இண்டி ரெபெல்ஸ் சார்பில் ஹிப்பாப் தமிழா தயாரிக்க சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜூன் தியாகராஜன் வழங்கும் படம் சிவகுமாரின் சபதம். ஹிப்பாப் தமிழா ஆதியின் கதை, திரைக்கதை, வசனம், பாடல் (மிடில்கிளாஸ் டா பாடலை மட்டும் ரோகேஷ் எழுதியுள்ளார்) மற்றும் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. அர்ஜூன் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். தீபக் S துவாரங்நாத் படத்தை தொகுத்துள்ளார்.
சிவகுமாரின் சபதம் படத்தில் ஹிப்பாப் தமிழா ஆதி (சிவகுமார்) மாதுரி ஜெயின் (ஸ்ருதி) கதாநாயகியாக அறிமுகமாகின்றார். ஆதித்யா சேனல் புகழ் கதிர், பிராங்க் ராகுல் (முருகன்), பார்வதி vj (ஐஸ்வர்யா) மற்றும் பலர் நடிக்கின்றனர்.
கதைக்கரு
காசு பணத்திற்கு பின்னால் நாம் செல்லாமல் நமக்கு பின்னால் நான்கு நல்லவர்கள் இருக்க வேண்டும் என்ற கருவை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது சிவகுமாரின் சபதம்.
கதை:
காஞ்சிபுரத்தில் பட்டு நெசவு செய்து வருபவர் மட்டுமல்ல ராஜபரம்பரைக்கும் நெசவு செய்து கொடுத்த பரம்பரையை சேர்ந்த வரதராஜன் கடவுளுக்கு மட்டும் பட்டு நெசவு செய்து கொடுத்துக்கொண்டிருக்கின்றார். அவரின் மகன் கணேஷ் தனத்தை திருமணம் செய்து கொண்டு வீட்டிற்கு வரும் போது வரதராஜன் மனைவி (முருகன்) குழந்தையை பெற்று விட்டு இறந்து போகின்றாள். ஆனால் கணேஷ் மனைவி தனம் அண்ணியாக இல்லாமல் தாயைப்போல் அவனை வளர்க்கின்றாள். கணேஷன் தன் தம்பி முருகன் மீது பாசம் வைத்திருக்கின்றான். கணேஷ் மற்றும் தனத்திற்கு மகனாக பிறப்பவன் தான் சிவகுமார். சிவகுமாரின் சித்தப்பா முருகன் மிக சொற்ப ஆண்டு இடைவெளிதான் முருகனுக்கும் சிவகுமாருக்கும். ஆனால் முறையில் சிவக்குமாரின் சித்தப்பா முருகன். ஆனால் வயது மிகமிக குறைவு என்பதால் சிவக்குமாருக்கும் முருகனுக்கும் இடையில் பிரச்சனை வருகின்றது. வரதராஜன் தன் மகன் முருகனைவிட பேரன் சிவக்குமார் மீதே அதிகம் பாசம் வைத்திருக்கின்றார். இந்த பிரச்சனையை தீர்க்க கணேஷ் தன் தம்பி முருகனை சென்னைக்கு அணுப்புகின்றார். அப்போது முருகன் நான் சிவக்குமாரைவிட பெரிய ஆளாக வந்து காட்டுவதாக சொல்கின்றான். வரதராஜன் பேரன் முருகனை தன்னுடனே வைத்துக்கொள்கின்றார். சிவக்குமார் முருகனைவிட தான் பெரிய ஆளாக வருவதாக சபதம் செய்கின்றான். யார் வெல்வார்கள் என்ற குழப்பத்தில் இருக்கும் போது.
வளர்ந்து தன் தாத்தவிற்கு துணையாக இருக்கின்றான் முருகன். ஒரு பிரச்சனையில் சிவக்குமார் மற்றும் கதிர் இருவரும் பெரிய கடை முதலாளியை அடிக்கின்றான். காவல்துறை அவனை கைது செய்கின்றது. அப்போது பேரனை விடுவிக்க சென்ற வரதராஜனும் கைது செய்யப்படுகின்றார். கணேஷ் அவர்களை விடுதலை செய்ய முயல்கின்றான். ஆனால் அது கடினமாக இருப்பதால் முருகனின் தயவை நாடுகின்றான். முருகன் வருகின்றான். அவர்களை ஜாமினில் எடுக்கின்றார். சிவக்குமார் சபதத்தில் தோற்று முருகன் ஜெயித்து விட்டதாக நினைக்கும் போது முருகன் சந்திரசேகர் வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பதால் தான் இது முடிந்தது.
சந்திர சேகர் வரதராஜனிடம் வேலை செய்து வந்தவர். கடவுளுக்கு மட்டுமே பட்டு நெய்து கஷ்டத்தில் இருக்கும் வரதராஜனை வியாபாரத்திற்கு நெசவு செய்ய வைக்கின்றான். அவன் விசுவாசத்தை முழுதாக நம்பி தொழிலில் இறங்கும் வரதராஜன் மற்றும் அவனை சார்ந்தவர்கள். தன் சகோதரரி மற்றும் அவள் கணவனின் பேச்சை கேட்டு அவர்கள் அனைவரையும் 20 ஆண்டுகளுக்கு கொத்தடிமையாக இருக்க அதவாது 20 ஆண்டுகள் அவர்கள் நெய்யும் துணிகளை அவர்களுக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று ஏமாற்றி எழுதி வாங்குகின்றான். அவ்ர்கள் நெய்வது சந்தையில் நெய்யும் ராஜபட்டு அறியவகை வேலைப்பாடுகள் நிறைந்தது. சந்தையில் இதற்கு தனித்துவம் உள்ளது. ஆனால் இந்த பிரச்சனைக்கு பிறகு அவர்கள் அனைவரும் பட்டு நெய்வதில்லை என்று சபதம் செய்கின்றார் என்று உறுதி எடுக்கின்றனர். அதோடு பணத்தின் பின்னால் போவதை விட நல்லவர்கள் உன் பின்னால் இருக்க வேண்டுமென்று அறிவுரை சொல்கின்றார்.
சந்திர சேகர் மிகப்பெரிய பணக்காரனாகி இருக்கின்றான். அவருக்கு ஐஸ்வர்யா என்ற மகளும் மனோஜ் என்ற மகனும் இருக்கின்றனர். ஐஸ்வர்யாவை மணந்து வரதராஜன் மகன் முருகன் வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கின்றான். அவர்களுடன் சந்திர சேகர் சகோதரி, சகோதரியின் கணவர் மற்றும் அவர்கள் மகள் ஸ்ருதியும் இருக்கின்றனர். மனோஜை ஸ்ருதிக்கு திருமணம் செய்ய சந்திர சேகர் மற்றும் அவரது சகோதரியும் நினைக்கின்றனர்.
சிவக்குமாரை தன்னுடன் அழைத்து சென்று பெரிய ஆளாக மாற்றிக்காட்டுவதாக கூறி முருகன் சந்திரசேகர் வீட்டுக்கு அழைத்து செல்கின்றான். அங்கே ஸ்ருதியை பார்க்கின்றான் சிவக்குமார். அவள் இவனுடன் கல்லூரியில் படித்தவள். ஒரு தலையாக அவளை காதலித்து அதில் தோல்விய்டைகின்றான் சிவக்குமார். அப்போது அவளிடம் சபதம் போடுகின்றான் சிவக்குமார் தான் ஒராண்டுகளில் பெரிய ஆளாகி காட்டுவதாக சொல்கின்றான். சபதம் என்ன ஆனது சபதமா அப்படின்னா என்ன? என்று அவனே கேட்டுக்கொள்ளும் அளவிற்கு வெட்டியாக போனது. அதே ஸ்ருதியை ஒரு ஆபத்திலிருந்து காப்பாற்றுகின்றான். அதனால் அவளுக்கு சிவக்குமாரின் மேல் காதல் வருகின்றது. இவர்க்ள் காதலை அறிந்த மனோஜ் அவனை அடிக்கின்றான். இதை பொறுக்க முடியாமல் முருகன் மனோஜை அடிக்கின்றான். இதனால் கோபமடைந்த சந்திரசேகர் தன் மகனை அடித்த முருகனை வீட்டைவிட்டு வெளியே அணுப்புகின்றான். ஆனால் ஐஸ்வர்யா அவனோடு செல்ல நினைக்கும் போது ஐஸ்வர்யாவை தடுக்கின்றான் சந்திர சேகர்.
வீட்டை விட்டு வெளியேறிய முருகனை மீண்டும் சேர்த்துவைக்க வரதராஜன், சிவகுமார் மற்றும் கதிர் சந்திரசேகர் வீட்டுக்கு போகின்றனர். ஆனால் அவமானப்படுத்தபடுகின்றனர். அப்போது சிவக்குமார் சபதம் செய்கின்றார். என்ன சபதம் செய்கின்றார்? அது அவருக்கே தெரியாத போது நமக்கும் தெரியாது. அதாவது சபதம் போடுவது போல் உதார் விடுகின்றான்.
முருகன் தன் மாமனார் பெயரை பயன்படுத்தி கடன் வாங்கி சிவக்குமாரை நூல் வியாபாரம் செய்ய சொல்கின்றான். ஆனால் அவர்கள் சந்திர சேகர் பெயரை பயன்படுத்தி கடன் வாங்கியதை அறிந்த சந்திர சேகர் சகோதரி அவர்களை வியாபாரம் செய்ய முடியாமல் தடுக்கின்றார். இதனிடையே முருகன் குடித்துவிட்டு தன் காதல் மனைவி ஐஸ்வர்யாவை சந்திக்க செல்லும் போது ஏற்படும் சண்டையில் ஐஸ்வர்யாக தன் கணவனுடன் செல்ல முடிவு செய்கின்றாள். சந்திர சேகரே அவளை முருகன் வீட்டுக்கு கொண்டு வந்து விடுகின்றார். அப்போது அவர்களை நடுத்தெருவில் நிறுத்துவதாக சவாலும் விடுகின்றார். சிவக்குமாருக்கு கடன் கொடுத்தவர் மூலம் கடனை திரும்ப பெற அழுத்தம் கொடுக்கின்றார் சந்திர சேகர்.
அப்போது தான் ராஜபட்டுக்கு சந்தையில் இருக்கும் மவுசை நினைத்து 20 ஆண்டுகளாக மூடப்பட்ட தறிகளை வரதராஜன் மூலம் மீண்டும் இயக்குகின்றார். நல்ல வருமானம் வருகின்றது. அதே வேலை ஸ்ருதி மனோஜூடன் நடக்கும் திருமணத்தை விரும்பாமல் வீட்டை விட்டு வெளியேறி சிவக்குமார் வீட்டிற்கு வருகின்றாள்.
ஸ்ருதி அழைத்துக்கொண்டு சந்திர சேகர் வீட்டு செல்லும் சிவக்குமார் தான் அவளை காதலிப்பதை சொல்லி வசணம் மூலமே வீட்டோடு மாப்பிள்ளையாக் இருக்கும் சந்திர சேகர் கணவன் மனதை மாற்றுகின்றான். ஸ்ருதி சிவக்குமார் திருமணத்தை அவர் மூலம் உறுதி செய்கின்றான். அதோடு வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கும் அவரை வெளியேற்றுகின்றான், சந்திர சேகர் தன் சகோதரியின் கெட்ட குணத்தை உணர்கின்றார், ஸ்ருதி கிடைக்காத காரணத்தால் மகனும் கோபப்படுகின்றான். அப்போது வரதராஜன் சொன்ன வார்த்தை நினைவுக்கு வருகின்றது. பணத்துக்கு பின்னால் போவதைவிட நல்லவர்கள் நமக்கும் பின்னால் இருப்பது தான் நல்லது என்று.
இறுதியாக அனைவரும் ஒன்று சேர்கின்றனர். சிறந்த ராஜபட்டை உருவாக்கும் வரதராஜன் கௌரவப்படுத்துகின்றனர்.
பாராட்டுகுறியது:
இளைஞர்கள் விரும்பும் ஆதி அதை நிலைநிறுத்த முயற்சித்திருக்கின்றார். அதற்கேற்பதன் கதாப்பாத்திரத்தை உருவாக்கியுள்ளார்.
இதுவரை விவசாயிகர் பிரச்சனையை மட்டுமே மையப்படுத்தி பல திரைப்படங்கள் வந்துள்ளது. அதே அடிப்படையிலான பிரச்சனை கைத்தறி நெசவுத்துறையும் உள்ளது. அதைப்பற்றி பெரிய அளவு படங்கள் வந்ததில்லை, அதுவும் கைத்தறி நெசவுக்கு புகழ்பெற்ற காஞ்சிபுரம் கதைக்களத்தை கையில் எடுத்திருப்பது வரவேற்புக்குறிய ஒன்று.
நாயகி ஸ்ருதியாக நடித்திருக்கும் மாதுரி தமிழில் ஒரு ரவுண்ட் வர வாய்ப்பிருக்கின்றது.
பாகுபலிக்கொரு கட்டப்பா பாடல் முணுமுணுக்க வைக்கின்றது.
இதுவரை துண்டு பாத்திரத்தில் மட்டுமே வந்து கொண்டிருந்த ஆதித்யா தொலைக்காட்சி புகழ் கதிர் இந்த படத்தில் முழு நீள கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஆதாயத்திற்ககாக் அடிக்கடி பிறரை காக்கப்பிடிக்கும் அடிப்படையிலான காமெடி சறறு வித்தியாசம்.
முருகனாக நடித்திருக்கும் திலக்கிற்கு ஒரளவு நடிப்பதற்குறிய கதாப்பாத்திரம்.
வரதராஜனாக வருபவர் தோரணை அருமை
நெருடலானவை:
ஆதியின் அறிமுக பாடலும் (மிடில் கிளாஸ்) சிவக்குமாரின் பொண்டாட்டி பாடலும் ஒரே சாயலில் இருக்கின்றது. அதைக்கூட ஏற்றுக்கொண்டாலும் நடண அமைப்பும் அப்படியே இருக்கின்றது. சுவராஸ்யத்திற்கு பதில் கொட்டாவி வருகின்றது.
தலைப்பை நம்பி படத்துக்குள் சென்றால் சபதமாகே ஒவ்வொருவரும் மாறி மாறி போட்டுக்கொண்டே இருக்கின்றனர். சபதத்தின் அடிப்படையை மொக்கையாக்கி இருப்பது சலிப்படை செய்ய வைக்கின்றது.
சபதத்தை நிறைவேற்றிய ஒருவர் என்றால் அது வரதராஜன் கதாப்பாத்திரம் மட்டுமே. தன் சவாலுக்காக 20 ஆண்டு தறியை மூடி வைத்திருந்தார்.
ஒரு அழகான கதைக்களத்தை எடுத்துக்கொண்டு கதையை மூலைக்கு தள்ளிவிட்டு மசலாப்படமாக கொடுக்க வேண்டும் என்று அனைத்து கதாப்பாத்திரங்களை மொக்கை பண்ணுவது சலிப்பை உருவாக்குகின்றது.
காமெடி காட்சிகள் என்று அவர் நினைத்து உருவாக்கியிருப்பதை காமெடி என்று என்று ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றது.
பதாய் ஹோ ஹிந்தி படத்திலிருந்து மகன் திருமணமாகி வீட்டுக்கு வரும் போது தாய் பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு செல்லும் காட்சியையும், அண்ணாமலை படத்திலிருந்து ரஜினி சவால் விடும் காட்சியையும், அஜீத் நடித்த ராஜா படத்திலிருந்து பபிள் கம் காட்சியையும் சுட்டிருக்கின்றனர். பார்த்த அடிப்படையை திரும்ப பார்ப்பது சலிப்பை ஏற்படுத்துகின்றது.
வில்லனாக நடித்த சந்திர சேகர் வில்லனா இல்லை அவர் சகோதரியின் வில்லத்தனத்தால் வில்லான தெரிகின்றாரா ஒன்றுமே புரியவில்லை.
எல்லாப்படத்திலேயேயும் காதலி காதலிக்க அடிப்படை. கதாநாயன் வில்லன் கூட சண்டை போடுவதை பார்த்து அதுவரை அவனை வெறுத்த காதலிக்கு காதல் வருகின்றது. அரச்ச மாவை அரைக்கலாம். ஆனாம் மாவு என்று வெற்று உரலை அரைப்பது ஏனோ?
அவ்வளவு வில்லத்தனம் செய்பவர்கள் கதாநாயக ஐந்து நிமிடம் பேசி அவர்களை பேச்சாலேயே திருத்துகின்றான். கிளைமாக்ஸ் உச் கொட்ட வைப்பதற்கு பதில் ஊம் கொட்ட வைக்கின்றது.
தொகுப்பு:
இந்த படத்தில் சிவக்குமாரின் சபதம் எந்த அளவுக்கு முக்க்கியத்துவம் இல்லாமல் இருக்கின்றதோ.. அதே அடிப்படையில் தான் சிவகுமாரின் சபதம் படமும் இருக்கின்றது..
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.
We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.
