இளைய தளபதியின் கலக்கல் பீஸ்ட் டீசர்சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ள படம் பீஸ்ட் டாக்டர் படத்தை தொடர்ந்து நெல்சன் தீலிப் குமார் எழுதி இந்த படத்தை இயக்கியுள்ளார் அனிருத் ரவிசந்தர் இசையமைத்துள்ளார் மனோஜ் பரமஹம்ஸா ஒளிப்பதிவு செய்துள்ளார் R நிர்மல் படத்தை தொகுத்துள்ளார்
கொரானா சூழலில் ஐம்பது சதவீத பார்வையாளர்களை மட்டுமே கொண்டு வெளியான மெகா ஹிட் மாஸ்டர் வெற்றிப்படத்தை தொடர்ந்து நூறு சதவீத இருக்கை அணுமதியுடன் வெளியாகவுள்ள படம் பீஸ்ட் விஜய் ரசிகர்களுக்கு தினம் ஒரு தகவலை படக்குழு தொடர்ந்து தந்துகொண்டே இருந்தது இதன் அரபிக்குத்து பாடலும் ஜாலி ஓ ஜிம்கானா பாடலும் வெளியாகி மெகாஹிட்டடித்துள்ளது
பீஸ்ட் படத்தில் இளைய தளபதி விஜய்யுடன் பூஜா ஹெக்டே மூகமூடி திரைப்படத்திற்கு பிறகு பத்தாண்டு கழித்து மீண்டும் நடித்துள்ளார் , செல்வராகவன் முதன் முறையாக வெள்ளித்திரையில் தோன்றுகிறார் யோகி பாபு, ஷைன் டாம் சாக்கோ, ஜான் விஜய், V T V கணேஷ், ரெட்டின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பீஸ்ட் திரைப்படம் 13-04-2022 ல் வெளியாக உள்ளது படத்தின் டீசரை இன்று 02-04-2022 படக்குழு வெளியிட்டுள்ளது மிகவும் பிரமாண்டமாகவும் அனைவரையும் ஈர்க்கும் வகையில் இந்த டீசர் இருக்கின்றது