷிண்டே C B I அதிகாரியாக நடித்துள்ளார். அப்துல் விஜயராகவன் உதவியாளராக நடித்துள்ளார்.

கதைக்கரு.:

மனிதர்களில் ஏற்ற தாழ்வு இல்லாமல் அனைவரும் சரிசமமாக மதிக்கப்பட வேண்டும் என்ற இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 15 ஐ முன்னிலைபடுத்தி ஜாதிய பிரிவினையை கலைந்தெறியும் அடிப்படையில் உருவாகியுள்ள படம்.



கதை.:

பொள்ளாச்சியில் தலித் பிரிவினருக்கும் மற்றவர்களுக்கும் இடையே மிகப்பெரிய அளவு தீண்டாமை கொடுமை இருக்கிறது. தலித் பெண் சமைத்த பள்ளியின் சத்துணவு சமையலை கூட உண்ணக்கூடாது என்று தரையில் கொட்டுமளவிற்கு இருக்கிறது. அந்த பகுதியில் கிருபாகரன் அரசியல்வாதியின் உறவினர். உயர் வகுப்பை சேர்ந்தவன். ஜாதிய பிரிவினையின் முதன்மையானவன். ஊரில் மட்டுமின்றி காவல்துறையிலும் இந்த ஜாதிப்பிரிவினை இருக்கிறது. குமரன் தலித் சமூகத்தை சேர்ந்தவன் ஜாதிய பிரிவினைக்கு எதிராக செயல்படுபவன்.  குமரனை காவல்துறை ஒரு தீவிரவாதியாக சித்தரிக்கிறது.

அங்கே பணியிடமாற்றம் பெற்று வருகிறார் விஜயராகவன் IPS. தேசத்தின் மீது வித்தியாசமான நல்ல கண்ணோட்டத்தை கொண்ட விஜயராகவனுக்கு இந்த ஜாதிய பிரிவினை புதிதாக தெரிகிறது. அந்த அடிப்படையிலிருந்து விலகியிருக்கிறார். அவருடன் துணைகாவலராக பணிபுரிகிறான் உயர்வகுப்பை சேர்ந்த நடராஜ். அவன் தங்கை லக்ஷ்மி விஜயராகவன் வீட்டிலேயே வேலை செய்துகொண்டு படித்துக்கொண்டிருப்பவள்.

தலித் சமூகத்தை சேர்ந்த மூன்று பெண்கள் கடத்தப்படுகின்றனர். அதில் இரண்டு பெண்கள் தூக்கிட்டு இறந்து கிடக்கின்றனர். சத்யா என்ற பெண்ணின் நிலை என்ன என்று தெரியாமல் அந்த பகுதியை சேர்ந்த குறிஞ்சி புகார் கொடுக்க முயலும் போது மற்ற காவலர்களால் தடுக்கப்படுகிறாள். அதையும் மீறி காணாமல் போன சத்யாவை பற்றி விஜயராகவனிடம் புகார் கொடுக்கிறாள் குறிஞ்சி. விஜயராகவன் இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்கிறார். இதனிடைய விஜயராகவன் நண்பன் வெங்கட் தலைமறைவாகிறான். ஆனால் போலிஸ் நிலையத்திற்க்கும் இண்ஸ்பெக்டர் சுந்தரமும் மற்றவர்களும் இந்த வழக்கை ஒரு ஆணவக்கொலை வழக்காக மாற்ற முயல்கிறார்.

கற்பழித்து தூக்கில் தொங்கவிடப்பட்ட இருவரும் கற்பழித்து கொல்லப்பட்டதை மறைக்க முயல்கிறார் சுந்தரம். மூன்று பெண்களுக்கிடையே இருந்த தகாத உறவால் அவர்களின் சொந்தக்காரர்களே கொலை செய்ததாக வழக்கை திரித்து முடிக்க முயல்கிறார் சுந்தரம். இதனால் ஆத்திரமடையும் குமரன் போலிஸ் வாகனத்தின் மீது பெட்ரோல் குண்டை வீசுகிறான். தலித் சமூகத்தினர் அடிமட்ட தொழில்கள் எதையும் செய்யக்கூடாது என்று சொல்கிறான். போலிஸ் வாகனம் மீது குண்டு வீசிய காரணத்தால் குமரன் மீது விஜயராகவன் கோபம் கொள்கிறார். குமரன் மீதான வழக்கு முழுவதையும் படித்து பார்த்த விஜயராகவன் போலிஸ் வாகனம் மீது குண்டெறிந்ததை தவிர மற்ற வழக்குகள் பொய்வழக்குகள் என்று கண்டு பிடிக்கிறார்.

இரண்டு பெண்கள் கற்பழித்து கொல்லப்படவில்லை என்று போலி போஸ்மார்ட்டம் அறிக்கையை கொடுக்க சொல்லி துணை மருத்துவர் அனிதாவை மிரட்டுகிறார் சுந்தரம். அந்த அறிக்கையை வைத்து வழக்கை முடிக்க நினைக்கிறார் சுந்தரம். ஆனால் வழக்கை முடிக்காமல் விசாரனையை தொடர்கிறார் விஜயராகவன். அதில் இரண்டு பெண்களும் கற்பழித்து கொலை செய்யப்பட்டனர் என்று நீருபிக்க உண்மையான பிரேத பரிசோதனை தகவலை அனிதாவின் உதவியால் வேறொரு மாநிலத்தில் ஆய்வு செய்து பெறுகிறார் விஜயராகவன்.

அந்த ஆய்வில் அவர்களை கெடுத்தவர்களில் கிருபாகரனும் ஒருவன் என்று கண்டுபிடிக்கிறார் விஜயராகவன். அது மட்டுமின்றி பள்ளி பேருந்தில் கடத்தி சென்று பள்ளியில் அடைத்து வைத்து கற்பழித்து கொலை செய்ததை கண்டுபிடிக்கிறார் மூன்று பெண்களையும் கற்பழித்து கொல்ல முயலும் போது தப்பி சென்ற சத்யா முள் நிறைந்த குளத்தை கடந்து காட்டுக்குள் சென்று இருப்பதையும் கண்டு பிடிக்கிறார் விஜயராகவன்.. உண்மையை போலிஸ் கண்டறிந்த விஷயம் தெரிந்து கிருபாகரன் தலைமறைவாகிறான். இன்ஸ்பெக்டர் சுந்தரம்தான் அவன் தலைமறைவாக இருக்க உதவுகிறான். இதை கண்டுபிடித்த குமரன் கிருபாகரனை பிடித்து விஜயராகவனிடம் ஒப்படைக்க முயலும் போது அங்கே வரும் சுந்தரம் கிருப்பாகரனையும் குமரனையும் சுட்டுக்கொல்கிறான். கிருபாகரனை குமரன் சுட்டுக்கொன்று விட்டு தன்னையும் கொல்ல முயன்றதால் தற்காப்புக்காக குமரனை கொன்றதாக வழக்கை திசை திருப்புகிறான் சுந்தரம்.

தலைமறைவாக இருக்கும் வெங்கட் மூலம் மூன்று பெண்களையும் கிருபாகரன், சுந்தரம் மற்றும் விஜயராகவனுடன் இருக்கும் நடராஜ் மூன்று பேரும் கற்பழித்த தகவலை சொல்கிறான். மானத்திற்கு பயத்து நடராஜ் தற்கொலை செய்து கொள்கிறான். விஜயராகவன் சுந்தரத்தை கைது செய்கிறான். அருகிலிருக்கும் போலிஸ் உதவியுடன் காட்டிற்குள் சென்று சத்யாவை மீட்டு வந்து காப்பாற்றி நீதியை நிலைநாட்டுகிறார்.

பாராட்டுக்குறியவை,:

ஒரு ரீமேக் கதையை தமிழுக்கேற்ப மாற்றம் செய்து ரசிக்கும்படி செய்துள்ளார் இயக்குனர். ஏராளமான காட்சி அமைப்புகளில் தன் முத்திரையை பதித்துள்ளார் அருண்ராஜா காமராஜ்.

சர்சைகளுக்கு அதிகம் வாய்ப்புள்ள ஒரு கதையுன் அடிப்படையை சர்ச்சைகள் ஏற்படாதவாறு காட்சி, வசனம் திரைக்கதை மூலம் நியாயப்படுத்தி கதையை நகர்த்தியுள்ளது பாராட்டுக்குறியது.

ஒரு குறிப்பிட்ட ஜாதியை மட்டும் மையப்படுத்தி சர்ச்சைக்கு வித்திடாமல் தலித் மற்றும் பிற ஜாதியென்று பொதுப்படையாக திரைக்கதையை நகர்த்தி ஜாதிய சர்ச்சையில் சிக்காமல் படத்தை கொடுத்துள்ளது பாராட்டுக்குறியது.

சமீப காலமாக பல திரைப்படங்கள் ஜாதிய சர்ச்சைகளுக்கு வித்திட்டு அந்த எதிர்ப்பு நிலையை வியாபாரயுக்தியாக்கி கல்லாகட்டும் சூழலில், அதில் சிக்காமல் நல்ல படத்தை கொடுத்துள்ளது வரவேற்புக்குறியது.

ஜாதிய அரசியலை மட்டுமே முதன்மை படுத்திய Article 15 படத்தை அப்படியே கொடுத்திருந்தால் சர்சைக்குறிய படமாக மாறியிருக்கும் என்பதை உணர்ந்து மிகப்பெரிய மாற்றத்துடன் கொடுத்துள்ளது சமார்த்தியம்.

மனிதன், நிமிர், சைக்கோ போல் இந்த படத்திலும் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியது மட்டுமின்று விஜயராகவன் கதாப்பாத்திரமாகவே மாறி பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் உதயநிதி.

இன்ஸ்பெக்டர் சுந்தரம் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள சுரேஷ் சக்கரவர்த்தி படத்தின் ஓட்டத்திற்கு தூணாக இருப்பதுமட்டுமின்றி ஒரு வித்தியாசமான வில்லத்தனத்தில் மிரட்டியுள்ளார்.

குமரன் கதாப்பாத்திரத்தில் ஆரி நன்றாகவே நடித்துள்ளார். இன்னும் கொஞ்சம் அவருக்கு காட்சிகளை கொடுத்து பயன்படுத்திக்கொண்டிருந்தால் நன்றாக இருக்கும்.

நெருடலானவை.:

கதாநாயகி கதாப்பத்திரம் சில மனதில் நிற்கும் வசனங்கள் பேசி நடித்திருந்தாலும் மனதில் ஒட்ட மறுக்கும் கதாப்பாத்திரமாகவே கரைந்து போகிறது.

இரண்டு பெண்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு அடிப்படையாக வழக்கை சித்தரிக்க பெண்களுக்குள்ளேயே இருக்கும் தவறான தொடர்பு என்ற அடிப்படையை பயன்படுத்தி ஆனவக்கொலை என்று சொல்ல முயல்வது என்ற அடிப்படை முரணாக இருக்கிறது. காரணம் இது வரை இந்த அடிப்படையிலான ஆணவக்கொலையை உணராத காரணத்தால்.

காலில் முள் காயங்களுடம் மற்றும் பசியுடனும் பலநாட்கள் காட்டிலிருக்கும் பெண் உயிரோடு இருக்க முடியுமா? என்ற சந்தேகம் எழுகிறது.

நெஞ்சுக்கு நீதி என்பது நீதித்துறை வழியாக தண்டனை பெற்று கொடுப்பது போன்று முடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதற்கு பதில் முதன்மை வில்லனை சுந்தரம் சுட்டு கொல்வது. நடராஜ் தற்கொலை செய்துகொள்வது, மீதமுள்ள சுந்தரம் மட்டும் கைது செய்யப்படுவதும் கொஞ்சம் நம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறுகிறது.

தொகுப்பு.:

மொத்தத்தில் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் பெரிய அளவு சர்ச்சைகளுக்கு வித்திடாமல் நெஞ்சத்தை நிறைக்கும் திரைப்படம்.

Movie Gallery

  • review

    Sobhita Dhulipala

  • review

    Aishwarya Rajesh

  • review

    Chandini Tamilarasan

  • review

    Aditi Balan

  • review

    Priyanka Arul Mohan

  • review

    Sai Dhanshika

  • review

    Manju Warrier

  • review

    Lavanya Tripathi

  • review

    Samantha

  • review

    Srushti Dange

  • review

    Remya Nambeesan

  • review

    Miya George

  • review

    Raashi Khanna

  • review

    Pooja Kumar

  • review

    Arundhati

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Web Designing Comapny

Jiojith Web Services

SEO Company in Chennai

We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.