விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் சார்பில் விஷ்ணு விஷால் தயாரித்துள்ள படம் F I R. மணு ஆனந்த் எழுதி இயக்கியுள்ளார். அஸ்வந்த் இசையமைத்துள்ளார். அருள் வின்சண்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசண்ணா G K படத்தை தொகுத்துள்ளார்.
F I R படத்தில் விஷ்ணு விஷால், இர்ஃபான் அஹமது கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கவுதம் வாசுதேவ் மேனன், அஜய் தீவன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ரெபா மோனிகா ஜான், அர்ச்சனா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மஞ்சிமா மோகன், பிரார்த்தனா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ரைசா வில்சன், அனிஷா குரேஷி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். பார்வதி T, பிரவீனா பேகம் கதாப்பாத்திரத்தில் இர்ஃபான் அஹமது தாயாக நடித்துள்ளார். R N R மனோகர், பெருமாள் வாசனை திரவிய ஃபேக்டரி உரிமையாளார் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், ரியாஸ் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் பலர் நடித்துள்ளனர்,
ஏராளமான பத்திரிக்கைகள் இஸ்லாமியர் மீது பொய் வழக்கு போடுவதை பற்றி படம் சொல்லியுள்ளதாக எழுதியுள்ளனர். ஒரு வேலை அது இந்த படத்தின் மீதான விளம்பர யுக்தியாக கூட இருக்கலாம். ஆனால் உண்மையான விமர்சனத்தை எந்த பத்திரிக்கைகளும் தெளிவாக சொல்லவில்லை. அந்த அடிப்படையில் தான் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதா என்றால் முற்றிலுமான பொய்யான அடிப்படைதான். ஆனால் பத்திரிக்கைகள் மதசாயல் அடிப்படையிலான விமர்சனப்பார்வை தருவது ஏன் என்பது கேள்விக்குறிய ஒன்று. உண்மையில் படத்தில் என்ன இருக்கிறது நேர்மறையான விமர்சன பார்வைக்குள் பார்ப்போம். கீழே கதையை படித்தால் உண்மை அடிப்படை அனைவருக்கும் புரியும். உண்மையில் படத்தின் கோணம் என்பது விஸ்வரூபம் படத்தின் அடிப்படையும் இதன் அடிப்படையும் ஒன்றுதான் என்பதே உண்மை.
கதைக்கரு.:
மத அடிப்படையில் தீவிரவாதம் செய்யும் உண்மை தீவிரவாதிகளை அவர்கள் கூடாரத்திற்குள்ளேயே சென்று அழிக்கும் நாயகனை பற்றிய கதை.
கதை.:
மொஹமது குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி தூக்கு தண்டனை நிறைவேற்ற காத்திருப்பவனை தேசிய புலனாய்வு நிறுவனத்தை சேர்ந்த ஊழியன் குணா சந்திக்கிறான். அப்போது இந்த குண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்டவன் அபுபெக்கர் அப்துல்லா என்றும் அவன் தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவன் என்றும் தெரிந்து கொள்கிறான். அது மட்டுமின்றி இலங்கையில் ஈஸ்டர் சண்டே அன்று வெடிகுண்டு வெடிக்கப்போவதையும் தெரிந்து கொள்கிறான்.
இர்ஃபான் அஹமது I I T ல் கெமிக்கல் இண்ஜீனியரிங் படிப்பில் தங்கப்பதக்கம் வென்றவன். அவன் தாய் பிரவீனா பேகம் காவல் துறையில் பணியாற்றுபவள். தன் காதலி அர்ச்சனா ஐயர் உருவத்தை படமாக வரைந்து தன் அறையில் மாட்டி வைத்திருப்பவன். அவனுடன் கல்லூரியில் ஒன்றாக படித்தவர் 8 ஆண்டுகளாக காதலித்து வருகிறான் இர்ஃபான் அஹமது. அவன் வீட்டருகில் வசித்து வருபவர் பிரார்த்தனா, வக்கீலின் ஜூனியர் வக்கீலாக பணியாற்றி வருகிறாள். இர்ஃபானின் சிறந்த தோழியாக இருக்கிறார்.
இர்ஃபான் வேலைக்கு முயற்சி செய்துகொண்டிருப்பவர். ஆனால் அவர் முஸ்லீம் என்ற அடிப்படையில் வேலை கிடைக்காமல் இருக்கிறார். பெருமாள் மற்றும் அவரது மகன் கார்த்திகேயன் நடத்தும் ஒரு சிறிய வாசனை திரவியம் தயாரிக்கும் கெமிக்கல் நிறுவனத்தில் பகுதி நேர பணியாளராக வேலை செய்கிறார். வேலை கிடைக்காத காரணத்தால் அங்கேயே முழு நேர பணியாளனாக வேலை செய்ய முடிவு செய்கிறான். பெருமாள் தன் நிறுவனத்தை பெரிய அளவு கொண்டு வர நினைப்பதாக சொல்கிறான். பெருமாள் மகன் கார்த்திகேயன் மிகப்பெரிய ஆர்டர் வாங்கியுள்ளதாக சொல்கிறான். அதன் நிதி உதவிக்காக இஸ்லாமிய மத போதகரான டாக்டர் ஆஷிஃபை சென்று சந்திக்குமாறு பெருமாள் சொல்கிறான்.
டாக்டர் ஆஷிஃப் தீவிரவாதத்தை வளர்க்கிறார் என்ற சந்தேகம் இருக்கிறது. அவரின் மகன் ரியாஸ். ஆஷிஃப் ரியாஸிடம் இங்கே பிரச்சனைகள் அதிகம் இருக்கிறது, நீ அமெரிக்காவிற்கு சென்று அங்கேயே செட்டிலாக சொல்கிறார்.
இர்ஃபான் தன் நண்பர்களுடன் நேரத்தை செலவிட பெங்களூர் செல்கிறான். அப்போது இந்திய தேசிய புலனாய்வு நிறுவனத்தின் எச்சரிக்கையை மீறி இலங்கையில் குண்டு வெடிக்கிறது.
தேசிய புலனாய்வு நிறுவன உயர் அதிகாரி அஜய் தீவன் கீழ் புலனாய்வை மேற்கொள்கின்றனர். டாக்டர் ஆஷிஃப்பிடமிருந்து இலங்கைக்கு பணம் சென்றிருப்பதை தெரிந்து கொள்கின்றனர். ஆனால் இதை அடிப்படையாக கொண்டு அவரை கைது செய்ய முடியாது. காரணம் அவரிடமிருந்து ஏராளமான தொண்டு நிறுவனங்களுக்கும் வியாபார முதலீடுகளுக்கும் கூட பணப்பரிவர்த்தனை நடக்கிறது. இதை தீவிரவாதத்திற்கான பணம் என்று நிரூபிக்க முடியாது என்று உணர்ந்து ஆஷிஃப்பின் அனைத்து நடவடிக்கையையும் கண்காணிக்க தொடங்குகின்றனர். தமிழக தேசிய புலனாய்வு நிறுவனத்தில் குணாவிற்கு கீழ் பணிபுரிபவள் அனிஷா குரேஷி.
கார்த்திகேயனும் இர்ஃபானும் பண உதவிக்காக கோயமுத்தூரில் உள்ள ஆஷிஃபை சந்திக்க செல்கின்றனர். அந்த பேருந்தில் பிரார்த்தனாவும் ஒரு வழக்கு சம்மந்தமாக கோயமுத்தூர் செல்கிறாள். இர்ஃபானிடம் அவன் காதலி அர்ச்சனாவை பற்றி விசாரிக்கிறாள். எப்படி உங்களுக்குள் காதல் வந்தது என்று கேட்கிறாள். அப்போது அர்ச்சனாதான் முதலில் தன் காதலை சொன்னதாகவும், இப்போது டில்லியில் இருப்பதாகவும் சொல்கிறான்.
கோயமுத்தூரில் ஆஷிஃபை சந்திக்கின்றனர் கார்திகேயனும் இர்ஃபானும். இர்ஃபானை கெமிக்கல் இஞ்ஜீனியர் என்று அறிமுகப்படுத்துகிறான் கார்த்திக். ஆஷிஃபிற்கு இர்ஃபானை பிடித்துப்போகிறது. ஆஷிஃப் சில கெமிக்கலை ஹைதராபாத்திற்கு டெலிவரி செய்ய உதவ சொல்கிறார். அப்போது ஜக்ரியா என்ற கெமிக்கல் இஞ்ஜீனியரும் ஆஷிஃபை சந்திக்க வருகிறான்.
புலனாய்வு அதிகாரி குணா, தான் இர்ஃபானை பின் தொடர்வதாகவும், அனிஷாவிடம் ஜக்கிரியாவை பின் தொடரவும் சொல்கிறான்.
இர்ஃபானை பின் தொடரும் குணா எதிர்பாராத சூழலில் ஹைதராபாத்தில் பின் தொடர முடியாமல் போகிறது. இர்ஃபான் கெமிக்கலை டெலிவரி செய்துவிட்டு விமான நிலையத்திற்கு வருகிறான். விமான நிலையத்தில் சோதனையின் போது தன் மொபைல் போனை தவறவிடுகிறான் இர்ஃபான். மொபைல் போன் தொலைந்ததை பற்றி சோதனை அதிகாரிகளிடம் சொல்கிறான். அவர்கள் விமான காவல் நிலைய அதிகாரியிடம் புகார் கொடுக்க சொல்கின்றனர். அங்கே புகார் கொடுக்க செல்கிறான் இர்ஃபான் ஆனால் விமானம் கிளம்ப தயாரான காரணத்தால் புகார் கொடுக்காமல் செல்கிறான். விமானம் கிளம்பதயாராகி விட்ட காரணத்தால் அதிகாரிகள் தடுத்து நிறுத்துகின்றனர், அப்போது தன் மொபைல் போன் தவறிய காரணத்தால் தான் வரமுடியவில்லை என்று சொல்கிறான். ஆனால் அதிகாரிகள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கின்றனர். கோபத்தில் நான் என்ன தீவிரவாதியா இங்கே குண்டு வைக்கவா வந்துள்ளேன் என்று கேட்கிறான். இந்த வார்த்தையால் சந்தேகப்படும் அதிகாரிகள் அவனை விசாரிக்கின்றனர். ஆனால் அவனை பின் தொடர்ந்து முழுமையான ஆதாரத்தை கண்டுபிடித்தால்தான் அவனை குற்றவாளி என்று நிரூபிக்க முடியும் என்று தேசிய புலானாய்விலிருந்து தகவல் வந்த காரணத்தால் விடுவிக்கின்றனர். விமானத்தில் சென்னை திரும்புகிறான். ஆனால் விமான நிலையத்தின் அருகே குண்டு வெடிக்கின்றது. பலர் இறந்து போகின்றனர்.
இர்ஃபான்தான் அபுபெக்கர் என்ற முடிவுக்கு வருகின்றனர் தேசிய புலனாய்வு அதிகாரிகள். அவனை கைது செய்து விசாரிக்கின்றனர். அடித்து துன்புறுத்தி விசாரிக்கின்றனர். ஆனால் தான் தீவிரவாதி இல்லை என்று உறுதியாக இருக்கிறான் இர்ஃபான். மீடியாக்கள் அவனை அபுபெக்கர் என்ற தீவிரவாதி என்கின்றன. அவன் தாயின் வேலையும் பறிக்கப்படுகிறது. பொது மக்களால் அவமானப்படுத்தப்படுகிறாள். பிரார்த்தனா இர்ஃபானின் தாய்க்கு அடைக்கலம் கொடுக்கிறாள். தேசிய புலனாய்வு அலுவலகத்திற்கு இர்ஃபானின் தாயும் பிரார்த்தனாவும் வருகிறார்கள், தன் மகன் தவறானவன் இல்லை என்று வாதிடுகிறாள். அவனை பார்க்க வேண்டும் என்று சொல்கின்றனர். ஆனால் தீவிரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதால் சந்திக்க முடியாது என்று அனிஷா குரேஷி சொல்கிறாள். அது மட்டுமின்றி அவர்களை அவமானப்படுத்துகிறாள். இர்ஃபானின் தாய்க்கு உடல் நிலை மோசமாகி கீழே விழுகிறாள்.
அனிஷா இர்ஃபானிடம் உன் தாய்க்கு உடல்நிலை மோசமாக இருக்கிறது. நீ உண்மையை சொன்னால்தான் உன் தாயை காப்பாற்றமுடியும் என்று சொல்கின்றனர். தான்தான் அபுபெக்கர் என்று தன் தாயை காப்பாற்ற பொய் சொல்கிறான். அவனிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கிய காரணத்தால் அவனை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து செல்லும் வழியில் அனைவரையும் அடித்து போட்டுவிட்டு தப்பிக்கிறான் இர்ஃபான்.
மருத்துவமனைக்கு செல்கின்றான் இர்ஃபான். அங்கே இருக்கும் பிரார்த்தனாவை சந்தித்து தன் தாயை பார்க்க வேண்டுமென்று சொல்கிறான். ஆனால் போலிஸ் இருக்கிறது என்று சொல்கிறாள். நான் மொபைலில் பேச வேண்டும் I C U வில் இருக்கும் அம்மாவிடம் மொபைல் போனை கொடுக்க சொல்கிறான். மொபைலில் பேசிக்கொண்டிருக்கும் போது நான் உன்னை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது என்று சொல்கிறாள் இர்ஃபானின் தாய். மொபைலில் பேசிக்கொண்டிருக்கும் போதே இறந்து போகிறாள். தன் தாயை பார்க்க செல்லும் போது அங்கிருக்கும் போலிஸ் அதிகாரிகளுக்கும் இர்ஃபானுக்குமிடையே சண்டை நடக்கிறது, அங்கிருந்து தப்பித்து ஒரு சர்ச் வாசலில் அமர்ந்திருக்கிறான் இர்ஃபான்.
பிரார்த்தனா இர்ஃபானின் நண்பனிடம் இலங்கையில் குண்டு வெடித்த போது நீங்கள் பெங்களூருக்கு தானே சென்றீர்கள் அதை நிரூபித்தால் இர்ஃபானை குற்றவாளி இல்லை என்று நிரூபிக்கலாம் என்று சொல்கிறாள். ஆனால் இர்ஃபான் பெங்களூருக்கு வரவில்லை. தன் காதலி அர்ச்சனாவை பார்க்க டில்லிக்கு சென்றுவிட்டான் என்று சொல்கின்றனர். அர்ச்சனாவின் ஃபோன் நம்பரை கேட்கிறாள். ஆனால் அர்ச்சனாவை இதுவரை பார்த்ததில்லை என்றும் அவள் ஃபோன் நம்பர் இர்ஃபானை தவிர யாருக்கும் தெரியாது என்றும் சொல்கிறான். நாம் I I T க்கு சென்றால் அர்ச்சனா பற்றிய விவரம் தெரியும் என்று சொல்கிறான் இர்ஃபானின் நண்பன். I I T ல் விசாரித்த போது அர்ச்சனா என்று யாருமே இங்கே படிக்கவில்லை என்று சொல்கின்றனர். பிரார்த்தனாவும் இர்ஃபான் சொல்லிய அனைத்தும் பொய். இர்ஃபான் தான் அபுபெக்கர் என்று சொல்கிறாள்.
அதே நேரம் இலக்கையில் குண்டு வெடித்த போது இர்ஃபானும் இலங்கையில் தான் இருந்ததாக கண்டுபிடிக்கின்றனர்.
சர்ச்சில் அமர்ந்திருக்கும் இர்ஃபானை டாக்டர் ஆஷிஃப் மகன் ரியாஸ் சந்திக்கின்றான். அவனை அழைத்துக்கொண்டு அம்பத்தூரில் இருக்கும் ஒரு கெமிக்கல் ஃபேக்டரிக்கு அழைத்து செல்கிறான். அவன்தான் அபுபெக்கர் என்று நினைக்கிறான். என்னை தீவிரவாதியாக மாற்றிய இந்த சமுதாயத்தை அழிக்க வேண்டுமென்று சொல்கிறான் இர்ஃபான். ரியாஸ் அதற்கு கெமிக்கல் பாமை தயாரிக்க வேண்டுமென்று சொல்கிறான். இர்ஃபானும் கெமிக்கல் பாமை தயாரிக்கிறான்.
இதற்கிடையே அனிஷா டாக்டர் ஆஷிஃபை பின் தொடர்ந்து போகிறாள். அவர் அம்பத்தூர் கெமிக்கல் ஃபேக்டரிக்குள் செல்வதை பார்க்கிறாள். தேசிய புலனாய்வு நிறுவனமும் இர்ஃபான் கெமிக்கல் பேக்டரிக்குள் இருப்பதை ஹேக்கர் மூலம் கண்டுபிடிக்கின்றனர். மிகப்பெரிய கெமிக்கல் பாம் போடப்போவதை தெரிந்து கொள்கிறார்கள். அந்த பகுதி மக்களை வெளியேற்ற உத்தரவிடுகின்றனர், இதனிடைய் அஜய் தீவான் பிரதமரை சந்தித்து அந்த கெமிக்கல் ஃபேக்டரியை விமானம் மூலம் அழிக்க உத்தரவை பெறுகிறார். அப்போது பிரதமர் நீ எப்போதும் இரண்டு பிளான் வைத்திருப்பாயே பிளான் B என்ன என்று கேட்கிறார்.
டாக்டர் ஆஷிஃப் தன் மகன் ரியாஸ் தீவிரவாதி என்று தெரிந்து அதிர்ச்சியாகிறார். கெமிக்கல் பாமை சோதனையாக ஆஷிஃபை சோதனை செய்து கொல்கிறான் ரியாஸ். அப்போது ஆஷிஃபை பின் தொடர்ந்த அனிஷா கெமிக்கல் ஃபேக்டரில் இருப்பவர்களை சுட்டு கொல்கிறாள். ரியாஸையும், இர்ஃபானை துப்பாக்கி முனையில் வைத்திருக்கிறாள். ஆனால் பின் புறமிருந்து யாரோ அவளை கத்தியால் குத்துகின்றனர். அனிஷா கீழே சரிகிறாள். கத்தியுடன் பெருமாள் மகன் கார்த்திகேயன் நிற்கிறான். தான் சிரியாவில் இருந்த போது இந்தியனாக வாழ கஷ்ட்டப்பட்டதாகவும். பின் முஸ்லீமாக மாறியதாகவும் தீவிர முஸ்லீமாக மாரி I S i S மூலம் அபுபெக்கராக உருவானதாகவும் சொல்கிறான். ரியாஸிடம் சிலிண்டரை எடுத்து சென்று வெடிக்க செய்யுமாறு சொல்கிறான். அதே போல் உடனடியாக கேஸை ரீலீஸ் செய்கிறான். இர்ஃபானையும் அடியாட்களிடம் கொல்ல சொல்கிறான். அப்போது அங்கே வருகிறாள் இர்ஃபானின் கற்பனை கதாப்பாத்திரமான அர்ச்சனா. அவள் அங்கிருக்கும் ஆட்களையும் ரியாஸையும் சுட்டு கொல்கிறாள். ஆனால் கேஸை திறந்து விடுகிறான் கார்த்திகேயன் எனும் அபுபெக்கர். வாயு வெளியெறுகிறது. இர்ஃபான் அபுபெக்கரை கொல்கிறான். லாப்டாப்பை அர்சனாவிடம் கொடுத்து இதை அஜய் தீவானிடம் ஒப்படைக்குமாறு சொல்கிறான். கேஸ் கசியாமல் இருக்க கேஸ் வெளியேறும் சிம்னியை அடைக்கிறான். விமானம் அந்த இடத்தை அழிக்கிறது. இர்ஃபானுடன் சேர்ந்து அந்த பகுதியே வெடித்து சிதறுகின்றது.
அஜய் தீவான் தீவிரவாதிகளின் கூடாரத்திற்குள் நுழைய இர்ஃபானையும் தீவிரவாதியாக உருவாக்கியது தேசிய புலனாய்வுத்துறை. உண்மையில் இர்ஃபான் தேசிய புலனாய்வு நிறுவனத்தை சேர்ந்தவர். அவரை தீவிரவாதியாக உருவாக்க ஏராளமான பின்னணிகளை உருவாக்கியது தேசிய புலனாய்வு அமைப்பு. ஹைதராபாத் குண்டு வெடிப்பு உருவாக்கப்பட்டது. I I T கெமிக்கல் இண்ஜீனியர் என்பது உருவாக்கப்பட்டவை. அர்ச்சனா கதாப்பாத்திரமும் அதே துறையில் பணியாற்றிய அர்சனாவை அடிப்படையாக கொண்டு உருவாக்கிய பாத்திரம். இவை அனைத்தும் சர்வதேச தீவிரவாதியான அபுபெக்கரை அழிக்க போடப்பட்ட திட்டங்கள் தான்.
பாராட்டுக்குறியவை.:
விருதுகளுக்கோ பதவிக்கோ பணத்திற்கோ ஆசைப்படாத தேசப்பற்றுக்கொண்ட இந்திய நிறுவனங்கள் தேசிய புலானாய்வு நிறுவனம். மற்றும் ரா போன்ற அமைப்புகளின் பின்னணியை கொண்டு கண்ணுக்கு தெரியாமல் நாட்டை பாதுகாக்கும் அடிப்படை கொண்டு விறுவிறுப்பாக படத்தை கொடுத்திருக்கின்றனர்.
இர்ஃபான் கதாப்பாத்ரத்தில் கச்சிதமாக பொருந்தியுள்ளார் விஷ்ணு விஷால் .
அனிஷா குரேஷி கதாப்பாத்திரத்தில் நன்றாக நடித்துள்ளார் ரைசா வில்சன்.
முதலில் காதல் காட்சி இறுதி ஆக்க்ஷன் காட்சிகளில் சிறிது நேரமே வந்தாலும் அருமையாக நடித்துள்ளார் ரெபா மோனிகா ஜான்.
இர்ஃபானின் தாய் கதாப்பாத்திரத்தில் பார்வதி நன்றாக நடித்துள்ளார்.
அஜய் தீவான் கதாப்பாத்திரத்தில் கவுதம் மேனன் நன்றாக நடித்துள்ளார்.
ரட்சகன் படத்திற்கு பிறகு தனக்கு பொருத்தமான கதையை தேர்ந்தெடுத்து தயாரித்துள்ளார் விஷ்ணு விஷால்.
குணாவாக தேசிய புலனாய்வு நிறுவன ஊழியராக நடித்தவர் அருமையாக நடித்திருந்தார்.
பின்னனி இசையும் ஒளிப்பதிவும் படத்தை பிரமாண்டப்படுத்தியுள்ளது.
நெருடலானவை.:
இர்ஃபானின் கதாப்பாத்திரம் அனைத்தும் அபுபெக்கராக உருவகப்படுத்த அமைக்கப்பட்டதாக காட்டுகின்றனர். அவர் கெமிக்கல் இண்ஜீனியர் என்பது சித்தரிக்கப்பட்டவையாக உணர முடிகிறது. ஆனால் அவர் இறுதியில் கெமிக்கல் பாமை உருவாக்குகிறார் என்ற காட்சியமைப்பு சற்று நெருடலாக உள்ளது.
கெமிக்கல் வெளியேறினால் பாதிப்பு ஏற்படும் என்பதற்காக சிம்னியை இறுதி காட்சியில் அடைக்கிறார் இர்ஃபான். ஆனால் விமானம் குண்டு போட்டு அந்த இடத்தையே அழிப்பதாக காட்சியமைக்கப்பட்டுள்ளது, அப்படி தகர்த்தால் கெமிக்கல் வெளியில் பரவாதா? லாஜிக்கே இல்லாமல் இருக்கிறது இந்த அடிப்படை.
இர்ஃபானின் கதாப்பாத்திரம் தேசிய புலானாய்வு நிறுவனத்தின் ஏஜெண்ட். ஆனால் பல இடங்களில் அதற்கான காட்சிகளை இறுதியில் காட்டினாலும். இறுதி காட்சியையும் முந்தைய காட்சிகளையும் ஒப்பிடும் போது அடிப்படை நகர்வில் ஏதோ நிறைவில்லாதது போல் உள்ளது.
பிரார்த்தனா கதாப்பாத்திரம் ஏதோ படம் முழுக்க வந்தாலும் அந்த கதாப்பாத்திரத்தில் பெரிய அளவு அழுத்தமில்லை.
தேசிய புலனாய்வில் பணிபுரியும் குணாவிற்கு ஆங்கிலம் சரிவர பேசத்தெரியாமல் இருப்பது போன்ற காட்சி நெருடலானவை.
தொகுப்பு.:
இந்த அடிப்படையிலான படங்கள் ஹாலிவுட்டில் ஏராளமாக வந்துள்ளது. தமிழிலும் பல படங்கள் வந்துள்ளது. குறிப்பாக இந்த படத்தை பார்த்ததும் விஸ்வரூபம் படம் நினைவுக்கு வருவதை மறுக்க முடியாது. கண்ணுக்கு தெரியாமல் இது போல் ஏராளமான மனிதர்கள் நாட்டின் நலனுக்காக உழைத்துக் கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கான ஒரு மறைமுக அங்கீகாரம் கொடுக்கும் படம் இது. மொத்தத்தில் F I R திரைப்படத்தை விறுவிறுப்பாகவும் ரசிக்கும் வகையிலும் கொடுத்துள்ளனர்.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.