Article by : Admin on 24-07-2021
மினி ஸ்டுடியோஸ் சார்பில் S.வினோத்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “எனிமி(Enemy)” இதை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா வெற்றிப்படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்குகின்றார். S.தமன் இசையமைத்துள்ளார். R.D.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கின்றார். ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தை தொகுத்துள்ளார்..
இந்த படத்தில் “அவன் இவன்” படத்துக்கு பிறகு நடிகர் விஷால் நடிகர்ஆர்யாவுடன் இணைந்து நடித்துள்ளார்.. இதில் டப்மேஷ் புகழ் மிருணாளினி, சிவப்பதிகாரம் படத்தில் நடித்த மம்தா மோகன்தாஸ், 2012 ல் இவர் நடித்த த்டையற தாக்க படத்தை தொடர்டந்து 9 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் படத்தில் நடிக்கின்றார், பிரகாஷ் ராஜ், டூய் பெக் மற்றும் பலர் நடித்துள்ளனர்
விஷால் ஆர்யா இணைந்து தெறிக்கவிடும் “எனிமி(Enemy)” திரைப்படத்தின் டிசர் இன்று (24.07.2021) மாலை வெளியிடப்பட்டது.தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் இந்த டீசர் வெளியிடப்பட்டுள்ளது