Article by : Admin on 20-06-2021
97.2 BIG FM ரேடியோவில் ஜாக்கியாக பாலாஜி பட்டுராஜ், ரேடியோ ஜாக்கியாக புகழ் பெற்ற காரணத்தால் R.J பாலாஜி என்ற பெயரால் பிரபலமானார். புத்தகம் படத்தில் பின்னனி குரல் கொடுத்தவர். பல தனியார் மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். எதிர்நீச்சல் படத்தில் R.J பாலாஜியாகவே ரேடிய நிகழ்ச்சி தொகுப்பாளராக தலை காட்டி முதன் முதலில் கேமரா முன் தலைக்காட்டினார்.
தீயா வேலை செய்யனும் படத்தில் கர்ணா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார். வடகறி, இது என்ன மாயம், யட்சன் படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெரிய பெயரை கொடுத்த படம் என்றால் நானும் ரௌடிதான். அதன் பிறகே பட முழுவதும் வரக்கூடிய முழு நகைச்சுவை நடிகாராக மாறினார். விஜயசேதுபதி, சித்தார்த், பிரபு தேவா, அதர்வா, கார்த்தி, சூர்யா, மகேஷ்பாபு சிவகார்த்திகேயன், ஜீவா போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார். நடிகர் கமலுடன் இந்தியன் 2 படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கின்றார்.
கே.ஆர்.பிரபு இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரித்த இவர் எழுதிய கதை எழுதி நாயகனாக நடித்த அரசியல் காமெடி படம் LKG. அதன் பிறகு ஐசரி வேலன் தயாரித்த மூக்குத்தி அம்மன் படத்தில் இயக்குனராகும் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி சேணலில் கிரிக்கெட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பட்டி தொட்டியெங்கும் மக்களால் விரும்பப்பட்ட நபரகாவும் மாறியுள்ளார்.
இன்று (20.06.2021) 36வது பிறந்த நாள் கொண்டாடும் இவர் ரசிகர்களுக்கு விருந்தாக “நாலணா முருக்கு” என்ற போஸ்டரை டிவிட்டரில் வெளியிட்டு இருந்தார். இது அவரின் அடுத்த படத்தின் தலைப்பாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.