நவரசா வெப்சீரிஸ் ஆந்தாலஜி எனப்படும் ஒன்பது குறும்பட தொகுப்பாக வெளியாகியுள்ளது. இதை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் குயூப் சினிமா டெக்னாலஜிஸ் சார்பில் இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திர பஞ்சாபகேஷன் தயாரித்துள்ளார்கள். ஒன்பது இயக்குனர்கள், ஒன்பது கதைகள், ஒன்பது இசையமைப்பாளர்கள் தங்கள் பங்களிப்பை ஒன்பது தொடர்களுக்கு கொடுத்துள்ளனர்.
நவரசா வெப்சீரிஸ் 06.08.2021 முதல் நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் ஒளிபரப்பாகின்றது.
ஒன்பது பகுதிகளின் திரைவிமர்சனம் ஒன்றன் பின் ஒன்றாக பிரித்தும் மொத்த அடிப்படையிலும்
இந்த வெப்தொடர் கொரேனா பெருந்தொற்றினால் ஊரடங்கு காரணமாக வாழ்வாதரம் இழந்து தவிக்கும் திரையுலக தொழிலாளர்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட ஒன்று.
முதல் பாகம்
1) எதிரி (தமிழ்)- కరుణ -(தெலுங்கு)- Compassion (ஆங்கிலம்)
பிஜோய் நம்பியார் இயக்கியுள்ள இந்த வெப்தொடர் பகுதிக்கு கதை எழுதியிருப்பவர் மணிரத்னம், கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ஹர்ஸ்வீர் சிங் ஓப்ராய் ஒளிப்பதிவு செய்துள்ளார். வீணா ஜெயபிரகாஷ் படத்தை தொகுத்துள்ளார் பிஜோய் நம்பியார் மற்றும் அர்பிட்ட சட்டர்ஜி திரைக்கதை எழுதியுள்ளனர். விஜயசேதுபதி மற்றும் M.K.மணி வசனம் எழுதியுள்ளனர்.
விஜயசேதுபதி (தீனா), பிரகாஷ் ராஜ், ரேவதி, அசோக் செல்வன் (வருண்) மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதைக்கரு:
ஒரு மனிதனின் முதல் எதிரி அவனுள் இருக்கும் கோபம் தான் என்ற அடிப்படை கருவில் உள்ள கோபம் என்ற குணத்தை அடிப்படையாக கொண்டது இந்த எதிரி. ஆத்திரம் அறிவுக்கு சத்ரு.
கதை::
ரேவதி மற்றும் பிரகாஷ்ராஜ் தம்பதியினர் ஏதோ மனவருத்ததில் இருவரும் வெகு நாட்களாக பேசிக்கொள்வதில்லை.. அவர்கள் பையன் வருண். தீனா தன் அண்ணன் தற்கொலைக்கு நியாயம் கேட்டு பிராக்ஷ்ராஜை சந்திக்க வருகின்றான். வந்த இடத்தில் பிராகஷ்ராஜை கொல்கின்றான். தவறுகளையே தொழிலாக கொண்டவர்கள் மனசாட்சி என்பதெல்லாம் இருக்காது. ஆனால் எதார்த்தமாக தவறு செய்பவர்களுக்கு மனசாட்சி உருத்தும் என்பார்கள். அந்த அடிப்படையில் தீனா செய்த தவறுகளை அதாவது ஒரு நிமிட கோபம் ஒரு கொலைக்கு அடிப்படையானது இது சரியா என்று கொலை செய்த நபரே கேள்வி கேட்பது போன்று உணர்கின்றான் தீனா. கொலைப்பழியில் இருந்து தப்பிக் நினைத்தை விடுத்து ரேவதியிடம் சென்று மண்ணிப்பு கேட்கின்றான். அவரோ நீங்கள் எப்படி கோபத்தால் தவறு செய்தீர்களோ அதே போல் என் கணவரும் கோபத்தால் தவறு செய்துள்ளார். அதே கோபத்தால் நானும் தவறு செய்துள்ளேன். இதில் தண்டிக்கப்பட வேண்டியது அனைவரும் என்று சொல்கின்றார்.
பாராட்டுக்குறியவை:
மிகவும் பண்பட்ட நடிகர்கள் நடிப்படை அழகாக பயன்படுத்தியுள்ளார் இயக்குனர்.
கோபம் என்ற ஒற்றை அடிப்படை ஏற்படுத்தும் தாக்கத்தை அழகாக திரைக்கதை அமைத்து புரியவைத்துள்ளனர்.
காட்சியமைப்புகள் நம்மை கதாப்பாத்திரங்களுடன் ஒன்ற வைக்கின்றது.
சில காட்சிகளை பெரிய அளவில் விளக்காமல் காட்சியமைப்பின் மூலமே கதையை புரியவைத்தது அருமை.
காட்சிகளுக்கு ஏற்ற பாடல் மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
நெருடலானவை:
தீனா முதல்முறையாக ஏதோ ஒரு ஆத்திரத்தில் கொலை செய்வது போன்ற திரைக்கதை அமைத்த இயக்குனர். அவர் கொலை செய்துவிட்டு வரும் போது கொலையையே தொழிலாக செய்பவனின் முகப்பாவத்தில் காட்டியிருப்பது சற்று நெருடலானவை. முதல் முறையில் ஏதோ உணர்ச்சி வேகத்தில் கொலை செய்பவனிடம் இருக்கும் பதற்றம் இதில் காணப்படவில்லை.
பிராகஷ்ராஜ் மற்றும் தீனா இருவரும் அறைக்குள் செல்லும் போது வீட்டு வேலைக்காரி முதல் குழந்தைகள் வரை அனைவரும் பார்க்கின்றனர். நிச்சயமாக கொலைசார்ந்த விசாரனை என்றால் யாராவது ஒருவர் அடையாளம் காட்டமுடியும். ஆனால் அந்த கொலை செய்ததை ரேவதி மட்டுமே பார்த்தது போன்ற காட்சிகள் அமைத்திருப்பது ஏனோ?
தொகுப்பு:
கோபத்தால் ஏற்படும் விளைவுகளை அழகாக கொடுத்துள்ளார் இயக்குனர். நிச்சயமாக நாம் கோபம் கொள்ளும் முன் ஒரு வினாடி கோபத்தின் அடிப்படையை ஆராய்ந்தால் பல விளைவுகளை தவிர்க்கலாம் என்பதை அழகாக சொல்லியுள்ளனர்.
இரண்டாம் பாகம்
2) சம்மர் ஆஃப் ‘92 (தமிழ்)- హాస్య -(தெலுங்கு)- Laughter (ஆங்கிலம்)
பிரியதர்ஷன் எழுதி இயக்கியுள்ள இந்த வெப்தொடருக்கு, ராஜேஷ் முருகேஷன் இசையமைத்துள்ளார்.. ANI I.V சசி படத்தை தொகுத்துள்ளார்
யோகிபாபு (நடிகர் வேலுசாமி), ரம்யா நம்பீசன் (லக்ஷ்மி டீச்சர்), நெடுமுடி வேணு (பள்ளி தலைமை ஆசிரியர்), Y.G.மகேந்திரன் (கிருஷ்ண ஐயர்), அருள் தாஸ் (கல்யாண தரகர்) மற்றும் பலர் நடித்துள்ளனர்
கதைக்கரு:
நவரசங்களில் ஒன்று நகைச்சுவை. பிறர் சிரிக்க (எள்ளி நகையாடி) வாழ்வதைவிட.. பிறர் சிரிக்க (மகிழ்விக்க) வாழ்வது சிறந்தது.
கதை::
நடிகர் வேலுசாமி சிறந்த நகைச்சுவை நடிகர். தன் படித்த பள்ளி ஆண்டுவிழாவில் கலந்து கொள்ள தான் படித்த பள்ளிக்கு வருகின்றார். தான் படித்த காலத்தில் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வுகளை பகிர்ந்து கொள்கின்றார். அந்த மேடையில் முதிர்கன்னியாய் அமர்திருக்கின்றாள் லக்ஷ்மி டீச்சர்.
இலங்கையில் தேயிலை தோட்ட வேலைக்கு 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் என்ற அடிப்படைக்காக எப்படியாவது 10வது முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் வேலுசாமியால் தொடர்ந்து 4 வருடம் 9வது வகுப்பிலேயே இருக்கின்றான். சரியாக படிக்காத வேலுச்சாமிக்கு படிப்பு சரியாக வராதது மட்டும் அவன் 4வருடம் 9 வது வகுப்பில் படிக்க காரணமில்லை அதை மீறி விதி அதாவது அவன் செய்த தவறுகள் மற்றும் குறும்புகள்
முதலாமாண்டு தோல்விக்கு காரணம் மாங்கய் அடிக்கின்றேன் என்ற பெயரில் கிருஷ்ண ஐயர் தாய் மண்டையை உடைத்தது, சக மாணவன் வாங்கிய புது ஷூவை பந்தாக மாற்றி விளையாடும் போது ஆசிரியர் இருப்பதை கவணிக்காமல் அவரை அடித்து கீழேதள்ளியது, தன்னை அவமானப்படுத்திய சண்முகவேல் மாஸ்டரையும் ராதாமணி ஆசிரியையும் பற்றி தவறாக எழுதி மாடிக்கொண்டதால், இறுதியாக எப்படியாவது பாஸாகிவிட வேண்டும் என்று பள்ளி தலைம்மை ஆசிரியரிடம் நல்ல பெயர் எடுக்க அவரது மகள் லக்ஷ்மி டீச்சர் வளர்க்கும் தலைமையாசிரியருக்கு தொல்லை கொடுக்கும் வீட்டு நாய் கிங் எனப்படும் மகராசவை திரும்பி வீட்டிற்கு வர முடியாமல் வேறு இடத்தில் விட்டுவருவதாக சொல்லி அந்த நாயைவைத்து செவ்வாய் தோஷம் கொண்ட லக்ஷ்மி டீச்சர் கல்யாணம் கைகூடி வரும் வேலை நாயாலே கல்யாணம் நின்று போக காரணமாக இருந்தார். இறுதியில் இலங்கை தேயிலை தோட்ட வேலையை விடுத்து சிறந்த நகைச்சுவை நடிகராக மாறினார் வேலுசாமி
பாராட்டுக்குறியவை:
இந்த தொடரின் ஆரம்பம் முதல் இறுதி வரை நகைச்சுவை அடிப்படையை விட்டு கொடுக்காமல் இறுதியிலும் நகைச்சுவை பஞ்ச் வைத்திருப்பது அருமை.
அனைத்து கதாப்பாத்திரங்களின் நடிப்பும் அருமை. குறிப்பாக பள்ளி மாணவன் வேலுசாமி நடிப்பு மிகவும் அருமை.
இறுதி காட்சியில் திருமண நிச்சயதார்த்தை நாய் வந்து தடுத்து நிறுத்தும் காட்சி வாய்விட்டு அனைவரையும் சிரிக்க வைக்கும் ஒன்று.
நெருடலானவை:
மற்ற கதாப்பாத்திரங்களின் பாத்திர படைப்பை ஒப்பிடும் போது லக்ஷ்மி டீச்சருக்கான காட்சியமைப்பு மிகவும் குறைவாக இருக்கின்றது.
இறுதி காட்சியில் நிச்சயதார்த்திற்கு வரும் மாப்பிள்ளை குடும்பத்தினர் நடிப்பு இயல்பாக இல்லாமல் ஒரு நடகத்தனமாக இருப்பதை உணர முடிகின்றது. அவர்கள் பேசும் வசனங்கள் சற்று செயற்கைத்தனாமாக இருப்பதை போல் இருக்கின்றது.
தொகுப்பு:
தொடக்கம் முதல் இறுதிவரை நகைச்சுவையை எங்கும் குறையவிடாமல் எதார்த்த அடிப்படையில் கண்டு ரசிக்க அருமையான பகுதி நவரசத்தில் ஹாஸ்யத்தின் அடிப்படையை தொடர்முழுக்க தெறிக்கவிட்டுள்ளனர்.
மூன்றாம் பாகம்
3) புராஜெக்ட் அக்னி (தமிழ்)- అద్భుత -(தெலுங்கு)- wonder (ஆங்கிலம்)
கார்திக் நரேன் எழுதி,இயக்கியுள்ள இந்த வெப்தொடர் பகுதிக்கு ரோன் ஈதன் யோகன் இசையமைத்துள்ளார். சுஜித் சாரங்க் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீஜித் சாரங்க் படத்தை தொகுத்துள்ளார்
அர்விந்த்சாமி, (விஷ்ணு) பிரசன்னா (கிருஷ்ணா), சாய் சித்தார்த் (கல்கி), பூர்ணா (லக்ஷ்மி) மற்றும் பலர்
நடித்துள்ளனர்
கதைக்கரு:
அறிவியலும் நிஜமும் அதிசயத்தின் மொத்தம். சில நிஜங்கள் அறிவியலை உருவாக்குகின்றனவா? இல்லை அறிவியல் நிஜங்களை உருவாக்குகின்றனவா? பரிணாம வளர்ச்சியில் மனிதன் தான் எல்லையா? இல்லை இதன் அடுத்த பரிணாமம் என்ன? அறிவியல் அடிப்படையில் உருவான அதிசயம் தான் மனிதன் அவன் பரிணாமம். என்ற அறிவியல் புணை அடிப்படையில் உருவான கதை.
கதை::
21.12.2012 ல் வெளியான ஒரு தகவல். இந்த நாளில் பேரழிவு உருவாகும் அல்லது உருமாற்றம் நிகழும் என்ற அடிப்படை நாசாவின் தகவல் வெளியாகியிருந்தது. மாயன் நாட்குறிப்பிலும் இது சொல்லப்பட்டுள்ளது. நாஸ்டர்டாம் குறிப்பிலும் இந்த அடிப்படை உள்ளது. இதை கொண்டு உருவாக்கியிரும் அறிவியல் புணை கதைதான் புராஜெக்ட் அக்னி.
விஷ்ணு நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானி. அவர் மனைவி லக்ஷ்மி, மற்றும் மகனுடன் வாழ்ந்து வருகின்றார். 21.12.2012 ல் உலகில் எந்த மாற்றமும் ஏற்படவில்லையே. அதனால் அதை ஒதுக்கி சென்றுவிட்ட கவலையை மறந்த விஞ்ஞானிகள் மத்தியில். ஏன் எதுவும் நடக்கவில்லை? அல்லது ஏதாவது உருமாற்றம் நிகழ்ந்திருக்கின்றதா? என்ற ஆராய்ச்சியில் பலவிஷயங்களை கண்டுபிடிக்கின்றார்.
அவருக்கு ஒரு பிரச்சனை ஏற்படுகின்றது அதற்காக ISRO ல் வேலைசெய்யும் தன் நண்பன் விஞ்ஞானி விஷ்ணுவை வரவழைக்கின்றான். இதில் காலம் என்பதில் இறந்த காலம், நிகழ்காலம் என்பது மாயை எதிர்காலம் தான் அனைத்தையும் நிர்ணயிக்கின்றது என்று சொல்கின்றான்.. மனிதகுலத்திற்கு இலக்கின் எல்லை எதுவென்று தெரியாது. மனித வாழ்வும் கணினி உருவகப்படுத்தலும் ஒன்றாக உள்ளது. கடவுள் என்ற உருவகம் கற்பணைதான் ஆனால் கற்பனையை தான் நம்மால் மெய்பிக்க முடியாத விஷயங்களுக்கு கடவுள் என்று உருவகப்படுத்தினாலும் யாராலும் விடை காணமுடியாத ஒன்று மனித குலத்தின் இலக்கு, அதன் பரிணாம வளர்ச்சியின் அடுத்தகட்டம் அல்லது உருமாற்றம். அந்த அடிப்படையில் மனிதன் செயல்பாடுகளும் அறிவியல் செயல்பாடுகளும் ஒரே கோணத்தில் இருப்பதாக சொல்கின்றான். தன் ஆராய்ச்சியின் அடிபடையில் உலகம் மிகப்பெரிய பேரழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக விஷ்ணுவிடம் சொல்கின்றான். அடுத்தகட்ட நகர்வை முன்பே கணிக்கும் Drifter சாதனை கண்டுபிடிக்கின்றான். தான் செய்த ஆராய்ச்சி அடிப்படையில் எதையும் மாற்றும் உருமாற்றம் பெற்ற வல்லமைபடைத்த தன்னிடம் 5 ஆண்டுகளாக உதவியாளனாக இருந்த கல்கியை அழிக்கவும் அதற்கான அடிப்படையையும் கொடுக்கின்றான். தன் தவறை எண்ணி தற்கொலை செய்து கொல்ல விஷ்ணு முயலும் போது அங்கே கிருஷ்ணா வருகின்றான். அப்படியான இவ்வளவு நேரம் நாம் பேசிக்கொண்டிருந்தது உருமாற்றம் பெற்ற கல்கியிடம் தான் அவனை அழிக்கும் ரகசியத்தை அவனிடமே கொடுத்துவிட்டதாக உணர்கின்றான்.
பாராட்டுக்குறியவை:
ஆங்கிலப்பட அடிப்படையிலான குறும்படமாக இதை எழுதி இயக்கியுள்ளார்.
22.12.2012 ல் வெளியான தகவலின் அடிப்படையில் ஒரு புதிய கோணத்தில் இந்த கதையை புனைந்துள்ளார்.
விஷ்ணுவாக அர்விந்த் சாமியும் கிருஷ்ணாவாக பிரச்சண்னாவும் கச்சிதமான தேர்வு
அறிவியல் புனைக்கதையை அழகாக நிகழ்வுகளுடன் பொருந்தும் அடிப்படையில் சொல்லியிருப்பது சிறப்பு.
நெருடலானவை:
மிகவும் அறிவார்ந்த கதையை சொல்லும் போது விளக்கங்களில் தமிழ் வார்த்தை பிரயோகங்கள் இன்னும் கொஞ்சம் அதிகமாக இருந்திருந்தால் அனைவராலும் எளிதில் புரிந்து கொண்டிருக்க முடியும்.
ஒரு உயர்தர அறிவார்ந்த அறிவியல் புணைக்கதைகள் தமிழில் வெற்றிபெற முடியாத அடிப்படை அது எளிதில் மக்களை சென்று சேர்வதிலும் இருக்கும் கடினதன்மை தான்
Drifter அடிப்படையை இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்லியிருக்கலாம். ஆனால் குறும்படத்தில் இவ்வளவு தான் சொல்ல முடியும் என்று இயக்குனர் நினைத்திருக்கலாம்.
தொகுப்பு:
ஒரு ஹாலிவுட் படத்தை பார்க்கும் பிரமிப்பு. கதை கடின தன்மையில் இருந்தாலும் ஒரு முறைக்கு இரு முறை பார்த்தால் இந்த அடிப்படையை அனைவரும் தெளிவாக புரிந்துகொள்ள முடியும். மனித குல அதிசயத்தை புதிய பரிமானத்தில் கொடுத்துள்ளனர்.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.