Join/Follow with Our Social Media Links

முதல் இடத்திற்கு முன்னேறிய சாய் பல்லவி

Article by : Admin on 10-05-2025

தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் முன்னணியில் இருப்பது நயன்தாரா, ராஷ்மிகா மந்தனா தான். இவர்களுக்கு அடுத்த வரிசையில் இடம் பெற்றிருப்பது கீர்த்தி சுரேஷ், த்ரிஷா, சாய் பல்லவி. சமீபகாலமாக சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் எல்லா படமும் ஹிட் படமாக அமைகிறது.

இப்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார் சாய் பல்லவி. ஏக் தின் மற்றும் ராமாயணா பார்ட் 1 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில், ராமாயணா படத்திற்கு சாய் பல்லவி வாங்கும் சம்பளம் தான் மற்ற நடிகைகளுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

நயன்தாரா ரூ.12 கோடி வரையில் சம்பளம் பெற்று வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அடுத்து ராஷ்மிகா மந்தனா. புஷ்பா 2 படத்திற்கு ரூ.12 கோடி வரையில் சம்பளம் பெற்ற ராஷ்மிகா சாவா படத்திற்கு ரூ.4 கோடி சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது.

அனுஷ்கா 7 முதல் 10 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தெரிகிறது. 

த்ரிஷா இப்போது 10 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக தெரிகிறது.

ராமாயணா பார்ட் 1 படத்தில்  சாய் பல்லவி சீதையாகவும், ரன்பீர் கபூர் ராமனாகவும் நடிக்கின்றனர். யாஷ் ராவணனாக நடிப்பதாக தகவல். இந்த படத்துக்காக சாய் பல்லவி 15 கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்தப் படத்தின் முதல் பாகத்திற்கு மட்டும் ரூ.15 கோடி என்று சொல்லப்படுகிறது.

இதன் மூலமாக அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் பட்டியலில் சாய் பல்லவி முதலிடம் பிடித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. 

திறமை வாய்ந்த சாய் பல்லவி யின் இந்த உயர்வை கண்டு அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்துள்ளனர்.

Cinitalk சார்பாக நாமும் அந்த மகிழ்ச்சியில் பங்கேற்பதோடு சாய் பல்லவிக்கு Cinitalk  குழுவின் சார்பாக வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்





Movie Gallery

  • news

    Poorna

  • news

    Nikki Galrani

  • news

    Nandita Swetha

  • news

    Lakshmi Gopalaswamy

  • news

    Sneha

  • news

    Keerthy Suresh

  • news

    Amritha Aiyer

  • news

    Sheela Rajkumar

  • news

    Nayanthara

  • news

    Rajisha Vijayan

  • news

    Ineya

  • news

    Anjali

  • news

    Reshma Pasupuleti

  • news

    Sakshi Agarwal

  • news

    Shilpa Shetty

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.