Join/Follow with Our Social Media Links

விஷாலின் அடுத்தடுத்த படங்கள்…

Article by : Admin on 18-06-2021

செல்லமே படத்தில் தனது திரையுலக பயணத்தை தொடங்கிய நடிகர் விஷால் ற்க்கு திருப்பு முனையை ஏற்படுத்திய படம் இயக்குனர் லிங்குசாமியின் சண்ட கோழி. இந்த படம் விஷாலை ஆக்ஷ்ன் நாயகனாக மாற்றியது. செல்லமே, சண்டகோழி, திமிறு, பாண்டிய நாடு, பூஜை, ஆம்பள, பாயும் புலி, துப்பறிவாளன், இரும்புத்திரை என பல வெற்றிப்படங்களில் நடித்தவர் இவரது மாறுபட்ட நடிப்பில் உருவாகியிருந்த படம் அவன் இவன். கடைசியாக இவர் நடித்த சண்ட கோழி2, அயோக்கியா, ஆக்ஷ்ன், சக்ரா படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மீண்டும் வெற்றியை எட்ட துப்பறிவாளன்2 படத்தை எடுக்க முயற்சித்தனர். இடையில் இயக்குனர் மிஷ்கினுடன் ஏற்பட பிரச்சனையால் அந்த படம் வெளிவருமா என்ற சந்தேகம் உள்ளது.

இடையில் மினி ஸ்டுடியோ சார்பில் S.வினோத்குமார் தயாரிப்பில் “எனிமி(Enemy)” படத்தில் “அவன் இவன்” படத்துக்கு பிறகு நடிகர் ஆர்யாவுடன் நடித்து முடித்துள்ளார். இதில் டப்மேஷ் புகழ் மிருணாளினி, சிவப்பதிகாரம் படத்தில் நடித்த மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ் ஆகியோரும் நடிக்கின்றனர். இதை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா வெற்றிப்படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்குகின்றார். S.தமன் இசையமைத்துள்ளார். R.D.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கின்றார். ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தை தொகுத்துள்ளார். இதன் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றது.

இதை தொடர்ந்து விஷால் #31 என்ற பெயரிடப்படாத படத்தில் தயாரித்து நடிக்கின்றார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்குகின்றார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார். பாலசுப்ரமனியன் ஒளிப்பதிவு செய்கின்றார். N.B.ஸ்ரீகாந் படத்தை தொகுத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் ரமணா, நந்தா ஆகியோர் நடிக்கின்றனர். இவருக்கு ஜோடியாக தேவி2 படத்தில் நடித்த டிம்பிள் ஹயாதி நடிக்கின்றார். “கடலக்கொண்ட கணேஷ்” என்ற தெலுங்கு படத்தில் “ஜார்ரா ஜார்ரா” என்ற குத்துப்பாடலில் தெலுங்கு ரசிகர்களை கிறங்கவைத்தாவர். இந்த படத்தில் தமிழ் ரசிகர்களை முதன்மை கதாநாயகியாக கிரங்கவைக்க வருகின்றார்.

கொரானா இரண்டாம் அலை ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் ஆந்திராவில் படப்பிடிப்புக்கு அணுமதி அளித்துள்ள சூழலில் விஷால் #31 படப்பிடிப்பு ஆந்திரா ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் ஜீன் 15 முதல் தொடங்கியது.

தொடர் சரிவில் வெற்றிப்படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் விஷாலுக்கு “எனிமி (Enemy)” மற்றும் “விஷால் #31” மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.





Movie Gallery

  • news

    Diva Dhawan

  • news

    Sanjitha Shetty

  • news

    Nithya Menen

  • news

    Deepika Padukone

  • news

    Sai Pallavi

  • news

    Lavanya Tripathi

  • news

    Priyamani

  • news

    Shirin Kanchwala

  • news

    Huma Qureshi

  • news

    Parvathy Omanakuttan

  • news

    Sunaina

  • news

    Parvathy Menon

  • news

    Priyanka Chopra

  • news

    Kasthuri

  • news

    Janhvi Kapoor

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.