Article by : Admin on 21-01-2022
லாபிரிந்த் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் ஏஜென்ட் கண்ணாயிரம். தெலுங்கில் வெளியான ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா படத்தின் ரீமேக் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை மனோஜ் பீதா இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் மற்றும் சரவணன் ராமசாமி ஒளிப்பதிவு செய்துள்ளனர். அஜய் படத்தை தொகுத்துள்ளார்.
ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தில் நடிகர் சந்தானம், ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன், புகழ், முனிஷ்காந்த், ரெடின் கிங்க்ஸ்லி, E ராமதாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
21-01-2022 நடிகர் சந்தானத்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஏஜென்ட் கண்ணாயிரம் பட டீசர் உங்கள் பார்வைக்கு