மகேஷ் பாபுவின் மகள் லிட்டில் பிரின்ஸஸ் சித்தாரா கலக்கும் மகேஷ் பாபுவின் பட பாடல்GMB எண்டர்டென்ய்மென்ட் பி லிட், மைத்திரி மூவி மேக்கர்ஸ் மற்றும் 14 ரீல்ஸ் பிளஸ் சார்பில் நவீன் எர்னேனி, Y ரவிசங்கர், ராம் அச்சந்தா மற்றும் கோபி அச்சந்தா தயாரித்துள்ள தெலுங்கு படம் சர்க்காரு வாரி பாட்டா பரசுராம் இந்த படத்தை இயக்கியுள்ளார் Sதமன் இசையமைத்துள்ளார் Rமதி ஒளிப்பதிவு செய்துள்ளார் மார்த்தாண்ட் Kவெங்கடேஷ் படத்தை தொகுத்துள்ளார்
சர்க்காரு வாரி பாட்டா படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் பிரின்ஸ் மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, சுப்பராஜூ, வெண்ணிலா கிஷோர் மற்றும் பலர் நடித்துள்ளனர்
இந்த படத்தின் கலாவதி என்னும் முதல் பாடல் கடந்த மாதம் வெளியாகி பத்துகோடி பார்வையாளர்களை கடந்து ஹிட்டடித்திருக்கிறது இப்போது ஆனந்த் ஸ்ரீராம் எழுதி S தமன் இசையமைக்க நகாஷ் அஜீஸ் குரலில் பென்னி பாடல் வெளியாகியுள்ளது
இந்த பாடல் ரசிகர்களுக்கு மிகவும் சிறப்பான ஒன்று காரணம் மகேஷ் பாபுவின் மகள் “லிட்டில் பிரின்ஸஸ்” சித்தாரா கட்டமனேனி முதன் முறையாக இந்த பாடலில் தோன்றி மகிழ்வித்திருக்கிறார் புலிக்கு பிறந்தது பூனையல்ல என்பது போல் மிகவும் ஸ்டைலிஷாக ஆடி அனைவரது மனதையும் கொள்ளையடிக்கிறார் நம் லிட்டில் பிரின்ஸஸ்