Join/Follow with Our Social Media Links

இயக்குனர் சிகரத்தின் நினைவலைகள் பகுதி-2

Article by : SSRaj on 09-07-2021

கிரிகெட் விளையாட்டில் 50 என்பது ஒரு மைல்கல்… இயக்குனர் சிகரம் தனது 50 வது படமான “பொய்கால் குதிரை”யை இயக்கி முடித்திருந்தார். அதன் பிறகும் அவரது ஆட்டம் சதத்தை நோக்கி தொடர்ந்தது.

அவரது 50வது படத்தை தொடர்ந்து “வறுமையின் நிறம் சிவப்பு” படத்தை “ஜார சி ஜிந்தகி” என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்தார். அதன் பின் நடிகை சரிதாவை வைத்து “கோகிலம்மா” என்ற தெலுங்கு படத்தை எழுதி இயக்கினார்.மீண்டும் அபூர்வ ராகங்கள் படத்தை ஹிந்தியில் “ஏக் நய் பஹலி” என்ற பெயரில் ரீமேக் செய்தார்.

பிறமொழி படங்களை இயக்கிய இயக்குனர் சிகரம் மீண்டும் அதிரடி அரசியல் கலக்கல் படமான “அச்சமில்லை அச்சமில்லை” படத்தை இயக்கினார். மத்திய அரசின் சிறந்த திரைப்படத்திற்கான விருதை. சிறந்த இயக்குனருக்கான ஃபிலிம் ஃபேர் விருதையும் இந்தப்படம் பெற்றுத்தந்தது.

“இருகோடுகள்” படத்தை கண்ணடத்தில் “இரண்டு ரெக்கெலு’ என்ற பெயரில் ரீமேக் செய்தார். அதைத்தொடர்ந்து “கல்யாண அகதிகள்” தமிழ்ப்படத்தை இயக்கினார்.

“சிந்து பைரவி” படத்தை மறந்தவர் யாரும் இருக்கமாட்டார். எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் நடிகர் சிவக்குமார் திரையுலக பயணத்தில் மிகப்பெரிய பேரை உருவாக்கியது  இந்த படம் என்றால் மிகையில்லை. கர்நாடக இசையை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம்.

பின் “தாமரை நெஞ்சம்” படத்தை கண்ணடத்தில் “முகிலா மல்லிகே” என்ற பெயரில் ரீமேக் செய்தார். அதை தொடர்ந்து இவரின் “சொல்லத்தான் நினைக்கிறேன்” திரைப்படத்தை கண்ணடத்தில் “சுந்தர ஸ்வப்னகலு” என்ற பெயரில் ரீமேக் செய்தார்.

கமல்ஹாசனை வைத்து இரட்டை வேடத்தில் “புன்னகை மன்னன்” திரைப்படத்தை 1986 ல் எழுதி இயக்கினார் இயக்குனர் சிகரம். அதில் ஒரு கதாப்பாத்திரத்தை சார்லி சாப்லின் கதாப்பாத்திரமாக சித்தரித்திருப்பார். மிகச்சிறந்த காதல் படமாக இது அமைந்தது.

 

மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாக “மனதில் உறுதி வேண்டும்” படம். இதில் பெண்ணியத்தின் பெருமையை உயர்த்தும் படமாக அமைந்தது. இந்தப்படத்தில் பின்னனி பாடகர் SPB முக்கியப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

“ருத்ரவீணை” என்ற தெலுங்குபடத்தை எழுதி இயக்கிய இயக்குனர் சிகரம் அந்த படத்தையே தமிழில் கமல்ஹாசன் மற்றும் ஜெமினி கணேஷ் நடிக்க “உன்னால் முடியும் தம்பி” என்ற பெயரில் எடுத்தார். நம்பு தம்பி நம்மால் முடியும் என்ற சொன்ன எம்.எஸ்.உதயமூர்த்தி என்ற பெயரையும் அவரின் ஸ்லோகனை தலைப்பாகவும் வைத்து இந்த படத்தை ரீமேக் செய்தார்.

1989 ல் இவர் இயக்கிய “புத்தம் புது அர்த்தங்கள்” நடிகர் ரகுமானிற்கு திருப்பு முனையாக அமைந்து அவர் கலைப்பயணத்தை மீண்டும் தமிழில் தொடர வழிவகுத்தது. நடிகை கீதாவிற்கும் தமிழில் நிரந்த இடத்தை பிடிக்க இந்த படம் உதவியது. இந்த படத்தில் தான் நடிகை சித்தார அறிமுகமானார்.

தனது 75வது படமாக “ஒரு வீடு இருவாசல்” என்ற படத்தை எழுதி இயக்கினார். இப்போது ஆந்தாலஜி என்ற அடிப்படையில் வெப்சீரியஸ் வந்து கொண்டு இருக்கின்றது. அந்த அடிப்படையில் அணுராதா ரமணன் மற்றும் அனந்து எழுதிய இரண்டு கதைகளை அடிப்படையாக கொண்டு இந்த படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்கியிருந்தார். சிறந்த சமூக படமாக தேர்தெடுக்கப்பட்டு மத்திய அரசு விருது வழங்கியது.

“அழகன்” வயது முதிர்ந்த ஒருவரின் காதலை அதுவும் மும்முனைக்காதலை அழகாக கவித்துவமாக இயக்குனர் கொடுத்திருப்பார். அதிலும் தொலைபேசியை ஒரு கதாப்பாத்திரமாகவே வைத்து காட்சிகளை நகர்த்தியிருபார். இந்த படத்தில் தான் மதுபாலா அறிமுகமானார்.

அதை தொடர்ந்து “வானமே எல்லை” திரைப்படத்தை இயக்கியிருந்தால் வாழ்கை விரக்தியிலிருக்கும் வாலிபர்களின் தற்கொலை எண்ணத்தை அடிப்படையாக கொண்டு வாழும் தைரியத்தை கொடுக்கும் படமாக இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான ஃபிலிம் ஃபேர் விருதை பெற்றார்.

அதைத்தொடர்ந்து ஜாதிமல்லி, டூயட் கல்கி படங்களை இயக்கினார்.

 

இந்த காலத்தில் நாம் வெப்சீரியஸ் பல பார்த்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால் 1997 ல் “ரயில் சினேகம்” திரைப்படத்தை வெப்சீர்யஸ் அடிப்படையில் 13 பாகங்களாக தன் மின்பிம்பங்கள் என்ற டெலிவிஷன் தயாரிப்பு நிறுவணத்தில் தயாரிப்பில் உருவாக்கினார். நாவலாசிரியர் வாசந்தி கதைக்கு அனந்து திரைக்கதை மற்றும் வசனம் எழுத இயக்குனர் சிகரம் இதை இயக்கியிருப்பார்.

இயக்குனர் சிகரம் “பார்த்தாலே பரவசம்” படத்தை எழுதி இயக்கியதன் மூலம் தன் திரையுலகப்பயணத்தின் சதத்தை நிறைவு செய்தார்.

இயக்குனர் சிகரம் கடைசியாக எழுதி இயக்கிய படம் “பொய்”

 

நினைவலைகளின் திவலைகள்:

இந்தியாவிலேயே அதிக படங்களின் கதை பிற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது என்றால் அது இயக்குனர் இமயத்தின் கதைகள் தான்

இவர் ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு கோணம். எந்த படத்திலும் பிறபடங்களின் தாக்கமோ தழுவலோ காட்சி இடைச்செருகலோ இல்லாமல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வைரங்கள்.

கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த என்ற இரண்டு நடிகளை இணைத்து அதிக படங்களை எடுத்தவர் இயக்குனர் இமயம் தான்.

வியாபார விஷயத்திற்காக எவ்வித சமரசத்தையும் எந்த படத்திலும் மேற்கொள்ளாமல் தன் நினைத்தை எடுத்த மாமனிதர். இன்றைக்கு வியாபார விஷயத்திற்காக திரையுலகில் பல அலப்பரைகள் செய்தும் மரண அடி வாங்கிகொண்டும் ஏராளமான இழப்புகளை சந்தித்துக்கொண்டிருக்கும் தமிழ் திரையுலகில் புதுமை இயக்குனர்.

கமர்சியல் மோகம் கொண்ட திரையுலகில் தன் போக்கில் சாதித்த மாமனிதர்.

தொகுப்பு:

ஒரு சமுத்திரத்தின் ஆழத்தையும் அழகையும் முழுமையாக கொடுப்பது சாதாரண விஷயமல்ல. அதனால் சமுத்திரன் கரையோரத்தில் தொட்டு செல்லும் அலையின் அழகை மட்டும் முடிந்தவரை சொல்ல முயன்றுள்ளேன்.

இந்த தொகுப்பின் பகுதி-1ஐ படிக்க இங்கு க்ளிக் செய்யவும்..





Movie Gallery

  • news

    Meera Jasmine

  • news

    Parvati Nair

  • news

    Deepika Padukone

  • news

    Sunny Leone

  • news

    Dimple Hayathi

  • news

    Keerthi Pandian

  • news

    Rithika Singh

  • news

    Shamlee

  • news

    Tamannah

  • news

    Madonna Sebastian

  • news

    Sanghavi

  • news

    Nikki Galrani

  • news

    Andrea Jeremiah

  • news

    Sri Divya

  • news

    Shruti Haasan

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.