புஷ்பா தி ரைஸ் பட ஹிட் பாடல் வீடியோ வெளியீடுமைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா சார்பில் நவீன் யாமினி மற்றும் Y ரவிசங்கர் இணைந்து தயாரித்துள்ள படம் புஷ்பா தி ரைஸ் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படம் முதல் பாகம் புஷ்பா தி ரைஸ் என்று உருவாகியுள்ளது இரண்டாம் பாகம் புஷ்பா தி ரூல் என்ற தலைப்பிலும் உருவாகவுள்ளது, இந்த படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது இந்தப்படத்தை சுகுமார் இயக்கியுள்ளார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார் மிர்ரேஸ்டா கூபா புரோஷெக் ஒளிப்பதிவு செய்துள்ளார் கார்த்திகா ஸ்ரீநிவாஷ் மற்றும் ரூபன் படத்தை தொகுத்துள்ளனர்
புஷ்பா தி ரைஸ் படத்தில் அல்லு அர்ஜூன், ரஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில், அஜய் கோஷ், தனஞ்செய் ராவ் ரமேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்
புஷ்பா தி ரைஸ் படம் 17-12-2021 ல் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டாகியுள்ளது பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூபாய்300 கோடியை கடந்து வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கின்றது இந்த சூழலில் இன்று 07-01-2022 முதல் அமேசான் ஒடிடி தளத்தில் இந்த திரைப்படம் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கின்றது
புஷ்பா தி ரைஸ் திரைப்படம் வெளியாகும் முன்பே இதன் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது