Join/Follow with Our Social Media Links

November Story Review

நவம்பர் ஸ்டோரி (November Story) விமர்சனம் (Review)


விகடன் டெலிவிஸ்டாஸ் சார்பில் தயாரித்துள்ள வெப்சீரிஸ் நவம்பர் ஸ்டோரி. இந்திரா சுப்ரமணியன் இயக்கியுள்ளார். விது அயன்னா ஒளிப்பதிவு செய்துள்ளார்., சரண் ராகவன் இசையமைத்துள்ளார், ஷரண் கோவிந்தசாமி படத்தை தொகுத்துள்ளார்.

கிரைம் திரில்லராக உருவாகியுள்ள இந்த வெப்சீரிஸில் நடிகை தமன்னா முதன்மை கதாப்பாத்திரதில் நடித்துள்ளார் இவர்களுடன் G.M.குமார், பசுபதி, விவேக் பிரசன்னா, அருள் தாஸ், மைனா நந்தினி மற்றும் பல நடித்துள்ளனர்.

இது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இன்று முதல் (20.05.2021) ஒளிபரப்பாகின்றது.

1.SAVE HIM FROM HIM, 2.WHITE WASH, 3.FLASHES, 4.CROSS ROADS, 5.KNITTING, 6.CLOSE TO, 7.TRUTH என ஏழு பாகங்களாக உருவாகியுள்ளது இந்த வெப்சீரிஸ்

கதைக்கரு: பாசத்திற்காக ஏங்கும் ஒரு மனிதன் அதை தக்கவைக்க எந்த எல்லைக்கும் போவான் என்பதே கதைக்கரு.

கதை:

16 நவம்பர் 1995 ல் அப்பன் கோயில், நெல்லையில் ஒரு பேருந்து கோர விபத்து நடக்கின்றது.  அங்கேயிருந்து தான் கதையும் தொடங்குகின்றது. அந்த நவம்பரின் அடிப்படை என்ன என்பதே கதையின் முக்கியம்சம்.

அணு (தமன்னா) தன் நண்பன் மலர்மன்னன்(விவேக் பிரசன்னா) மென் பொருள் நிறுவணத்தில் பணிபுரிகின்றார். அந்த மென்பொருள் நிறுவணம் காவல் துறையின் முதல் தகவல் அறிக்கைகளை இணைய தளத்தில் பதிவேற்றும் டெண்டரை எடுத்துள்ளது. யாரோ அந்த இணைய தளத்தை ஹேக் செய்து ஒரு குறிப்பிட்ட முதல் தகவல் அறிக்கையை திருட முயல்கின்றது. அந்த தகவல் அறிக்கை நவம்பர் மாதத்திற்குறியது.

அணுவின் தந்தை கணேசன் சுகன் என்ற புணைப்பெயரில் கிரைம் நாவல்களை எழுதும் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர். அவருக்கு சிறிது சிறிதாக மறதி நோய் ஏற்படுகின்றது. சித்ரா(மைனா நந்தினி) அவரை பார்த்துகொள்கின்றாள்.  தந்தையின் நோயை குணப்படுத்த பெரும் தொகை தேவைப்படுவதால் அவர்கள் வீட்டை விற்க முயற்சிக்கின்றாள் அணு. ஆனால் தந்தை அதை விற்க மறுக்கின்றார். ஒரு கட்டத்தில் தந்தை குணப்படுத்த அவர் இறந்துவிட்டாத பொய் இறப்பு சான்றிதழ் வாங்கி விற்க முயல்கின்றார். அந்த சூழலில் அவர் விற்க நினைத்த வீட்டில் ஒரு பெண் இறந்து கிடக்கின்றாள். இறந்த அவர் உடலில் பேனாவால் பலமுறை குத்தப்பட்டு கிடக்கின்றது. அருகில் அணுவின் தந்தை நினைவாற்றல் இல்லாமல் இருக்கின்றார். தன் தந்தை மீது கொலை பழி வந்துவிடக்கூடாது என்பதற்காக கை ரேகைகளையும் தடயங்களையும் அழிக்க வெள்ளை பெயிண்டை அந்த பிணத்தின் மீது ஊற்றி மறைக்கின்றாள். தன் தந்தை அந்த கொலையை செய்யவில்லை என்பதை உறுதியாக நம்புகின்றார். உண்மை கொலைகாரனை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றாள்.

இந்த கொலையை கண்டு பிடிக்கும் பணியில் போலிஸ் அதிகாரி சுடலை (அருள் தாஸ்) முயற்சிக்கின்றார். அவருக்கு உதவியாக பிரேத பரிசோதனை நிபுணர் பரந்தாமன் இருக்கின்றார். இந்த கொலையின் அடிப்படையை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றனர். அந்த நேரத்தில் பரந்தாமனின் உடன் பணிபுரிந்த மிகச்சிறந்த ஒய்வு பெற்ற பிரேத பரிசோசனை நிபுணர் யேசு (பசுபதி) அவருக்கு உதவுகின்றார்.

அதே நேரத்தில் கமிஷ்னர் ஆஃப் ஹைதரபாத் போலிஸிலிருந்து காவல் நிலையத்திற்கு ஒரு அறிவிப்பு வருகின்றது. பிணு, சந்தீப், மற்றும் அஹமது மருத்துவ கல்லூரி மாணவர்களான இவர்கள் தன்னுடன் படிக்கும் நீடாவை கற்பழித்து கொலை செய்துவிட்டு சென்னையில் தஞ்சம் புகுத்திருப்பதாக அதில் சொல்லப்பட்டிருக்கின்றது.

சிறுவயதிலே அணாதையாக இருக்கும் யேசு பாசத்திற்காக ஏங்கிக்கொண்டு இருப்பவர், அவர் மிகவும் நேசிப்பவர் அவர் இருக்கும் அணாதை இல்லத்தின் காப்பாளர். நன்றாக படிப்பவர், அவருக்கு ஒரு குறை சிறுவயதிலிருந்தே வலது கையில் நடுக்கம் இருந்து கொண்டே இருக்கும். ஒரு கட்டத்தில் அவர் மீது பாசம் வைத்த காப்பாளரும் இறந்துவிட தனிமையை உணருகின்றார். மருத்துவத்தில் பட்டம் பெற்று முதன்மை மாணவனாக தேர்ச்சி பெறுகின்றார். அவருக்கு அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டும் என்ற எண்ணம். ஆனால் அவரின் வலது கை நடுக்கம் காரணமாக அவர் விரும்பும் வேலை கிடைக்கவில்லை. அவருக்கு பிரேத பரிசோதனை துறைதான் சரிப்பட்டுவரும் என்று சொல்லி அதில் பணியமர்த்துகின்றனர். சிறந்த பிரேத பரிசோதனை நிபுணராக இருந்த யேசு குறுகிய காலத்திலேயே மனைவியை இழந்தவர். மனநிலை சரியில்லாத மகள் மதியுடன் ஒய்வுபெற்ற காலத்தில் வாழ்ந்து வருகின்றார்.

16 நவம்பர் 1995 ல் நடைபெற்ற பேருந்து விபத்தை அடிப்படையாக வைத்து மேற்கூறிய சம்பவங்களை இணைத்து. கொலையான பெண்ணின் கொலை அடிப்படையை அணு எப்படி கண்டுபிடிக்கின்றார் என்பதை சுவாரஸ்யம் குறையாமால் விறு விறுப்பாக சொல்லியிருக்கின்றனர்.

பாராட்டுக்குறியவை:

பெரும்பாலானாக கிரைம் திரில்லர் படங்களை ஒரு கொலையை மையமாக வைத்து அவை சார்ந்த முடிச்சுகளை அவிழ்பதாகத் தான் திரைக்கதை இருக்கும். ஆனால் நவம்பர் ஸ்டோரியில் பல முடிச்சுகளை போட்டு ஒரு கொலையை மையப்படுத்தி அந்த முடிச்சுகளை அவிழ்ப்பது போல் திரைக்கதை அமைத்துள்ளனர்/

அணுவாக முதன்மை கதாப்பாத்திரமேற்று நடித்துள்ள தமன்னா தந்தை மீது காட்டும் பாசத்திலும், அவருக்காக வீட்டைவிற்க முடியாமல் அவர் தவிப்பது, தன் தந்தை கொலைக்குற்றவாளி என தெரிந்து அவரை காப்பாற்ற அவர் எடுக்கும் முயற்சி அனைத்திலும் சிறந்த நடிப்பாற்றை வெளிப்படுத்தியுள்ளார்.

சுகன் என்னும் கணேசனாக நடித்துள்ள G.M.குமார் நடித்துள்ளார் என்பதைவிட அந்த காதாப்பாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் என்றே சொல்ல வேண்டும். ஞாபக சக்தி இழந்து தவிப்பது, மகளுக்கு மட்டுமே கட்டுப்படுவது. என்று அனுபவ நடிப்படை வெளிப்படுத்தியுள்ளார்.

அணுவின் கதாப்பாத்திரத்திற்கு இணையாக காவல்துறை அதிகாரி சுடலையாக வரும் அருள் தாஸிற்கும் கொடுத்துள்ளனர். கொலையின் ஒவ்வொரு முடிச்சுகளையும் அவிழ்ப்பதில் அணு கதாப்பாத்திரத்திற்கு இணையாக இவர் கதாப்பாத்திரமும் அமைப்பட்டுள்ளது.

யேசுவாக வரும் பசுபதி ஒரு பிரேத பரிசோதனை நிபுணராகும் பாசத்திற்காக ஏங்கும் முகபாவத்திலும் சிறப்பாக நடித்துள்ளார். இந்த தொடரின் முதுகெலும்பாக இவர் கதாப்பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப நடிப்பிலும் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

 

ஒரு கிரைம் திரில்லரை பலவகை முடிச்சுகளை போட்டு ஒவ்வொன்றாக அவிழ்க்கும் அடிப்படையிலான திரைக்கதையை அமைத்து விறுவிறுப்பாக கொடுத்துள்ள திரைக்கதை வடிவமைப்பாளரையும், கதையாசிரியர் மற்றும் இயக்குனர் பாராட்டுக்குறியவர்கள்.

நெருடலானவை:

மருத்துவ கல்லூரி மாணவர்களாக இருப்பவர்கள் கம்யூட்டரை அதுவும் காவல்துறை அலுவலக கம்யூட்டரை ஹேக் செய்வதாக அமைக்கப்பட்ட திரைக்கதை ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை.

நீடாவை கற்பழித்து கொலைசெய்ததாக நீருபிக்கப்பட்ட அந்த காட்சிகளில் அதற்குறிய அழுத்தம் இல்லை. அதை ஏதோ காற்றுவாக்கில் சொல்லப்பட்ட ஒரு நிகழ்வாக காட்சி அமைத்திருப்பதில் ஏதோ ஒரு உறுத்தல் இருக்கின்றது.

இணைய தளத்தில் ஒரு தகவலை ஏற்றும் போது அதற்குறிய அடிப்படை சார்ந்த கோப்புகள் கண்டிப்பாக இருக்கும். அப்படிப்பட்ட சூழலில் ஒரு கோப்பை தேட கம்யூட்டர் ஹேக்கிங்க் போன்ற அடிப்படை குழப்பத்தை ஏற்படுத்துகின்றது.

தொகுப்பு: சில பல லாஜிக் விலகலை மறந்து(மறைத்து) விட்டு பார்த்தால் நவம்பர் ஸ்டோரி விறுவிறுப்பான கிரைம் திரில்லர்.

இந்த வெப்சீரீஸ் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இன்று முதல் (20.05.2021) ஒளிபரப்பாகின்றது. தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் இதை காணலாம்.

Movie Gallery

  • review

    Sri Divya

  • review

    Radhika Apte

  • review

    Dushara Vijayan

  • review

    Priyamani

  • review

    Ragini Dwivedi

  • review

    Gouri G Kishan

  • review

    Rashmika Mandanna

  • review

    Nivetha Pethuraj

  • review

    Kausalya

  • review

    Huma Qureshi

  • review

    Nithya Menen

  • review

    Sanjitha Shetty

  • review

    Pooja Hegde

  • review

    Priyanka Chopra

  • review

    Ineya

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Web Designing Comapny

Jiojith Web Services

SEO Company in Chennai

We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.