Join/Follow with Our Social Media Links

IPC 376 தமிழ் பட திரை விமர்சனம்

IPC 376 தமிழ் பட திரை விமர்சனம்


பவர்கிங் ஸ்டுடியோ சார்பில் S பிரபாகர் தயாரித்துள்ள படம் IPC 376. ராம்குமார் சுப்பராமன் எழுதி இயக்கியுள்ளார். யாதவ் ராமலிங்கம் இசையமைத்துள்ளார், K தில்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். R நிர்மல் படத்தை தொகுத்துள்ளார்.

IPC 376 படத்தில் நந்திதா ஸ்வேதா இண்ஸ்பெக்டர் யாழினி என்ற முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மகாநதி சங்கர் (பெருமாள்), மேக்னா எலன் (பாரதி) சூப்பர் சுப்பராயன் (ராஜசேகரன்), மதுசூதன ராவ் (பிரேமா நித்யா சங்கரானந்தா சாமியார்). ஆர்யான் (செபாஸ்டீன் செல்லப்பா), சம்பத் ராம் (போலிஸ் உயர் அதிகாரி), G மாரிமுத்து (ஆறுமுகம்) மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதைக்கரு.

IPC 376 பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள் குற்றங்களுக்கு நடவடிக்கை எடுக்க உருவாக்கப்பட்ட இந்திய தண்டனை சட்டம் பிரிவு 376. பொதுப்படையாக ME Too வகை புகார்களின் அடிப்படையில் இந்த பிரிவில் நடவடிக்கை எடுக்க முடியாது. ஆதாரப்பூர்வமான குற்றங்களின் அடிப்படையில்தான் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் அனைத்து குற்றங்களும் ஆதாரத்தை வைத்துக்கொண்டு நடப்பதில்லை. ஏராளமான குற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் ஆதாரங்களின் அடிப்படையிலான குற்றங்கள் என்பது ஒட்டு மொத்த குற்றங்களில் ஒரு சதவீதத்திற்கு கீழ் தான் இருக்கின்றது. அப்படிப்பட்ட குற்றங்களுக்கு எப்படி தண்டனை கிடைக்கும்?.

கதை.

யாழினி நேர்மையான போலிஸ் அதிகாரி. மூட நம்பிக்கை இல்லாதவள் குறிப்பாக கடவுள், பேய் மற்றும் அமானுஷ்யங்கள் மீது நம்பிக்கை இல்லாதவர். மூட நம்பிக்கைகளை பின்னணியாக கொண்டு குற்றங்கள் செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறாள். அவருக்கு பணியில் உறுதுணையாக இருக்கும் போலிஸ் அதிகாரி பெருமாள்.

யாழினிக்கு ஒரு குறுஞ்செய்தி வருகின்றது பீட்டர் பெர்னாண்டஸ், செயின்ட் பேட்ரிக் கல்லரை என்று அதில் இருக்கின்றது. அங்கே செல்கின்றாள் ஆனால் அங்கே ஒரு பிளாஸ்டிக் பை அவள் செல்லுமிடங்களுக்கெல்லாம் வருகின்றது. அங்கே இருக்கும் ஒரு கஞ்சா கும்பலை பிடிக்கின்றாள் யாழினி. தனக்கு வந்த குறுஞ்செய்தியை யாராவது Informer அணுப்பியிருப்பதாக கருதுகின்றாள். ஆனால் அந்த குறுஞ்செய்தி வந்த எண்ணில் ஒரு தொலைபேசி இணைப்பும் இல்லை என்று அதிர்ச்சியடைகின்றாள். ஆனால் தன்னை பற்றிய விவரம் வெளியில் தெரியக்கூடாது என தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளதாக நினைக்கின்றாள்.

யாழினிக்கு மீண்டும் ஒரு குறுஞ்செய்தி அதே எண்ணிலிருந்து வருகின்றது. ராஜசேகர் குற்றவாளி என்று இருக்கின்றது. ராஜசேகர் பற்றி விசாரித்தால் ஏராளமான ராஜசேகர் இருப்பதால் குழம்புகின்றாள். பின் ஒரு குறுஞ்செய்தி ராஜசேகர் பிறந்த தேதியுடன் வருகின்றது. அது மட்டுமின்றி அவர் இறந்த தேதி என்று அன்றைய தினத்தை குறிப்பிட்டு வருகின்றது. அதை வைத்து தேடிய போது சென்னையில் மிகப்பெரிய தொழிலதிபர் ராஜசேகர் என்று ஒருவர் இருப்பது தெரியவருகின்றது. ராஜசேகரை யாழினியும் பெருமாளும் சந்திக்கின்றனர். அவருக்கு கொலை மிரட்டல் இருப்பதை தெரிவிக்கின்றனர், ஆனால் அதை அவர் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதைக்கண்ட யாழினி கோபமுற்றாலும் அவரை காப்பாற்ற பின் தொடர்கின்றார். ராஜசேகர் காரில் செல்லும் போது ஒரு பிளாஸ்டிக்கவர் அவர் முகத்தில் சுற்றிக்கொள்ள காரை கண்ணாபின்னா என்று ஓட்டுகின்றார். யாழினி அவரை காப்பாற்றுகின்றாள். ஆனால் இதை பெருதும் பொருட்படுத்தாத ராஜசேகர் இன்று மாலை தான் தீர்த்த நீராடப்போவதாக சொல்கின்றார். அங்கும் அவருக்கு பாதுகாப்பாக யாழினியும், பெருமாளும் செல்கின்றனர். அங்கே ஒரு குழந்தை தண்ணீரில் விழுந்துவிடுகிறது. குழந்தையை காப்பாற்ற செல்கின்றாள். அதே நேரம் நீரில் மூழ்கி ராஜசேகரும் இறக்கிறான். இதனால் அதிர்ச்சியடைகின்றாள் யாழினி. ஆனால் ராஜசேகர் குளத்தில் மூழ்கும் போது பிளாஸ்டிக்கவர் அவர் முகத்தில் சுற்றியதால் தான் இறந்தார் என்று பிரேத பரிசோதனை அறிக்கை வருகின்றது.

மீண்டும் ஒரு குறுஞ்செய்தி யாழினிக்கு வருகின்றது. அதில் அரவிந்த் ரெசார்ட் குற்றவாளி என்று செய்தி இருக்கின்றது. ஏற்கனவே அந்த ரெசார்ட் மேனஜர் அவர் ரிசார்ட்டில் பேய் இருப்பதாக சொல்லி அதை விரட்ட உதவி வேண்டி யாழினியை சந்தித்திருக்கின்றார். அதை நினைவில் கொண்ட யாழினி அவரின் நம்பரை தொடர்பு கொண்டு அங்கே செல்கின்றாள்.

அந்த ஹோட்டல் உரிமையாளர் செபாஸ்டீன் செல்லப்பா. செபாஸ்டீன் செல்லப்பா சகோதரன் அந்த ஹோட்டலை சொந்தமாக்கிகொள்ள பேய் உளவுவதாக நாடகம் போட்டு அடைய நினைக்கின்றான். இதை கண்டு பிடித்த யாழினி குற்றவாளிகளை கைது செய்கின்றாள். அப்போது மீண்டும் ஒரு குறுஞ்செய்தி வருகின்றது. அதில் செபாஸ்டீன் செல்லப்பா நாளை இறந்துவிடுவார் என்று வருகின்றது. ஆனால் செபாஸ்டீன் லண்டனில் இருப்பதாக ரிசார்ட் மேலாளர் சொல்கின்றார். அவர் இன்னும் 5 நாட்களுக்கு பிறகு தான் சென்னை வருவதாக சொல்கின்றார்.

அதே நேரம் போலிஸ் அதிகாரி பெருமாள் பேயால் தாக்கப்பட்டதாக சொல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த நேரம் யாழினிக்கு ரிசார்ட் மேலாளரிடமிருந்து போன் வருகின்றது. செபாஸ்டீன் தன் நண்பரின் காரியத்திற்காக முன்னதாகவே இந்தியா வந்துவிட்டதாக தகவல் சொல்கின்றான். யாழினி செபாஸ்டீனையும் மேலாளரையும் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறாள். ஆனால் முடியவில்லை. அதனால் நேரடியாக செபாஸ்டீன் வீட்டிற்கு செல்கின்றாள். வழியில் ஒரு பிளாஸ்டிக் பையால் தாக்கப்பட்டு விபத்து ஏற்பட யாழினி மயக்கமடைகின்றாள். மயக்கம் தெளிந்து கண்விழித்து பார்க்கும் போது மருத்துவமனையில் இருக்கின்றாள். அப்போது செபாஸ்டீன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வருகின்றது.

தற்கொலை நடந்த இடத்துக்கு செல்லும் யாழினி அங்கே ஆய்வு மேற்கொள்கிறாள். அப்போது அது வரை வேலை செய்யாமல் இருந்த CCTV திடீரென வேலை செய்கின்றது. அதில் செபாஸ்டீனை யாழினி கொலை செய்வதாக காட்சி வருகின்றது. அதை பார்த்து அதிர்ந்து போகின்றாள் யாழினி.

அதுவரை பேய், மூடநம்பிக்கை மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாத யாழினிக்கு அவையெல்லாம் உண்மைதானோ என்ற சந்தேகம் வருகின்றது.

ராஜசேகர் மற்றும் செபாஸ்டீன் செல்லப்பாவின் நண்பர் சாமியார் பிரேமா நித்யா சங்கரானந்தா. செபாஸ்டீன் செல்லப்பாவின் வீட்டிற்கு செல்கின்றார். அங்கே தனது சித்து விளையாட்டு சக்தியின் மூலம் செபாஸ்டீனை கொன்றவர் உருவத்தை வரைகின்றார். அதில் யாழினி முகம் வருகின்றது.

யாழினி தனக்கு வந்த குறுஞ்செய்திகளை மீண்டும் ஆராய்கின்றாள். நம்பரை திருப்பிப்போட்டு பார்க்கின்றாள். அந்த எண் பாரதி ஆறுமுகம் என்ற பெண்ணுடையது என்று கண்டு பிடிக்கின்றாள். முதலில் அதில் வந்த மெசேஜ் பீட்டர் பெர்னாண்டஸ், செயின்ட் பேட்ரிக் கல்லரை. மீண்டும் அங்கே சென்று அந்த கல்லரையை தோண்டிப்பார்க்கின்றாள். அதில் பாரதி ஆறுமுகத்தின் பிணத்தை கண்டு பிடிக்கின்றாள் யாழினி.

பாரதியின் தந்தை ஆறுமுகத்திடம் பிணத்திலிருந்து எடுக்கப்பட்ட மோதிரத்தை கொடுக்கின்றார், ஆனால் ஆறுமுகமோ உன்னை பார்த்தால் என் பெண் போல இருக்கின்றது நீயே இதை வைத்துக்கொள் என்று கொடுக்கின்றார்.

பேய் நம்பிக்கை இல்லாத யாழினி பேய் என்று ஒன்று இருப்பதை உணர்கின்றாள். அது மட்டுமின்றி ராஜசேகர் மற்றும் செபாஸ்டீன் இருவரையும் அந்த ஆவி தன் உடம்பில் புகுந்து தன் மூலம் கொலைசெய்ததை அறிகின்றாள். அதுமட்டுமின்றி மூன்றாவது நபரையும் யாழினி மூலம் தான் கொலை செய்யப்போவதாக அந்த ஆவி சொல்கின்றது.

நேர்மையான போலிஸ் அதிகாரியான யாழினிக்கு அதில் உடன்பாடில்லை. அதற்காக தன்னைத்தானே அழித்துக்கொள்ள முயல்கின்றாள். ஆனால் பாரதியின் ஆவி அவளை சாகவிடாமல் தடுக்கின்றது.

பாரதி ஆறுமுகத்தின் ஒரே மகள். சிறுவயதிலேயே தாயை இழந்தவர். தந்தையின் பாசத்தாலும் அரவணைப்பாலும் வளர்ந்தவர். தான் வேலைக்கு சென்று தன் தந்தையை நல்லபடியாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவள். நன்கு படித்து பட்டம் பெற்ற பாரதி வேலைக்காக ஒரு நிறுவனத்திற்கு செல்கின்றாள். அங்கே செபாஸ்டீன் நிறுவனராக இருக்கின்றார். அவர் நண்பர்கள் ராஜசேகரன் மற்றும் சாமியார். அவர்கள் பாலியல் தொடர்புக்கு ஏற்றவகையில் அழகான பெண்னை நேர்முகத் தேர்வில் தேர்ந்தெடுக்கின்றனர். அந்த வகையில் பாரதியை தேர்ந்தெடுக்கின்றனர். பாரதியிடம் வேலை வேண்டுமென்றால் அவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டுமென்று கேட்கின்றனர். இதனால் கோபமுற்ற பாரதி வேலையே வேண்டாமென்று சென்று விடுகின்றார். நடந்ததை தன் தந்தை ஆறுமுகத்திடம் சொல்கின்றாள். ஆறுமுகம் செல்லப்பாவிடம் சென்று சண்டை போடுகின்றார். ஆனால் அலுவலகத்தில் வந்து சண்டை போட்ட ஆறுமுகத்தை கைது செய்கின்றது போலிஸ்.

அப்போது யாழினி IPC 376 மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் பொதுப்படையாக பாலியல் தொந்தரவு என்று புகார் கொடுக்க வேண்டாம். ஆதாரப்பூர்வமாக புகார் கொடுத்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று பெண்கள் மத்தியில் யாழினி பேசுவதை கேட்ட பாரதி. மூன்று பேரையும் ஆதாரப்பூர்வமாக மாட்டிவிட நினைக்கின்றாள். ஆனால் அவர் முயற்சியை கண்டுபிடித்த மூன்று பேரும் முகத்தில் பிளாஸ்டிக் பையை கட்டி பாரதியை கொல்கின்றனர்.

எஞ்சிய சாமியாரையும் யாழினி மூலமே கொல்வதாக பாரதி ஆவி சொல்கின்றது. ஆனால் நேர்மையான போலிஸ் அதிகாரியான யாழினி ஆவி தன் உடம்பில் புகாமல் இருக்க அம்மன் காப்பை கட்டிக்கொள்கின்றாள்.

சாமியார் பிரேமா நித்யா சங்கரானந்தா ஆறுமுகத்திடம் அவர் மகள் ஆவியாய் இருப்பதாக சொல்கின்றார். அவளை சாந்தப்படுத்த அவள் பொருள்களை யாகத்தில் போட்டு எரிக்க வேண்டுமென்று சொல்கின்றார். அதன் படி ஒவ்வொரு பொருளாக யாகத்தில் போடுகின்றார். ஆவி அழிந்து கொண்டிருக்கின்றது, ஆனால் ஒரு பொருள் மிச்சமிருப்பதாக சாமியார் சொல்கின்றார். தன் மகளின் மோதிரம் இன்ஸ்பெக்டர் யாழினியிடம் இருப்பதாக ஆறுமுகம் சொல்கின்றார்.

சாமியாரின் ஆட்கள் யாழினியை கடத்தி கொண்டு வந்து தவறுதலாக மோதிரத்தை கழற்றுவதற்கு பதிலாக காப்பை கழற்றுகின்றனர். ஆவி சாமியார் ஆட்களையும் சாமியாரையும் கொன்று பழி வாங்குகின்றது.

பாராட்டுக்குறியவை.

Me Too Me Too என்று பாலியல் தொந்தரவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. ஆனால் இவைகள் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த முடியாது. ஆதாரப்பூர்வமான பாலியல் குற்றங்களுக்கு IPC 376 ன் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்ற அடிப்படையை சொல்லியுள்ளனர்.

நடிகை நந்திதா ஸ்வேதா கொடுத்துள்ள கதாப்பாத்திரத்திற்கேற்ப தன் பங்களிப்பை கொடுத்துள்ளார்.

இதுவரை சிறு சிறு கதாப்பாத்திரம், நகைச்சுவை பாத்திரத்தில் மட்டும் நடித்து வந்தார் மகாநதி சங்கர். இந்த படத்தில் முழு குணசித்திர நடிகராக நடித்துள்ளார்.

கதாநாயகன் என்று ஒரு கதாப்பாத்திரத்தை கொடுக்காமல் டூயட் பாடல்கள் கொடுக்காமல் கதையை நகர்த்தியுள்ளனர்.

நெருடலானவை.

கதையை சஸ்பென்ஸ்சாக நகர்த்துவதா? இல்லை அமானுஷ்யங்கள் அடிப்படையில் நகர்த்துவதா? என்ற குழப்பத்தில் கதை நகர்வதை உணர முடிகின்றது.

கதை தொடங்கியவுடனே முழுப்படத்தையும் யூகிக்கும் சர்வசாதாரணமான திரைக்கதை நகர்வு.

நடிகை நந்திதா ஸ்வேதா சிறப்பாக நடித்துள்ளார் என்பது ஏற்றுக்கொண்டாலும். ஆக்ஷ்ன் காட்சிகள் சற்று மிகைப்படுத்தப்பட்டுள்ளதை போல் உள்ளது.

சாமியார் கதாப்பாத்திரம் சக்தி நிறைந்தவரா இல்லை போலி சாமியாரா என்று கணிக்கமுடியாமல் சொதப்பல் கதாப்பாத்திரம்.

தொகுப்பு:.

நந்திதா ஸ்வேதாவை மட்டும் நம்பி எடுக்கப்பட்ட IPC 376 திரைப்படம் சஸ்பென்ஸோ, த்ரில்லிங்கோ, விறுவிறுப்போ இல்லாத சராசரி திரைப்படம்.

Movie Gallery

  • review

    Shruti Haasan

  • review

    Parvati Nair

  • review

    Bindu Madhavi

  • review

    Kaniha

  • review

    Anukreethy Vas

  • review

    Sri Divya

  • review

    Huma Qureshi

  • review

    Tamannah

  • review

    Neelima Esai

  • review

    Catherine Tresa

  • review

    Anjali

  • review

    Meera Mithun

  • review

    Gayathri

  • review

    Priya Anand

  • review

    Bhavana

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Web Designing Comapny

Jiojith Web Services

SEO Company in Chennai

We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.