Join/Follow with Our Social Media Links

Annabelle

அனபெல சேதுபதி திரை விமர்சனம்


Passion ஸ்டுடியோ சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் G.ஜெயராம் தயாரித்திருக்கும் படம் அனபெல சேதுபதி . தீபக் சுந்தர்ராஜன் எழுதி இயக்கியுள்ளார். கிருஷ்ணா கிஷோர் இசையமைத்துள்ளார். கவுதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் E ராகவ் படத்தை தொகுத்துள்ளார்.

அனபெல சேதுபதி  படத்தில்  விஜய் சேதுபதி (ராஜா வீர சேதுபதி மற்றும் அரசு அதிகாரி), டாப்ஸி பன்னு (அனபெல் மற்றும் ருத்ரா),  யோகி பாபு (சண்முகம்), ஜகபதி பாபு (கதிரேசன்), ராதிகா சரத்குமார் (ஆர்யமாலா), ராஜேந்திர பிரசாத் (ஆர்யமலா கணவர், ருத்ராவின் தந்தை), சேந்தன் (சுந்தர பாண்டியன்), தேவர்தர்சினி (குமாரி), சுப்பு பஞ்சு (சுந்தர்ராமன்), மதுமிதா (தென்றல், சுந்தர்ராமன் மனைவி), ஹர்ஷதா விஜய் (சுந்தர்ராமன் மற்றும் தென்றல் மகள்), ஜார்ஜ் மரியன் (பக்தவசலம்), சுரேகா வாணி (ராகவி), லிங்கா (கதிர்), சுரேஷ் மேனன் என்று. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஒடிடி தளத்தில் 17.09.2021 முதல் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கின்றது.

ஃபேன்டஸி, காமெடி மற்றும் திரில்லர் அடிப்படையில் உருவாகியிருக்கின்றது அனபெல சேதுபதி திரைப்படம்.

கதைக்கரு:

ஷாஜகான் மும்தாஜ்க்கு கட்டிய தாஜ்மஹால் போல் தன் காதல் மனைவிக்கு ஒரு பிராமாண்ட மாளிகையை கட்டிய ஒருவனிடமிருந்து குரூர மணம் கொண்டவன் அபரிக்க நினைது காதலனையும் காதல் மனைவியை கொள்கின்றான். ஆனால் எதிர்பாரதவிதமாக அவனும் அவன் குடும்பத்தாரும் அதே அரண்மையில் இறந்து பேயாக இருக்கின்றனர். அவர்களால் அந்த அரண்மனையை விட்டு வெளியில் போக முடியாமல் அங்கேயே இருக்கின்றனர். அவர்கள் வெளியே சென்றனரா? அவர்களை கொன்றது யார்? என்பதை படம் விளக்கும் படம்.

கதை:

முன்னுரை:

(1948 ஆம் ஆண்டு) கதிரேசன் காரில் சென்று கொண்டிருக்கும் போது வீர சேதுபதி மாளிகையை பார்த்து பார்த்து பிரமித்து போகின்றான். பொறமை கொள்கின்றான் அதே போல் ஒரு மாளிகையை கட்டித்தர முடியுமா? என்று அந்த அரண்மனையை கட்டியவர்களிடம் கேட்கும் போது. அவர்கள் முடியாது காரணம் இந்த அரண்மையை கட்டியது நாங்கள் அதற்கான் அடிப்படையை உருவாக்கியது வீர சேதுபதி என்று சொல்கின்றனர். பொறமை அவர் உள்ளத்தில் எட்டிப்பார்க்கின்றது… இதிலிருந்து படம் தொடங்குகின்றது.

பேய்கள் அறிமுகம்:

(1966 ஆம் ஆண்டு) அரண்மனைக்குள் சுந்தர்ராமன், தென்றல் மற்றும் அவர்களின் மகள் தங்கியிருக்கின்றனர். தென்றல் அவர்களுக்கு சமையல் செய்ய செல்லும் போது அவள் உடம்பில் ஆவி போன்ற ஒன்று புகுந்து கொள்கின்றது. சமையல் வேலை முடிந்தவுடன் தென்றல் உடலில் இருந்து ஆவி வெளியேறுகின்றது. சமைந்த சமையலை சாப்பிட்ட அனைவரும் சப்பாட்டின் ருசி எப்போது இருப்பதை விட நன்றாக இருப்பதாக உணர்கின்றனர். சாப்பிட அவர்கள் தூங்கும் போது சுந்தர்ராமன் மகள் கண்விழித்து பார்க்கின்றாள். அவள் அருகில் அவளை போன்ற ஒருத்தி படுத்திருப்பதை பார்த்து பதறீயடித்து சுந்தர்ராமன் தென்றல் அறைக்கு சென்று கூட்டி வருகின்றார். அவர்களும் அதை பார்த்து அதிர்ச்சியடைகின்றனர். மூவரும் சுந்தர்ராமன் அறைக்கு செல்கின்றனர். அங்கே தாங்களே (சுந்தர்ராமனும் தென்றலும்) படுத்திருப்பதை கண்டு  பேய் என்று அலறி அடித்து அரமணையை விட்டு வெளியேற முயற்சிக்கின்றனர். ஆனால் வெளியே செல்ல முடியாமல் ஏதோ சக்தி அவர்களை தடுத்து நிறுத்துகின்றது.

அப்போது அவர்கள் கண்ணுக்கு சமையல்காரன் சண்முகம் தெரிகின்றான். அவன் அவர்கள் இறந்து பேயாக மாறிவிட்டதாகவும். தானும் ஒரு பேய்தான் தென்றலின் உடலில் ஆவியாக புகுந்து அவன் செய்த சமையலை சாப்பிட்டதால் தான் அவர்கள் இறந்து போனதாக சொல்கின்றான். ஆனால் அவர்கள் எப்படி இறந்தார்கள் என்று தெரியவில்லையென்று சொல்கின்றான். அதுமட்டுமின்றி கதிரேசன் மொத்தக்குடும்பமாகிய தென்றல் தந்தை, தாய், தென்றலின் தாத்தா கதிரேசன், பையன் குடும்பம் சுந்தர பாண்டியன், அவரின் மனைவி குமாரி மற்றும் இரண்டு குழந்தைகள், அதுபோல் மகள் ராகவி மற்றும் மருமகன் பக்தவச்சலம் போன்றோரும் அங்கேயே ஆவியாக இருப்பதாக அவர்களை தென்றல், சுந்தர்ராமன் மற்றும் அவர்கள் மகளுக்கு அறிமுகப்படுத்துகின்றான் சமையல்காரன் சண்முகம். அது போல் கதிரேசனும் ஆவியாக தன்னைத்தானே தனிமைபடுத்திக்கொண்டதையும் சொல்கின்றான் சண்முகம். மொத்தத்தில் கதிரேசனின் குடும்பம் முழுவதும் ஆவியாக இங்கே இருப்பாதாக சொல்கின்றான்.

இங்கேயிருந்து யாராலும் வெளியேற முடியாது. வெளியாட்கள் யாராவது வந்து இவர்கள் சமைக்கும் சமையலை சாப்பிட்டு உயிரோடு இருந்தால் அவர்கள் மூலம் மட்டுமே வெளியேற முடியும் என்று  சொல்கின்றான் சண்முகம். வேறு வழியின்று ஆவிக்குடும்பங்கள் காத்திருக்கின்றது.

பேய்களை வெளியேற்ற வியூகம்:

(2021 ஆம் ஆண்டு) கதிரேசன் வாரிசுகளில் ஒருவரான சுரேஷ் மேனன் தன் மகன் இன்ஸ்பெக்டர் கதிருடன் அந்த அரண்மைக்கு முன் வந்து நிற்கின்றான். எப்படியாவது ஆவிகளை வெளியேற்ற வெளி நபர்களை அரண்மனைக்குள் தங்கவைக்க சொல்கின்றார். சுரேஷ் மேனன். ஆனால் அரண்மனையை பற்றி தெரிந்த உள்ளூர்காரர் யாரும் அங்கே தங்கமாட்டார்கள். அதனால் வெளியூர்காரர்களை ஏற்படு செய்யச்சொல்கின்றார்.

ருத்ரா, தாய் ஆர்யமாலா, தந்தை மற்றும் சகோதரன் நால்வரும் திருட்டு தொழில் செய்து கொண்டிருப்பவர்கள். அவர்களின் தொழில் எதிரியான கிஷோர் போட்டு கொடுத்து அவர்களை கைது செய்ய வைக்கின்றனர். அவர்களை விசாரிக்கும் இண்ஸ்பெக்டர் கதிரிடம் தாங்கள் திருடர்கள் அல்ல சுத்தம் செய்யும் தொழில் செய்பவர்கள் என்று சொல்கின்றனர். ஆனால் கதிருக்கு அவர்கள் திருடர்கள் என்று தெரியும். அரண்மையில் தங்க வைக்க அவர்களே சரியானவர்கள் என்று உணர்ந்து அரண்மைனை சுத்தம் செய்ய வேண்டும் என்று அவர்களை அரண்மனைக்கு அணுப்புகின்றான். ஆனால் ருத்ரா குடும்பத்தினர் எண்ணமோ அரமணையில் இருக்கும் பொருள்களை திருடி எடுத்துக்கொண்டு ஓட வேண்டும் என்பது தான். ருத்ரா மற்றும் குடும்பத்தினர் அரண்மனையில் கால் வைக்கும் போது அங்கிருக்கும் ஆவிகளு எப்பொழுது இல்லாத ஒரு உணர்வு ஏற்படுகின்றது.

ஆவிகளுக்கு அறிவுரையாளனாக இருக்கும் சண்முகம் இவர்கள் மூலம் வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் இவர்களை எப்படியாவது பௌர்ணமி வரை தங்க வைக்க வேண்டும். எப்போது கலகலப்புடன் ரகளை செய்து கொண்டிருக்கும் ஆவிகளை இங்கே ஆவிகள் இருப்பது அவர்களுக்கு தெரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கின்றான். ஆனால் அவர்களே அறியாமல் சேட்டைகள் செய்கின்றனர். இதைப்பார்த்து அரண்மனையில் பேய் இருப்பதை உணர்ந்து ஆர்யமாலா, ருத்ராவின் தந்தை மற்றும் சகோதரனும் பயந்து போகின்றனர். ஆனால் ருத்ராவோ இந்த ஆவி பேய் மீது நம்பிக்கையில்லாமல் இருக்கின்றனர். பயத்தில் கோவிலுக்கு செல்ல முடிவு செய்கின்றனர். ஆனால் ருத்ராவோ கோயிலுக்கு வரமுடியாது என்று சொல்கின்றாள். பௌர்ணமி அன்று ஆர்ய்மாலா, தன் கணவன் மகனுடன் கோயிலுக்கு செல்கின்றனர். அரண்மனையில் ருத்ராவோ ஆவிகளின் செய்த் சமையலை தன் அம்மா சமைத்ததாக எண்ணி சாப்பிடுகின்றாள். அவள் இறக்கவில்லை மாறாக ஆவிகள் அனைத்தும் அவள் கண்களுக்கு மட்டும் தெரிகின்றது. இதை கேள்விபட்ட அனைத்து ஆவிகளும் சந்தோசத்தில் இருக்கின்றனர். தனி அறையில் இருக்கும் கதிரேசனுக்கும் இது ஆச்சர்யமாக இருக்கின்றது. கோவிலுக்கு சென்ற ருத்ராவின் பெற்றோரிடம் அங்கே ஆவியிருப்பதையும் பௌர்ணமியில் அங்கே சாப்பிட்டவர்கள் அனைவரும் இறந்து போனதையும் சொல்கின்றனர். பதறி அடித்து அரண்மனைக்கு திரும்பி வருபவர்களிடம் ருத்ரா கண்களுக்கு பேய்கள் தெரிவதாக நீருபிக்கின்றாள்.

பேய்களை வழி நடத்தும் சண்முகம் இந்த பேய்கள் அனைத்தும் அரண்மனையைவிட்டு வெளியேற ருத்ராவால்தான் முடியும் என்று சொல்கின்றான். ருத்ராவிற்கு அரண்மனை சுற்றிக்காட்டுகின்றான். எதாவது உணர்வு வருகின்றதாக என்று கேட்கின்றான். எந்த உணர்வும் வரவில்லை என்று சொல்கின்றாள். சண்முகம் நீ ருத்ரா அல்ல முன் ஜென்மத்தில் அனபெல் என்று சொல்கின்றான்.

ராஜா வீர சேதுபதிதான் இந்த அரண்மனையின் ராஜா. தான் அவரின் சமையல்காரன் மட்டுமல்ல அவரின் நண்பன் என்று சொல்கின்றான். ரூ.300/- குறைந்த மதிப்புள்ள மலைகளுக்கு நடுவில் உள்ள ஜமீன்தார் கஜேந்திரனின் இடத்தை மற்றொரு ஜமீனான கதிரேசன் ஏலம் மூலம் விற்கின்றான். அந்த இடத்தை பல மடங்கு விலை கொடுத்து ராஜா வீர சேதுபதி ரூ.1500/- க்கு ஏலத்தில் எடுக்கின்றார். கதிரேசன் ஒன்றுமில்லாத நிலத்தை ஏன் அதிக விலைக்கு வாங்கினார் என்று குழபத்தில் இருக்கின்றார். வழியில் ராஜா வீர சேதுபதியின் கார் நின்று போகின்றது. அப்போது அங்கே வரும் வெளிநாட்டு பெண் அனபெல் அவர் காரை சரி செய்து கொடுக்கின்றார். அவர்கள் பழக்கம் அதிகரிக்கின்றது. தன் காதலிக்காக ஒரு பிரமாண்ட அரண்மனையை கட்டி அதில் அவரை மனைவியாக்கி வாழ நினைத்து மிக பிரமாண்ட அரண்மனையை கட்டி அனபெல்லை கைப்பிடிக்கின்றார். சமையல்காரன் சண்முகம் இவர்களின் அன்பைப்பார்த்து நெகிழ்ந்து போகின்றார்.

பலவழிகளில் அந்த அரண்மனையை கைப்பற்ற கதிரேசன் முயறசிக்கின்றான். முடியாமல் போக வீர சேதுபதிக்கும் அவரின் கர்பமாக இருக்கும் காதல் மனைவிக்கும் விஷம் கொடுத்து கொன்று அரண்மனையை ஆக்கிரமிக்கின்றான். அவருக்கும் சண்முகம் தான் சமையல்காரண். தன் முதலாளி மற்றும் நண்பனின் மரணத்திற்கு பழிவாங்க சாப்பாட்டில் விஷம் வைத்து கொல்கின்றான். ஆனால் கதிரேசன் சாப்பிடும் முன் அதை சண்முகத்தை சாப்பிட சொல்லி சோதிக்கின்றான். விஷம் சற்று நேரம் கழித்து வேலை செய்யும் என்று தெரியாத கதிரேசன் குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு இறப்பதுடன் சண்முகமும் இறந்து போகின்றான். அந்த குடும்பத்தில் சாப்பிடாமல் இருந்து உயிர்பிழைத்தவன் தான் சுரேஷ் மேனன். கதிரேசன் வம்சத்தில் இப்போது உயிரோடு இருப்பவர் அவர் மட்டுமே  என்று முன் கதையை சொல்கின்றான் சண்முகம்.ஆனால் இதையெல்லாம் ருத்ரா நம்பவில்லை.

முடிவு

சண்முகம் சொன்னதை கேட்ட கதிரேசன் குடும்பத்தினர் (ஆவிகள்) தங்கள் மரணத்திற்கு காரணம் சண்முகம் என்று தெரிந்து அவனை அடிக்க துரத்துகின்றனர். அதே நேரம் இந்த சொத்தை கதிரேசன் ஏமாற்றி வாங்கியது தவறு என்று கதிரேசன் குடும்பத்தினர் உணர்கின்றனர். இந்த அரண்மனை ருத்ராவிற்குதான் சொந்தமாக வேண்டும் என்று அனைவரும் நினைக்கின்றனர்.

அப்போது ருத்ரா குடும்பத்தை வெளியேற்ற சுரேஷ் மேனன், கதிர் அடியாட்களுடன் வருகின்றான். ருத்ராவை காப்பாற்ற ஆவிகள் முயலும் போது அவர்களால் எந்த பொருளை தூக்க முடியவில்லை, காரணம் அவர்கள் நல்ல எண்ணத்தால் ஆவிகள் புனிதமானதால். ஆனால் அவர்கள் அனைவரும் ஒருங்கினைந்து சுரேஷ் மேனன் ருத்ராவை கொல்ல முயலும் போது காப்பாற்ற முயலும் போது அவர்கள் ஆவி விண்ணுலம் நோக்கிபயணிக்கிகின்றது.

மீண்டும் சுரேஷ்மேனன் கொல்ல முயலும் போது அங்கே வரும் அரசு அதிகாரி (வீர சேதுபதி சாயலில் இருக்கும்) ருத்ராவை காப்பாற்றி வெளியேற சொல்கின்றார். அந்த அரண்மனையை அரசு அருகாட்சியகமாக மாற்றியதை சொல்கின்றார். அவரையும் அறியாமல் ருத்ராவின் மேல் காதல் வருகின்றது. அனபெல சேதுபதி 2 தொடரும்..

பாராட்டுக்குறியவை:

ஆங்கிலத்தில் பேய்ப்படங்கள் என்ற மிரட்டும் அடிப்படையில் இருக்கும். ஆனால் தமிழில் பேய்படங்களை பார்த்தால் பேயை நேசிக்கும் அடிப்படையில் டிரெண்ட் மாறியுள்ளது. அந்த அடிப்படையில் வெளிவந்திருக்கும் மற்றொரு பேய் படம்.

பேய்படங்கள் என்றால் எதாவது ஒரு காட்சியிலாவது பேய் அடிப்படையில் மிரட்டும். ஆனால் இதில் பேய்கள் அனைத்தும் ஆரம்பம் முதல் இறுதிவரையில் சராசரி மனித அடிப்படையில் இருக்கும் பேய்க்குடும்பமாக நம்மை மகிழ்விக்கின்றது.

கலை மற்றும் கம்யூட்டர் கிராபிக் பாராட்டுகுறியதில் முதன்மையானவர்கள்

அன்பெல் மற்றும் ருத்ரா கதாப்பாத்திங்கள் ஒன்று அமைதியாக அனைவரையும் காதலிக்க வைக்கும் கதாப்பாத்திரம். மற்றொன்று ஜாலியான கதாப்பாத்திரம். இரண்டிலும் டாப்ஸி பன்னு நன்றாக நடித்துள்ளார்.

வீர சேதுபதி கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமானவராக விஜய் சேதுபதி அழகாக பொருந்தியுள்ளார்.

ஒட்டு மொத்த கதையையும் சுமப்பதுடன் திரைக்கதையை தன் தோளில் சுமந்து முதன்மை கதாப்பாத்திரத்திற்கு இணையாக என்று சொல்வதைவிட முதன்மை கதாப்பதிரமாக சமையல்காரன் சண்முகம் யோகி பாபு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

சிறு சிறு கதாப்பாத்திரங்களையும் பெரிய அளவில் பார்க்கும் அடிப்படையிலான நகைச்சுவை அதகளத்தில் இயக்குனர் பயன்படுத்தியிருப்பது அருமை.

லாபம் மற்றும் துக்ளக் தர்பார் படங்களின் எதிர்மறை விமர்சனங்களை தாண்டி விஜய் சேதுபதிக்கு நேர்மறை விமர்சனங்களை கொடுக்கும் படம் இது.

நெருடலானவை:

விஜய் சேதுபதி கதாப்பத்திரப்படைப்பு மிக குறைவான காட்சிகள் கௌரவ வேட கதாப்பாத்திரம் போல் உள்ளது.

விஜய் சேதுபதி வீர சேதுபதியாக தோன்றும் சிலகாட்சிகளில் அவரது நடிப்பு முந்தைய படங்களை பிரதிபலிப்பது போல இருக்கின்றது. ஆனாலும் அந்த பாத்திரப்படைப்பில் அவர் கச்சிதமாக பொருந்தியிருப்பதால் அதை மறக்க செய்கின்றது.

கதிரேசனாக நடித்திருக்கும் ஜெகபதி பாபு கதாப்பாத்திரத்தில் அழுத்தம் கொடுக்கமால் ஏதோ வந்து செல்வதை போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது.

இறுதி காட்சிகள் கலகலப்பாக இருந்தாலும் முடிவில் அழுத்தமில்லாமல் ஏதோ படத்தை முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவசரகதியில் படம் முடிவதை போன்ற உணர்வு ஏற்படுகின்றது. அது அரசு அதிகாரி பாத்திரத்தில் விஜய சேதுபதி வந்த உடன் அரசு இந்த அரண்மனையை அருங்காட்சியகமாக மாற்றியுள்ளது என்ற ஒற்றை வார்த்தையில் இவ்வளவு நீள கதையை பொசுக்கென்று முடித்தது போல் இருக்கின்றது.

தொகுப்பு:

அனபெல சேதுபதி கண்களையும் மனதையும் நிறைக்கும் அது மட்டுமின்றி பேய்களின் ரசிகனாக நம்மை மாற்றும் திரைப்படம். பேய் குடும்பத்தின் அதகள நகைச்சுவையை நம் குடும்பத்துடம் குதுகலமாக ரசிக்கலாம்.



Movie Gallery

  • review

    Prayaga Martin

  • review

    Rashmika Mandanna

  • review

    Sai Dhanshika

  • review

    Sri Divya

  • review

    Poorna

  • review

    Nivetha Pethuraj

  • review

    Amala Paul

  • review

    Yashika Aannand

  • review

    Bhavana

  • review

    Ritu Varma

  • review

    Trisha Krishnan

  • review

    Esther Anil

  • review

    Aishwarya Rai

  • review

    Dhanya Balakrishna

  • review

    Nikki Galrani

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Web Designing Comapny

Jiojith Web Services

SEO Company in Chennai

We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.