அஜித் ரசிகர்களை குதுகலப்படுத்தும் வலிமை டீசர்போனிகபூர் பேவியூ ப்ராஜெக்ட்ஸ் LLP சார்பில் போனிகபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள படம் வலிமை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் அஜித் குமார் நடித்த நேர்கொண்ட பார்வை படங்களை இயக்கிய H வினோத் படத்தை இயக்கியுள்ளார் அஜித் குமாரின் பல படங்களுக்கு இசையின் மூலம் ஹிட் கொடுத்த யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் நிரவ் ஷா ஒளிப்பத்திவு செய்துள்ளார்
வலிமை படத்தில் அஜித்குமார், ஹூமா குரோஷி, கார்த்திகேயா கும்மகொண்ட, சுமித்திரா, யோகிபாபு, G M சுந்தர், பவேல் நவநீத கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்
வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 11-07-2021 ல் வெளியானது அது முதல் வரிசையாக ஏராளமான அப்டேட்கள் இந்த படத்திலிருந்து வந்துகொண்டிருக்கிறது நாங்க வேறமாதிரி மற்றும் நான் பார்த்த முதல் முகம் பாடல், முதல் பார்வை, விசில் தீம் இப்படி வரிசையாக வந்து ரசிகர்கள் கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர்
பொங்கல் பரிசாக AK ரசிகர்களை மட்டுமின்றி தமிழக மக்களையும் மகிழ்விக்க வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது இதனிடையே உலக நாடுகளை மட்டுமின்றி இந்தியாவையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றது ஒமிக்ரான் வைரஸ் ஆனால் இந்த படம் நிச்சயமாக பொங்கல் திருநாளில் திரைக்குவரும் என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் இருக்கின்றனர்