Join/Follow with Our Social Media Links

Boomika

ஐஸ்வர்யா ராஜேஷ் பூமிகா தமிழ்ப்பட திரைவிமர்சனம்….


கார்திக் சுப்ராஜ் ஸ்டோன் பென்ஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் Passon ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ள படம் பூமிகா. R.ரத்திந்திரன் பிராசாத் எழுதி இயக்கியுள்ளார். பிருத்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார். ராபர்டோ ஸஸ்சாரா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆனந்த் ஜெரால்டின் படத்தை தொகுத்துள்ளார்.

விது (கௌதம்), ஐஸ்வர்யா ராஜேஷ் (சம்யுக்தா), சூர்யா கணபதி (காயத்திரி), மாதுரி (அதிதீ), பவேல் நவநீதன் (தர்மன்), அவந்திகா வந்தனாபு (பூமிகா), பிரசன்னா பாலசந்திரன் (கணேசன்) ஈஸ்வர் கார்த்திக் (கிருஷ்ணா) மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பூமிகா திரைப்படம் இன்று (22.08.2021) விஜய் டிவியில் நேரடியாக ஒளிபரப்பானது. இன்று (22.08.2021) இரவு 12.00 முதல் நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்திலும் ஒளிபரப்பாகின்றது.

கதைக்கரு:

உலக அளவில் பூமி வெப்பமயமாதல் என்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கின்ற சூழலில் பூமி வெப்பமயமாதலை கட்டுக்குள் வைத்திருக்க உதவுவது காடுகள் மட்டுமே. இந்த காடுகளை பாதுகாப்பது தொடர்பாக பல்வேறு திரைப்படங்கள், ஆவனப்படங்கள், குறும்படங்கள் உலக அளவில் வந்து கொண்டிருக்கின்றது. அந்த அடிப்படையில் வந்துள்ள தமிழ்ப்படம் தான் பூமிகா. அமாணுஷ்யம் மற்றும் திரில்லரை அடிப்படையாக கொண்டு இந்த படத்தை உருவாக்கியுள்ளனர்.

கதை:

சீர்காழியில் வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருக்கும் கிருஷ்ணா சாலை விபத்தில் மரணமடைகின்றான்.

நீலகிரி மாவட்டம் புதுமந்து என்ற இடத்தில் ஒரு ரெசார்ட் ஒன்றை கட்ட ஒப்பந்தம் பெற்ற கௌதம் தன் மனைவி சம்யுக்தா, பேச்சு வரமால் ஆட்டிசம் போன்ற ஆரம்பநிலை கொண்ட மகன், கௌதம் தோழி காயத்திரி மற்றும் சகோதரி அதிதீயுடன் ரிசார்ட் கட்டுமான பணிகளை ஆராய காட்டின் நடுவில் இருக்கும் பங்களாவில் தங்கியிருக்கின்றான். அங்கே மின்சாரம் இல்லாத காரணத்தால் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் பெற்று இரவு தங்கியிருக்கின்றனர். அவர்களுக்கு துணையாக காடுகளை நேசிக்கும் தர்மன் வேலையாளாக இருக்கின்றான்.

கௌதமின் தோழி காயத்திரி மூலம் கௌதமிற்கு அறிமுகமானவள் சம்யுக்தா. கௌதம் சம்யுக்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவன். அவர்களின் மகன் சித்து. கௌதமின் சகோதரி அதிதீ அலங்காரம் மற்றும் மேக்கப் மீது மிகவும் அக்கரை கொண்டவள். அதுமட்டுமின்றி சற்று Possessive குணம் கொண்டவள்.

கௌதம் மற்றும் காயத்தியின் மற்றுமொரு தோழன் கார்திக். திருமணமானவன் இருந்தாலும் அதிதீக்கு கிருஷ்ணாவின் மீது ஒரு வித ஈர்ப்பு இருக்கின்றது. அதிதீ ஆனால் கிருஷ்ணாவின் கல்யானத்திற்கு பிறகு அதிதீ அவனை பார்த்ததில்லை. காயத்திரி கிருஷ்ணாவுடன் தொலைபேசியில் சாட் செய்துகொண்டிருக்க அப்போது அங்கே வரும் அதிதீ கிருஷ்ணாவை கல்யாணத்திற்கு பின் பார்த்ததில்லை அதனால் அவனை புகைப்படம் அணுப்ப சொல்லுமாறு காயத்திரியிடம் சொல்கின்றாள். நேரடியாக புகைப்படத்தை கேட்டால் தவறாக எடுத்துக்கொள்வான். அதனால் நம் போட்டவை முதலில் அணுப்பிவிட்டு அப்புறம் அவன் போட்டாவை கேட்கலாம் என்று சொல்லி செல்பி எடுத்து போட்டோவை அணுப்பிவிட்டு உன் போட்டாவை அணுப்பு என்று சொல்கின்றாள். அப்போது கிருஷ்ணாவிடமிருந்து குறுஞ்செய்தி வருகின்றது. அதில் இவர்கள் அணுப்பிய போட்டோவையே திருப்பி அணுப்பி இந்த போட்டவிலேயே நான் இருக்கின்றேன் என்று வருகின்றது. காயத்திரியும் அதிதீயும் பயந்து அந்த படத்தை உற்று நோக்குகின்றனர். அதில் ஒரு நிழல் தெரிகின்றது. பயத்தில் இருவரும் உறைந்து போகின்றனர். அப்போது அங்கே வரும் சம்யுக்தா நீங்கள் பார்ப்பது ஒரு தூணின் நிழல் என்று சொல்கின்றாள். அதன் பிறகு இருவரும் சகஜ நிலைக்கு வருகின்றனர்.

வெளியில் சென்று வீடு திரும்பும் கௌதம் நேற்று இரவு கிருஷ்ணா கார் விபத்தில் இறந்த செய்தியை சொல்கின்றான். எப்படி முடியும் இப்போது தான் நாங்கள் இருவரும் அவனுடன் மொபைலில் சாட் செய்ததாக சொல்கின்றனர். ஆனால் கௌதம் இந்த இடத்தில் சிக்னலே கிடைக்காது எப்படி மொபைல் போனில் சாட் செய்தீர்கள் என்று கேட்டு கொண்டிருக்கும் போதே மொபைலில் மெசேஜ் வருகின்றது. அனைவரும் பயந்து போகின்றனர். காயத்திரியிடம் மொபைல் போனை அனைத்துவிட்டு சாப்பிட வாங்க என்று சொல்கின்றான். அவர்கள் சாப்பிட்டி கொண்டிருக்கும் போது மொபைலில் மீண்டும் மெசஜ் வருகின்றது. கௌதம் கோபத்துடன் காயத்திரியை பார்க்க காயத்திரியோ நான் மொபைலை அனைத்து அதன் பேட்டரியையும் கழற்றிவிட்டேன் என்று பேட்டரியை காண்பிக்கின்றாள். அனைவரும் பயத்தின் உச்சத்தில் இருக்கின்றனர். கௌதம் மெதுவாக மாடிக்கு சென்று மொபைல் போனை பார்க்கின்றான் அது ஆன் செய்யப்பட்டு இருக்கின்றது. அருகில் சென்று மொபைலை எடுக்க முற்படும் போது ஒட்டு மொத்த மின்சாரமும் துண்டிக்கப்படுகின்றது. அப்போது மொபைலில் ஒரு உருவம் தென்படுகின்றது. அதை பார்த்த அனைவரும் உடனே இந்த இடத்தை காலி செய்துவிட்டு செல்ல முடிவெடுக்கின்றனர். ஆனால் அவர்கள் கிளம்ப முயற்சிக்கும் போது கார் ரிப்பேராகி இருக்கின்றது. மெக்கனிக்கிற்கு போன் செய்ய முயற்சிக்கும் போது போன் ஒயர் துண்டிக்கப்பட்டு இருக்கின்றது. அனைவரையும் வீட்டிற்குள் வர சொல்கின்றான். ஆனால் அதிதீ மட்டும் பயத்தின் உச்சத்தில் வீட்டிற்குள் வர மறுக்கின்றாள். கவுதம், காயத்திரி, சம்யுக்தா,குழந்தையை தூக்கிக்கொண்டு உள்ளே செல்கின்றாள் அதிதீ வாசலிலேயே இருக்கின்றாள்.

மொபைல் போனில் அந்த பேயை தொடர்பு கொள்ள சம்யுக்தா முயற்சிக்கின்றாள். சைக்காலஜி பட்டம் பெற்ற அவள் முன்பு வந்த மெசேஜ்களை ஆராயும் போது அனைத்தும் ஒரே மாதிரியாக இருப்பதாக பார்க்கின்றாள். அந்த மெசெஜை ஆராய்ந்த அவள் இந்த மெசேஜ் அணுப்பியவர் ஆட்டிசம் குறைபாடு உள்ளவராக இருக்க முடியும் என்று கண்டு பிடிக்கின்றாள். அதிதீயும் பயத்துடனேயே வாசலில் இருந்து வீட்டிற்குள் வருகின்றாள். அதே போல் வந்த மெசேஜ் எல்லாம் மௌண்ட் ரோசியாட் ஸ்கூல் என்ற மெசேஜ் மட்டுமே திரும்ப திரும்ப அணுப்பையுள்ளனர். இதை ஸ்கூல் பற்றிய செய்திகளை படித்துள்ளதாக காயத்திரி சொல்கின்றாள். அப்போது தான் கௌதம் நாம் புராஜெக்ட் செய்யவிருப்பது அந்த இடத்தில் தான் என்று சொல்கின்றான். அப்படியானல் இதற்கான விடை. இங்குள்ள நூலகத்தில் கிடைக்கும் என்று சொல்கின்றாள் சம்யுக்தா.. நூலகத்திற்கு தகவலை தேடி கௌதம் செல்கின்றான்.அந்த நேரத்தில் பயத்தில் எப்படியாவது இங்கிருந்து வெளியேற வேண்டும் என்று அதிதீ தனியாக வெளியே செல்ல முயற்சிக்கின்றாள். கயாத்திரி தடுத்தும் கேட்காமல் வெளியில் போகின்றாள் அப்போது செந்நாய் கூட்டம் அவளை தாக்குகின்றது. அங்கு வந்த வேலைக்காரன் தர்மன் நாய்களை அடித்து அவளை காப்பாற்றுகின்றான். ஆனால் நாய்கள் தர்மனை தாக்குகின்றனது அப்போது நூலகத்திலிருந்து அந்த வழியாக வந்த கௌதம் தர்மனுடன் செந்நாய்களை அடித்து துரத்துகின்றான். அதிதீ, கௌதம் மற்றும் தர்மனை செந்நாய்கள் கடித்திருந்தது.

நூலகத்திலிருந்து திரட்டி கொண்டு வந்த பத்திரிக்கைகளில். பூமிகா என்ற 15 வயது பெண் பற்றிய கட்டுரை உள்ள பக்கங்கள் கிழிக்கப்பட்டு இருக்கின்றது. மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள நூலகர் கணேஷன் வீட்டிற்கு வேலைக்காரன் தர்மாவின் துணையுடன் சம்யுக்தா செல்கின்றாள். அப்போது அவர் வீட்டில் கிழிக்கப்பட்ட பக்கங்களை எல்லாம் பைலில் வைத்திருப்பதை கண்டு பிடித்து அதை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வருகின்றாள். அதில் பூமிகாவின் முழுவிவரம் இருக்கின்றனது.

150 ஆண்டு பழைமை வாய்ந்த பள்ளி மௌண்ட் ரோசியாட் அதன் உரிமையாளர் பணத்தாசை பிடித்த சாமுவேல், என்றைக்கும் பள்ளி நல்ல பெயருடன் இருக்க வேண்டும் என்றும் அதை வைத்து ஏராளமாக சம்பாதிக்க வேண்டும் என்றும் நினைப்பவர். பள்ளியை சுற்றியுள்ள இடங்களில் காடுகளை அழித்து ஒரு ரிசார்ட் கட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்.

மௌண்ட் ரோசியாட் ஸ்கூலில்  நூலகர் கணேஷ் வளர்ப்பு மகள் பூமிகா, ஆட்டிசம் குறைபாடுள்ள அவள் இயற்கையுடன் இயைந்து வாழ்கின்றான். இயற்கைக்கு முரணான அனைத்தையும் வெறுக்கின்றாள். படம் வரைவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட பூமிகா.. தான் உலகமான இயற்கையுடன் வாழ்ந்து வருகின்றாள். இயற்கையை சார்ந்த தான் நேசிக்கின்றதை படங்களாக வரைவதில் மட்டுமே ஆர்வம் கொண்டவள் பூமிகா. அருகிலுள்ள காலி வீட்டின் இரண்டாவது மாடியும் அவளுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் கணேஷனுக்கு பூமிகா எப்படியாவது 10ஆம் வகுப்பு தேர்வு எழுதி வெற்றிபெற செய்ய வேண்டும் என்பது தான். ஆனால் ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தை தேர்வு எழுத அணுமதிக்க முடியாது என்று பள்ளி முதல்வர் திட்டவட்டமாக மறுக்கின்றார். அது மட்டுமின்றி மற்றொரு காரணமும் இருக்கின்றது பணம் மட்டுமே குறிக்கோளாக கொண்ட பள்ளி உரிமையாளர் சாமுவேல்

அப்போது பிராண்ஸிலிருந்து வரும் பிரபல ஒவியர் பூமிகா வரைந்த ஒவியங்களை மிகவும் ரசிக்கின்றார். பிரான்ஸில் அவளின் ஒவியங்களை காட்சிப்படுத்தி சர்வதேச அளவில் சிறந்த ஒவியத்திற்கான முதல் பரிசை வாங்கி கொடுக்கின்றார். இதை பார்த்த பேராசை கொண்ட பள்ளி உரிமையாளர் இந்த சர்வதேச விருது பெருமை நம் பள்ளிக்கு கிடைக்க வேண்டும் அதனால் அந்த பெண்னை 10 வது வகுப்பில் சேர்த்து முழுப்பெருமையையும் நம் பள்ளிக்கு வர செய்ய சொல்கின்றார்.

10வது தேர்வு எழுத அணுமதி கிடைத்த சந்தோசத்தில் இருக்கும் கணேசன் பூமிகாவை ஸ்கூலுக்கு அழைதது செல்ல முயல்கின்றார், ஆனால் ஏதோ மன உலைச்சலில் இருக்கின்றாள் பூமிகா காரணம் காட்டை அழித்து கட்டிடங்கள் எழுப்பமுயல்வதை தடுக்க முடியாமல் மரத்தில் முட்டி முட்டி தலையில் பாதிப்பு ஏற்பட்டு இறந்து போகின்றாள்.

இந்த கதையை படித்த காயத்திரி நாம் இயற்கையை காதலிக்க வேண்டும். இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்று சொல்கின்றாள். இல்லையேல் இயற்கை தன்னை பாதுகாதுக்கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்யும் என்று சொல்கின்றாள். வேலைக்காரன் தர்மனும் இயற்கை வேறு பூமிகா வேறு இல்லை இரண்டும் ஒன்று தான் என்கிறான்.

அப்போது ஒரு மெசேஜ் வருகின்றது. பூமிகாவின் வீட்டிற்கு அருகில் இரண்டாவது மாடிக்கு வருமாறு சொல்கின்றது. கௌதம் அங்கே செல்கின்றான். ஆனால் அங்கே செல்லும் போது கதவுகள் தானாக பூட்டிக்கொள்கின்றது.

அந்த நேரத்தில் பயத்தின் உச்சத்தில் இருக்கும் அதிதீ இந்த பிரச்சனைக்கு காரணம் மொபைல் போன் தான் என்றென்னி அதை எடுத்து சென்று உடைக்க முயல்கின்றாள் அவளை தேடி வரும் காயத்திரி அதை தடுக்க முயல்கின்றாள் ஆனால் அதிதீ அந்த போனை உடைத்து விடுகின்றாள். பூமிகாவின் ஆவி வெளிப்பட்டு அதிதீயை அடிக்கின்றது. அதிதீயை காப்பாற்ற முயன்ற காயத்திரியை கண்ணாடி குவளை கொண்டு தலையில் தாக்கின்றது பூமிகாவின் ஆவி. காயத்திரி மற்றும் அதிதீயை தேடி வரும் சம்யுக்தா காயத்திரி அடிபட்டு கிடப்பதை பார்த்து அவளை காப்பாற்ற தர்மனை துணைக்கு அழைக்கின்றான். அங்கே வரும் தர்மன் பூமிகாவின் ஆவியை பார்க்கின்றான். சம்யுக்தாவிடம் நீங்கள் காரில் சென்று யாரையாவது உதவிக்கு அழைத்துவர சொல்கின்றான். காரில் கிளம்ப முயற்சிக்கின்றாள் முதலில் கார் கிளம்ப மறுக்கின்றது. பின் கார் கிளம்புகின்றது. பூமிகா ஆவி காரை துரத்தி செல்கின்றது, அதைபார்த்த தர்மன் ஆவியை திசை திருப்ப விசிலக்கின்றான், தர்மனை தேடி வரும் ஆவி அவனை அடித்து கீழே சாய்க்கின்றது.

இதற்கிடையில் கௌதம் பூமிகா வீட்டருகில் இருக்கும் இரண்டாவது மாடியிலிருந்து தப்பி வரும் போது செந்நாய் கூட்டத்திடம் மாட்டிக்கொள்கின்றான். காரில் வேகமாக அந்த வழியே வந்த சம்யுக்தா செந்நாய்கள் மீது காரை மோதி கௌதமை காப்பாற்றி காரில் ஏற்றிக்கொண்டு துணைக்கு ஆட்களை அழைத்துவர முயற்சிக்கும் போது தன் குழந்தை பற்றி எண்ணம் வருகின்றது. தன் குழந்தையை காப்பாற்ற கௌதமுடன் மீண்டும்  வீட்டிற்கு வருகின்றாள். பூமிகா ஆவி குழந்தைக்கு படம் வரைய கற்றுக்கொடுக்கின்றது, அது வரை பேச்சு வரதா குழந்தை நன்றாக பேசுகின்றது, பூமிகாவின் ஆவி சம்யுக்தாவை கடந்து செல்கின்றது. விடிகின்றது. ஆம்புலன்ஸ் வருகின்றது காயத்திரி அதிதீ மருத்துவமனை சிகிச்சைக்கு பின் அதிதீ பயத்திலிருந்து மீளாமல் இருக்கின்றாள், காயத்திரி பெங்களூரில் இருக்கின்றாள். சம்யுக்தா காயத்திரியை சந்திக்கின்றாள் அப்போது காயத்திரி அந்த இடத்தில் ரிசார்ட் கட்ட வந்த தொழிலாளார்கள் முதல் அனைவரும் கொல்லப்பட்டுள்ள விஷயத்தை இந்த நிகழ்வுக்கு பின் கண்டுபிடித்தாக சொல்கின்றாள். ரிசார்ட் கட்டுமான பணிகளை நிறுத்த விரைகின்றாள்.

ஆனால் கௌதம் ஆவிகளை மாந்தீரீகர்கள் மூலம் கட்டுப்படுத்தி கட்டுமான பணியை தொடங்க முயல்கின்றான். ஆவிகளை கட்டுப்படுத்திவிட்ட தைரியத்தில் பூமிகா வீட்டருகின் இருக்கும் இரண்டாவது மாடியில் பூமிகா வரைந்த ஒவியத்தை பார்க்க செல்கின்றான். அப்போது அவனை காப்பாற்ற இரண்டாவது மாடியை நோக்கி சம்யுக்தா செல்கின்றாள் ஆனால் கதவு மூடிக்கொள்கின்றது. பூட்டிய அரைக்குள் பூமிகா வரைந்த ஒவியம் உயிர் பெறுகின்றது. கௌதமின் முகத்தில் மரண பீதி தெரிகின்றது. பூமிகாவின் ஆவி வெளிப்படுகின்றது.

பாராட்டுக்குரியது:

இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட கதைக்களம்

பூமிகாவாக நடித்துள்ள அவந்திகா வந்தனாபு ஆர்ட்டிசம் அடிப்படையிலான இயற்கையை நேசிப்பவராகவும் மிகவும் அருமையாக நடித்திருக்கின்றார்.

இரவின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் இரவின் அடிப்படை சிதையாமல் காட்சிகளை ஊடுறுவி கண்களுக்கு விருந்தாக்கியுள்ள ஒளிப்பதிவு.

அதிதீயாக நடித்துள்ளவரின் நடிப்பு பராட்டும்படியாக உள்ளது.

நெருடலானவை:

ஐஸ்வர்யா ராஜேஷ் என்ற மிகப்பெரிய நடிகையை முன்னனியாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த கதையில் அவருக்கான முக்கியத்துவம் ஒன்றுமே இல்லாமல் ஏமாற்றப்பட்டதை போல் உணரமுடிகின்றது.

திரில்லர் அடிப்படையிலான கதை. அதுவும் இரவின் பின்னனியில் உருவாக்கியுள்ள இந்த களத்தில் ரசிகர்கள் பயமுறுத்தக்கூடிய காட்சியமைப்பு ஏராளமான வாய்ப்புகள் இருந்தும் அதில் கோட்டைவிட்டுவிட்டார் இயக்குனர்.

செயற்கையான விஷயங்களை வெறுக்கும் மனோபாவம் கொண்டவள் அவந்திகா. அவள் இறந்தவுடன் ஆவி தன் அடிப்படை குணத்தை மாற்றிகொண்டதா? செல்போனில் மெசேஜ் செய்யும் அளவிற்கு ஆவியிடம் பரிணாம வளர்ச்சி ஏற்பட்டுவிட்டதா? செல்போன் என்பது இயற்கையுடன் இயைந்த ஒன்றா?

செல்போன் மெசேஜ் வழியே பயமுறுத்துகின்றேன் என்ற அடிப்படையில் பார்ப்பவரின் பொறுமை சோதிக்கின்றது திரைக்கதை.

குழந்தையை கண்டால் பேயும் இறக்கம் கொள்ளுமா? அவை ஏற்புடையது என்றே வைத்துக்கொண்டாலும் அங்கேயிருக்கும் சம்யுக்தாவை ஒன்றுமே செய்யாதது ஏன்? பேய் நேசிக்கும் குழந்தையின் தாய் என்பதாலா? இல்லை இந்த படத்தின் கதாநாயகி அவர் தான் என்பதாலா?

காலையில் ஆம்புலன் வரும்வரை பேய் என்ன செய்துகொண்டிருந்தது? ஒரு வேலை விடிந்து விட்டால் ஆவி போய்விடும் என்ற லாஜிக் இருந்தாலும். இறுதி காட்சியில் கௌதமை கொல்வது பகலில் தானே. அது மட்டுமின்றி பல கொலைகளை ஆவி செய்திருப்பதும் பகலில் தான் என்பது போன்ற காட்சியமைப்பு இருக்கின்றதே?

கதைக்களத்தை வியக்கவைக்கும் அடிப்படையில் தேர்ந்தெடுத்த கதைகளத்தில் வியப்புக்குறிய அம்சங்கள் குறைவாக உள்ளது.

தொகுப்பு:

பூமிகா திரைப்படத்தை உயிரோடிருக்கும் பூமிகாவின் நடிப்பிற்காக பார்க்கலாம்.

Movie Gallery

  • review

    Sunaina

  • review

    Nithya Menen

  • review

    Meera Jasmine

  • review

    Ramya

  • review

    Megha Akash

  • review

    Raai Laxmi

  • review

    Andrea Jeremiah

  • review

    Shritha Sivadas

  • review

    Nandita Swetha

  • review

    Ritu Varma

  • review

    Sonu Gowda

  • review

    Madonna Sebastian

  • review

    Raiza Wilson

  • review

    Nidhi Agarwal

  • review

    Diva Dhawan

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Web Designing Comapny

Jiojith Web Services

SEO Company in Chennai

We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.