சொர்க்கவாசல் திரைவிமர்சனம்
ஸ்வைப் ரைட் ஸ்டூடியோஸ் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் சார்பில் சித்தார்த் ராவ் மற்றும் பல்லவி சிங் தயாரித்துள்ள படம் சொர்க்கவாசல். இயக்குனர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக இருந்த சித்தார்த் விஸ்வநாதன் இயக்கியுள்ள முதல் படம் இது. கிறிஸ்டோ சேவியர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி பார்த்தி கதாப்பாத்திரத்திலும், செல்வராகவன் சிகா கதாப்பாத்திரத்திலும், நட்ராஜ் சுப்ரமணியன் இஸ்மாயில் கதாப்பாத்திரத்திலும், கருணாஸ் கட்டபொம்மன் கதாப்பாத்திரத்திலும், சானியா ஐயப்பன் ரேவதி கதாப்பாத்திரத்திலும், பாலாஜி சக்திவேல் பஷீர் கதாப்பாத்திரதிலும் நடித்துள்ளனர். இவர்களுடன் ரவிராகவேந்திரா, சந்தானபாரதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதைக்கரு: சொர்க்கத்தில் அடிமையாக இருப்பது சிறந்ததா. இல்லை நரகத்திற்கு ராஜாவாக இருப்பது சிறந்ததா என்ற கதைக்கருவை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது இப்படம். 1999 ல் ரவுடி பாக்ஸர் மரணத்திற்கு பின் மத்திய சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தை கதைக்களமாக கொண்டு இத்திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர்.
கதை: சிறைக்குள்ளேயே ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கி வைத்துள்ளான் ரவுடி சிகா. அங்கே இருக்கும் வெளிநாட்டு கைதி ஹென்றிக் சூழ்நிலை காரணமாக சிறையில் இருக்கிறார். அவர் தீவிர கிறித்தவ மதத்தை பின்பற்றுபவன். அவன் நட்பின் காரணமாக சிகா ரவுடி தொழிலை விட முயல்கிறான். சிறைக்குள் இருக்கும் அவனுக்கு வெளியில் மணல் கொள்ளையை விசாரிக்கும் கலெக்டர் சண்முகத்தை கொலை செய்ய அரசியல்வாதிகள் சொல்கின்றனர். சாலையோரத்தில் வியாபாரம் செய்யும் பார்த்தி ஹோட்டல் வைக்க வங்கி கடன் பெற சண்முகம் உதவுகின்றார். அந்த பகுதி முழுவதிலும் சண்முகத்திற்கு நல்ல பெயர் உள்ளது. எதிர்பாராமல் சண்முகம் கொலைவழக்கில் பார்த்தி கொலையாளியாக சித்தரிக்கப்பட்டு சிறைக்கு செல்கின்றான். அவன் சிறைக்கு செல்ல காரணம் சிகா என்ற அடிப்படையில் அவனால் மட்டுமே தான் நிரபராதி என்று நிரூபிக்க முடியும் என்று நினைக்கிறான். சிறைக்குள் சென்ற பிறகுதான் அது அவ்வளவு எளிதான ஒன்றல்ல என்று நினைக்கிறான். அந்த நேரத்தில் திகார் சிறையிலிருந்து மத்திய சிறைக்கு மாற்றலாகி ஒரு அதிகாரி வருகிறார். சிறையிலிருக்கும் ரவுடி ராஜ்ஜியத்தை ஒழித்து சிறையை தன் கட்டுப்பாட்டில் எடுக்க நினைக்கிறார். பார்த்தி நிரபாராதி என்று நிரூபித்தாரா? போலிஸ் அதிகாரி சிறையை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர எடுத்த நடவடிக்கை எப்படி கலவரமாக மாறியது? என்பதை சொல்லியிருக்கிறது சொர்க்க வாசல்.
பாராட்டுக்குறியது:
ஏராளமான கதைகள் சிறைச்சாலையை கதைக்களமாக கொண்டு வந்திருந்தாலும். இப்படத்திலும் அதை சிறப்பாக கையாண்டுள்ளார் இயக்குனர்.
ஆர்.ஜே.பாலாஜி பார்த்தி கதாப்பாத்திரத்தில். அப்பாவியான கைதி தன்னை நிரபாரதி என்று நிரூபிக்க ரவுடிகள் கூட்டத்தில் படும் கஷ்டங்கள் போன்றவற்றில் சிறப்பாக நடித்துள்ளார். காமெடி நாயகனாக பார்த்த ஆர்.ஜே.பாலாஜி காமெடி பின்புலமே இல்லாமல் கதையின் வித்தியாசமான கதாப்பாத்திரதில் சரியாக பொருந்தியுள்ளார்.
சிகா கதாப்பாத்திரத்தில் செல்வராகவன் அருமையாக நடித்துள்ளார்,
சிறைக்காட்சிகளின் பின்புலத்தில் நடக்கும் கதையை அருமையாக கண்முன்னே கொண்டு வந்துள்ளனர் கலை இயக்குனரும். ஒளிப்பதிவாளரும்.
நெருடலானவை:
திரைக்கதையை வித்தியாசமாக கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விசாரணை கமிஷனை அடிப்படையாக கொண்டு கதையை பின்னோக்கி விவரிக்கும் அடிப்படையில் உருவாக்கியது படத்தில் விறுவிறுப்பை குறைக்கிறது.
ஒரு கதையில் தொடக்கம் மற்றும் முடிவு என்பது முக்கியமான ஒன்று. அதிலும் படத்தின் முடிவு விறுவிறுப்பையோ அல்லது தாக்கத்தையோ ஏற்படுத்தவில்லை.
சிகா கதாப்பாத்திரத்தில் நல்லவராக மாறினாரா? இல்லையா என்பது தெளிவாக இல்லை? தான் மட்டும் நல்லவராக மாறினால் ஒரு தலைவனுக்கு போதுமானதா? இந்த கதாப்பாத்திரத்தில் இன்னும் அழுத்தமாக கொடுத்திருக்கலாம்.
படம் முடிந்து வெளியில் வரும் போது படம் நம் நினைவில் நிற்க மறுக்கிறது.
தொகுப்பு: சொர்க்கவாசல் திரைப்படம் சொர்க்கத்திற்கும் நரகத்திற்க்கும் இடையில் நம்மை நிற்க வைக்கிறது.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.