Join/Follow with Our Social Media Links

மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் பிரம்மாண்ட பட திரைவிமர்சனம்

மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் பிரம்மாண்ட பட திரைவிமர்சனம்


ஆசிர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ள படம் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்  மோகன்லாலை வைத்து அதிகப்படங்களை இயக்கிய பிரியதர்ஷன் இந்த படத்தை இயக்ககியுள்ளார்.. ரோனி ரபேல் இசையமைத்துள்ளார். S.திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். M S ஐயப்பன் நாயர் படத்தை தொகுத்துள்ளார்

மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் படத்தில் நடிகர்கள் மோகன் லால்  குஞ்சலி மரைக்காயர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். பிரனவ் மோகன்லால் இளம் வயது குஞ்சலி மரைக்காயர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சுனில் ஷெட்டி சந்திரோத் பணிக்கர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மஞ்சு வாரியர்  சுபைதா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். நெடுமுடி வேணு  பேரரசர் சாமூத்திரி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஹரீஸ் பேராடி அரசு ஆலோசகர் மங்கட்டச்சன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அர்ஜூண் மங்கட்டச்சன் மகன் மற்றும் காலாட்படை தளபதி ஆனந்தன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அசோக் செல்வன் மங்கட்டச்சன் இளைய மகன் மற்றும் கப்பல்படை தளபதி அச்சுதன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் ஆர்ச்சா கதாப்பாத்திரத்திரத்தில் நடித்துள்ளார். கல்யானி பிரியதர்ஷன் இளம் வயது குஞ்சலி மரக்கார் மனைவி ஆயிஷா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சுஹாசினி மணிரத்னம்  குஞ்சலி மரைக்காயர் தாய் கதீஜூம்மா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபு குஞ்சலி மரைக்காயர் நண்பர் மற்றும் படைவீரர் சங்குடு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். முகேஷ் தர்மோத் பணிக்கர்  கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சித்திக் குஞ்சலி மரைக்காயர் சித்தப்பா பட்டு மரக்கார் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். பாசில் குஞ்சலி மரைக்காயர் தந்தை வழி தாத்தா குட்டி அலி மரைக்காயர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.   மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதைக்கரு.:

இந்திய அடிமைத்தன ஆரம்ப காலகட்டங்களில் நடைபெற்ற சரித்திர நிகழ்வை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் மரைகார் அரபிக்கடலின் சிங்கம். போர்ச்சுகீசியர்கள் தங்கள் வணிக எல்லையை இந்தியாவில் வேரூன்றி கிளைபரப்பிய ஆரம்ப காலகாட்ட வரலாற்றில் அவர்களது ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய அரசுகள் மற்றும் வீரர்கள் ஏராளம். அப்படிப்பட்ட வீரர் குஞ்சலி மரைக்காரை பற்றி மிகுந்த பொருட்செலவில் திரைப்படமாக அந்த காலகட்ட நிகழ்வுகளை அப்படியே ரசிக்கும் வகையில் இந்த படத்தை உருவாக்கி கொடுத்துள்ளனர்.

கதை.:

கொச்சி ராஜா தன் ராஜ்ஜியத்தை கோலிக்கோடு மன்னர் சாமூத்திரியிடம் இருந்து கப்பாற்றிகொள்ள போர்ச்சுகீசியர்களை தன் பிராந்தியத்தில் கடல்வழி வணிகத்திற்கு அனுமதி கொடுக்கிறார். அரேபியர்களுக்கு தங்களது மிளகு, கிராம்பு போன்றவைகளை விற்பனை செய்துவந்த அப்பிராந்திய மக்கள். இதை கண்டு அதிர்ந்துபோயினர். கடல்வழியே வியாபாரம் செய்ய வியாபாரிகளுக்கு மிகப்பெரிய அளவு சுங்கவரியை விதித்தனர். இதன் மூலம் அரேபியர்களுடன் வியாபாரம் செய்வதை தடை செய்ய முயன்றனர் போர்ச்சுகீசியர்கள். வியாபாரிகளின் தலைவரான குட்டி அலி மரைக்காயர். மன்னரின் ஆதரவை பெற்ற இவர் மன்னரிடம் தன் மகன் குஞ்சலி மரைக்காயர் திருமணத்தகவலை சொல்கின்றார். அதே நேரம் வியாபாரிகள் பிரச்சனையை பற்றியும் பேசுகிறார். ஆனால் வியாபாரிகள் பிரச்சனையில் எதுவும் உதவ முடியாது என்று மன்னர் கைவிரிக்கிறார். குட்டி அலி மரைக்காயர் வேறு திட்டம் போடுகின்றார். சிறிய மீன்பிடி படகுகளில் பொருட்களை எடுத்து சென்று நடுக்கடலில் நிற்கும் கப்பலில் ஏற்றி அரேபியர்களுக்கு விற்பனை செய்ய முடிவெடுக்கின்றனர். இதை கேள்விபட்ட போர்ச்சுகீசியர்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர்.

குட்டி அலி மரைக்காயர் ஒரு போராளி. ஒரு நேரத்தில் கோழிக்கோட்டில் தடம் பதிக்கவிருந்த போர்ச்சிகீச்சியர்கள் மிகப்பெரிய கப்பல் படையுடன் வந்தனர். பொன்னை கடற்கரையில் சாமூத்திரி மன்னரின் மங்காட்டச்சன் ஒருபுறமும் குட்டி அலி மரைக்காயர் அவரது மகன்களான குட்டி பொக்கார் மற்றும் பட்டு மரைக்காயர் மறுபுறமும் நின்று போராடி போர்ச்சிகீச்சியர் படைகளை தோற்கடித்து திருப்பி அனுப்பினர். அந்த போராட்டத்தில் குட்டி பொக்கர் உட்பட பலர் இறந்து போக யுத்தத்தை மறக்க நினைத்த குட்டி அலி மரைக்காயர் தனது இளையமகன் பட்டு மரைக்காயர், மறைந்த மூத்தமகன் குட்டி பொக்கார் மனைவி கதீஜா. கதீஜா மகன் முகமது அலி என்னும் குஞ்சானி மரைக்காருடன் கொச்சியில் வந்து அமைதியாக வணிகம் செய்து கொண்டிருப்பவர். கொச்சி அரசரின் நன்மதிப்பையும் குட்டி அலி மரைக்கார் பெற்றிருந்தார்.

இந்த வேளையில் போர்ச்சிகீச்சியர்கள் கொச்சினில் வந்திறங்கி தங்கள் சுய முகத்தை காட்டிக்கொண்டிருக்கின்றனர். குட்டி அலி மரைக்காரையும் அவரை சேர்ந்தவர்களையும் தந்திரம் செய்து கொல்ல முடிவெடிக்கின்றனர். குட்டி அலி மரைக்காருக்கு நெருங்கிய நண்பனாகவும் உறவினராகவும் இருக்கும் மொய்டுல் மூலம் அவர்களை நிர்மூலமாக்க திட்டமிடுகின்றனர்.

குட்டி அலி மரைக்காயர் குடும்பத்துடன் குஞ்சாலி மரைக்காயர் காதலி ஆயிஷாவுடன் திருமணம் செய்ய பெண் வீடான ஆயிஷா வீட்டிற்கு செல்கின்றனர். ஆயிஷாவிற்கும் குஞ்சாலி மரைக்காருக்கும் இனிதே திருமணம் நடக்கின்றது. திருமணம் முடிந்து திரும்பும் வழியில் அனைவரும் ஒய்வெடுத்துக்கொண்டிருக்கின்றனர். போர்ச்சிகீச்சியர்கள் படையுடன் அங்கே வரும் மொய்டூல், ஆயிஷா உட்பட அனைவரையும் கொன்று குவிக்கின்றனர். குஞ்சாலி மரைக்கார் மற்றும் அவர் சித்தப்பா பட்டு மரைக்காயர் மட்டும் தப்பிக்கின்றனர். தன் கண்முன் தன் பாசமிகு தாய் கதீஜா கொல்லப்படுவதை பார்க்கும் குஞ்சாலி மரைக்காயர் அனைவரையும் கொல்லவேண்டுமென்று நினைக்கின்றார்/

இதற்கிடையே மொய்டுல் காட்டின் நடுவில் நடந்த படுபாதக செயலுக்கு குஞ்சாலி மரைக்காரும் பட்டு மரைக்காரும் தான் காரணம் என்று கதைகட்டிவிட்டு அவர்களை கைது செய்து தூக்கிலிட உத்தரவிட செய்கின்றார். முகத்தை மறைத்துக்கொண்டு குஞ்சாலி மரைக்காரும் பட்டு மரைக்காரும் மொய்டுலை கொல்கின்றனர். அவர்களை பிடிக்க படைவீரர்கள் கிளம்பும் போது கடல்வழியே இருவரும் தப்பிக்கின்றனர். அப்போது ஏற்படும் புயலில் கப்பல் உடைந்து இருவரும் கரை ஒதுங்குகின்றனர்.

அங்கிருக்கும் மக்கள் அவர்களுக்கு உணவு கொடுத்து உதவுகின்றனர். அவர்கள் கஷ்டத்திலிருந்த போது இவர்களுக்கு உதவுகின்றனர். ஏதாவது தொழில் செய்து பிழைக்க குஞ்சாலி மரைக்கார் சொல்ல தன்னிடமிருக்கும் கொஞ்சம் பணத்தை கொடுக்கின்றார் சித்தப்பா பட்டு மரைக்கார். அந்த பணத்தை வழிப்பறி கொள்ளையன் தங்குடு அவன் சாகக்களுடன் கொள்ளையடிக்கிறான். அவர்களிடமிருந்து பணத்தை மீட்கின்றான் குஞ்சாலி மரைக்கார். ஆனால் அங்கிருக்கும் சாணைபிடிக்கும் இயந்திரத்தை எடுத்துக்கொண்டு பணத்தை அவர்களிடமே கொடுத்துவிட்டு செல்கின்றான். அங்கே சந்தைக்கு தன் மகன்கள் ஆனந்தன் மற்றும் அச்சுதனுவன் வருகின்றார் மங்காட்டச்சன். அப்போது அச்சுதன் குறுவாளை மரைக்காரிடம் சாணைபிடித்து காசை தூக்கி எரிகின்றான். மரைக்காரோ நான் உன்னிடம் பிச்சை எடுக்கவில்லை செய்த வேலைக்கு கூலி கேட்கிறேன் கையில் கொடுக்க சொல்லி வாக்குவாதம் செய்கிறார். அப்போது அங்கே வரும் அச்சுதன் சகோதரன் ஆனந்தன் காசை எடுத்து மரைக்கார் கையில் கொடுக்கிறான். அப்போது அங்கே வரும் மங்காட்டச்சன் அவன் பெயரை கேட்கிறார். மரைக்காயர் தன் உண்மை பெயரான முகமது அலி என்று சொல்கிறார்.

மக்களுக்கு இலவசமாக கொடுக்க சொல்லி சாமூத்திரி மன்னன் கொடுத்தனுப்பிய அரிசியை மக்களுக்கு கொடுக்காமல் ஏமாற்ற நினைக்கின்றார் சிற்றரசர் நம்மத் குரூப். இதை தட்டி கேட்க சென்ற பட்டு மரைக்காரை அடித்து உதைக்கின்றனர். குஞ்சாலி மரைக்கார் மக்களை ஏமாற்றி எடுத்து செல்லும் அரிசியை கொள்ளையடித்து மக்களுக்கு கொடுக்கிறான். அன்றிலிருந்து மக்களை ஏமாற்றுபவர்களிடம் இருந்து கொள்ளையடித்து மக்களுக்கு கொடுக்கிறார் மரைக்கார். அவர்களுக்கு உதவியாக தங்குடு மற்றும் அவன் சாகாக்களும் இருக்கின்றனர்.

அன்று முதல் மிகப்பெரிய கடல் கொள்ளையனாக உருவாகிறார் முகமது அலி எனும் குஞ்சாலி மரைக்கார் எனும் மரைக்காயர். ஒரு சமயம் கடல்வழியே அடிமைகளையும் வணிக பொருட்களையும் ஏற்றி வரும் போர்ச்சுகீசிய கப்பலை கொள்ளையடிக்கின்றனர். அப்போது நடக்கும் சண்டையில் எதிர்பாரத விதமாக மரைக்காயர் அஜ்முட்டியை தள்ளிவிடுகின்றார் எதிர்பாரதவிதமாக வாளில் விழுந்து இறந்து போகின்றான். போர்ச்சுகீச்சியர் அடிமைகளில் ஒருவனாக இருக்கும் சைனாகாரனையும் காப்பாற்றி கொண்டுவருகிறார் மரைக்காயர். பொருட்களையெல்லாம் எடுத்துகொண்டு கப்பலை எரிக்க சொல்கிறார் மரைக்காயர். இறந்தவன் சுபைதாவின் கணவனும் அந்த கூட்டத்திலிருக்கும் மாயின் குட்டியின் சகோதரனுமாவான். மரைக்காயர் சடலத்தை சுபைதாவிடம் ஒப்படைக்குமாறு சொல்லி மாயின் குட்டியிடம் சொல்லி பணத்தையும் கொடுத்தனுப்புகிறார் மரைக்காயர்.

மங்காட்டச்சன் சாமுத்திரி பேரரசரின் அமைச்சர், ஆலோசகர், ராஜாகுரு எல்லாமுமாக இருப்பவர்.  இவரின் இருமகன்கள் அச்சுதன் மற்றும் ஆனந்தன். அச்சுதன் குறுக்கு மற்றும் குரூர புத்தி கொண்டவன் கடல்படை தளபதி. ஆனந்தன் எதையும் ஆழமாக சிந்திப்பவன் நேர்மையை உயிர்மூச்சாக கொண்டு நேர்வழியில் நடபவன். மங்காட்டச்சனின் சீடன் சந்திரோத் பணிக்கர். இவர் கோலிக்கோடு பேரரசின் கீழ் இருக்கும் வளவநாடு சிற்றரசர் புத்துமன பணிக்கரின் உறவினர் மட்டுமின்றி தளபதியுமாவர்.

குரூர புத்தி கொண்ட சிற்றரசர்களான புத்துமன பணிக்கர், வேர்கோட்டு பணிக்கர், நாமத் குரூப், அபூபக்கர் ஹாஜி போன்றோர். இவர்கள் போர்ச்சிகீசியர்களுக்கு மறைமுகமாக உதவி செய்பவர்கள். அந்த கப்பல் கொள்ளையாலும் தங்களிடம் அடிக்கப்பட்ட கொள்ளைகளாலும் மரைக்காயர் மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர். மரைக்காரை உயிரோடோ அல்லது பிணமாக கொண்டுவர சொல்லி சாமூத்திரி மன்னரிடம் கோரிக்கை வைக்கின்றனர். மக்கள் மரைக்காயர் பக்கம் இருப்பதால் அவரை நெருங்ககூட முடியாமல் இருக்கின்றனர். ஆனந்தன் மக்கள் மனதில் நீங்காமல் இருப்பவர் மரைக்காயர். மக்கள் ஆதரவு இருக்கும் வரை நெருங்க முடியாது. அந்த அளவிற்கு மக்களுக்கு நல்லது செய்துள்ளாதாக சொல்கிறான். ஆனால் அச்சுதன் அவனை எப்படியாவது நான் உயிரோடோ அல்லது பிணமாகவோ கொண்டுவருவேன் என்று சொல்கின்றான்.

சைனாகாரன் தன் தாயைப்பற்றி விசாரிக்கிறான். சைனாக்காரனுக்கு சைனாரி என்று மரைக்காயர் பெயர் சூட்டுகிறார். மாயின் குட்டியிடம் சைனாரியை சுபைதாவிடம் அழைத்து செல்ல சொல்கின்றார் மரைக்காயர். சுபைதா வீட்டில் தன் தாயைப்பார்த்து மகிழ்கிறான் சைனாரி. மாயின் குட்டி தன் சகோதரனை கொன்ற மரைக்காயரை பழிவாங்க அச்சுதனுடன் கூட்டு போட்டு அதிகம் பணத்தை வாங்கிகொண்டு மரைக்காரை கொல்ல வருகிறான். அதை பார்த்த சைனாக்காரன் மாயின் குட்டியை கொன்று மரைக்காரை காப்பாற்றுகிறான். மரைக்காரின் நம்பிக்கைக்கு உரியவனாகின்றான் சைனாரி .

துரோகத்தால் தன்னை கொல்ல நினைத்த அரசுக்கு மாயின் குட்டி பிணத்துடன் ஒரு ஓலையையும் அனுப்புகிறார் மரைக்காயர். அதில் எதிரியாக இருந்தாலும் நேருக்கு நேர் யுத்தம் செய்து நெஞ்சில் குத்துவது தான் யுத்த தர்மம் அதைவிடுத்து முதுகில் குத்துவது யுத்த தர்மமோ சத்திரிய தர்மமோ அல்ல. மிகப்பெரிய பேரரசருக்கு இது தெரியாமல் இருப்பது ஏற்புடையதல்ல என்று அதில் உள்ளது. மங்காட்டச்சன் அச்சுதன் செயலை கண்டிக்கின்றார். ஆனந்தனை மகனாக அடைந்ததற்கு மகிழ்ச்சியடைகின்றேன். உன்னை மகனாய் அடைந்ததற்கு வெட்கப்படுகின்றேன் என்று சொல்கிறார்.

களரி குருக்கள் தர்மோத் பணிக்கர் மகள் ஆர்ச்சா. மகளின் திருமண தோஷத்தை போக்க கலயத்தை கோயிலில் ஒப்படைக்க செல்கின்றாள். அப்போது அச்சுதன் அவளிடம் வம்பிழுக்கின்றான். அப்போது அவள் கையிலிருக்கும் கலயம் மலையிலிருந்து விழுந்து ஓடுகின்றது. அப்போது சைனாரி கலயத்தை கைப்பற்றி கொடுக்கின்றான். ஆர்ச்சாவிற்கு சைனாரி மீது காதல் வருகின்றது.

போர்ச்சிகீச்சியரிடமிருந்து அரசர் சமூத்திரிக்கு ஒரு ஓலை வருகிறது. அதில் அவர்களுக்கு அவர்கள் பிரதேசத்தில் அனுமதி கேட்கின்றனர். அனுமதி மறுத்தால் யுத்தத்தை சந்திக்க வேண்டுமென்று சொல்கின்றனர்.

போர்ச்சிகீச்சியரிடமிருக்கும் கடல்படை மிகுந்த வலிமை மிகுந்தது அதை வெல்வது இயலாதகாரியம் என்று கடல்படை தளபதியாக இருக்கும் அச்சுதன் சொல்கின்றான். ஆனால் ஆனந்தன் போர்ச்சிகீச்சியர்கள் கடல்படையை வெல்ல வேண்டுமென்றால் மரைக்காரால் முடியுமென்று சொல்கின்றான். குற்றவாளியாக இருக்கும் ஒருவரின் ஆதரவை கேட்கக்கூடாது என்று சிற்றரசர்கள் சொல்கின்றனர். ஆனால் அரசர் சாமூத்திரி ஆனந்தன் சொல்வது சரியான யோசனை என்று சொல்கிறார். மரைக்காருக்கு உதவி கோடு ஓலை அனுப்புகின்றனர். அரசவைக்கு மரைக்காயர், சித்தப்பா பட்டு மரைக்காயர் மற்றும் சைனாரியுடன் செல்கின்றார். அப்போது பட்டு மரைக்காரை பார்க்கும் மாங்காட்டச்சன் முன்பு நடந்த போரில் வெற்றிபெற உதவிய மரைக்காயர் இவர்கள் தான் என்று சொல்கிறார். மரைக்காரை கடல்படை தளபதியாக அரசர் சாமூத்திரி நியமிக்கிறார். கடல்படை தளபதியாக இருக்கும் அச்சுதனிடமிருக்கும் வாளை ஒப்படைக்க சொல்கிறார். அச்சுதன் வாளை வீசிவிட்டு செல்கிறான். அந்த வாளை எடுத்து ஆனந்தன் மரைக்காரிடம் ஒப்படைக்கிறான். மரைக்காரை படைத்தளபதியாக நியமித்தால் எங்கள் படைகள் உங்களுக்கு உதவாது என்று சொல்லிவிட்டு சிற்றரசர்கள் அனைவரும் செல்கின்றனர்.

மரைக்காரும் ஆனந்தனும் போர்ச்சுகீச்சியர்களிடம் சண்டை போட்டு வெல்கின்றனர். தன் தாயை கொன்ற போர்ச்சுகீச்சிய தளபதி தோற்று நிற்க தாயை கொன்றதற்காக அவனை கொன்று பழி தீர்க்கிறார் மரைக்காயர்.

போரில் வெற்றி பெற்றதால் அரசர் மகிழ்ச்சியாக இருக்கிறார். அச்சுதன் தான் தர்மோத் பணிக்கர் மகள் ஆர்ச்சாவை விரும்புவதாகவும் அவளை திருமணம் செய்து வைக்குமாறும் சொல்கிறான். மங்காட்டச்சனும் ஆனந்தனும் ஆர்ச்சாவை திருமணம் செய்து வைக்க தர்மோத் பணிக்கரிடம் பேசி திருமணத்தை முடிவு செய்கின்றனர். அரசர் சாமூத்திரி அவர் தலைமையில் திருமணம் செய்து வைப்பதாக சொல்கின்றார். சைனாரி ஆர்ச்சா காதலை பற்றி தெரியாத மரைக்காரும் அந்த திருமணத்தை முன்னின்று நடத்தி வைப்பதாக சொல்கிறார்.

மணநாளுக்கு முன்பே ஆர்ச்சாவை காணவில்லையென்றும் அவள் மரைக்காரின் கோட்டையில் இருப்பதாகவும் சொல்கின்றனர். அங்கே சென்று தேட முயலும் படைவீரர்களை மரைக்காயர் தடுக்கிறார். இங்கே அவர்கள் இல்லை. ஒரு வேலை சைனாரி தவறு செய்திருந்தால் அவன் தலையை வெட்டி கொடுப்பத்தாக சொல்கிறார் மரைக்காயர். மரைக்காயர் பேச்சை கேட்டு படைவீரர்கள் திரும்பி செல்கின்றனர். அங்கே வரும் சுபைதா மரைக்காரிடம் அவர்கள் இருவரும் தன் வீட்டிலிருப்பதாகவும் இருவரும் திருமணம் செய்து கொண்டு வந்ததாக சொல்கிறாள். சைனாரியை வெட்ட போகின்றார் மரைக்காயர். ஆர்ச்சா மரைக்காரை தடுக்கிறாள். தன் வயிற்றில் சைனாரி வாரிசு வளர்வதால் வேறுவழியில்லாமல் திருமணம் செய்து கொண்டதாக சொல்கிறாள். மரைக்காயர் இருதலை கொள்ளி எறும்பாக என்ன செய்வது என்று திகைக்கிறார். அப்போது பட்டு மரைக்காயர் நானும் ஆர்ச்சாவும் அரசவைக்கு சென்று நடந்த உண்மையை எடுத்து சொல்வதாக சொல்லி கிளம்புகின்றனர். அவர்களை அனுப்பிவைத்துவிட்டு தொழுகைக்கு செல்கின்றார் மரைக்காயர்.

அதே நேரம் ஆனந்தனும் அச்சுதனும் படைவீரர்களுடன் அங்கே வருகின்றான். பட்டு மரைக்காயர் ஆர்ச்சாவை கைதியாக அழைத்து செல்வதை தான் விரும்பவில்லை. நானே ஆர்ச்சாவை அரசவைக்கு கூட்டி வருவதாக சொல்கிறார். ஆனால் ஆர்ச்சாவை அச்சுதன் வலுக்கட்டாயமாக அழைத்து செல்ல முயல்வதை பார்த்தா சைனாரி அச்சுதனுடன் சண்டை போடுகிறான். சண்டையை தடுக்க முயலும் ஆனந்தன் சைனாரியுடன் சண்டை போட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இருவரும் சண்டை போடுகின்றனர், தொழுகை முடிந்து வரும் மரைக்காயர் இந்த நிகழ்வை பார்க்கிறார். ஆனந்தன் சைனாரியை கத்தி முனையில் நிப்பாட்டுகிறார். இதை தடுக்க மரைக்காயர் ஓடி வருகிறார். ஆனால் ஆனந்தன் கத்தியால் சைனாரி இறக்கிறான், சைனாரி மரணத்தை பார்த்த ஆர்ச்சாவும் தற்கொலை செய்துகொள்கிறாள். இதனால் கோபத்தின் எல்லைக்கு செல்லும் மரைக்காயர் ஆனந்தனுடன் யுத்தம் செய்கிறார். பட்டு மரைக்காயர் மரைக்காரை தடுக்க முயல்கிறார். ஆனால் கோபத்தின் உச்சத்திலிருக்கும் மரைக்காயர் ஆனந்தை தோற்கடித்து கொல்கின்றார். அந்த பிணத்தை கழுகுகள் திண்ண வெளியில் போடுமாறு சொல்கிறார்.

மங்காட்டச்சன் மரைக்காரை சந்தித்து தன் மகனின் பிணத்தை கொடுத்துவிடுங்கள் அவனுக்கு செய்ய வேண்டிய கரும காரியங்கள் செய்ய வேண்டுமென்று சொல்கிறார். ஆனால் மரைக்காயர் ஆனந்தன் மிகப்பெரிய தவறு செய்துள்ளார். அவன் பிணத்தை கொடுக்க முடியாது என்று சொல்கிறார். ஆனால் பட்டு மரைக்காயர் மரைக்காரிடம் சைனாரி மரணத்திற்கு ஆனந்தன் காரணமல்ல. அச்சுதன் தான் பின்னலிருந்து கொன்றதாக சொல்கிறார். இதை முன்பே சொல்லி இந்த சண்டையை தடுத்திருந்தால் ஒரு நல்லவனை கொன்றிருக்கமாட்டேனே என்று சொல்கிறார். எங்கே, நீ இருந்த கோபத்தில் யாரையும் பொருட்படுத்தாமல் சண்டை போட்டாய் எவ்வளவோ தடுக்க முயன்றோம் முடியாமல் போனது என்று சொல்கிறார். ஆனந்தன் பிணத்தின் முன் தன் தவறுக்கு மன்னிப்பு கேட்கிறார் மரைக்காயர். ஆனந்தன் பிணத்தை மங்காட்டச்சனிடம் கொடுக்கின்றார் மரைக்காயர். ஆனந்தனுக்கு இறுதி காரியம் செய்து விட்டு அரசர் சாமூத்திரியிடம் நான் அனைத்து அரச பொறுப்பிலிருந்து விலகிக்கொள்வதாக சொல்லிவிட்டு செல்கிறார். மங்காட்டச்சன் விலகி போனதை ஏற்க முடியாமல் உடல்நிலை பாதிக்கப்பட்டு படுக்கையில் இருக்கிறார் சாமூத்திரி.

சிற்றரசர்கள் அனைவரும் சாமூத்திரியிடம் ஆனந்தனை கொன்றதற்காக மரைக்காரின் கடல்படை தளபதி பொறுப்பை பறித்து விசாரணைக் கைதியாக்கி அரண்மனைக்கு கொண்டு வர வேண்டுமென்று சொல்கின்றனர். ஆனால் சாமூத்திரி மரைக்காரை ஒரு கைதியாக இல்லாமல் படைத்தளபதியாகவே அரச மரியாதையுடன் விசாரனைக்கு அழைத்து வரச்சொல்கிறார். அச்சுதனோ ஓலை எடுத்து செல்பவனிடமிருந்து ஓலையை பறித்து அதை மாற்றி படிக்க சொல்கிறான்.

அதில் மரைக்காரை யானை வாலில் கட்டி இழுத்துவருமாறு எழுதப்பட்டிருக்கின்றது. இதை கேள்விபட்ட சங்குடூ யானை வாலை வெட்டி அனுப்புகிறான். சிற்றரசர்கள் இந்த விஷயத்தை ஊதி பெரிதாக்குகின்றனர். சாமூத்திரியிடம் உங்களுக்கு உடல்நிலை சரியில்லை அதனால் அரச பொறுப்புகளை உங்கள் மருமகனிடம் கொடுத்துவிட்டு ஒய்வெடுக்குமாறு சொல்கின்றனர். வேறு வழியின்றி சாமூத்திரி அரச பொருப்புக்களை தன் மருமகனிடம் ஒப்படைக்கிறார்.

மருமகன் போர்ச்சுகீச்சியர்களுக்கு அவர்கள் பிரதேசத்தில் அனுமதி கொடுக்கின்றான். அந்த தேசத்து மக்களுக்கு இதில் உடன்பாடில்லை. அதே போல் வளவநாடு அரசர் புத்துமன பணிக்கர் மற்றும் அவரது தளபதி சந்திரோத் பணிக்கருக்கும் இதில் உடன்பாடில்லை.

சந்திரோத் பணிக்கர் மரைக்காரை சந்தித்து போர்ச்சிகீச்சியர்களை எதிர்க்க அவர்கள் படை உதவும் என்று உத்தரவாதம் கொடுக்கின்றார். அதிருப்தியில் இருக்கும் மக்களை மரைக்காயர் ஒன்று திரட்டுகின்றார்.

போர்ச்சிகீச்சியர் படைகளும் சாமூத்திரி படைகளுமான ஜமோரியன் படைகளும் இணைந்து மரைக்காயர் கோட்டையை தாக்குகின்றனர், சந்திரோத் பணிக்கரி்ன் உறவினர் மற்றும் புத்துமன படைகளின் சூழ்ச்சியால் மரைக்காயர் தோல்வியை சந்திக்கின்றார். மரைக்காரின் சித்தப்பா பட்டு மரைக்காயர் கொல்லப்படுகிறார். காயமுற்றிருக்கும் மரைக்காரை தங்குடூ காப்பாற்றி அழைத்து செல்கிறார். மரைக்காரின் மக்களை கைதிகளாக்கி போர்ச்சிகீச்சியர் படை சிறையிலடைக்கிறது.

மரைக்காயர் மறைவிடத்திலிருந்து வெளியே கொண்டுவர தங்களிடம் இருக்கும் கைதிகளை 10, 10 பேராக கொல்லமுடிவு செய்கின்றது போர்ச்சிகீச்சிய வைஸ்ராய். ஆனால் சமூத்திரி மருமகன் என்ன தான் இருந்தாலும் அவர்கள் என் நாட்டு பிரஜைகள் அவர்களை கொல்ல அனுமதிக்க முடியாது என்று சொல்ல அவரையை கொல்கின்றனர் போர்ச்சிகீச்சிய வைஸ்ராய்.

உடல்நலம் தேறிய மரைக்காயர் நாட்டிற்கு துரோகம் செய்த சிற்றரசர்கள் தேடித்தேடி தனியாளாக கொல்கிறார். போர்ச்சிகீச்சிய வைஸ்ராயை கைது செய்கிறார்.

சுபைதா மூலம் தான் வைஸ்ராயை ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒப்படைப்பதாகவும் அதற்கு பிரதிபலனாக சிறையிலிருக்கும் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். மற்றும் சாமூத்திரி அரசர் அந்த இடத்திற்கு தனியாக வரவேண்டும். அவரிடம் வைஸ்ராயை ஒப்படைப்பதாகவும் இந்த தகவலை மன்னரிடம் கொண்டு சேர்க்குமாறும் சொல்கிறார்.

மன்னரிடம் தகவலை சென்று சேர்த்த சுபைதா தன் கணவனின் மரணத்திற்கும். அவர் சகோதரன் மரணத்திற்கும் மரைக்காயரை பழிதீர்க்க இது தான் சரியான தருணம் என்று அச்சுதனிடமும் இந்த தகவலை தெரிவிக்கிறார்.

வைஸ்ராயை ஒப்படைக்கும் முன் சுபைதாவை சந்திக்கும்  மரைக்காயர் அவள் மரணத்திற்கு தான் காரணமில்லை. அது விபத்து என்ற உண்மையை சொல்லிவிட்டு செல்கின்றார். தான் பெரிய தவறு செய்துவிட்டதாக உணர்ந்த சுபைதா மரைக்காயரை தடுக்க முயல்கிறாள். ஆனால் மரைக்காயர் அங்கிருந்து சென்று விடுகிறார். சிறைக்கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படுகின்றனர். சாமூத்திரி தனியாக மரைக்காரை பார்க்க வருகிறார். வைஸ்ராயை அவரிடம் ஒப்படைக்கிறார் மரைக்கார். ஆனால் அச்சுதன் தகவலால் ஏற்கனவே அவர்களுக்கு தெரியாமல் மறைந்திருந்த போர்ச்சிகீச்சிய படை மரைக்காரை சுட்டு கைது செய்கிறது. போர்ச்சிகீச்சிய வைஸ்ராய் மரைக்காருக்கு மரணதண்டனை விதித்து அவர் தலையை வெட்டுகிறது.

பாராட்டுக்குறியது.:

சிறிய பட்ஜெட் படங்களே வெளியாகிக்கொண்டிருந்த மலையாள திரையுலகில் மிகப்பெரிய பட்ஜெட்டில் அது PAN இந்தியா திரைப்பட அடிப்படையிலும் உருவாகியுள்ள படம்.

இயக்குனர் பிரியதர்சன் கிபி 1520-1600 வரை அதாவது 16வது நூற்றாண்டின்.  சரித்திர நிகழ்வான போர்ச்சிகீச்சியர்கள் ஆக்கிரமிப்பு அடிப்படையிலான சரித்திரக்கதையை எடுத்து கதை, திரைக்கதையமைத்து சரித்திர நிகழ்வை நம் முன்னே நிறுத்தியுள்ளார்.

வரலாற்று திரைப்படங்களை நம் கண்முன்னே கொண்டுவருவது என்பது எளிதான ஒன்றல்ல. அதை திறம்பட முயற்சி செய்துள்ள இயக்குனரின் உழைப்பு அபாரம்.

ஏராளமான கதாப்பாத்திரங்கள் நிறைந்த கதையில் அனைத்து கதாப்பாத்திரங்களின் பாத்திரப்படைப்பை விளக்குவது என்பது எளிதான காரியமல்ல. ஆனால் திரைக்கதையின் போக்கில் அதை விளக்க முயன்றுள்ளது அருமை.

பிரமாண்டத்தை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குனர். அது கண்களைவிட்டு நீங்காமல் இருக்கிறது. குறிப்பாக கடலிலும் தரையிலும் நடக்கும் யுத்த காட்சிகள்.

படத்தில் ஏராளமான கதாப்பாத்திரங்கள் இருந்தாலும் நம் மனதில் நிற்பது சில கதாப்பாத்திரங்கள் மட்டுமே. மரைக்காராக நடித்துள்ள மோகன்லால் கதாப்பாத்திரம். ஆனந்தனாக நடித்துள்ள அர்ஜூன் கதாப்பாத்திரம். மங்காட்டச்சனாக நடித்துள்ள ஹரீஷ் பேராடி கதாப்பாத்திரம். சாமூத்திரி அரசர் கதாப்பாத்திரத்தில் நடித்த மறைந்த நடிகர் நெடுமுடி வேணு.

ஒளிப்பதிவு அருமை. அதே போல பின்னனி இசையும் அருமை. பாடல்கள் ரசிக்கும் படி உள்ளது. குறிப்பாக கண்ணில் என்றும் பாடலும் காட்சியமைப்பும் அருமை.

நெருடலானவை.:

ஏராளமான கதாப்பாத்திரங்களை வைத்து இயக்குவது என்பது கடினமான செயல் தான். அதுவும் சரித்திரக்கதை என்றால் சொல்லவே வேண்டாம். குறைந்த நேரத்தில் அனைத்து கதாப்பாத்திரத்தை விளக்குவது எளிதான காரியமல்ல. அந்த அடிப்படைக்கு இந்த படமும் விதிவிலக்கல்ல. பல கதாப்பாத்திரங்கள் பெயரளவிற்கு மட்டும் வந்து கடந்து செல்கிறது. திரைக்கதை வாயிலாக கதாப்பாத்திரங்களின் தன்மையை விளக்க முயன்றிருக்கிறார். ஒரு சில கதாப்பாத்திரங்கள் மட்டும் மனதில் நின்றாலும் பல கதாப்பாத்திரங்கள் நினைவில் நிற்காமல் மறைந்து போகிறது.

ஆர்ச்சா கதாப்பாத்திரப்படைப்பு திரைக்கதையோட்டத்திற்காக உருவாக்கப்பட்ட திணிப்பாகவே உணர முடிகின்றது. அவர்கள் காதல் காட்சிகளில் பெரிய அழுத்தமில்லை.

திரைக்கதை பல இடங்களில் அதன் போக்கில் செல்லாமல் எங்கேகெங்கோ செல்வதை போன்று உணரமுடிகின்றது.

சுபைதா கதாப்பாத்திரத்தில் மிகப்பெரிய அழுத்தம் இல்லை. இறுதி காட்சியில் அவர் திடீரென துரோகியாக மாறுவதை போன்ற காட்சியமைப்பு. அவர் துரோகியாவதற்கான அழுத்தத்தை திரைக்கதையில் எங்குமே வெளிப்படுத்தாமல் விட்டுவிட்டார் இயக்குனர்.

யுத்த காட்சிகள் பிரமாண்டம். ஹாலிவுட் படங்களுக்கு இணையாக உள்ளது. அதே வேலையில் அப்படியே அந்த காட்சிகளை காப்பியடித்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது. ரசிகனாய் அந்த காட்சிகளை ரசிக்க முடிகிறது. ஆனால் விமர்சகனாய் காப்பியடித்தை ரசிக்க முடியாமல் போகிறது.

மரைக்காயர் சரித்திரம் படத்தில் நிற்க வேண்டிய சரித்திர அடிப்படை மனதில் நிற்காமல் மனதில் துரோகம் என்ற் அடிபடை மட்டுமே நிற்கிறது. காரணம் படம் முழுவது துரோகத்தியின் அடிப்படையாகவே இருக்கிறது. படம் தொடங்கி இறுதிவரை துரோகம் என்ற ஒன்றை பின்னனியாக கொண்டே திரைக்கதை நகர்கிறது. உண்மை சரித்திரம் என்றாலே துரோகம் மட்டுமே நிறைந்தவை என்ற மாயையை உருவாக்கியுள்ளது இந்த படம். இந்த துரோகங்கள் சரித்திரத்தின் உண்மையா இல்லை திரைக்கதை ஓட்டத்திற்காக பயன்படுத்தப்பட்டவையா என்று குழம்பவைக்கிறது. உண்மை சரித்திரம் தெரிந்த சரித்திர ஆய்வாளர்களுக்கே இது வெளிச்சம்.

தொகுப்பு.:

ஒரு சரித்திரகதையை பார்க்க விரும்பிய ரசிகர்களுக்கு சரித்திரத்தை மனதில் பதியவைப்பதற்கு பதில் சரித்திரத்தின் துரோக பக்கங்களை மட்டுமே பதியவைத்துள்ளார் இயக்குனர். பிரமாண்ட சரித்திரப்படத்தை கொடுப்பதற்கு பதில் பிரமாண்ட படத்தில் சரித்திர பின்னணியை புதைத்து ரசிக்கும் படி உருவாக்கி கொடுத்துள்ள படம் தான் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம். படத்தின் பிரமாண்டம் காட்சியமைப்பு இயக்குனரின் உழைப்பு போன்றவை நிச்சயம் விமர்சகன் என்ற பார்வையை தாண்டி சினிமா ரசிகன் என்ற பார்வையில் அனைவரையும் கவரும்.

Movie Gallery

  • review

    Megha Akash

  • review

    Remya Nambeesan

  • review

    Dushara Vijayan

  • review

    Meghashree

  • review

    Shilpa Shetty

  • review

    Aditi Rao Hydari

  • review

    Anandhi

  • review

    Diva Dhawan

  • review

    Anjali

  • review

    Aishwarya Lekshmi

  • review

    Lakshmi Gopalaswamy

  • review

    Nidhi Agarwal

  • review

    Manjima Mohan

  • review

    Priya Varrier

  • review

    Rahasya Gorak

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.