பீஸ்ட் ஜாலி ஓ ஜிம்கானா பாடல் வரிகள் வெளியீடுசன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதிமாறன் தயாரித்துள்ள திரைப்படம் பீஸ்ட் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் பட இயக்குனர் நெல்சன் தீலிப்குமார் எழுதி இயக்கியுள்ளார் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார் மனோஜ் பரமஹம்சா ஓளிப்பதிவு செய்துள்ளார் R நிர்மல் படத்தை தொகுத்துள்ளார்
பீஸ்ட் படத்தில் இளைய தளபதி விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, ஷைன் டாம் சாக்கோ ஜான் விஜய், ஷாஜி சென், V T V கணேஷ், அபர்னா தாஸ், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்துள்ளனர்
பீஸ்ட் திரைப்படம் வரும் 14-04-2022 முதல் திரையரங்குகளில் ஒளிபரப்பாகவுள்ளது இந்த சூழலில் இந்த படம் சார்ந்த தகவல்கள் பாடல்கள் என்று வரிசையாக வந்துகொண்டிருக்கின்றது
ஏற்கனவே பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாடல் வெளியாகி 198 மில்லியன் பார்வையாளர்களை கடந்து பெரிய அளவில் ஹிட்டடித்துள்ளது இந்த சூழலில் இன்று 19-03-2022 ஜாலி ஓ ஜிம்கானா பாடல் வரிகள் வெளியாகியுள்ளது
பைலா பாடல் பாணியில் உருவாகியுள்ள ஜாலி ஓ ஜிம்கானா பாடலை கு கார்திக் எழுத அனிருத் ரவிசந்தர் இசையில் இளைய தளபதி விஜய் பாடியுள்ளார் அரபிக் குத்து பாடலுக்கு இணையாக உருவாகியுள்ளது இந்த பாடல்