தமிழில் களாவானி படத்தில் கதாநாயகி அந்தஸ்து பெற்று தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்/ விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் தொடர்மூலம் மிகவும் பிரபலமானர். அவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. தமிழில் 2019ல் வெளிவந்த படம் களவானி 2.
ஸ்டோனேஜ் பிக்சர்ஸ் உருவாக்கியுள்ள வெப்சீரிஸ் “மெர்லின்”. மணி தாமோதரன் எழுதி இயக்கியிருக்கின்றார். E.J ஜான்ஸன் இசையமைத்துள்ளார்., கர்னில் J அலெக்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். விது ஜீவா படத்தை தொகுத்துள்ளார். ஆரஞ்ச் மிட்டாய் சேணலில் இந்த வெப்தொடர் ஒளிபரப்பாகின்றது.
கதை:
டோக்கியோ நகர் விமானநிலையத்தில் டவுரட் என்ற நாட்டிலிருந்து ஒரு பயணி வந்திருந்தார். ஆனால் டவுரட் என்ற நகரம் எங்கே இருக்கின்றது. அப்படிப்பட்ட நகரத்தை பற்றி யாருமே கேள்விப்படவில்லை. அவர் கொடுத்த டாக்குமெண்ட் எல்லாம் சரியாக இருந்த போதும் அப்படிப்பட்ட ஒரு நாடு இருந்த அடையாளமே இல்லை. அதை கண்டுபிடிக்கும் வரை அவரை விமானநிலைய ஓய்வு விடுதியில் ஓய்வெடுக்க சொல்கின்றனர். விடிந்தது சென்று பார்க்கையில் அந்த நபர் மறைந்து விடுகின்றார். அவர் கொண்டுவந்த டாக்குமெண்ட் மறைந்து போகின்றது மற்றும் விமானநிலைய CCTV தொகுப்பிலும் அவர் உருவம் காணவில்லை. இது தான் உண்மைக்கதையின் அடிப்படை. இந்த அடிப்படையில் ஆங்கிலம் ஹிந்தி மட்டுமில்லாமல் ஏராளமான மொழிகளில் வெப் சீரிஸ் வந்துள்ளது.
இந்த அடிப்படையில் ஆண் என்ற கதாப்பாத்திரத்திற்கு பதில் மெர்லின் என்ற பெண் கதாப்பாத்திரம் வருகின்றது. இதன் முதல் பாகம் ஆரஞ்ச் மிட்டாய் சேணலில் ஒளிபரப்பாகின்றது. இதன் முதல் பாகம் 05.06.2021 ல் வெளிவந்துள்ளது.. இதில் மெர்லின் கதாப்பாத்திரத்தில் நடிகை ஒவியா நடித்துள்ளார்/
மெர்லின் தான் ஜூடோ நாட்டில் இருந்து வருவதாக விமானநிலைய பணியாளர்களிடம் சொல்கின்றாள். அவர்கள் ஜூடோ என்ற நாட்டைப்பற்றி கேள்விப்படதா காரணத்தால் மெர்லின் மீது சந்தேகப்படுகின்றனர். ஜூடோ நாட்டை பற்றி இணையதளம் மற்றும் வைத்திருக்கும் பிற தகவல்களின் படி தேடிப்பார்க்கின்றனர். அப்படியொரு நாடு இல்லை என்பதை உணர்கின்றனர். ஆனால் மெர்லின் கொடுத்த ஆவனங்கள் சரியாக இருக்கின்றது. உலக வரைபடத்திலும் அப்படி ஒரு நாடு இல்லை என்பதையும் கண்டு பிடிக்கின்றனர். மெர்லின் மீது சந்தேகம் கொண்டு மனோதத்துவ நிபுணர்களை வைத்து மெர்லினை பரிசோதிக்கின்றனர். அவர் பொய்சொல்லவில்லை என்பதை உறுதி செய்கின்றனர். சந்தேக தீரும் வரை மெர்லினை விமானநிலைய விருந்தினர் அறையில் ஒய்வெடுக்க சொல்கின்றனர். காலையில் வந்து பார்க்கும் போது மெர்லின் அங்கிருந்து மாயமாகிவிடுகின்றார். அவர் மட்டுமல்ல அவர் கொண்டு வந்த ஆவணங்களும் மாயமாகின்றது. CCTV ல் கூட அவர் முகம் பதியவில்லை.
பாராட்டுக்குறியவை:
பிற மொழிகளில் முதல் பாகத்தில் வந்த இந்த மொத்த கதையையும் வைத்து முழு நீளத்தொடர்களையும் எடுத்திருந்தனர். ஆனால் முதல் தொடரிலேயே அவைகளை சுருக்கி கொடுத்துவிட்டனர். அதனால் இந்த தொடர் மாயமன அடிப்படையை வைத்து புணையப்பட்டிருக்குமோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. அதற்கேற்ப அடுத்த பகுதிகள் இருந்தால் வரவேற்புக்குறியதாக இருக்கும் என்றே தோன்றுகின்றது.
மெர்லினாக நடித்திருக்கும் ஒவியா அழகாக வந்துள்ளார்
நெருடலானவை:
ஜூடோ நாட்டில் இருந்து வரும் பெண் எப்படி தமிழில் பேசுகின்றார். ஒரு வேலை மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக தமிழில் பேசுவதாக அமைத்துள்ளாரா இயக்குனர்?
மெர்லின் கதாப்பாத்திரம் சராசரி நடை உடை பாவனைகளுடனேயே இருப்பது உலக வரைபடத்திலேயே இல்லாத நாட்டிலிருந்து ஒருவர் வந்த உணர்வை ஏற்படுத்தவில்லை/
தன் நாடே வரைபடத்தில் இல்லை என்ற போது ஒரு பதட்டம் ஒருவித குழப்பமான மனோபாவமே சராசரி மனிதனிடம் இருக்கும் அதற்கான உணர்வு பூர்வமான வெளிப்பாடு மெர்லின் கதாப்பாத்திர அமைப்பில் இல்லை.
தொகுப்பு::
முதல் பாகத்தில் ஒரு எதிர்பார்ப்பை கொடுத்துள்ளனர். வருகின்ற மற்ற பாகங்களில் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார்களா? பொருத்திருந்து பார்க்க வேண்டும்..
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.
We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.
