Join/Follow with Our Social Media Links

Dikkiloona

டிக்கிலோனா பட திரைவிமர்சனம்


KJR ஸ்டுடியோஸ் சார்பில் கோடப்பாடி J ராஜோஷ் தயாரித்துள்ள திரைப்படம் டிக்கிலோனா. கார்திக் யோகி இந்த படத்தை இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அர்வி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜோமின் படத்தை தொகுத்துள்ளார்.

சந்தானம் (மணி),  அனகா (பிரியா), ஷிரின் கஞ்சன்வாலா (மேக்னா),  யோகிபாபு (ஆல்பர்ட்), சித்ரா லக்ஷ்மணன் (கோபால்)  ஆனந்தராஜ், முனீஸ்காந்த், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், ஹர்பஜன் சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர

இந்த திரைப்படம் ஜீ5 (Zee5) ஒடிடி தளத்தில் 10.09.2021 முதல் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கின்றது.

கதைக்கரு:

வாழ்கையில் ஓட்டத்தில் நாம் செய்த தவறுகளால் வாழ்கையே தடம் மாறிப்போகும். காலத்தை கடந்து பின்னோக்கி சென்று அந்த தவறை திருத்தினால் வாழ்கை சந்தோசமாக நடக்கும் என்ற எண்ணம் நம் அனைவருக்கும் இருக்கும். அந்த அடிப்படையே கதைக்களமாக கொண்ட அறிவியல் புணைக்கதை.

காமெடியானக இருந்து தடத்தை மாற்றி நாயகனாக முயற்சி செய்த பலர் தோல்வியையே சந்தித்திருக்கின்றனர். ஆனால் தன் முயற்சி சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தியனை போல் சந்தானம் முயற்சியை தொடர்ந்து கொண்டே இருக்கிறார். அவர் கதாநாயகனாக நடித்த பல படங்கள் மினிமம் கேரண்டி படமாகவே இருக்கின்றது. மிகப்பெரிய சூப்பர் ஹிட் படம் கொடுக்க வேண்டிய நிர்பந்ததில் இருக்கும் சந்தானம் தனது கதைகள்  அனைத்தையும் நகைச்சுவை தளத்திலேயே பயனிக்கும் வகையில் முடிவு செய்து நடிக்கின்றார். டிக்கிலோனா படமும் அந்த அடிப்படையிலானது தான்.

கதை:

நிழல்கள் ரவி வர்ணனையில் கதை நகர்கின்றது. டைம் மிஷினை வைத்து மிகப்பெரிய மாற்றங்களை நிகழ்த்திய ஒரு மனிதனை பற்றிய கதை என்ற தொடக்கத்துடன் கதை ஆரம்பமாகின்றது.

2027 ல் மொட்டை ராஜேந்திரன் டாக்டராக ஒரு பைத்தியக்கார மருத்துமனையில் மின்சாரம் நின்று போகின்றது. அதை சரிசெய்ய அங்கே வருகின்றார் E B லைன் மேன் மணி. அங்கே டிக்கிலோனா என்ற கார் டிக்கியில் ரகசியமாக இருக்கும் அறிவியல் ஆய்வுக்கூடத்தில் மின்சாரத்தை திருடி ஸ்டான்ஃபோர்டு தலைமையில் டைம் மிஷின் சார்ந்த ஆய்வில் இருக்கின்றனர். ஆனால் பலகாலமாக வெறும் ஆய்வில் மட்டும் இருக்கின்றது அந்த ஆராய்ச்சி இருக்கின்றது. அங்கே துப்புறவு பணியாளராக வேலை பார்க்கின்றான் ஆல்பர்ட். அங்கே நடைபெறும் ஒரு மின்சார விபத்தில் டை மெஷின் வேலை செய்கின்றது. ஆனால் அதை இயக்க முடியாமல் தவிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஆனால் மின்சாரம் தாக்கிய ஆல்பர் மிகச்சிறந்த அறிவாளியாகின்றான். அவன் உதவியால் டைம் மிஷின் வெற்றிகரமாக வேலை செய்கின்றது.

மணி தன் மனைவி பிரியாவிடம் மிகவும் கேவலப்பட்டு மாமனார் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் கோபால் வீட்டில் வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கின்றான். தன் நிலையை மாற்ற முயற்சிக்கும் மணி தன் நண்பன் ஆல்பர்ட் உதவியுடன் 2020 ற்கு சென்று தன் திருமணத்தை தடுத்து நிறுத்தி தனது வாழ்கையை மாற்ற முயல்கின்றான். அதன் படி Exit வாட்ச் ஒன்றையும் கொடுத்து மணியை 2020 க்கு அணுப்புகின்றான் ஆல்பர்.

ஒரு வேலை அப்படி மணி வாழ்கையை மாற்றினால் மிகப்பெரிய விளைவுகள் ஏற்படும் என்று ஸ்டான்ஃபோர்டு இரண்டு அடி முட்டாள்களான ஆனந்தராஜ் மற்றும் முன்ஸ்கானை மணியை கண்டுபிடித்து 2027 க்கு கொண்டு வர சொல்கின்றனர்.

சிறந்த ஹாக்கி வீரராக வரவிரும்பும் மணியும் பிரியாவும் ஒருவருக்கொருவர் காதலித்து திருமணத்திற்கு தயாராகிக்கொண்டிக்கின்றனர். பிரியாவின் தோழி மிகப்பெரிய பணக்காரி மேக்னாவை செஃப் கார்த்தி ஒரு தலையாக காதலித்து சுற்றிக்கொண்டிக்கின்றான். EB மணி (2027) மணியிடம் மாட்டிக்கொள்கின்றான். கல்யானத்திற்கு பிறகு நடந்த அனைத்தையும் சொல்கின்றான். ஆனால் அதை நம்ப மறுக்கும் மணியிடம் (2020) தன்னிடம் இருக்கும் Exit கடிகாரம் உதவியால் 2027 க்கு அணுப்புகின்றான்.

2027 க்கு வரும் மணி தன் வீட்டுக்கு செல்கின்றான். அப்பா அம்மாவுடன் சண்டை போட்டு தன் அப்பா வீட்டிற்கு பிரியா சென்றதை அறிகின்றான். ஹாக்கி வீரராக முடியாமல் வெறும் EB லைன் மேன் வேலையில் தான் இருப்பதை தெரிந்து கொள்கின்றான். பிரியாவை சமாதனப்படுத்த முயன்று தோற்று போகின்றான். அந்த நேரத்தில் மேக்னாவிடமிருந்து போன் வருகின்றது. அவளை பார்க்க ஹோட்டலுக்கு செல்கின்றான். அங்கே அவள் கார்த்திக் காதலை சொன்ன வித்ததில் மயங்கி அவனை திருமணம் செய்துக்கொண்டதையும் அவனை மிகப்பெரிய ஆளாக மாற்றியதையும் தற்போது இருவருக்கும் ஒத்து போகாமல் விவாகரத்து செய்வதையும். அவள் தன்னை நேசிப்பதையும் அறிகின்றான் மணி. மீண்டும் 2020 க்கு சென்று திருமணத்தை தடுத்தி நிறுத்தி கார்த்திக் மேக்னாவிற்கு காதலை சொல்வதையும் தடுத்து மேக்னாவை திருமணம் செய்து கொள்கின்றான்.

மீண்டும் 2027 பணக்கார வாழ்கையில் விவாகரத்துக்காக நீதிமன்றத்தில் இருக்கின்றனர். மணியும் மேக்னாவும். 7 ஆண்டு நினைவில் இல்லாத காரணத்தால் அந்த விவாகரத்தை தடுத்து நிறுத்துகின்றான். அந்த விவாகரத்து அடிப்படை தன் மனைவி மாடலிங்க் செய்வது, குடித்துவிட்டு சுற்றுவதும், ஆண் நண்பர்களுடன் சகவாசத்தில் இருப்பது தெரிந்து வருத்தத்தில் இருக்கின்றான். அப்போது அவன் கார்த்திக்கை சந்திக்கின்றான். அப்போது தான் அவன் தப்பித்துவிட்டத்தை தான் மாட்டிக்கொண்டதையும் சொல்கின்றான். அவன் பிரியா எப்படி இருக்கின்றாள் என்று பார்க்க விரும்பி கார்த்திக்கிடம் எப்படியாவது போன் நம்பரை நம்பரை வாங்கி கொடுக்க சொல்கின்றான்.

பிரியாவை பார்க்கு மணி அவள் ஒரு ஹோட்டலில் வேலை செய்துகொண்டிருப்பதை தெரிந்து கொள்கின்றான்.  அவளிடம் ஏன் கல்யாணம் செய்துகொள்ளவில்லை என்று கேட்கின்றான். அவர்கள் காதலித்த போது செய்த தவறால் அவள் கருவுற்றதாலும் அதனை கலைத்த குற்ற உணர்வாலும் கல்யாணம் செய்துகொள்ள விரும்பவில்லையென்று சொல்கின்றாள்.

மீண்டும் 2020 க்கு சென்று கல்யாணத்தை EB மணியும், ஹாக்கி மணியும் தடுக்க நினைப்பதை தடுத்து பிரியாவையே கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமென்று நினைத்து 2020 க்கு செல்கின்றான். அங்கே மூன்று மணிகள் இருக்கின்றனர். அது மட்டுமின்றி இதை தடுக்க வந்த ஆனந்த ராஜ் மற்றும் முனிஸ்கான் இருக்கின்றனர். ஆனந்தராஜ் முனிஸ்கான் முட்டாள் தனத்தால் 2027 க்கு திரும்புகின்றனர். மூன்றாவதாக வந்த மணியின் பேச்சை கேட்டு மற்ற இருவரும் திருமணத்தை தடுக்காமல் நடத்த அணுமதிக்கின்றனர்.

மணி ஹாக்கியில் சிறந்த வீரராக வருகின்றார். அன்பான மகளுடன் பிரியாவும் மணியும் வாழ்வதாக டிக்கிலோனாவை முடிக்கின்றனர்.

பாராட்டுக்குறியது:

மூன்று காலப்பயனத்தில் மூன்று கதாப்பாத்திரங்களாய் சந்தான மூன்று கதாப்பாத்திரத்திற்கு வேற்றுமை தெரியும் அளவிற்கு வித்தியாசப்படுத்தி நடித்துள்ளது பாராட்டுக்குறியது.

ஒரு அறிவியல் புணைக்கதையில் இரண்டு குழப்பமான காலப்பயணக்கதையை அது ஒரே களத்தின் பயனித்தின் அடிப்படையை ஓரளவிற்கு அழகாக திரைக்கதை மூலம் இணைக்க முயன்றிருப்பது பாராட்டுக்குறியது.

காமெடி என்பதை பிரதானமாக கொண்டு உருவாக்கிய கதையில் அதற்குறிய அடிப்படையில் ரசிகர்களை இந்த படம் ஒரளவிற்கு திருப்திபடுத்தியுள்ளது.

பிரியாவாக நடித்திருக்கும் அனகா இரண்டு மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் ஒன்று அன்பான காதலியாகவும், கணவனை ஆட்டிப்படைக்கும் அடிப்படையிலும் அருமையாக நடித்துள்ளார்.

மேக்னாவாக நடித்திருக்கும் ஷிரின் காஞ்சன்வாலா அழகுப்பதுமையாக மட்டுமில்லாமல் கணவனை வெறுப்பேற்றும் பணக்கார தோரனையில் தன் கதாப்பாத்திரத்தை அழகாக கொடுத்துள்ளார்.

நெருடலானவை:

ஒரு காலப்பயணக்கதை குழப்பமில்லாமல் சொல்வது என்பது அவ்வளவு எளிதானதல்ல. கல்யாணம் நடந்திருந்தால் முதல் பாகத்தில் நடந்த நிகழ்வுகள் தானே வந்திருக்க வேண்டும். ஆனால் இறுதி காட்சியை இயக்குனர் சினிமாத்தனமாக சித்தரித்திருப்பது ஏன்? படத்தின் மிகப்பெரிய குறை என்று சொல்வதை விட மிகப்பெரிய ஓட்டை என்றே சொல்லவேண்டும்.

காமெடிக்கு அதிகம் வாய்ப்புகள் உள்ள திரைக்கதையில் ஏராளமான கதாப்பாத்திரங்களை தேவையில்லாமல் உருவாக்கி அங்கங்கே நகைச்சுவையை தெரிக்க விடுவதாக நினைத்து. அவ்வப்போது திரைக்கதையை மெதுவாக நகர்வதை போல் உணரவைக்கின்றது திரைக்கதை.

நிழல்கள் ரவியை பெரிய அளவில் சித்தரித்து அவரையும் பைத்தியமாக சித்தரித்து ஓரு காட்சியை மொக்கையாக்குவது நகைச்சுவையாக ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றது.

தொடர் நகைச்சுவைகான கதைக்களத்தில் சிறிய அளவிலான நகைச்ச்சுவைகள் அந்த நிமிடத்தில் ரசிக்க வைத்தாலும் காட்சிகள் நிறைவடைந்த திருப்தியை உருவாக்கவில்லை.

தொகுப்பு:

பல நகைச்சுவை திரைப்படங்கள் காலப்போக்கில் கடந்து செல்லும். சில நகைச்சுவை படங்கள் காலம் கடந்தும் மனதில் நிற்கும் டிக்கிலோனா திரைப்படம் முதல் வகை. தற்காலிகமாக மனதில் நிற்கும் நகைச்சுவை திரைப்படம்.

Movie Gallery

  • review

    Aishwarya Lekshmi

  • review

    Aathmika

  • review

    Kalyani Priyadarshan

  • review

    Kareena Kapoor

  • review

    Kushboo

  • review

    Mamta Mohandas

  • review

    Shalini

  • review

    Kalyani Priyadarshan

  • review

    Varalaxmi Sarathkumar

  • review

    Trisha Krishnan

  • review

    Sshivada

  • review

    Shruti Haasan

  • review

    Andrea Jeremiah

  • review

    Rashmika Mandanna

  • review

    Deepika Padukone

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Web Designing Comapny

Jiojith Web Services

SEO Company in Chennai

We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.