Article by : Admin on 19-01-2022
விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் நடிகர் விஷால் தயாரித்துள்ள படம் வீரமே வாகை சூடும். அறிமுக இயக்குனர் து பா சரவணன் எழுதி இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். N B ஸ்ரீகாந்த் படத்தை தொகுத்துள்ளார்.
விஷாலின் வழக்கமான ஆக்ஷன் பேக் அடிப்படையிலான திரைப்படமாக உருவாகியுள்ளது வீரமே வாகை சூடும். இந்த படத்தில் நாயகியாக முதன் முறையாக முதன்மை கதாப்பாத்திரத்தில் டிம்பில் ஹாயாதி நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, மாரிமுத்து, மறைந்த நடிகர் R N R மனோகர், பாபுராஜ், V I S ஜெயபாலன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
வரும் குடியரசு தினமான 26-01-2022 ல் வெளியாகவுள்ள வீரமே வாகை சூடும் திரைப்படத்தின் டீசரை இன்று 19-01-2022 நடிகர் விஷால் வெளியிட்டுள்ளார்
வீரமே வாகை சூடும் திரைப்பட டீசர் உங்கள் பார்வைக்கு