Article by : Admin on 11-07-2021
விஜய், அஜித், சூர்யா என்ற உச்ச நட்சத்திரங்களின் ரசிகர்கள் என்று சொல்வதைவிட வெறியர்கள் அதிகம். கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் தீலிப்குமார் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் “பீஸ்ட்” பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதிலிருந்து சமூக வலைத்தளத்தில் இளைய தளபதி ரசிகர்களுக்கும் தல அஜீத் ரசிகர்களுக்கும் முட்டள் மோதல்கள் அதிகரித்தது. நேற்று லோகேஷ் கனகராஜ் இயக்க உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் “விக்ரம்” பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதிலிருந்து. தல ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஆதங்கமாக மாறி “வலிமை” பட தயாரிப்பாளரை வறுத்தெடுத்தனர் தல ரசிகர்கள்.
காரணம் “பீஸ்ட்” மற்றும் “விக்ரம்” பட தொடங்கும் முன்னே தொடங்கப்பட்டது “வலிமை” படம். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தலா அஜித் பிறந்த நாளான்று (01.05.2021) வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்த்த ரசிகர்களுக்கு கொரானா பேரலை காரணமாக வெளியிடப்படாது என்ற தயாரிப்பாளர் அறிவிப்பால் நொந்து போனார்கள் தல ரசிகர்கள். கொரானாவிற்கும் போஸ்டர் வெளியீட்டிற்கும் என்ன சம்மந்தம் என்ற கேள்விகள் அவர்கள் மனதிற்குள் எழுந்தாலும். தல அஜித் என்ற ஒற்றை ஆளுமை மனதில் நிறைந்திருந்த காரணத்தால் அந்த சமாதானத்தை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் நேற்று “விக்ரம்” படம் போஸ்டர் வெளியிட்டவுடன் தல ரசிகர்களின் கோபம் வெடிக்க ஆரம்பித்தது.
அதன் பாதிப்பு காரணமாக உடனடியாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளானது படக்குழு. இன்று 11.07.2021 மாலை 6 மணிக்கு ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. இது அவசரகதியில் வெளியிடப்பட்டதா? இல்லை ஏற்கனவே தயாரித்து வைத்து வெளியிட்டனரா? என்பது படக்குழுவினருக்கே வெளிச்சம்.
போனிகபூர் பேவியூ புராஜெக்ட்ஸ் LLP சார்பில் தயாரித்துள்ள படம் “வலிமை”. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, மற்றும் நேர்கொண்ட பார்வை படங்களை இயக்கிய H.வினோத் படத்தை இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் வேல்குட்டி படத்டதை தொகுத்துள்ளார். அஜித் குமார், ஹூமா குரேஷி, கார்திகேயா கும்மகொண்டா, யோகிபாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இன்று வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் அஜித் ரசிகர்களை திருப்திபடுத்தியுள்ளாதா? அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா? என்பது கேள்விக்குறிய ஒன்று தான். “பீஸ்ட்” vs “விக்ரம்” vs “வலிமை” சமூக வலைத்தளத்தின் ரசிகர்களின் நேர்மறை எதிர்மறை விமர்சனங்களுக்கு வழி வகுத்துள்ளது.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.