Join/Follow with Our Social Media Links

Paramapatham-Vilayattu

பரமபதம் விளையாட்டு திரைவிமர்சணம்


பரமபதம் விளையாட்டு திரைவிமர்சணம்

ஏணிகளே இல்லாமல் பாம்புகள் மட்டும் நிறைந்த பரமபத விளையாட்டு.

 

24HRS Production சார்பில் K.திருஞானம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் பரமபதம் விளையாட்டு. நடிகை திரிஷாவின் 60வது திரைப்படத்தில் முக்கிய முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றார்.. அம்ரேஷ் கணேஷ் இசையமைத்துள்ளார். J.தினேஷ் ஒளிப்பதிவு செய்ய C.S.பிரேம் குமார் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

.

கதை:

அரசியல் பரமபத விளையாட்டில் ஏராளமான கட்டங்கள் இருக்கும். அதில் பாம்புகள் மட்டும் நிறைந்திருக்கும். இங்கே சுவராசியம் விளையாடுபவர்களுக்கு மட்டுமே. அதில் கட்டம் விட்டு கட்டம் தாவும் காய்கள் மட்டுமே பாவத்திற்குறியது. பாம்பின் வாயிலிருந்து எப்படி தப்பிப்பது எங்கே பாம்பு இருக்கின்றது. தன் நகர்வு எப்படியிருக்கும் என்பது தான் காய்களின் எதிர்பார்ப்பு.

 

அரசியல்வாதி செழியன் (வேல.ராமமூர்த்தி) நேர்மையான எதிர்கட்சி தலைவர். அவரது மகன் தமிழ் செல்வன். அவர்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர் கலிங்கன் (AL.அழகப்பன்), மகளிர் அணி தலைவி மணிமொழி (சோனா). தேர்தல் நெருங்கும் நேரத்தில் தலைவர் செழியனுக்கு உடல் நலன்குன்றி மிகவும் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் அணுமதிக்கப்படுகின்றார். அவர் இறக்க வேண்டும். அப்போதுதான் தங்கள் அரசியல் வாழ்கை நன்றாக இருக்கும் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள். அவரை மருத்துவர் காயத்திரி (திரிஷா) காப்பாற்றி உடல் நலம் தேற முயற்சிக்கின்றார். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் போது திடீரென ஏற்படும் மூச்சு திணறல் காரணமாக மரணிக்கின்றார். அந்த மரணம் இயற்கையானது அல்ல. அது கொலை என்று டாக்டர் காயத்திரி சந்தேகப்படுகின்றார். அதற்கான ஆதாரத்தை சேகரிக்கின்றாள். ஆனால் காயத்திரியின் காது கேளாத வாய்பேச முடியாத மகள் சுஜியை (பேபி மானஸ்வி) செழியனை கொலைசெய்தவர் அடியாடகள் கடத்தி ஆதாரத்தை கேட்டு காயத்திரியை மிரட்டுகின்றனர். காயத்திரியும் அவர் மகளும் அவர்களிடம் இருந்து எப்படி தப்பிக்கின்றனர். செழியனை கொன்றவர்களை என்ன செய்தார் என்பதே கதை.

 

பாராட்டுக்குறியது:

 

இயக்குனர் K.திருஞானம் ஒரு கிரைம் கதை சுவராஸ்யம் குறையாமல் விருவிருப்பாக கொடுத்துள்ளார்.

ஒரு கிரைம் திரில்லர் கதையின் விறுவிறுப்பு ஏற்ப இரவின் சூழலில் அழகான ஒளிப்பதிவை செய்துள்ளார் J.தினேஷ்.

ஒரு கதாநாயகி அடிப்படையிலான திரைப்பட்டத்தை தனது 60வது படமாக தேர்ந்தெடுத்து திரிஷா  நடித்துள்ளார். ஒட்டு மொத்த திரைப்படத்தை அவரே ஆக்கிரமித்துள்ளார். அதற்கேற்ப நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

கிரைம் திர்ல்லார் படத்திற்கு ஏற்ற அளவான இசையமைப்பு. பணியை செய்துள்ளார் அம்ரேஷ் கணேஷ்.

அடியாள் தலைவனாக நடித்துள்ள ரிச்சர்ட்ரிஷி நன்றாக நடித்து மிரட்டியுள்ளார்.

 

அரசியல் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர் கலிங்கனாய் நடித்திருக்கும் AL.அழகப்பன் அருமையாக நடித்துள்ளார்.

 

பலகாட்சிகள் நடந்து முடிந்த அரசியல் நிகழ்வுகளை பின்புலபடுத்தி திரைக்கதையை அமைத்துள்ளனர்.

 

நெருடலானவை:

 

விறுவிறுப்பான கதையோட்டத்தில் சில மர்மங்கள் எளிதாக விடுபடும் அடிப்படையில் திரைக்கதை அமைத்துள்ளது. பல படங்கள் இந்த அடிப்படையில் வந்துள்ளாதல் எளிதாக இறுதிகாட்சியையும் கதையில் உள்ள மர்மத்தையும் ஊகித்துவிட முடியும்.

 

எதிர்கட்சி தலைவர் செழியன் மிகமிக நல்லவராக காண்பித்துளார். இப்படிப்பட்ட நல்லவர் கதாபாத்திரத்தை ஏன் எதிர்கட்சி தலைவராக இயக்குனர் சித்தரித்தார்? ஏன் அவர் ஆளும் கட்சி தலைவராக காட்டியிருக்கக்கூடாது.

 

நடிகர் நந்தா (தமிழ்செல்வன்) கதாபாத்திரம், பாத்திர படைப்பு மற்றும் நடிப்பு ஏற்கணவே பார்த்தது போல் இருக்கின்றது.

 

சில காட்சிகள் வேகம்(Vegam)(அஸ்வின் சேகர்), நாயகன்(Nayagan) (JK.ரித்தீஷ்) பட காட்சிகளை நினைவுபடுத்துகின்றன..

 

தொகுப்பு:

பரமபதம் விளையாட்டு சுவராஸ்யம் தான் ஆடுபவர்கள் பார்வையில் இருந்து பார்க்காமல் நகரும் காய்களின் மனவோட்டத்தில் பார்த்தால்.

 

Movie Gallery

  • review

    Neetu Chandra

  • review

    Ananya

  • review

    Kajal Agarwal

  • review

    Mahima Nambiar

  • review

    Sshivada

  • review

    Aishwarya Lekshmi

  • review

    Priya Varrier

  • review

    Karthika Nair

  • review

    Amyra Dastur

  • review

    Madonna Sebastian

  • review

    Krithi Shetty

  • review

    Navya Nair

  • review

    Anagha

  • review

    Nayanthara

  • review

    Madhu Shalini

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Web Designing Comapny

Jiojith Web Services

SEO Company in Chennai

We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.