Join/Follow with Our Social Media Links

மக்கள் செல்வன் தவறான பாதையில் செல்கிறாரா..???

Article by : SS Raj on 28-09-2021

மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் விஜய் சேதுபதி. இவர் ரசிகர்களுக்கு மட்டுமல்ல தயாரிப்பாளர்களுக்கும் பிரியமானவர். காரணம் இவர் படங்களில் நடித்தால் அந்த படம் தயாரிப்பாளர்களுக்கு லாபம் தரும் ஒன்றாக அமைவது தான். அது மட்டுமின்றி பந்தா இல்லாத நடிகர். முக்கியத்துவம் வாய்ந்த கதாப்பாத்திரம் என்றால் கண்டிப்பாக நடித்து கொடுப்பவர் என்ற பார்வை மற்றும் நம்பிக்கை இவர் மீது அனைவருக்கும் இருந்தது.

சமீபகாலமாக விஜய் சேதுபதி. அவர்கள் பணத்திற்காக கண்ணை மூட்டிக்கொண்டு கிடைக்கின்ற அனைத்து பட வாய்ப்புகளை ஒப்புக்கொள்கின்றார். அதனால் சரியான கதையை தேர்ந்தெடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு ஊடகங்கள் மத்தியில் பெரிய அளவில் ஊதி பெரிதாக்கப்படுகின்றது. இதை நம்பிய ரசிகர்கள் பலரும் அதை உண்மையென்று எண்ணத்தோன்றும் அளவிற்கு அந்த செய்திகள் மன மாற்றத்தை உருவாக்கியுள்ளது. அதற்கு காரணம் கடைசியாக வெளியான மூன்று திரைப்படங்கள் முறையே லாபம், துக்ளக் தர்பார் மற்றும் அனபெல் சேதுபதி போன்ற படங்களின் மீதான எதிர்மறை விமர்சனங்களே இதற்கு அடிப்படை.

பொதுப்படையாக ஒரு விஷயத்தை விமர்சிப்பதைவிட அதன் பின்னனியை ஆராய்வது முக்கியம் வாய்ந்த ஒன்று. பொதுப்படையான எதிர்மறை விமர்சனம் என்பது மேலோட்டமான ஒன்று. கண்ணை மூடிக்கொண்டு விமர்சனம் மேற்கொள்வது தவறான ஒன்று.

கடந்த இரண்டாண்டுகளாக திரையுலகத்தை ஆட்டிப்படைத்த கொரானா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு திரைத்துறையே மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது அனைவரும் அறிந்ததே. இதன் காரணமாக பல படங்கள் ஒடிடி தளத்தில் வெளியானது, சில திரைப்படங்கள் நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. ஊரடங்கு தளர்விற்கு பின் இப்போது படங்கள் வெளிவர தொடங்கியுள்ளது.

விஜய் சேதுபதி. திரையுலக பயணம் ஒருபார்வை. 2004 முதல் திரையில் சிறு சிறு வேடங்களில் தலைக்காட்டியவர் விஜய் சேதுபதி 2010 ல் வெளியான தென்மேற்கு பருவகாற்று திரைபடம் தான் அவருக்கு திரையுலகில் தனித்துவ அடையாளத்தை பதிக்க உதவியது. 2012 பீட்சா படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.2012 ஆம் ஆண்டில் சுந்தர பாண்டியன், பீட்சா மற்றும் நடுவுல கொஞ்சம் பக்கத காணோம் என மூன்று படங்கள் வெளியானது. 2013 ல் இரண்டு படங்கள் வெளியானது, 2014 ல் ஐந்து படங்கள் வெளியானது. 2015 ல் ஐந்து படங்கள் வெளியானது, 2016 ல் ஆறு படங்கள் வெளியானது. 2017 ல் ஐந்து படங்கள் வெளியானது. 2018 ல் ஏழு படங்கள் வெளியானது. 2020 ல் ஆறு படங்கள் வெளியானது. 2020-ல் மூன்று படங்கள் வெளியானது. 2021 ல் ஒரு தெலுங்கு படம் ஒரு வெப் சீரிஸ் மற்றும் இப்பொது வெளியான மூன்று படங்கள்.

கணக்கின் படி ஆண்டுக்கு சராசரியாக ஆறு படங்கள் இவர் படங்கள் வெளியாகியுள்ளது. 2020 மற்றும் 2021 ல் வெகுயானது இப்போது வெளியான மூன்று படங்களை தவிர்து நான்கு படம் மற்றும் ஒரு வெப்சீரிஸ் மட்டும். அதவாது இவர் சராசரியில் எட்டு படங்கள் குறைவு. அதில் மூன்று படங்கள் இப்போது வெளியாகியுள்ளது. அப்படியென்றால் இன்னும் 5 படங்கள் வெளியாகியிருக்க வேண்டும். இன்னும் வெளிவரவிருக்கும் படங்களின் ஒரு ஹிந்தி படம் உட்பட 11 படங்கள். இதில் மூன்று படங்கள் மட்டுமே முடிவடைந்திருக்கின்றது. இந்த அடிப்படையில் அனைத்து வெளிவர 2022 முதல் 2023 பாதிவரை இருக்கும்.

தயாரிப்பாளர்களின் விருப்ப நடிகர் என்ற அடைமொழியில் இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி. சராசரி எண்ணிக்கையின் அளவைவிட குறைவாகத்தான் நடித்துக்கொண்டிருக்கின்றார். அதனால் முன் தொகை வாங்கிகொண்டு கண்ணாபின்னாவென்று படங்களை ஒத்துக்கொள்கின்றார் என்ற குற்றச்சாட்டு பொய்யான ஒன்று.

இரண்டாவது கதையை தேர்ந்தெடுப்பதை பற்றி பேசுகின்றனர் அதற்கு காரணம் லாபம், துக்ளக் தர்பார் மற்றும் அனபெல் சேது படங்கள் சார்ந்த விமர்சனம். அந்த அடிப்படையையே ஆராய்வோம்.

முதல் லாபம் திரைப்படத்தை எழுதி, இயக்கியவர் மறைந்த இயக்குனர் S.P.ஜனநாதன். இவர் படங்களான இயற்கை, ஈ, பேராண்மை மற்றும் புறம் போக்கு என்ற பொதுவுடமை படங்களில் புறம் போக்கு என்ற பொதுவுடமை விமர்சன ரீதியாக பாராட்டை பெற்று வசூல் அடிப்படை சற்று பின்னடைவை சந்தித்தது, அதை தவிர பிற படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றியை பதிவு செய்த படங்கள். இப்படிப்பட்ட இயக்குனரின் படைப்பு என்றால் நடிக்க விரும்பாத நடிகர்கள் யாராவது இருப்பார்களா? சரி இயக்குனருக்காக படத்தை ஒத்துக்கொண்டாரா? கதை கேட்கவில்லையா? என்ற எண்ணம் உருவாகும். கண்டிப்பாக கதை அடிப்படையை உணர்ந்தே அவரே தயாரிப்பாளராக அந்த படத்தை தயாரித்தார். அப்புறம் ஏன் படம் தோல்வியடைந்தது. முதலில் லாபம் படத்தில் அவரது கதாப்பாத்திரம் வலிமையுள்ள ஒன்றாக உருக்கியிருந்தார் இயக்குனர் என்பதை படம் பார்த்த அனைவரும் அறிவார்கள். இயக்குனர் தன் ஆதர்சன பொதுவுடமை கருத்துக்களை பிற படங்களில் அள்ளி தெளித்திருந்தார். அவை மக்களிடம் ஒரு வகை ஈர்ப்பை உருவாக்கியிருந்தது என்பதை அனைவரும் அறிவர். அதனால் தன் பொதுவுடமை கோட்ப்பாட்டை முழுமையாக கொடுத்தால் மக்கள் ரசிப்பார்கள் அது மட்டுமின்றி பொதுவுடமை கோட்பாடு அனைவருக்கும் விளக்கப்படும் என்று எண்ணியிருப்பார் இயக்குனர். சில விஷயங்கள் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் அந்த அடிப்படையில் தான் இந்த திரைப்படம் விமர்சனங்களை நோக்கி சென்றது. ஆனால் இயக்குனருக்கு ஒரு சந்தை நிலவரம் தெளிவாக உணரவில்லை. பொதுவுடமை எந்த அடிப்படையில் இந்தியாவில் தோல்வியை நோக்கி சென்றதோ அதே அடிப்படையை முழுமை படுத்த நினைத்தது தான். இதில் நடிகர் தவறான கதையை தேர்ந்தெடுத்தார் என்று சொல்வது தவறான ஒன்றாகும்.

அடுத்து துக்ளக் தர்பார். இந்த படத்தலைப்பு மக்களிடமும் ரசிகர்களிடமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. காரணம் துக்ளக் என்ற ஆட்சிமுறை அடிப்படை. சரி கதையும் அருமையான ஒன்று தான் சறுக்கல் என்பது திரைக்கதையில் தான். புத்திசாலித்தனமாக சொல்ல வேண்டிய ஒரு கதையில் புத்திசாலி தனம் என்ற பெயரில் சொத்தப்பல்களை வைத்த இயக்குனரே இதற்கு பொறுப்பு. தேர்ந்தெடுத்த கதை அருமைதான். சரி நடிகராக விஜய் சேதுபதி. இந்த சொதப்பலை சொல்லியிருக்க வேண்டும் என்று சிலர் கேட்கலாம். அப்படி கேட்டால் இயக்குனரை இந்த நடிகர் டார்ச்சர் செய்கின்றார் என்ற அடிப்படையே உருவாகும். சரி பட வெளியீட்டிற்கு முன் ரஷ் பார்க்கும் போது இதை சொல்லியிருந்து திருத்த சொல்லியிருக்கலாம். ஆனால் அப்படி செய்யும் போது தயாரிப்பாளருக்கு நஷ்டம். தயாரிப்பாளரின் நாயகனாக வலம் வருபவர் அதையும் பார்க்க வேண்டும். கதையும் களமும் அருமையான ஒன்று தான். ஆனால் திரைக்கதை இயக்கத்தின் சொத்தப்பல் தான் தோல்விக்கு அடிப்படை. ஒரு கமர்ஷியல் கதைக்குறிய களம். ஒரே அடிப்ப்டையில் நடித்துக்கொண்டிருக்கும் போது இது போன்ற கமர்ஷியல் கதைக்களத்தில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் அனைத்து நடிகர்களுக்கும் வருவது இயல்பே. இதன் தோல்வியின் அடிப்படை தெரிந்தே திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக தொலைக்காட்சிகளில் வெளியிட்டனர் என்றே தோன்றுகின்றது. நிச்சயம் தயாரிப்பாளருக்கு பெரிய இழப்பு இருக்காது. இழப்பிலிருந்து தயாரிப்பாளார் தப்பித்தற்கு அடிப்படையே நடிகரின் மதிப்பு தான்.

அனபெல் சேதுபதி இதில் விஜய் சேதுபதி. முதன்மை கதாப்பாத்திரமல்ல. அவரை அடிப்படையாக கொண்ட கதையும் அல்ல. அவருக்கு கொடுத்த அடிப்படையை இதுவரை யாரும் விமர்சனம் செய்யவில்லை என்பதே உண்மை. ஆனால் இறுதி காட்சியில் அவர் வருவதை தவிர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகின்றது. ஒரு பேய்க்கதையை ஃபேண்டஸி அடிப்படையில் சொல்ல விழைந்திருப்பது புதுமை தான். ஆனால் இதில் எங்கே சறுக்கலென்றால் சொல்ல வந்த எதையும் அழுத்தமாக சொல்லவில்லை. காமெடிப்படமாக கொடுக்க வேண்டுமா? திரில்லர் படமாக கொடுக்க வேண்டுமா? என்ற குழப்பம். சில இடங்களில் காமெடி என்ற பெயரி சோதிப்பதாக கதை. வில்லன் கதாப்பாத்திரம் அழுத்தமின்மை போன்ற அடிப்படை தான் படத்தின் விமர்சனத்திற்கு காரணம். இயக்குனர் AL விஜய் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய தீபக் சுந்தர்ராஜன் தான் இந்த படத்தின் இயக்குனராக உருவாகின்றார், அவரின் முயற்சிக்கு ஆதரவாக இந்த படத்தில் சிறிய கதாப்பாத்திரம் என்றாலும் நடித்து கொடுத்திருப்பார் என்றே தோன்றுகின்றது.

சரி இப்போது எப்படிப்படங்களை தேர்தெடுத்துள்ளார் விஜய் சேதுபதி. என்ற அடிப்படைக்குள் வருவோம். மலையாளப்படம் 19(1)(a) இந்திய அரசியலைமைப்பு சட்டத்தில் 19(1)(a) பேச்சுரிமை சார்ந்ததை குறிக்கும். ஒரு வேலை அந்த அடிப்படையிலான படமா? மலையாளப்படங்களில் கதை அழுத்தம் நிறைந்த ஒன்றாகத்தான் இருக்கும். அதனால் இந்த கதையை தேர்தெடுத்திருக்கலாம். மலையாளத்திரைப்படத்தின் ஊதியம் என்பது தமிழ் மற்றும் தெலுங்கு படத்தை ஒப்பிடும் போது மிகமிக குறைவு

கடைசி விவசாயில் இந்த படம் சிறந்த இயக்குனரான் காக்க முட்டை பட இயக்குனர் மணிகண்டன். இந்த படத்தில் கௌரவ வேடத்தில்  நடிக்கின்றார் விஜய் சேதுபதி..

தென்மேற்கு பருவகாற்று மற்றும் தர்மதுரை போன்ற படங்களை இயக்கி விஜய் சேதுபதிக்கு முகவரி கொடுத்தவர் சீனுராமசாமி அவர் மிக சிறந்த இயக்குனரும் கூட. அவர் இயக்கத்தில் மீண்டும் மாமனிதன் படத்தில் நடிக்கின்றார்.

கார்த்திக் இயக்கத்தில் தன் சொந்த தயாரிப்பில் தன் மகளை மையப்படுத்தி எடுக்கும் கதையில் விஜய் சேதுபதி முகிழ் படத்தில் நடிக்கின்றார்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் புதுமுக இயக்குனர் வேங்கட கிருஷ்ணா ரகுநாத் இயக்கும் படத்தில் நடித்துள்ளார். ஆக்ஷ்ன் திரில்லர் அடிப்படையில் இந்த படம் உருவாகியுள்ளதாக தெரிகின்றனது.

நானும் ரௌடிதான் என்ற பிரமாண்ட வெற்றிப்படத்தை விஜய் சேதுபதி.க்கு கொடுத்த விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மீண்டும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கின்றார்.

இதற்கானே ஆசைப்பட்டாய் பாலகுமார என்ற வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குனர் கோகுல் இயக்கத்தில் கொரானா குமார் படத்தில் நடிக்கின்றார். இதில் சிலம்பரசனே முதனை கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடப்பட வேண்டும்.

இயக்குனர் வெற்றிமாறன் அடுத்து இயக்கும் விடுதலை இந்த படம் ஜெயமோகன் எழுதிய தூவானம் என்ற கதையை அடிப்படையாக கொண்டது. ஏற்கனவே பூமனி அவர்கள் எழுதிய வைக்கை கதையை அடிப்படையாக கொண்டு வெற்றிமாறன் இயக்கிய அசுரன் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்தது அனைவரும் அறிந்தே.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் மாஸ்டரில் விஜய் சேதுபதியை வைத்து மிரட்டிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்கின்றார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெற்றி பெற்ற மாநகரம் இந்தி ரீமேக் படத்தில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் நடித்துள்ளார்.

வசனமே இல்லாத ஊமைப்படம் காந்தி டாக்ஸ் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கின்றார்.

மேலே உள்ள அடிப்படையில் ஊதியத்திற்காகவும் எண்ணிக்கைக்காகவும் கிடைத்த படங்களை எல்லாம் ஒத்துக்கொள்ளவில்லை என்ற அடிப்படை தெளிவாக உணர முடியும்.

வெறும் எண்ணிக்கையை மட்டும் வைத்து தவறான வதந்திகளை சில தோல்விகளை அடிப்படையாக வைத்து ஒட்டு மொத்த எதிர்மறை விமர்சன கணைகளை தொடுப்பது சரியான ஒன்றல்ல. வெளிவரவிறுக்கும் 11 (இரண்டு கௌரவ தோற்ற திரைப்படம் உட்பட) திரைப்படங்களில் நடித்து முடித்திருப்பது ஐந்து (ஒரு கௌவர தோற்ற திரைப்படம் உட்பட) திரைப்படங்கள் மட்டுமே. மீதமுள்ள ஆறு திரைப்படங்கள் (ஒரு கௌரவ தோற்ற திரைப்படம் உட்பட). இவைகள் அனைத்து விஜய் சேதுபதி. சராசரி பட எண்ணிக்கைக்குள் தான் இருக்கின்றது.

விமர்சிப்பது என்பது அனைவரின் பார்வையின் கோணத்தை பொருத்ததே. நானும் ஒரு விமர்சகன் தான். ஆனால் பொதுப்படையாக எதிர்மறையாக விமர்சனம் செய்பவனல்ல. சாதகம் மற்றும் பாதம் இரண்டையும் பகுத்து விமர்சனம் செய்பவன். எங்களுடைய (cinitalk.com) திரை விமர்சனங்களும் இரண்டு அடிப்படைகளான பாராட்டுக்குறியது, நெருடலானவை என்ற இரண்டு பகுப்புகளையும் உள்ளடக்கியே இருக்கும். இந்த விமர்சனங்கள் எதிர்மறை எண்ணங்களை உருவாக்க அல்ல. அடுத்த முறை எந்தெந்த தவறுகளை செய்யகூடாது என்பதை கருத்தில் கொள்ளவும். திரையுலகத்தில் புதிதாக இயக்குனராக வருபவர்கள் தங்களை பகுத்தாய்ந்து கொள்ளவும் இத்தகைய வகையான விமர்சனங்கள் உதவும் என்ற அடிப்படையிலேயே எங்களது திரைவிமர்சனங்கள் அமைந்திருக்கும்.

அந்த அடிப்படையிலான விமர்சன பார்வையில் பிறர் விமர்சனங்களுக்கான நேர்முக பார்வையில் உள்ளார்ந்த ஆய்வின் அடிப்படையில் உருவானது தான் இந்த கட்டுரை.





Movie Gallery

  • news

    Devayani

  • news

    Sonia Agarwal

  • news

    Keerthi Pandian

  • news

    Srushti Dange

  • news

    Surabhi

  • news

    Priyamani

  • news

    Sanghavi

  • news

    Ragini Dwivedi

  • news

    Taapsee Pannu

  • news

    Anu Emmanuel

  • news

    Amritha Aiyer

  • news

    Huma Qureshi

  • news

    Pooja Kumar

  • news

    Rashmika Mandanna

  • news

    Anandhi

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.