Join/Follow with Our Social Media Links

மேதகு பட திரை விமர்சனம்

மேதகு பட திரை விமர்சனம்


தமிழீழத் திரைகளம் தயாரித்துள்ள திரைப்படம். “மேதகு”. கிட்டு கதை எழுதி இயக்கியுள்ளார். அ.பிரவின் குமார் இசையமைத்துள்ளார். ரியாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரகு ஷ்ரவன் குமார் ஒலிப்பதிவு செய்துள்ளார். சி மு இளங்கோவன் படத்தை தொகுத்துள்ளார். குட்டிமணி, ஈஸ்வர் பாஷா, ஆனந்தன், விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர். BSvalue ஓடிடி தளத்தில் இந்த திரைப்படம் 25.06.2021 முதல் ஒளிபரப்பாகின்றது.

கதை கரு:

இது ஒரு மனிதனின் வாழ்கை வரலாற்று அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம்.. ஈழத்தமிழர்களின் உரிமைக்காக போராடிய வேலுப்பிள்ளை பிரபாகரன் பற்றிய வாழ்கை தொகுப்பாக என்று சொல்வதை வாழ்கை குறிப்பாக, இல்லை போராட்ட தொடக்கமாக இந்த கதை உருவாகியிருக்கின்றது.

கதை:

இலங்கையில் இன்வெறி போராட்டம் புத்தபிட்சுக்களின் ஆதரவுடன் ஆட்சியில் இருக்கும் பண்டாரநாயக்க. அவர்களின் சிங்கள நாடு சிங்களவனுக்கே என்ற கோட்பாடு. தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறை உச்சத்தில் இருக்கும் சூழலில் வேலுப்பிள்ளை மற்றும் பார்வதி தம்பதிக்கு கடைக்குட்டியாக பிறக்கின்றான் பிராபகரன். அவரு முன் ஒரு சகோதரன் மற்றும் இரண்டு சகோதரிகள் இருக்கின்றனர்.

தமிழர்கள் உரிமைக்காக அஹிம்சைவழியில் போராடுபவர் இலங்கை தமிழரசு கட்சி மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான செல்வநாயகம். இவரது போராட்டம் மற்றும் தொடர் வலியுறுத்தல் காரணமாக வடகிழக்கு மகாணங்களில் தமிழ் தான் ஆட்சி மொழியாக இருக்கும் என்ற ஒப்பந்த பண்டாரநாயக்க மற்றும் செல்வநாயகத்திற்குமிடையே 1957 ல் நிறைவேற்றப்பட்டது. இதனால் கோபமுற்ற சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் மோதல் வழுத்தது கோவில் குருக்கள், குழந்தைகள் என்று ஏராளமானவர்கள். இந்த இணவெறி போரட்டத்தில் கொல்லப்படுகின்றனர். தமிழர்கள் கடைகள் அடித்து நொருக்கப்பட்டது. தமிழ் எழுத்துக்களை தார்பூசி அழித்தனர். இதனால் பாதிக்கப்பட்ட பெண் வேலுப்பிள்ளை வீட்டுக்கு வருகின்றாள். அங்கே சிறுவனாய் இருந்த பிரபாகரன் அவர்கள் நம்மை தாக்க வரும் போது ஏன் எதிர்த்து தாக்கவில்லை? என்று கேட்கின்றான்.

அதே நேரத்தில் புத்த பிட்சுக்களுக்கு அவர்கள் ஆதாரவால் ஆட்சிக்கு வந்த பண்டாரநாயக்க அரசியல் காரணங்களுக்காக தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படுவதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இனி யார் ஆட்சிக்கட்டில் அமர்ந்தாலும் அவர்களுக்கு பின்னால் தான் இருக்கவேண்டும். அவர்கள் சொல்வதைத்தான் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றனர். அதனால் ஒரு புத்த பிட்சுவை வைத்து பண்டாரநாயக்கவை கொலை செய்கின்றனர். அதன் பின் அவரது மணைவி சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதமராக பொறுப்பேற்கின்றார்.

தமிழின உரிமைக்கான போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்கின்றனர். குறிப்பாக அஹிம்சை வழியிலான போராட்டத்தால் பெரிய அளவு பயனில்லை. என தீவிர போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்கின்றனர். அதை குட்டிமணி மற்றும் தங்க துரை முன்னேடுக்கின்றனர். அதில் பிராபகரனும் தன்னை இணைத்துக்கொள்கின்றான். மதிவாணன் ஆயுதம் பற்றி அவனுக்கு சொல்லி கொடுக்கின்றார்.

இந்த நேரத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்க உயர்கல்வியில் தமிழர்கள் உரிமையை பறிக்கும் சட்டத்தை அமல்படுத்துகின்றார். அது தமிழ் மாணவர்களிடையே பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்துகின்றது.

அந்த நேரத்தில் ஜாஃப்னாவில் உலகத்தமிழர் மாநாட்டை நடத்த திட்டமிடுகின்றனர். இந்த மாநாடு நடக்கக்கூடாது என்பது சிறிமாவோ பண்டாரநாயக்க அரசு உறுதியாக இருக்கின்றது. ஜாஃப்னாவில் மேயராக இருக்கும் இலங்கஈ அரசுக்கு ஆதரவாக இருக்கும் தமிழ் துரோகி ஆல்ஃப்ரட் துரையப்பா மூலம் தடையை ஏற்படுத்த முயல்கின்றது இலங்கை அரசு. ஆனால் கோர்ட் மூலம் அணுமதி வாங்கி ஜாஃப்னாவில் உலக தமிழ்மாநாட்டை நடத்துகின்றனர்.

ஆல்ஃப்ரட் துரையப்பா துணை போலிஸ் சூப்பிரண்டெண்ட் சந்திரசேகரா உதவியுடன் பெரிய கலவரத்தை உலகத்தமிழ் மாநாட்டில் உருவாக்குகின்றான். அதில் 9 தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். 100 மேற்பட்டோர் காயமடைகின்றனர்.

இதனால் மனமுடைந்த பிரபாகரன் குழுவினர். தமிழராக இருந்து துரோகம் செய்த ஆல்ஃப்ரட் துரையப்பாவை கொலை செய்ய திட்டமிடுகின்றனர். முதல் முயற்சிகாக பொன்.சிவகுமாரன் கொலைமுயற்சியில் தோற்று காவல்துறை பிடிக்க வரும்போது சயணடை அணிந்து தற்கொலை செய்து கொள்கின்றான்.

பின் பிராபகரனே நேரடியாக தன் குழுவுடன் சேர்ந்து துரையப்பாவை கொலை செய்ய திட்டமிடுகின்றான். துரையப்பா வாரந்தோறூம் ஞாயிற்று கிழமை பெருமாள் கோவிலுக்கு சாமி கும்பிட வரும்போது கொல்ல திட்டம் தீட்டி கொல்கின்றான். பின் அங்கே TNT (Tamil New Tigger) என்ற துண்டு பிரசுரங்களை வீசி செல்கின்றனர்.

விடுதலை புலி தலைவர் பிராபகரன் முதல் கொலையுடன் “மேதகு” நிறைவு பெருகின்றது.

பாராட்டுக்குறியது:

ஒரு தலைவன், ஒரு போராளியின் அறிமுகத்தை இயக்குனர் அழகாக சொல்லியுள்ளார்.

எந்தவித சர்ச்சைக்குறிய பகுதியையும் சிறிய அளவிற்கு கூட பயன்படுத்தாமல் திரைக்கதை உருவாக்கியுள்ளார்

இனவெறியை அழகாக சொல்லியுள்ளார். பலருக்கு இலங்கையின் நடைபெற்ற போரட்டங்களின் அடிப்படைகள் தெரியாமல் இருக்குகின்றது. அதனை கோடிட்டு காட்டியுள்ளார்.

பிரபாகரனாக நடித்திருப்பவர்கள் தனது கோபத்தினை முகப்பாவத்தின் உணர்வுகளில் வெளிப்படுத்தியிருப்பது அருமை.

வேலுப்பிள்ளையாக நடித்திருப்பவரின் நடிப்பு மிகவும் அருமை. சராசரி தந்தையின் மன உணர்வுகளை அழகான நடிப்புதிறனால் வெளிப்படுத்தியிருக்கின்றார்.

நெருடலானவை:

படம் தொடங்கும் முன் இந்த படத்தின் மூலம் எழும் சர்ச்சைகள், கேள்விகள் மற்றும் வழக்குகளுக்கும் படக்க்குழுவினரே பொறுப்பு என்ற வாசகம் எதற்கு போடுகின்றனர் என்று தெரியவில்லை. காரணம் இந்த பகுதி ஒரு நாயகன் உருவாகின்றான் என்ற அடிப்படையில் தான் உள்ளது. ஒரு வேலை சில விஷமக்காரர்களின் எண்ணம் இதிலும் குறைகண்டு பிடித்து அரசியல் செய்வார்கள் என்று நினைத்திருக்கலாம் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்.

உரிமை என்பது ஒற்றை வார்த்தை அல்ல.. அதில் ஏராளமான அர்த்தங்கள் புதைந்துள்ளது. ஒரு உரிமையை அழுத்தம் திருத்தமாக சொல்ல வேண்டுமென்றால் உரிமையை பறித்தவன் கோணத்தில் உள்ள உரிமையைவிட உரிமையை மீட்க போராடுபவனிடன் இருக்கும் வலிமையை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம்.. உதாரணத்திற்கு ஒரு நாயகனை பற்றி சொல்ல அவனுக்கு இணையான எதிராளியின் வலிமையின் அழுத்தத்தை உணர்த்த வேண்டும்.

ஒரு நாயகனின் முழுவரலாறாக எதிர்பார்த்த சூழலில் அப்படி இல்லாமல் ஒரு அறிமுகமாக இருக்கின்றது. ஆனால் முழுவரலாறு எடுக்க திரைப்படமாக எடுக்க முடியாது. வெப் சீரிஸாக தான் எடுக்க முடியும் அந்த அடிப்படையை உணர்ந்தே இயக்குனர். நாயகன் உருவாகும் அடிப்படையை மட்டும் கொடுத்துள்ளார் என்றே கருத வேண்டும்.

ஜாஃப்னா கலவரத்தின் பாதிப்பை இன்னும் அழுத்தமாக பதிவு செய்திருக்கலாம். உதாரணத்திற்கு அந்த கலவரம் சார்ந்த கமிஷன் அறிக்கைகள் கலவரம் சார்ந்த இலங்கை அரசின் நிலைப்பாடு, பிற நாடுகளின் நிலைப்பாடுகள் போன்றவைகள்

தொகுப்பு:

ஒரு நாயகனின் ஆரம்ப கால வாழ்கையை பதிவு செய்ய எடுத்துள்ள முயற்சிகள் பாராட்டுக்குறியது. ஒரு வெப்சீரிஸாக எடுக்க வேண்டிய ஒரு அடிப்படையை ஒரு திரைப்படமாக எடுக்கும் போது எதிர்பார்க்கும் அனைத்தையும் ஒரு கதாசிரியரால், இயக்குனாரால் கொடுக்க முடியாது. ஆனால் சொல்ல வந்த கருத்தை நாயகனின் கோணத்தில் சரியாக கொடுத்திருக்கின்றார். “மேதகு” மேன்மை

BSvalue ஓடிடி தளத்தில் “மேதகு”  திரைப்படம் 25.06.2021 முதல் ஒளிபரப்பாகின்றது.

Movie Gallery

  • review

    Saiyami Kher

  • review

    Aishwarya Lekshmi

  • review

    Kushboo

  • review

    Huma Qureshi

  • review

    Dimple Hayathi

  • review

    Anagha

  • review

    Kalyani Priyadarshan

  • review

    Regina Cassandra

  • review

    Nivetha Thomas

  • review

    Raiza Wilson

  • review

    Meera Mithun

  • review

    Subiksha

  • review

    Ananya

  • review

    Mirnalini Ravi

  • review

    Anushka

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Web Designing Comapny

Jiojith Web Services

SEO Company in Chennai

We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.