Join/Follow with Our Social Media Links

அண்ணாத்த தமிழ் பட திரைவிமர்சனம்

அண்ணாத்த தமிழ் பட திரைவிமர்சனம்


சூப்பர் ஸ்டார் ரஜினி படமென்றாலே உலக அளவில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு மிகுந்திருக்கும். சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்திருக்கும் படம் அண்ணாத்த. சிவா இந்த படத்தை இயக்கியுள்ளார். D இமான் இசையமைத்துள்ளார். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபன் படத்தை தொகுத்துள்ளார்.

ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையில் தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுக்கு பின் 100% இருக்கைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ள இந்த சூழலில் வெளிவரும் பிரமாண்ட திரைப்படம் அண்ணாத்த. உலகமெங்கும் அதிக திரையரங்குகளில் அண்ணாத்த திரைப்படம் தீபாவளி திருநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது.

அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஊராட்சி மன்ற தலைவர் காளையனாக நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் காளையன் தங்கை தங்க மீனாட்சியாக நடித்துள்ளார். நயன்தாரா காளையன் காதலி பட்டம்மாளாக நடித்துள்ளார். குஷ்பு மற்றும் மீனா காளையன் முறைப்பெண் அங்கையற்கன்னி மற்றும் மங்கையற்கரசியாக நடித்துள்ளனர். பிரகாஷ் ராஜ் நாட்டதுரையாக நடித்துள்ளார். சூரி பச்சைக்கிளியாக நடித்துள்ளார். பாலா அர்ஜூனாக நடித்துள்ளார். அபிமன்யு சிங் மனோஜ் பாரிக்கராக நடித்துள்ளார். ஜகபதி பாபு உத்தவ் பாரிக்கராக நடித்துள்ளார். மற்றும் வேலராமமூர்த்தி பாண்டியராஜன், லிவிங்க்ஸ்டன், சதீஷ், சத்யன், ரெடின் கிங்க்ஸ்லி என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

கதைக்கரு.:

அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து ஏராளமான தமிழ்ப்படங்கள் வெளிவந்துள்ளது. அண்ணாத்த திரைப்படமும் மற்றொரு அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி வந்துள்ள திரைப்படம்.

கதை.:

சூரக்கோட்டை மற்றும் அருகிலிருக்கும் கிராமங்கள் அனைத்துக்கும் காளையன்தான் ஊராட்சி மன்ற தலைவர். தங்க மீனாட்சி பிறந்தவுடன் காளையன் தாய் இறந்துவிடுகின்றாள். தங்கை மீது மிகுந்த பாசம் வைத்துள்ளார் காளையன். அதற்கேற்ப தங்கை தங்க மீனாட்சியும் அண்ணன் மீது மிகுந்த பாசம் வைத்துள்ளார். நாட்டதுரை அந்த ஊரில் மக்களை ஏமாற்றி ரவுடித்தனம் செய்கின்றார். ஒரு நிலவழக்கு காரணமாக வக்கீல் பட்டம்மாளை அணுகுகின்றார் நாட்டதுரை. ஆனால் நாட்டதுரை ஏமாற்றிய விவரத்தை சொல்கின்றார். காளையனின் நியாயத்துவத்தை உணர்ந்து தன் கட்சிக்காரருக்கு எதிராக தீர்ப்பு வாங்கி கொடுக்கின்றார். அதனால் பட்டம்மாள் காளையன் இருவருக்குமிடையில் காதல் மலர்கின்றது.

தங்கச்சி தங்க மீனாட்சிக்கு பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுகின்றார் காளையன். அப்போது தங்க மீனாட்சிக்கு திருமணம் செய்ய முடிவு செய்கின்றார் காளையன். தன் தங்கையை தன்னைவிட நன்றாக பார்த்துக்கொள்ளும் மாப்பிள்ளையை திருமணம் செய்து வைக்க நினைக்கின்றார் காளையன். பல இடங்களில் வரன் பார்க்கின்றார் ஆனால் தங்கையை காளையனைவிட சிறப்பாக யாரும் பார்த்து கொள்ள முடியாது என்ற காரணத்தால் தள்ளிப்போகின்றது.

அங்கையற்கன்னி மற்றும் மங்கையர்கரசி இருவரும் காளையன் முறை பெண்கள். ஒருவரை திருமணம் செய்தால் இன்னொருவர் வருத்தப்படுவார்கள் என்ற அடிப்படையில் காளையன் திருமணம் செய்ய மறுத்த காரணத்தால் இருளாண்டியையும் மற்றும் இடிதாங்கியை முறையே இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் தன் தம்பிகளில் ஒருவரை தங்க மீனாட்சிக்கு திருமணம் செய்து வைக்க முயல்கின்றனர் அங்கையற்கன்னி மற்றும் மங்கையர்கரசி இருவரும். தன் தங்கை மீது மிகுந்த பாசம் வைத்துள்ள காளையன் எதிர்பார்ப்புக்கேற்ப அவர்கள் இல்லை என்பதை உணர்ந்து அங்கையற்கன்னியும் மங்கையர்கரசியும் தங்கள் முடிவை மாற்றிக்கொள்கின்றனர்.

ஒரு சண்டையின் போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் நாட்டதுரையிடம் அடிவாங்குவது போல் நடிக்கின்றார். ஆனால் பிற நேரத்தில் நாட்டதுரையை அடிக்கின்றார். நன்றாக சண்டை போடும் நீ ஏன் ஒரு கட்டத்தில் என்னிடம் அடிவாங்குகின்றாய் என்று காளையனிடம் கேட்கின்றார் நாட்டதுரை. அதற்கு காளையன் அங்கே உன் குடும்பத்தினர் இருக்கின்றனர். அவர்களுக்கு நீ ஹீரோ. அவர்கள் முன் உன்னை அடித்தால் அது உன் கௌரவத்தை பாதிக்கும். அதனால் தான் அவர்கள் முன் அடிவாங்குவது போல் நடித்ததாக சொல்கின்றான் காளையன். காளையனின் இந்த குணத்தால் மனம் மாறுகின்றான் நாட்டதுரை.

தன் தம்பி டாக்டராக இருப்பவர். காளையனின் தங்கையை தன் தம்பிக்கு மணம் முடிக்க நாட்டதுரை காளையனிடம் பெண் கேட்கின்றான். காளையன் எதிர்பார்த்தது போல் மாப்பிள்ளை இருப்பதால் திருமணத்தை வெகு விமர்சையாக பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்கின்றான் காளையன். ஆனால் திருமணத்திற்கு முதல் நாள் தங்க மீனாட்சி தன் காதலனுடன் வீட்டைவிட்டு ஓடுகின்றார். அண்ணனின் பாசத்திற்கு கட்டுப்பட்டு தன் காதலை மறைத்த தங்க மீனாட்சி வேறுவழியில்லாமல் தன் காதலனுடன் ஓடி சென்று திருமணம் செய்து கொள்கின்றார்.

தன் தங்கை மீது கொண்ட பாசத்தால் தங்கை வீட்டை விட்டு ஓடி செல்லும் போது தடுக்காமல் விட்டுவிடுகின்றார் காளையன். ஆனால் தங்க மீனாட்சி காதலிக்கும் விவரம் தனக்கு தெரியும் ஆனால் காளையனின் இந்த திருமணத்தால் மகிழ்ச்சி கெட்டுவிட கூடாது என்று தான் மறைத்ததாக காளையனின் அம்மாவழி பாட்டி சொல்கின்றார். தன் தங்கையின் விருப்பத்தைவிட தன் மகிழ்ச்சி பெரிதல்ல. முன்பே சொல்லியிருந்தால் தங்க மீனாட்சி விரும்பியவருக்கே திருமணம் செய்து கொடுத்திருப்பேன் என்று காளையன் சொல்கின்றான்.

தன் தங்கையை தேடி செல்லும் காளையன் தன் காதலி பட்டம்மாள் உதவியுடன் அவள் கொல்கத்தாவில் இருப்பதை அறிகின்றான். ஆனால் தங்க மீனாட்சி சொத்து சுகத்தை இழந்து, கணவன் சிறையிலிருப்பதை அறிந்து தன் தங்கையின் பிரச்சனைகளை தீர்க்க அவளுக்கு தெரியாமல் களமிறங்குகின்றான்.

மனோஜ் பாரிக்கர் பணக்காரர்களின் கருப்புப்பணத்தை பதுக்க பல நிறுவணங்களை அடித்து பிடுக்கும் அடியாள் கும்பலை வைத்து மாஃபியா ராஜ்ஜியம் நடத்திக்கொண்டிருப்பவன். தங்க மீனாட்சியின் கணவனின் நிறுவனத்தை அபகரித்து அவனை தன் செல்வாக்கு மற்றும் அடியாள் பலம் மூலம் சிறையிலடைக்கின்றான்.

மனோஜ் பாரிக்கர் அடியாட்களை ஒவ்வொருவராக காலி செய்கின்றான் காளையன். மனோஜ் பாரிக்கரின் ராஜ்ஜியத்தை சொல்லிவைத்து சரிக்கின்றார்.

மனோஜ் பாரிக்கர் சகோதரர் உத்தவ் பாரிக்கர். உத்தவ் பாரிக்கர் தந்தையின் முறையற்ற மனைவிக்கு பிறந்தவர் மனோஜ் பாரிக்கர். அதனால் மனோஜ் பாரிக்கரின் தாயை கொலை செய்கின்றான் உத்தவ் பாரிக்கர். உத்தவ் பாரிக்கரும் ஒரு ரௌடி ராஜாங்கமே நடத்துகின்றான். மனோஜ் பாரிக்கர் மற்றும் உத்தவ் பாரிக்கர் இருவரும் எலியும் புலியுமாக இருப்பவர்கள். ஆனால் காளையனிடம் தோல்யுற்ற மனோஜ் பாரிக்கர் உத்தவ் பாரிக்கரிடம் இந்த அவமானத்திற்கு பின் உயிர்வாழ விரும்பவில்லை என்று சொல்லி அவன் கண்முன்னே உயிரை மாய்த்துக்கொள்கின்றான். மனோஜ் பாரிக்கரை சாகும் தறுவாயில் சகோதரனாக ஏற்றுக்கொண்ட உத்தவ் பாரிக்கர் மனோஜ் பாரிக்கர் மரணத்திற்கு காரணமான காளையனை பழி வாங்க புறப்படுகின்றான். ஆனால் காளையன் கையால் உத்தவ் பாரிக்கரும் கொல்லப்படுகின்றான்.

தனக்கு பின்னால் இருந்து அனைத்தையும் செய்தது தன் அண்ணன் காளையன் தான் என்று தெரிந்து கொண்ட தங்க மீனாட்சி அண்ணனுடன் சேர்கின்றாள்.

பாராட்டுக்குறியது.:

ரஜினிகாந்த் என்ற சூப்பர் ஸ்டார் நடிகரை மட்டும் நம்பி எடுக்கப்பட்டுள்ள படம்.

தங்க மீனாட்சி கதாப்பாத்திரதில் கீர்த்தி சுரேஷ் நன்றாக நடித்திருந்தார்.

D இமான் பின்னனி இசை அமர்களம்.

ஒளிப்பதிவு அருமை

நெருடலானவை.:

பிறர்கதைகளை பிரதி எடுப்பது தவறில்லை. தான் எடுத்த கதைகளையே திரும்ப எடுத்துள்ளார் இயக்குனர். கதைக்கு பஞ்சமா? இல்லை சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கதையை தேர்ந்தெடுப்பதில் குழப்பமா.

சிறுத்தை, வீரம், வேதாளம், விசுவாசம் போன்ற படங்களுடன் கொஞ்சம் திருப்பாச்சி படத்தையும் கலந்து கலவை சாதமாக கொடுக்க முயற்சித்து ரசிகர்களையே முகம் சுழிக்க வைத்துள்ளார்.

தேவையில்லாத முக்கியத்துவமில்லாத எக்கச்சக்க கதாப்பாத்திரங்கள். அதிக நட்சத்திரங்களை நடிக்க வைப்பது பெருமையில்லை. எப்படி அவர்களை பயன்படுத்தியுள்ளனர் என்பதே பெருமை.

அழகான பெண் கீர்த்தி சுரேஷ் கண்முன்னே இருக்கும் போது வேலைக்காரியை சைட் அடிக்கும் சதீஷ் கதாப்பாத்திரம் நெருடலான பாத்திரபடைப்பு.

தன் தங்கையின் திருமணத்திற்கு டாக்டர் மாப்பிள்ளையை காளையன் ஒத்துகொள்ள காரணம். எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும் டாக்டர்கிட்டத்தான் போகனும் டாக்டரே மாப்பிள்ளையாக வந்தால் நல்லது தானே என்று சொல்வது போன்ற காட்சி. இதைவிட ஒரு கேவலமாக காட்சியை எடுக்க முடியாது என்பதற்கு இதுவே உதாரணம்.

பச்சைக்கிளி சூரி கதாப்பாத்திரம் டம்மி கதாப்பாத்திரம். ரஜினி அவரை பச்சைகிளி என்று அழைக்கும் போது விசுவாசம் படத்தில் தம்பிராமைய்யா கதாப்பாத்திரத்தை மாமா என்று அழைப்பது போலவே உள்ளது. அழைக்கும் தொனியையாவது மாற்றி இருக்கலாம்.

முதல் பாதியை பார்ப்பவர்களுக்கு தொலைக்காட்சி சீரியலே பரவாயில்லை என்று சொல்லுமளவுக்கு தொலைக்காட்சி சீரியல் போல் இருக்கின்றது.

காளையன் மற்றும் பட்டம்மாள் கதாப்பாத்திரத்திற்கிடையே காதல் உருவாவது உப்பு சப்பில்லாத வெற்று சாதமாக உள்ளது.

பாவம் இசையமைப்பாளர் D இமான். எவ்வளவுதான் சிரத்தை எடுத்தாலும் சொதப்பலான காட்சியமைப்பு. சொதப்பலான பாசபினைப்பு காட்சிகள். பின்னனி இசையால் எவ்வளவு தான் ஒப்பேத்த முடியும். முடிந்த அளவிற்கு தன் பங்களிப்பை கொடுத்துள்ளார் இசையமைப்பாளர்.

எலியும் பூனையுமாக இருக்கும் சகோதரர்களாக காட்டிவிட்டு சட்டென்று சகோதரனின் சாவுக்கு காரணமான நாயகனை பழிவாங்க புறப்படுகின்றார் உத்தவ் பாரிக்கர். சினிமாவில் லாஜிக் தேவையில்லை தான் அதற்காக இப்படியா.

வேதாளம் படத்தின் கொல்கத்தா காட்சிகள், வீரம் படத்தின் இறுதி காட்சிகள். ஒரு படத்தை காப்பியடிக்கலாம். ஆனால் அண்ணாத்த படம் காப்பி என்று சொல்வதைவிட ஈயடிச்சான் காப்பி என்று சொல்வார்களே அந்த ரகம்.

தொகுப்பு.:

சூப்பர் ஸ்டார் ரஜினி படமென்றால் போதும் ரசிகர்கள் வேறு எதையும் பார்க்கமாட்டார்கள் என்ற தைரியத்தில் எடுத்துள்ள படம். ஆனால் ரசிகனாக இருந்தாலும் படத்தில் ஏதாவது புதிதாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள்.  அண்ணாத்த படம் சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் ரசிப்புத்திறனையும் சோதிக்கும் திரைப்படம்.

Movie Gallery

  • review

    Sadha

  • review

    Nidhi Agarwal

  • review

    Sai Pallavi

  • review

    Sneha

  • review

    Mehreen Pirzada

  • review

    Saiyami Kher

  • review

    Srushti Dange

  • review

    Lakshmi Menon

  • review

    Bindu Madhavi

  • review

    Varalaxmi Sarathkumar

  • review

    Lavanya Tripathi

  • review

    Manju Warrier

  • review

    Reshma Pasupuleti

  • review

    Sai Pallavi

  • review

    Shilpa Shetty

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Web Designing Comapny

Jiojith Web Services

SEO Company in Chennai

We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.