Article by : Admin on 23-06-2021
கலைப்புலி S தாணு வி கிரியேஷன் சார்பில் தணுஷ் நடித்த அசுரன், கர்ணன் படங்களை தொடர்ந்து “நானே வருவேன்” படத்தையும் தயாரிக்கின்றார். “துள்ளுவதோ இளமை” படத்தில் தணுஷை நாயகனாக அறிமுகப்படுத்தி இயக்குனராக வெற்றி பெற்றவர் செல்வராகவன். சகோதரர்களான இவர்கள் இருவரும் இணைந்து “காதல் கொண்டேன்”, “புதுபேட்டை”, “மயக்கம் என்ன” போன்ற படங்களில் இணைந்து பணிபுரிந்தனர். இவர்கள் இணைந்து உருவான “மயக்கம் என்ன” திரைப்படம் 2011 ல் வெளியானது. பத்தாண்டுகளுக்கு பிறகு தணுஷ், செல்வராகவன் இணையும் திரைப்படம் “நானே வருவேன்”
கலவையான விமர்சனங்களை பெற்ற “ஜகமே தந்திரம்” படத்தை தொடர்ந்து தணுஷ் நடிக்கும் படம் “நானே வருவேன்”., இதே போல் “துருவங்கள் பதினாறு” இயக்குனர் கார்த்திக் நரேன் படத்திலும் நடித்துக்க்கொண்டு இருக்கின்றார்.
“நானே வருவேன்” படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கின்றார். அர்விந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கின்றார். பிரசண்னா GK படத்தொகுப்பை மேற்கொள்கின்றார். தணுஷ் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ள சூழலில் தமண்னா நாயகியாக நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது. மற்ற நடிகர், நடிகைகள் தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றது. இதன் First Look போஸ்டர் 13.01.2021 ல் வெளியிடப்பட்டது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் 20.08.2021 ல் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக இயக்குனர் செல்வராகவன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.