Join/Follow with Our Social Media Links

ஆகாஷவாணி மொழிமாற்று திரைப்பட விமர்சனம்

ஆகாஷவாணி மொழிமாற்று திரைப்பட விமர்சனம்


A U & I ஸ்டுடியோஸ் சார்பில் பத்மனாபா ரெட்டி தெலுங்கு மொழியில் தயாரித்துள்ள படம் ஆகாஷவாணி. அஸ்வின் கங்காராஜூ எழுதி இயக்கியுள்ளார். கால பைரவா இசையமைத்துள்ளார். சுரேஷ் ரகுடு ஒளிப்பதிவு செய்துள்ளார். A ஸ்ரீகர் பிரசாத் படத்தை தொகுத்துள்ளார்.

ஆகாஷவாணி திரைப்படம் சோனி லிவ் ஒடிடி தளத்தில் 24-11-2021 முதல் தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிகளில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கின்றது.

ஆகாஷவாணி திரைப்படத்தில் சமுத்திரகனி சந்திரன் ஆசிரியர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். வினய்வர்மா டோரா என்கிற துரை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தேஜா காகுமணு சாம்பா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மைம் மது ரெங்கா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மாஸ்டர் பிரசாந்த் கிட்டா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஷேக்கிங் ஷேசு லிங்கய்யா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

கதைக்கரு.:

கடவுள் நம்பிக்கையை அடிப்படையாக வைத்து ஒரு கிராமத்தையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றான் ஒருவன். கொடியவனின் கைகளிலிருந்து காப்பாற்றி அதே கடவுள் நம்பிக்கையை அடிப்படையாக வைத்து அழிப்பது தான் ஆகாஷவாணி திரைப்படம்.

கதை.:

ஆந்திர பிரதேசத்தில் ஒரு மலை கிராமம். வெளிஉலகம் பற்றி அறியாதவர்கள் அந்த பழங்குடியின மக்கள். டோரா எனும் துரை தான் அவர்கள் கடவுள். அவர்களிடம் ஒரு கோயில் இருக்கின்றது அந்த கோயிலில் இருக்கும் கடவுளும் துரையும் ஒன்று என்று எண்ணுகின்றனர் மக்கள். துரை அந்த பகுதி ஜமீந்தார்.

அந்த மலைபகுதியில் கஞ்சா விளைவித்து அவர்களை வைத்து அறுவடை செய்து அந்த பகுதி மக்கள் அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான் துரை. அங்கே ஒரு எல்லைக்கோட்டை வகுத்து அவர்கள் அதைவிட்டு வெளியே போனால் தெய்வம் தண்டிக்கும் என்று சொல்லி பயமுறுத்தி வைத்துள்ளான் துரை. அந்த பழங்குடியின மக்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்க சாம்பாவை காவலுக்கு நியமிக்கிறான் துரை. துரையின் காரியதரிசி லிங்கய்யா. துரையின் மகன் உடல் நலமில்லாமல் இருக்கிறான். அவனை குணப்படுத்த நரபலிக்கு பழங்குடியின மக்களின் குழந்தைகளை பயன்படுத்திக்கொள்கிறான்.

அந்த கிராமத்தில் ரங்கா தன் மகன் கிட்டாவுடன் வசிக்கின்றான். கிட்டா ஆடுமேய்ப்பவன். கிட்டா மீது ரங்கா மிகுந்த பாசம் வைத்திருக்கிறான். பழங்குடி மக்களின் தெய்வம் ஒரு கல் என்றாலும் துரைதான் அவர்களிடம் நேரடியாக பேசும் கடவுளாக அம்மக்களை ஏமாற்றி வைத்துள்ளான். வெளியுலக தொடர்பு எதுவும் அண்டாமல் பார்த்துக்கொள்கிறான். அந்த பகுதி மக்களை பொருத்தவரை வெளியுலக விஷயங்கள் எதுவும் தெரியாது.

துரை பிறந்தநாளன்று பழங்குடியின குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுப்பார். அந்த மிட்டாய்க்காக குழந்தைகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்,

சந்திரன் கிராமப்புற பள்ளியில் ஆசிரியராக வேலை செய்பவர். அவரது மகன் சாண்டி ரேடியோ பைத்தியமாக இருப்பவன். நகர்புறத்திற்கு மாற்றலுக்காக காத்திருப்பவர். சந்திரன் எதிர்பார்த்த மாறுதல் அவருக்கு கிடைக்கிறது. உடனடியாக நகர்ப்புற பள்ளியில் சேர வேண்டும். எனவே தன் மனைவியிடம் வீட்டிலுள்ள பழைய தேவையில்லாத பொருள்களை குப்பையில் போட்டுவிட்டு வரச்சொல்கிறான், அதோடு அவன் பையன் வைத்திருக்கும் ரேடியோவையும் குப்பையில் போடுகிறான்.

அந்த ரேடியோ குப்பைக்கு போகின்றது. அங்கிருந்து ஒரு பஞ்சு மிட்டாய் மற்றும் பழைய இரும்பு பொருள்கள் விற்பவன் கைக்கு போகிறது.

துரை பிறந்த நாள் அன்று எல்லையை தாண்டி காட்டுக்குள் செல்ல நினைத்த தேர்தல் அதிகாரியை துரை கொல்கின்றான். தன் பிறந்த நாளுக்கு பழங்குடியின குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுக்கும் பழக்கம் உள்ள துரை. இப்படி மிட்டாய் கொடுப்பதன் மூலம் வரும் தலைமுறையையும் தன் குடும்பத்திற்கு அடிமைப்படுத்துக்கிறான்.

காட்டிற்குள் செல்லும் பஞ்சு மிட்டாய் கொடுப்பவன் துரையின் பாதுகாவலன் அனுமதியுடன் காட்டுக்குள் செல்கிறான். அங்கிருக்கும் குழந்தைகளுக்கு பஞ்சு மிட்டாய் கொடுக்கிறான். அப்போது அவன் பையிலிருக்கும் ரேடியோவை வித்தியாசப்பொருளாக பார்க்கும் ரங்கன் மகன் கிட்டு அதை கேட்கிறான். ஆனால் எதையாவது  கொடுத்தால்தான் அது கிடைக்கும் என்று கிட்டுவிடம் சொல்கிறான். தன்னிடம் இருக்கும் ஆட்டுக்குட்டியை கொடுத்துவிட்டு அதை வாங்குகிறான் கிட்டு. ஆனால் அதை எதோ ஒரு பெட்டியாக மட்டுமே நினைக்கின்றான் கிட்டு. அதை தன்னுடனேயே மறைத்து வைத்துக்கொள்கிறான். ஒரு சமயம் எதிர்பாரத விதமாக அவன் கைப்பட்டு ரேடியோ இயங்க தொடங்குகிறது. அந்த சத்தத்தை கேட்டு முதலில் பயப்படும் கிட்டு. பின் அது எதோ புதுமையான ஒன்று என்று நினைத்து பத்திரப்படுத்துகிறான்.

அப்போது மழைவருகிறது. மழையில் நனையாமல் இருக்க அதை அவர்கள் சாமியிருக்கும் இடத்தில் மறைத்து வைக்கிறான். இதனிடையில் கிட்டுவிடம் ஆடுகள் குறைந்ததை அறிந்த சாம்பா ஆடுகளை கொடுத்து மிட்டாய் வாங்கியதாக நினைத்து கிட்டுவை சிறுவன் என்றும் பாராமல் அடித்து உதைக்கிறான். இதனால் கிட்டு மூர்ச்சையாகிறான். ஊர் மக்கள் அவனை தூக்கி சென்று சிகிச்சை கொடுக்கின்றனர். ஆனால் கிட்டு கண்முழிக்கவில்லை. அதனால் அவர்கள் கோயிலுக்கு தூக்கி சென்று கடவுளிடம் நாங்கள் உன்னை நம்பித்தான் இருக்கின்றோம் நீதான் காப்பாற்ற வேண்டுமென்று சொல்கின்றனர். அப்போது ரேடியோவில் வரும் மருத்துவ குறிப்பை வைத்து கிட்டுவை காப்பாற்றுகின்றனர். அதுவரை துரையை மட்டுமே கடவுளாக நினைத்த மக்கள். கடவுளே நேரடியாக தங்களிடம் பேசுவதாக நினைத்து ரேடியோவையே கடவுளாக நினைக்கின்றனர். அதுவரை துரையை பெரிதாக நினைத்த மக்கள் ரேடியோவை தங்களிடம் நேரடியாக பேசும் கடவுளாக நினைக்கின்றனர்.

அந்த கடவுளுக்கு கோயில் கட்ட துரையிடம் வேண்டுகோள் வைக்கின்றனர் மக்கள். துரை அது எப்படி உங்கள் கடவுளாக மாறியது என்று கேட்கிறான். அந்த கடவுளின் குரலால் கிட்டு உயிர்பிழைத்ததாக சொல்கின்றனர் மக்கள். அந்த கடவுளை யார் என்று பார்க்கிறான். ரேடியோ தான் அந்த கடவுளென்று நினைத்து சிரிக்கிறான். அந்த சமயத்தில் கீழே தடுக்கி விழப்போகிறான் துரை. கடவுளை அவமதித்த காரணத்தால்தான் கீழே விழப்போனதாக சொல்கின்றார்கள் அந்த மக்கள். கடவுளிடம் மன்னிப்பு கேட்க சொல்கின்றனர். துரையும் வேறு வழியில்லாமல் மக்கள் நம்பிக்கையை மூலதனப்படுத்த ரேடியோ கடவுளை கும்பிட்டு மன்னிப்பு கேட்பது போல் நடிக்கிறான். அவர்களுக்கு கோயில் கட்ட கொடிமரத்தை கொடுக்கிறேன் என்று சொல்கிறான். தன் வீட்டிற்கு முன் இருக்கும் மின்கம்பத்திற்கு பெயிண்ட் அடித்து கொடிக்கம்பமென்று ஏமாற்றி கொடுக்கிறான் துரை.

தன் மகனை மிகவும் ஆபத்தான கட்டத்திலிருந்து காப்பாற்ற நரபலி கொடுக்க கிட்டுவை கடத்த நினைக்கிறான். புதிய கடவுளுக்கு விழா எடுக்கின்றனர் ஊர்மக்கள். அப்போது கிட்டுவை கடத்தி நரபலி கொடுக்கிறான் துரை.

தன் மகனை இழந்த ரங்கா பிரம்மை பிடித்தவன் போல் அலைந்து கொண்டிருக்கின்றான். அவனையும் அறியாமல் காட்டைவிட்டு வெளியேருகிறான். அப்போது தேர்தல் பணிக்காக வரும் சந்திரன் மற்றும் சீணு இருவரும் காட்டு வழியில் செல்லும் போது விபத்து ஏற்படுகிறது. சீணுவிற்கு பலமாக அடிபட்டு இருக்கிறது. பிரம்மை பிடித்து அலைந்து கொண்டிருக்கும் ரங்கனின் பார்வையில் அவர்கள் படுகின்றனர். சீணுவுக்கு வைத்தியம் பார்க்க உதவி செய்யுமாறு சொல்கின்றான். சீணுவை தூக்கிக்கொண்டு சந்திரனும் ரங்கனும் அவர்கள் வாழும் குடிசைக்கு செல்கின்றனர். அங்கே சீணுவுக்கு வைத்தியம் பார்க்கின்றனர். கலைப்பில் சந்திரனும் மயங்கி விழுகிறான். சந்திரன் விழித்து பார்க்கிறான். அங்கிருக்கும் மக்கள் இவர்களின் உடையை வித்தியாசமாக பார்க்கின்றனர். இவர்கள் இங்கே தங்குவதற்கு துரையிடம் அனுமதி கேட்க நினைக்கின்றனர். ஆனால் கடவுளே நம்மிடம் நேரடியாக பேசும்போது அந்த கடவுளிடமே கேட்கலாம் என்று சொல்கின்றனர். அவர்கள் கடவுளான ரேடியோ முன்னிலையில் சந்திரனை வரவழைத்து வணங்க சொல்கின்றனர். அதை வித்தியாசமாக பார்க்கும் சந்திரன் ரேடியோவை வணங்கி அவர்களுடன் அமர்கிறான். ரேடியோ சந்திரனை விருந்தினர் நம்மில் அவரும் ஒருவர் என்ற அடிப்படையிலான செய்தி வருகிறது. ஊர் மக்கள் அவர்களில் ஒருவராக சந்திரனையும் சீணுவையும் ஏற்றுகொள்கின்றனர்.

இவர்களின் அப்பாவித்தனத்தையும், துரை இவர்களை ஏமாற்றுவதையும் கண்டுபிடிக்கின்றனர். அதை ஊர்மக்களிடம் எடுத்து சொல்கின்றனர். அதே நேரம் துரை இவர்களை வெளியேற்ற வேண்டும் இவர்கள் துர்சக்திகள். கடவுளையே ஏமாற்றி வந்தவர்கள் என்று சொல்கிறான். வேறு வழியில்லாமல் சந்திரனையும் சீணுவையும் அங்கிருந்து அனுப்புகின்றனர் ஊர்மக்கள். அங்கிருந்து செல்லும் சந்திரனையும் சீணுவையும் துரை கடத்தி கொல்ல முயல்கிறான். அதில் சீணு இறந்து போக சந்திரன் தப்பி மீண்டும் அந்த கிராமத்திற்கே வருகிறான். எல்லையைவிட்டு வெளியில் சென்றால் இறந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கும் மக்களுக்கு சந்திரன் மீண்டும் வந்தது ஆச்சர்யமாக இருந்தது. சந்திரனை கடவுளின் தூதனாக நினைக்கின்றனர்.

சந்திரன் எப்படியாவது இவர்களது அப்பாவித்தனத்தை நீக்க வேண்டுமென்று நினைக்கின்றான். ரேடியோ இருக்கும் கோவிலுக்கு செல்கிறான். ரேடியோவை பார்த்து நீ கடவுளா இல்லையா என்பதை தாண்டி இம்மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் நீயும் கடவுள். கடவுள் என்ற அடிப்படையில் நானும் உன்னை வேண்டுகிறேன். எப்படியாவது இந்த மக்களின் அப்பாவித்தனத்தை போக்கு, நம்பிக்கைதான் கடவுள். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் உன்னை வேண்டிக்கொள்வதாக சந்திரன் சொல்கிறான். அப்போது ரேடியோவில் இன்னும் சற்று நேரத்தில் பக்த பிரகலாத கதை வருகின்றது என்று செய்தி சொல்கிறது. சந்திரனுக்கும் ஒரு யோசனை தோன்றுகிறது. இதை துரைக்கு எதிராக பயன்படுத்த நினைத்து ஊர்மக்களை அழைக்கின்றான்.

துரைதான் இரணியகசிபு நீங்கள் அனைவரும்தான் பக்த பிரகலாதன் என்று சொல்லி அந்த கதையை கேட்க சொல்கிறான், இரணிய கசிபு அசுரன், ஆனால் தன்னை தானே கடவுள் என்று சொல்லிக்கொண்டிருப்பவன். பிரகலாதன் அந்த இரணிய கசிபு அரக்கனை அழித்த கதையை கேட்ட ஊர்மக்கள் ரேடியோ கடவுள் சொல்வது உண்மையென்று நம்புகின்றனர்.

சந்திரன் தப்பி சென்று மலையில் மக்களிடையே இருக்கும் தகவலை தெரிந்துகொள்கிறான் துரை. அதே வேலை அவனது மகனும் இறந்து போகிறான். ஆனால் அதிகார மமதையில் இருக்கும் துரை சந்திரனையும் அவனை மீண்டும் ஏற்றுக்கொண்ட மக்களையும் கொல்ல அங்கே செல்கிறான்.

மக்களும் துரையை அசுரனாக நினைத்து சண்டை போடுகின்றனர். அதே நேரம் இந்த மாற்றத்திற்கு காரணம் ரேடியோ என்று தெரிந்து சாம்பாவிடம் ரேடியோவை அழிக்க சொல்கிறான். சம்பாவும் ரேடியோவை உடைக்கின்றான். கடவுளை உடைத்த காரணத்தால் ரங்கா சாம்பாவை கொல்கிறான். அங்கே இருக்கும் துரை, தான் கொடுத்த கொடிக்கம்பம் அதாவது மின்சார கம்பத்தின் அருகே நிற்கின்றான். அப்போது அந்த கம்பத்தில் இடிவிழ அது தாக்கி துரையும் இறந்து போகின்றான்.

மக்களிடம் ஏற்பட்ட மாற்றத்தை நினைத்து சந்திரன் சந்தோசப்படுகிறான். கடவுள் என்பது நம்பிக்கையின் அடிப்படை சார்ந்தது. உருவத்தின் அடிப்படையினாலானதல்ல என்று சந்திரன் உணர்கிறான்.

பாராட்டுக்குறியது.:

அழகான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து அருமையாக திரைக்கதை அமைத்துள்ள அஸ்வின் கங்காராஜூக்கு பாராட்டு.

வெளியுலக தொடர்பே இல்லாத பழங்குடியினர் வாழ்கை கவித்துவமாகவும் அழகாகவும் காட்டியுள்ளனர்.

ரேடியோவை கதைக்களத்தின் மூலமாக கொண்டு ரேடியோ அவர்களை வந்து சேரும் அடிப்படையை அழகாக கொடுத்துள்ளனர்.

ரங்கா மற்றும் கிட்டு கதாப்பாத்திர படைப்பு அருமை.

சந்திரன் கதாப்பாத்திரத்தில் சமுத்திரகனி வித்தியாசமாக நடித்துள்ளார்.

துரை கதாப்பாத்திரத்தில் மிரட்டலாக நடித்துள்ளார் வினய் வர்மா.

பழங்குடியினர் வாழ்வையும் அவர்களது நம்பிக்கையையும் அழகாக கொடுத்துள்ளனர்.

நெருடலானவை.:

ரேடியோவை முதன்மை பாத்திரமாக வைத்து கதைக்களத்தை அமைத்துள்ளனர். ஆனால் ரேடியோ எப்போதாவது மட்டுமே பேசுவது போல் இருப்பது சற்று நெருடலாக உள்ளது.

ரேடியோவின் பயனம் சந்திரனிடமிருந்து தொடங்கி திரைப்படம் சந்திரனை வைத்து முடிவது போல் இருக்கின்றது. இந்த வகையிலான திரைக்கதை வலுக்கட்டாயமாக திணித்தது போன்ற உணர்வு ஏற்பட்டாலும் திரைக்கதையின் போக்கில் இந்த லாஜிக் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ஒரே மகனின் மீது மிகுந்த பாசம் வைத்திருக்கும் துரைக்கு அந்த மகனின் மரணம் தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருக்கிறது. அதே நேரம் தனக்கு பின் கட்டியாள வாரிசு இல்லை என்ற வருத்தத்தைவிட அதிகார மமதை மட்டுமே மேலோங்கியிருப்பது போன்ற காட்சியமைப்பு ஜீரணிக்க முடியாமல் உள்ளது.

தொகுப்பு.:

காலங்கள் தொழில்நுட்ப வளர்ச்சியில் ரேடியோ அடிப்படைகள் வேறுபாதையில் சென்று கொண்டிருந்தாலும். இன்னும் நம் மனதில் அடிப்படையான ரேடியோ ஆகாஷவாணி மனதிலிருந்து விலகாமல் இருக்கும். அதே அடிப்படையில் அருமையான கதை அழகான கதைக்களம். எதார்த்தம் மீறாத பழமைவாதம் நிறைந்த திரைக்கதை. மொத்தத்தில் ஆகாஷவாணி திரைப்படம் மனதில் நீங்காமல் இருக்கும்.

Movie Gallery

  • review

    Darshana Banik

  • review

    Huma Qureshi

  • review

    Keerthi Pandian

  • review

    Kasthuri

  • review

    Darshana Banik

  • review

    Remya Nambeesan

  • review

    Navya Nair

  • review

    Rithika Singh

  • review

    Ramya Pandian

  • review

    Nithya Menen

  • review

    Gouri G Kishan

  • review

    Kangana Ranaut

  • review

    Rajisha Vijayan

  • review

    Rashmika Mandanna

  • review

    Shriya Saran

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Web Designing Comapny

Jiojith Web Services

SEO Company in Chennai

We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.