Join/Follow with Our Social Media Links

விஷ்ணுவர்த்தன் இயக்கும் கார்கில் நாயகன் கேப்டன் விக்ரம் பத்ரா வாழ்கை வரலாற்றுப்படம்

Article by : Admin on 26-07-2021

அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் விஷ்ணுவர்த்தன் என்கிற விஷ்ணு) அதைத்தொடர்ந்து சத்திரியன், இருவர் படங்களில் நடித்திருந்த விஷ்ணு. சந்தோஷ் சிவன் எழுதி இயக்கிய தி டெரரிஸ்ட் படத்தில் இளம் தீவிரவாதி தியாகுவாக நடித்திருந்தார். இசை மற்றும் யட்சன் படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடித்திருந்தார்.

தமிழில் 2003 =ல் வெளியான குறும்பு தமிழ் படத்தின் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைத்தார். அதை தொடர்ந்து விஷ்ணுவர்த்தன் இயக்கிய அறிந்து அறியாமலும் மிகப்பெரிய வெற்றியை மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து பட்டியல் திரைப்படத்தை இயக்கினார் அது வெற்றிப்படமாக அனைவரும் உற்று நோக்கும் இயக்குனரனார். தமிழ் திரையுலகில்  உச்சத்தில் இருக்கும் அல்டிமேட் ஸ்டார் அஜீத் நடித்த பில்லா படத்டதை இயக்கும் வாய்ப்பை பெற்றார். அது மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. பில்லாவை தொடர்ந்து இவர் இயக்கிய சர்வம் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நிரவ் ஷா ஒளிப்பதிவின் பிரமாண்டம் அனைவராலும் பாராட்டப்பட்ட ஒன்று. அதேபோல் யுவன் சங்கர் ராஜா பின்னனி இசையும் பாராட்டப்பட்டது. பின் தெலுங்கில் முதன் முதலாக பவன் கல்யான் நடித்த பன்ஜா திரைப்படத்தை இயக்கினார். சுமாரான வரவேற்பை பெற்றது அந்த படம். மீண்டும் அல்டிமேட் ஸ்டார் அஜீத் மற்றும் விஷ்ணுவர்த்தன் ஆஸ்தான் நாயகன், நண்பர் ஆர்யாவையும் இணைத்து ஆரம்பம் என்ற பிரமாண்ட வெற்றிப்படத்தை தமிழில் கொடுத்தார்.அவர் கடைசியாக அவரது சகோதரன் கிருஷ்ணா மற்றும் ஆர்யாவை வைத்து யட்சன் படத்தை 2015 ல் எடுத்தார். பெரிய அளவு வரவேற்பை பெறவில்லை.

தர்மா புரெக்ஷன் மற்றும் காஸ் எண்டெர்டெய்ன்மெண்ட் சார்பில் கரண்ஜோகர், ஹிரூ யஷ் ஜோஹர், அபூர்வா மேத்தா, ஷபீர் பாக்ஸ்வாலா, அஜய் ஷா மற்றும் ஹிமான்ஷு காந்தி தயாரிக்கும் ஹிந்தி படம் ஷெர்ஷா. ஆறு ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக ஹிந்தியில் இயக்குனராக தடம் பதிக்கின்றார் விஷ்ணுவர்த்தன். கார்கில் யுத்தத்தில் நாயகர்களில் ஒருவரான பரம்வீர் சக்ரா விருது பெற்ற கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்கையை அடிப்படையாக கொண்டு கதையை சந்தீப் ஸ்ரீவத்சவா எழுதியிருக்கின்றார். ஜான் ஸ்டீவர்ட் எடுரி இசையமைத்துள்ளார். கமல்ஜீத் நேகி ஒளிப்பதிவு செய்துள்ளார். A.ஸ்ரீகர் பிரசாத் படத்தை தொகுத்துள்ளார்.

சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி, சிவ் பண்டிட், நிகிதின் தீர், ஹிமன்ஷூ ஏ. மல்ஹோத்ரா, அனில் சரஞ்சீத், பவன் சோப்ரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

26.07.1999 ல் முடிவுக்கு வந்தது கார்கில் போர். 22 ஆண்டுகள் முடிந்து 23 வது ஆண்டு இன்று தொடங்குகின்றது. இந்த நேரத்தில் ஷெர்ஷா திரைப்பட வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். கொரானா ஊரடங்கு காரணமாக திரையரங்கங்கள் மூடப்பட்ட நிலையில் ஷெர்ஷா திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் 12.08.2021 வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

ஜெய் ஜவான்





Movie Gallery

  • news

    Dharsha Gupta

  • news

    Shamlee

  • news

    Priyanka Arul Mohan

  • news

    Andrea Jeremiah

  • news

    Nidhi Agarwal

  • news

    Sobhita Dhulipala

  • news

    Sunaina

  • news

    Swasika

  • news

    Krithi Shetty

  • news

    Anukreethy Vas

  • news

    Tamannah

  • news

    Aishwarya Rai

  • news

    Raai Laxmi

  • news

    Pooja Umashankar

  • news

    Sri Divya

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.